தமிழகத்தில் பாஜக வளர வேண்டுமானால் …..

jj-death-news

29-ந்தேதியை, தமிழகம் மிகுந்த எரிச்சலுடனும், நிறைய ஆவலுடனும்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மீது தமிழக மக்கள்
கொண்டிருந்த அன்பு, மதிப்பு, பாசம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு அத்தனையும்
கட்சிகளைத் தாண்டி மக்களிடம் வெளிப்பட்டு வருவது கண்கூடாகத்
தெரிகிறது. திமுகவினரிடம் கூட அதைக் காண முடிகிறது.
தங்கள் துக்கத்தை வெளியிட்டு, ஆற்றிக்கொள்ளக்கூட அவகாசம்
கொடுக்காமல், அவரது கட்சியினர் பதவி வெறி கொண்டு அலைவதைக்கண்டு
மக்கள் மிகுந்த எரிச்சலுடனும், கோபத்துடனும் இருப்பதையும்
காண முடிகிறது.

நான் இப்போது சென்னையில் இல்லை. சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன்…
நேற்றிரவு ஒரு திரைப்படத்திற்கு சென்றிருந்தேன். இடைவேளை…ஸ்லைடு
போடப்பட்டு விட்டது. பலரும் இருக்கைகளை விட்டு எழுந்து கதவருகே
சென்று விட்டனர்.

திடீரென்று ஒரு உரத்த அழுகைக்குரலுடன் கூடிய பாடல்
“அம்மா நீ எங்கு சென்றாய்..?” ஒலிக்கத் துவங்கியது. கூடவே திரையில்,
ஜெயலலிதா அவர்களின் இறப்பு மற்றும் இறுதி ஊர்வலம் தொடர்பான
காட்சிகள் காட்டப்பட்டன.( இறுதியில் மட்டுமே, அது தமிழக அரசின்
செய்தி வெளியீட்டு இலாகவின் தயாரிப்பு என்று ஒரு ஸ்லைடு போடப்பட்டது…)
கதவு வரை சென்ற மக்களில், பலர் தங்கள் இருக்கைகளுக்கு
திரும்பினார்கள்… சிலர் அருகே காலியாக இருந்த இடங்களில் அமர்ந்து
விட்டார்கள்…. சுமார் 3 நிமிடங்கள் ஓடிய அந்த படம் முடியும் வரை
ஒரே அமைதி….

jj-burial

ஜெ.அவர்களின் உடல் புதைகுழியில் இறக்கப்படுவதுடன், படம் முடிந்து
விளக்குகள் போடப்பட்டபோது, அதிர்ச்சியும், சோகமும் நிறைந்த முகங்களை
காண முடிந்தது… எதிர்பாராத நேரத்தில் காண நேர்ந்த அந்த காட்சிகளாலும்,
சோகம் நிரம்பிய பாடலாலும் – எத்தனையோ முறை அந்த காட்சிகளைப்பார்த்தும்,
அதைப்பற்றி யோசித்தும், திடப்பட்டிருந்த நானே கூட உணர்ச்சி வசப்பட்டு விட்டேன்…..

சில நொடிகள் யாருமே இருக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை.
நான் பின்னர் சிலருடன் பேசிக்கொண்டிருந்தேன்…..
நான் செல்கின்ற இடங்களில், பலபேருடன் இது பற்றி பேசினேன்…..
ஜெயலலிதா அவர்களுடன் நேரடியாகத் தொடர்பில் இல்லாத
தொண்டர்களும், பொதுமக்களும் தங்களின் சோகத்தை,
துக்கத்தை, வெளியிட்டு, ஆறுதல் பெறக்கூட விடாதபடி, கட்சியில்
அவரால் பதவியில் அமர்த்தப்பட்டவர்கள் சுயநலம் பிடித்து, அடுத்த வாரிசை
தேடியலைந்து, காலில் விழுவதைக் கண்டு மக்கள் மிகுந்த மன எரிச்சல்
அடைந்திருப்பதை தமிழகத்தின் பல பகுதிகளிலும் காண முடிகிறது.

இன்றைய செய்தித்தாள்களில், நேற்றைய தினம் ( ஞாயிறு, கிறிஸ்துமஸ் )
ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் கூடிய கட்டுக்கடங்கா கூட்டத்தை
பற்றிய செய்திகள் இதை மேலும் உறுதி செய்கின்றன. மக்கள் மூன்று மணி
நேரங்களுக்கு மேல் காத்திருந்து, குடும்பம் குடும்பமாகச் சென்று
அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்….

jjmemorial

அதிமுக வாக்கு வங்கி என்பது, முன்பு எம்.ஜி.ஆர். அவர்களின் மீதான
நம்பிக்கையாலும், அதற்குப் பின்னர் ஜெயலலிதா அவர்களின் மீதான
நம்பிக்கையாலும், பாசத்தாலும் உருவாக்கப்பட்டது. அதை அவ்வளவு
சுலபமாக வேறு யாரும் பெற்று விட முடியாது.

திருமதி சசிகலா நடராஜன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டால் –
மன்னார்குடி குடும்பத்தினரின் ஆதிக்கம் தவிர்க்க முடியாததாகவே
இருக்கும் என்பதை அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் நன்கு
உணர்ந்திருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகள் திருமதி சசிகலாவை பதவிக்கு
கொண்டு வர முயற்சி செய்வது, தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ளவே
என்பதும் மக்களுக்கு நன்றாகவே புரிகிறது.

தப்பித்தவறி, சட்டமன்றம் கலைக்கப்படும் சூழ்நிலை உருவாகி,
மீண்டும் ஒரு தேர்தல் வருமேயானால், திருமதி சசிகலா அவர்களின்
தலைமையில் அதிமுக தேர்தலை சந்திக்குமேயானால்,
ஐந்து சீட்டுகள் கூட அதனால் பெற முடியாது என்பதே உண்மை.

இன்னும் ஒரு நிலையையும் கவனித்தேன். திரு.ஓபிஎஸ் அவர்களின் மீது,
கட்சித்தொண்டர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் – ஒரு அனுதாபமும்
ஓரளவு நம்பிக்கையும் இருப்பதை காண முடிகிறது. ஜெயலலிதா அவர்களின்
மீது ஓபிஎஸ் நிஜமாகவே விசுவாசமாக இருந்தார், இப்போதும் இருக்கிறார்
என்று அவர்கள் நம்புகிறார்கள்.

ஜெயலலிதா அவர்கள் இல்லாத சூழ்நிலையில், அதிமுக மீண்டும் எப்போது
தேர்தலை சந்தித்தாலும், மக்களின் ஆதரவை பெற்று மீண்டும்
ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை.

இந்த நிலையில், தமிழகத்தில் பாஜக வளர விரும்பினால்,
தமிழகத்தின் நலன்களில் அது அக்கரை காட்ட வேண்டும். ஜெ. இருந்த வரை
தமிழகத்தின் நலன்களுக்காக தொடர்ந்து மத்திய அரசுடன் போராடிக் கொண்டே
இருந்தார்…. பல முறை மத்திய அரசிடம் வலியுருத்தி பேசி இருக்கிறார்…
சென்ற வாரம் தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு ஒபிஎஸ் அவர்கள்
டெல்லி சென்றபோது ஜெயலலிதா அவர்கள் முன் வைத்திருந்த அதே
கோரிக்கைகளை மீண்டும் மத்திய அரசின் முன் வைத்திருக்கிறார்….

தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் சிலவற்றையாவது,
மத்திய அரசு இப்போது ஏற்று, அவற்றை விரைந்து நிறைவேற்றுவதற்கான
நடவடிக்கைகளை எடுக்குமேயானால், அவை நிறைவேற்றப்படும் சூழ்நிலையை
உருவாக்குமேயானால், மன்னார்குடி குடும்பத்தின் கையில் அதிகாரம்
சிக்காமல், ஓபிஎஸ் அரசு குறைந்த பட்சம் ஓராண்டிற்காவது
நிலைத்து செயல்படக்கூடிய சூழ்நிலைகளை பாதுகாக்குமேயானால் –

பாஜகவின் மீதான தமிழக மக்களின் பார்வை ஓரளவிற்கு மாறக்கூடும்….
உருட்டல் மிரட்டல்களின் மூலமாகவோ, அரசியல் சூழ்ச்சிகளில்
இறங்குவதையோ விட, மறைமுகமாக, பின்புற வாசல்வழியாக
உள்ளே நுழைவதை விட –

நேரடியாக தமிழக நலன்களுக்கான தேவைகளை, திட்டங்களை –
விரைவாக நிறைவேற்றித்தருவதன் மூலமாகவும்,

எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதைக் காட்டிலும்,
மக்களுக்கு வேண்டியதைச் செய்து, அவர்களின் நம்பிக்கையை
பெறுவது –

எதிர்காலத்தில் தமிழக மக்களிடையே தங்களுக்கான ஒரு நன்மதிப்பை
உருவாக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டால் –

பாஜக, தமிழகத்தில் தங்களது கட்சி வளர வேண்டும் என்று நினைப்பது
ஓரளவு சாத்தியமாகக்கூடும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to தமிழகத்தில் பாஜக வளர வேண்டுமானால் …..

 1. LVISS சொல்கிறார்:

  The NDA govt should help T Nadu in every possible way instead of trying to utilise the fluid situation to further itself —They have 4 years to build the party gradually –
  Support seems to be growing for Deepa ,the niece of Madam , to takeover the reins of the party and guide the cadre -She also is willing to helpthe party – How far she is able to dent the support for Sasikala remains to be seen–
  One of the persons commenting in this blog has reproduced a link which appeared years back when the PM as the then Gujarat CM – He has reportedly helped Madam to deal with Sasikala and her relations — How far that is true only the PM can say —- I hope you have red that link given by that person-

 2. G.Rameshkumar சொல்கிறார்:

  திரு.ஓபிஎஸ் அவர்களிடம் பணிவு தெரிகிறது ;
  விசுவாசம் தெரிகிறது;
  திறமையும் தெரிகிறது ;
  ஆனால் சாதுரியம், கட்சிக்குள் தன்னை நிலைநிறுத்திக்
  கொள்ளக்கூடிய சாமர்த்தியம் இருக்கிறதா ?
  மன்னார்குடி குடும்பத்தை எதிர்த்து, முதல்வராக
  அவரால் நீடிக்க முடியுமா ?
  கட்சிக்குள் அவரை விழுங்க காத்திருக்கும் கழுகுகளிடமிருந்து
  தன்னைக் காப்பாற்றிக் கொண்டு அவரால் ஆட்சியில்
  தொடர முடியுமா ?
  ஓபிஎஸ் அவர்கள் இதுவரை ஜெ.அவர்களின் பின்னாலேயே
  அடக்கமாக இருந்து விட்டதால்,
  அவரது முழு பலமும் வெளியில் தெரியவில்லை.
  ஒருவேளை இப்போதைக்கு கட்சியை மட்டும் நாம்
  கைப்பற்றிக் கொண்டு, ஆட்சியை தொடர ஓபிஎஸ்ஸை
  அனுமதிப்போம் என்கிற தீர்மானத்திற்கு அவர்கள் வந்தால்,
  நீங்கள் சொன்னது போல் ஒரு வருட காலமாவது
  சுதந்திரமாக நிர்வாகம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தால்,
  ஓபிஎஸ் அவர்களின் உண்மையான திறன், பலம் என்ன என்பது
  தெரிய வரலாம்.
  அந்த வாய்ப்பு ஓபிஎஸ் அவர்களுக்கு கிடைக்குமா ?
  காவிரிமைந்தன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ரமேஷ்குமார்,

   உடனடியாக கட்சி, ஆட்சி இரண்டையும் கைப்பற்ற மன்னார்குடி குடும்பம்
   தீவிரமாக முனைந்தால் கட்சி உடையக்கூடிய ஆபத்து இருக்கிறது…..
   வெளியில் தெரியாவிட்டாலும், கட்சிக்குள் ஓபிஎஸ் அவர்களுக்கும்
   கணிசமான ஆதரவு இருக்கிறது. இப்போதைக்கு மக்களின் அனுதாபமும்,
   அவர் பக்கம் இருக்கிறது…. எனவே, தற்போதைக்கு,
   முதல்படியாக கட்சியை மட்டும் உறுதியாக கைப்பற்ற அவர்கள்
   முயற்சிப்பார்கள் என்றே கருதுகிறேன்.
   சில மாதங்களுக்குப் பிறகு, தங்களை கட்சியில் நிலைநிறுத்திக்
   கொண்ட பிறகு, ஓபிஎஸ் மீதான தாக்குதல் துவங்கக்கூடும்
   என்றே எனக்கு தோன்றுகிறது.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. LVISS சொல்கிறார்:

  An ardent supporter of AIADMK near my house says he prefers BJP to step up instead of allowing the DMK to come back or Sasikala to take control of the party –One thing which might prevent a rebellion in the party now is the fact that the AIADMK still has 4 years to show some result –

 4. selvarajan சொல்கிறார்:

  அ. தி. மு. க. தொண்டனின் குரலை பற்றிய ஒரு செய்தி : // ‘‘எல்லாத்துக்கும் காரணம் சசிகலாதான்…!’’ – ஒரு அ.தி.மு.க. தொண்டனின் குரல் // http://www.vikatan.com/news/coverstory/75959-sasikala-is-reason-for-all-chaos-a-voice-of-aiadmk-cadre.art?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=6988 …. இந்த ” குரலையும் ” இது போன்ற குரல்களையும் அனைவரும் காதுகொடுத்து கேட்டால் …. கேட்பார்களா ….?

  • இளங்கோ சொல்கிறார்:

   திரு.செல்வராஜன் கூறுவது இதைத்தான் –

   இது தான் மக்களின் குரல்:

   (http://www.vikatan.com/news/coverstory/75959-sasikala-is-reason-for-all-chaos-a-voice-of-aiadmk-cadre.art?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=6988)

   ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த குமரவேல் என்ற அ.தி.மு.க தொண்டர். அவரிடம் பேசினோம்…

   ‘‘எல்லாத் தொண்டர்களும் சந்தேகப்படுறாங்க…’’

   ‘‘எல்லாரும் அம்மா இறப்புலதான் சந்தேகம்னு சொல்றாங்க… ஆனா, எங்களுக்கு அவுங்க அப்போலோவுல இருந்தாங்களானே சந்தேகமா இருக்கு. அம்மா, உப்புமா சாப்புடுறாங்க… கையெழுத்துப் போடுறாங்க… ஐ.சி.யூ-ல இருக்குறாங்க… குணமாயிட்டே வர்றாங்க… கொஞ்ச நாள்ல டிஸ்சார்ஜ் ஆகிடுவாங்கனு இப்படித் தினந்தினம் எதையாவது ஒண்ண சொன்னவங்க, ஏன் போட்டோவ வெளியிடல? அம்மா, மருத்துவமனையில இருந்தபோது அவுங்கள பார்க்க அத்தனை பேரு போனாங்க. ஒருத்தர் கூடவா அம்மாவ பார்க்கல. அவுங்க இறந்தபின்பு, ஆஸ்பத்திரியிலே வேல செஞ்ச நர்ஸுங்க, ‘அம்மா… எங்கள அப்படிக் கூப்பிட்டாங்க’னு சொன்னவங்க… ஏன், அவுங்க உயிரோட இருந்தபோது அதச் சொல்லல? இந்த மாதிரி நிறைய கேள்விகள் என்னைப்போன்ற அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் ஆயிரம் இருக்குது. இதுக்குக் காரணம், சசிகலாதான் நான் மட்டும் சொல்லல. என்னை மாதிரி எல்லாத் தொண்டர்களும் சந்தேகப்படுறாங்க. சாதாரணமா ரேஷன் கடை வரிசையில நிக்கிற மாதிரிதான் இதையும் பேசிக்கிட்டு இருக்காங்க.

   ‘‘எல்லாத்துக்கும் காரணம் சசிகலாதான்…’’

   ‘ஒன்றரை கோடி மக்கள் சசிகலா பக்கம் இருக்காங்க’னு பொன்னையன் ஒரு பேட்டில சொல்லியிருக்கிறாரு. அடிமட்டத் தொண்டர்களுக்கு சசிகலா யாருனே தெரியாது. அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் அவுங்களுக்குத் தெரிஞ்ச ரெண்டு பேரத்தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. சசிகலா முதல்வர் ஆகணும்னு, அவுங்களுக்கு மட்டும்தான் ஆசை. இல்லன்னா, பதவி இருக்காது. அவுங்க, பேசுவதெல்லாம் அவுங்களுடைய பதவிக்காகத்தான். சசிகலா, ஒரு சாதாரணத் தோழி மட்டுமே. ஒரு பெண்ணுக்குச் சாதாரணமாகத் தேவைப்படுகிற துணை மட்டும்தான் அவர். அம்மாவின் பல கஷ்டங்களுக்குக் காரணமே சசிகலாதான். சுதாகரனை வளர்ப்பு மகனாகக் கொண்டு வந்தது… சொத்துக் குவிப்பு வழக்குல சிறை போனது என எல்லாத்துக்கும் காரணம் சசிகலாதான். கட்சியில, ஒரு வார்டு கவுன்சிலராகக்கூட இருந்ததில்ல… ஒரு தெருமுனையிலக்கூட பிரசாரம் பண்ணியதில்ல. அம்மா சார்புல சட்டமன்றத்துக்குள்ள வந்ததில்ல. இப்படிப்பட்ட அவரை, எந்த அடிப்படையில தேர்ந்தெடுக்கிறாங்க? இது எல்லாம் ஏமாற்று வேலை. அம்மா இருந்தவரை, ‘அம்மா… அம்மா’னு சொன்னாங்க. அவர், மறைஞ்சவுடன்… அவரையே மறந்துட்டாங்க. ஆனா, அடிமட்டத் தொண்டர்கள் என்னைக்குமே அம்மாவையும், அவுங்க செஞ்ச செயலையும் மறக்கமாட்டாங்க.

   ‘‘சசிகலா, டெபாசிட்கூட வாங்க மாட்டாங்க!’’

   சசிகலா, தலைமைப் பொறுப்பேத்தாங்கன்னா கண்டிப்பா அ.தி.மு.க அழிஞ்சிடும். அவுங்களுக்குத் தொண்டர்கள் யாரும் வாக்களிக்க மாட்டோம். வேண்டுமானா, அவுங்க ஆதரவாளர்கள வெச்சி… சசிகலா ஜெயிக்கலாம். ஆனா, மக்கள் மத்தியில் வெற்றிபெற முடியாது. ஒருவேளை, ஆர்.கே. நகர் தொகுதியில சசிகலாவ நிக்கவெச்சா அவுங்களால டெபாசிட்கூட வாங்க முடியாது. கண்டிப்பாக கட்சி அழிஞ்சிடும். ‘ஓ.பி.எஸ்., சசிகலா பிடியில் இருந்து வெளியில வந்து அம்மாவப்போல ஆட்சி செய்வேன்’னு சொன்னா… நான் மட்டும் அல்ல, அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் வாக்களிப்பாங்க. ஆனா அவரும், ‘சின்ன அம்மா… சின்ன அம்மா’ என்று சொன்னால்… மத்தவங்களப்போல அவரையும் ஒதுக்கிவைக்க வேண்டியதுதான். மாறாக, அவர் தன்னிச்சையா செயல்பட்டால் அ.தி.மு.க மீளும். காரணம், அவரு மீதிருந்த நம்பிக்கையாலத்தான்… அம்மா, அவர முதல்வராக நியமிச்சாங்க. வர்தா புயலின்போது அவர் ஆற்றிய களப்பணி மிகவும் சிறப்பாக இருந்துச்சு. இதேநிலை தொடர்ந்தா… தவறு செய்யும் அமைச்சர்கள்மீது உண்மையா நடவடிக்கை எடுத்தா… சசிகலாவவிட்டுத் தனிச்சுவந்தா… நிச்சயம் அவர நாங்க ஆதரிப்போம். கட்சியிலேர்ந்து அவர ஓரங்கட்டினாலும், தொண்டர்கள் நாங்க அனைவரும் அவர் பக்கம் நிற்போம். தானாக சசிகலா, பதவி ஏற்பதைவிட அனைவரும் அழைச்சித்தான் இந்தப் பதவிக்கு வந்ததுபோல இருக்கணும்ங்கிறதுக்காக இப்படி ஒரு நாடகத்த நடத்துறாங்க.

 5. selvarajan சொல்கிறார்:

  // அடங்காத கூத்து- சசி பொதுச்செயலராக வலியுறுத்திய “நேதாஜி, எம்ஜிஆர், ஜெயலலிதா, கலாம், தேவர், பிரணாப்” //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/duplicates-leaders-meet-sasikala-270534.html?utm_source=tamil&utm_medium=home-right-widget&utm_campaign=people-talk இவ்வாறெல்லாம் செய்ய தூண்டுவது யார் ….? வேதனையா தெரியலையா ..? வெட்கம் இல்லாமல் — எப்பேர்பட்டவர்களின் வேடத்தில் இந்த கழிசடைகள் வந்து இருக்கிறார்கள் என்கிற ” அடிப்படை அறிவு ” கூட இல்லாமால் எதிரில் நின்று கும்பிடு போடும் இந்த அம்மணியை எதில் சேர்ப்பது … ? இதெற்கெல்லாம் எந்த தண்டனைகளும் இல்லையா .. இந்த ஜனநாயக நாட்டில் ?

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இரண்டு விஷயங்கள் திருமதி சசிகலா நடராஜன் குழுவை
  யோசிக்கச் செய்யும் என்று தோன்றுகிறது…..

  1) ” பன்னீர்செல்வம், நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள் ” என்று சொன்னால்,
  அவர் பேசாமல் ஒதுங்கி விடுவாரா ? ராஜினாமா செய்து விடுவாரா?
  ஒரு வேளை அவர் எதிர்த்தால்….. மறுத்தால்…., அது எந்த அளவிற்கு பிரச்சினைகளை உருவாக்கும்…?

  2) எதிர் க்ரூப்பைப் பற்றிய ரகசியங்களும், கட்சியின் கஜானா பற்றிய
  செய்திகளும் நன்கு தெரிந்த அவரை கட்டாயப்படுத்தி வெளியேற்ற –
  இன்றைய சூழ்நிலையில் – மன்னார்குடி குடும்பத்திற்கு தைரியம் வருமா .. ?

  ஒரு பரபரப்பான கட்டத்தை நோக்கி தமிழக அரசியல் நகர்கிறது…!!!

 7. LVISS சொல்கிறார்:

  Mr K M ,

  are you beginning to think that it is preferable one to have a BJP led govt instead of AIADMK govt under the control of Sasikala or a DMK government – BJP does not have the necessary cadre support of its own -They have to go back to previous coalition -Once again other parties like Vijayakant’s and Vaiko’s have to come under one umbrella led by one of the parties – That is a long 4 years away –

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப எல்விஸ்,

   இது குறித்து தனியே விவரமாக ஒரு கட்டுரை எழுதுகிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 8. selvarajan சொல்கிறார்:

  காய்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்த்தப்படுகின்றன …. போயஸ் கார்டனில் இருந்து அனைத்து காவல் துறையினரும் விலக்கி கொள்ள பட்டது — சட்ட பஞ்சாயத்து போன்ற இயக்கங்களின் உண்ணாவிரத போராட்டம் — துணை வேந்தர்களுக்கு — பொறுப்பு ஆளுநர் விளக்கம் கேட்டு கடிதம் — ஐ .டி . ரெய்டுகள் — தொண்டர்களின் மனக்குமுறல்கள் — // “அம்மா மரணத்தில் பல மர்மங்கள் உள்ளன!” // http://www.vikatan.com/juniorvikatan/2016-dec-28/politics/126966-nanjil-sampath-interview-about-jayalalitha-death.art?artfrm=top_most_read …. என்று ” நாஞ்சில் சம்பத்தின் பேட்டி — போன்ற அடுக்கடுக்கான எதிர்ப்புகள் – விமரிசனங்கள் சசிகலாவுக்கு கிளம்பியிருக்கின்ற போது – 29 – ம் தேதி களைகட்டும் …. அப்படித்தானே …. ?

 9. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! பலர் ரசிக்க – சிரிக்க …. ஒரு சிலர் வெறுக்க இந்தசெய்தியில் உள்ள வீடியோ உதவும் … // “குணா” ரேஞ்சுக்கு மக்களைக் கொண்டு போயிட்டீங்களேப்பா…! //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/video-on-demonetization-with-guna-song-goes-viral-270553.html

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.