அதிமுக உடைகிறதா…..? ராம் மோகன ராவ் பேட்டி எதை வெளிப்படுத்துகிறது…?

aiadmk-office

அதிமுகவில் ஏகப்பட்ட முக்கியஸ்தர்கள், செய்தி தொடர்பாளர்கள்,
எம்.பி.க்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் –
பொன்னையன் போன்றவர்கள் இருக்கையில் –

அதிமுகவில் கடைசியாக உள்ளே நுழைந்த,
கட்சியில் எந்தவித முக்கியத்துவமும், அறிமுகமும் இல்லாத
எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் அவர்களை விட்டு,
நேற்றைய தினம் மத்திய அரசுக்கு எதிராக –
ராம் மோகன ராவ் வீட்டிலும்,
வருமான வரி அதிகாரிகள் சோதனை நிகழ்த்தியதை கண்டித்து
அறிக்கை விடப்பட்டபோதே, தோன்றியது –

திருமதி சசிகலா நடராஜன் குழுவினர் மத்திய அரசை வெளிப்படையாக
எதிர்ப்பதன் மூலம், பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாகவே –
திரு.ஓபிஎஸ் அவர்களை, கையாலாகாதவர், மத்திய அரசுக்கு அடிமையாக
செயல்படுபவர் என்று சுட்டிக்காட்டி,
தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கி விட்டனர் என்று……

இன்று காலை, திரு.ராம் மோகன ராவ் தனது வீட்டில் நிகழ்த்திய
செய்தியாளர் சந்திப்பில் அவர் கேட்ட பல கேள்விகள்,
அவராகக் கேட்டவை அல்ல,
திருமதி சசிகலா நடராஜன் அவர்களின் சார்பாக கேட்கப்பட்டவை
என்பதை உணர்த்துகின்றன….

“அம்மா இருந்திருந்தால், இது நடந்திருக்குமா…?”
“இவர்களுக்கு (மத்திய அரசுக்கு) இந்த துணிச்சல் வந்திருக்குமா…?”
“ராகுல் காந்திக்கு, மம்தா பேனர்ஜிக்கு நன்றி…”

“அம்மா” செண்டிமெண்டை பயன்படுத்தி,
அதிமுக தொண்டர்களை வசப்படுத்த –
முழுக்க முழுக்க அரசியல் சார்பான வார்த்தைகள்….
ஒரு அரசு அதிகாரியான அவர் பயன்படுத்தி இருக்கவே
தேவையற்ற வார்த்தைகள்…
அவரது மாஸ்டர்கள் சார்பாக அவர் பேசினார் என்பதை
உறுதிப்படுத்த இவை போதுமானவை.

திருமதி சசிகலா தலைமைப்பொறுப்பு ஏற்றால், அதிமுக –
காங்கிரசுடன் செல்லும் என்பதற்கான முதல் அறிவிப்பு இது என்று சொல்லலாம்…!

முதலமைச்சர் பன்னீர்செல்வம் கையாலாகாதவர் என்று சொல்லாமலே
பல முறை சொன்னார் ரா.மோ.ராவ்…. இதை அவர் சொன்னதற்கான
பின்னணி என்னவாக இருக்க முடியும்….?

பாஜக / மத்திய அரசு – திருமதி சசிகலா குடும்பத்தினர் கையில்
அதிமுக செல்வதை விரும்பவில்லை என்பது உண்மையே…

ஓபிஎஸ் தலைமைக்கே எங்கள் ஆதரவு – நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள்
என்று வலியுறுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கான ஒத்துழைப்பு
மன்னார்குடி தரப்பிலிருந்து வராமல் போகவே,
ரெய்டுகள் துவங்கி இருக்கின்றன….

எனவே, காங்கிரஸ் பக்கம் போவது தங்களது எதிர்கால பாதுகாப்பிற்கு
உதவும் என்று மன்னார்குடி குடும்பம் நினைப்பது தெரிகிறது.

இந்த ரெய்டுகள் ரா.மோ.ராவுடன் நிற்கப்போவதில்லை… அடுத்து
மன்னார்குடி குடும்பத்தினர் பலர் மீதும், அவர்களுக்கு ஆதரவாக
தீவிரமாக செயல்படும் அதிமுக முக்கியஸ்தர்கள் மீதும் தொடரும்
என்பது மன்னார்குடி குடும்பத்துக்கு நன்றாகவே தெரியும்.

தங்கள் மீது ரெய்டு வந்தபின் defensive ஆக செயல்படுவதற்கு
பதிலாக இப்போதே ரா.மோ.ராவை வைத்து offensive ஆக
செயல்படுகிறார்கள்…. இனி அவர்கள் மீது ரெய்டு வந்தாலும் –
மத்திய அரசு பழி வாங்குகிறது என்று சொல்வதற்கு இது உதவியாக
இருக்கும்…..!!!

இனி – பன்னீர்செல்வத்தால் நம்மை காக்க இயலாது….
கட்சியும், ஆட்சியும் – ஒரே கையில் இருந்தால் தான்
நம் எல்லாருக்குமே பாதுகாப்பு என்கிற வாதம் முன்வைக்கப்படும்….

பொதுக்குழுவில் – இரண்டு வித குழுக்கள் உருவாகலாம்.
ஒன்று கட்சியையும், கட்சிக்காரர்களையும் காக்க “சின்னம்மா”வால்
மட்டுமே முடியும் என்பது…..

அடுத்தது – மத்திய அரசுடன் இணங்கிப்போனால் தான்
அடுத்த நான்கரை ஆண்டுகள் அதிகாரத்தில் இருக்க முடியும்
என்பதை முன்வைத்து உருவாகக்கூடியது.

தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் சிலர் திருமதி சசிகலா குடும்பத்திற்கு
விசுவாசமானவர்கள். மற்றவர்கள் பொதுப்படையானவர்கள்…
யார் ஆண்டால் என்ன … நமது பதவி தொடர்வது முக்கியம் என்று
நினைக்ககூடியவர்கள்…. திரு.ஓபிஎஸ் அவர்களை ஆதரிப்பதன் மூலம்
தற்போதைய ஆட்சியை தொடர வைக்க முடியும் என்று தோன்றினால்,
அவர்கள் ஓபிஎஸ் அவர்களை ஆதரிக்க தயங்க மாட்டார்கள்…

எந்த அணியில் எவ்வளவு பேர் என்பது அடுத்தடுத்து உருவாகக்கூடிய
சூழ்நிலையை பொறுத்தது என்றே தோன்றுகிறது….
அடுத்த இரண்டு நாட்களில் சில முக்கிய காட்சிகள், திருப்பங்கள் –
அரங்கேறக்கூடும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to அதிமுக உடைகிறதா…..? ராம் மோகன ராவ் பேட்டி எதை வெளிப்படுத்துகிறது…?

 1. LVISS சொல்கிறார்:

  Call it by any name -I think the govt is serious about dealing with black money – If nothing wsas found during raid one can understand it being called untimely or vidictive–

 2. Ps சொல்கிறார்:

  There is a very less chance for emergence of two or many groups in ADMK. It’s not 1987. It’s 2017. Because of futile attempts of few over-smart people of one community, it’s now shown to be problematic situation for ADMK. However, the ground reality is different.

  ADMK or DMK is lifeline for Tamil Nadu political and administrative roles. It’s hard to replace these parties. Successive leader will emerge from these parties.

  If jeya lalitha was able to revive ADMK rule despite many complaints on her, why not some-one can maintain and lead the party. That some-one can be any one Tamil person.

  Whatever kaavi koottam doing in Tamil Nadu is going to back-fire them heavily in near future. Kaavi koottam has been clearly exposed as fox in cow-skin.

  Corruption is not only occurring in Tamil Nadu, its universal phenomenon and occurs in every state. If central ruling party is honest and fair, it should show it’s activity in every state. Any way, kazhugu koottam will never get even small piece of share! Good luck for kazhugu koottam for waiting in the mortuaries!

 3. selvarajan சொல்கிறார்:

  // சசியை ஊடக அதிபர்கள், துணைவேந்தர்கள் சந்திப்பது வெட்ககேடு: குருமூர்த்தி பாய்ச்சல் //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/thuglak-editor-gurumurthy-slams-rama-mohana-rao-270653.html — திரு குருமூர்த்தி அவர்களின் – ராம் மோகன் ராவ் அவர்களை பற்றிய கருத்துக்களும் ” பாய்ச்சலும் ” ஏன்… எதற்காக …. எதனால் … ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.