“துக்ளக்” ஆசிரியராக திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் பொறுப்பேற்றது எப்படி…..? இனி துக்ளக் எப்படி இருக்கும்….?

feauture-thuglak-cho-ramaswamy

கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் அடிக்கடி எனக்குள்ளாகவே
கேட்டுக் கொள்வேன் – ஆசிரியர் “சோ” அவர்களுக்குப் பின்னால் துக்ளக்
எப்படி இயங்கும்… ?

எனக்குத் தெரிந்து, துக்ளக் அலுவலகத்தில் ஏறக்குறைய 15 பேர்களுக்கு
மேல் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பணி புரிந்து வருகிறார்கள்.
ஒரு வார இதழில் தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் அதே ஊழியர்கள்
பணியில் இருப்பது சற்று வித்தியாசமான விஷயம் தான்….

கடந்த பல ஆண்டுகளாக துக்ளக் ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு வந்திருக்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 14-ந்தேதி, துக்ளக் இதழின் ஆண்டு விழா
நடக்கையில், ஆசிரியர் சோ அவர்கள், துக்ளக்கில் பணி புரியும் அத்தனை
பேரையும் (வாகன ஓட்டுனர் உட்பட) மேடையில் ஏற்றி, ஒவ்வொருவராக
பெயரையும், அவர்கள் ஆற்றும் பணியையும் சொல்லி, வாசகர்களுக்கு
அறிமுகம் செய்து வைப்பது வழக்கம்.

தனது சகாக்களுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கும் சோ அவர்கள்,
அவர்களை திடீரென்று நிர்க்கதியாக விட மாட்டார் – தன் மறைவிற்கு பிறகும்
நிச்சயம் துக்ளக் இதழ் தொடர்ந்து நடைபெற வழி செய்வார் என்பதில்
சந்தேகம் இருந்ததில்லை. ஆனால், யார் வழி நடத்தப்போகிறார்கள்
என்பது தான் சஸ்பென்சாக இருந்தது.

சோ அவர்கள் மறைந்த பிறகு, திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் துக்ளக்
ஆசிரியராக பொறுப்பேற்றது வியப்பாகவும், கேள்விக்குறியாகவும்,
ஒரு விதத்தில் ஆறுதலாகவும் இருந்தது….!

ஒவ்வொரு ஆண்டு விழாவிற்கும் திரு.குருமூர்த்தி அவர்கள் வருவதை
நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அவருக்கும் துக்ளக் பத்திரிகைக்கும்
எந்த அளவு நெருக்கம் இருந்தது என்பது இதுவரை வெளியில் தெரிந்ததில்லை.

இப்போது, திரு.குருமூர்த்தி அவர்களே, தனக்கும் ஆசிரியர் “சோ” அவர்களுக்கும்
இடையே இருந்த 40 ஆண்டுக்கால நட்பைப்பற்றியும், சோ அவர்கள்
சில வருடங்களுக்கு முன்பாகவே, தனக்குப்பிறகு “துக்ளக்”கின் பொறுப்பை
குருமூர்த்தி அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறி,
அதற்காக வற்புறுத்தி அவரை 50 % பங்குதாரராகவும் ஆக்கினார் என்பதையும்
விளக்கி இருக்கிறார்…..

திரு.குருமூர்த்தி அவர்களின் கட்டுரையை
நண்பர்களுக்காக கீழே தந்திருக்கிறேன்.

இனி துக்ளக் இதழ் எப்படி இருக்கும்…..?
“சோ” அவர்களின் –
ரசனை, அனுபவம், பழகும் தன்மை, எழுத்து ஆகியவை
தனித்தன்மை உடையவை. இப்போது உள்ளவர்களில்,
அவரைப்போல் அரசியல் நையாண்டியை
( satire ) வேறு யாரும் கையாள முடியாது…
எனவே, “சோ” அவர்களின்
பழைய “துக்ளக்” கை இனி காண முடியாது தான்…!!!

திரு.குருமூர்த்தி அவர்களின் பின்னணி வேறுபட்டது.
எனவே, அதே டீம் வேலை செய்தாலும் கூட,
தலைமையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாலும்,
இவரது ரசனை வேறுபட்டதாக இருக்கும் என்பதாலும்,
துக்ளக்கும் இனி மாறுபட்டு தான் இருக்கும்…..!!!

திரு.குருமூர்த்தி அவர்களை பல ஆண்டுகளாக
ஒரு அரசியல் பார்வையாளனாக கவனித்திருக்கிறேன்….
அவர் எழுத்துக்களையும் படித்து வந்திருக்கிறேன்.

ஆழ்ந்த அறிவு, புத்திசாலித்தனம் நிறைந்த கூர்ந்த பார்வை,
தைரியம், தெளிந்த எழுத்துக்கள்…நேர்மையான அணுகுமுறை –
ஆகியவற்றிற்கு சொந்தக்காரர்….!
ஆனால், ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுடன் ஆழமான தொடர்புடையவர்…..
எனவே, பார்வையில், நோக்கத்தில், அணுகுமுறையில் –
வித்தியாசங்கள் நிச்சயம் இருக்கும் என்பதை நாம் உணர்கிறோம்….!!!

துக்ளக்கின் கோணங்கள், பார்வைகள் மாறினாலும்,
அதன் தரத்தில் சற்றும் குறை இருக்காது
என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது….!!!

அடுத்த அத்தியாயத்தைத் துவங்கி இருக்கும் –
துக்ளக்’கின் புதிய ஆசிரியருக்கும்,
அவரது குழுவினருக்கும் நமது தளத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள்….!!!

திரு.குருமூர்த்தி அவர்களின்
“சோ”வுடனான நட்பு ” குறித்த கட்டுரை கீழே –

cho-guru-1

cho-guru-2

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to “துக்ளக்” ஆசிரியராக திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் பொறுப்பேற்றது எப்படி…..? இனி துக்ளக் எப்படி இருக்கும்….?

 1. Lakshmi Mohan சொல்கிறார்:

  அன்பிற்கினிய காவிரி மைந்தன் ஐயா அவர்களுக்கு,

  வணக்கங்கள் பல..
  எங்கு எளிமை இருக்கின்றதோ அங்கே ஆர்ப்பாட்டங்கள், படாடோபங்கள் மறைந்து விடுகின்றன.
  சற்றேரக் குறைய ஓர் ஆண்டிற்கு முன்னால் நான் நமது மின் தொடர் வண்டியிலே ( இந்திரா நகர் துவங்கி கடற்கரை பயணம்)மிக சாதாரணமாகப் பயணம் செய்து கொண்டிருந்த thuglak சத்யா அவர்களை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
  அவரிடம் சோ அவர்களின் உடல் நலம் பற்றி விசாரித்தேன்.
  அவர் மட்டும் அல்ல..வண்ண நிலவன் ,இதயா,வசந்தன் பெருமாள் மற்றும் அனைவருமே மிக மிக அருமையான மனிதர்கள்.
  அந்த மாபெரும் சோ அவர்களின் குழு நேர்த்தியாக வடிமைக்கப்பட்டது நாம் கண்ட நல் வாய்ப்பாகும்.
  சோ அவர்களின் நையாண்டி,குறும்பு வேண்டுமானால் குறையலாமே தவிர மற்றபடி கருத்துக்களில் நேர்மை ,நாட்டுப்பற்று,எவருக்கும் விலை போகாத வீரம்,அஞ்சாமை போன்ற அனைத்துமே என்றும் தொடரும் பத்திரிக்கைப் பாரம்பரியமாக thuglak விளங்கும் என்பதில் எள் அளவும்,எள் முனையளவும் ஐயம் கொள்ளத் தேவையில்லை …

  தொடர்ந்து தோள் கொடுப்போம்..

  என்றும் அன்புடன்,
  இலக்குமி மோகன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப இலக்குமி மோகன்,

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
   நான் கூட positive ஆகத்தான் எழுதி இருந்தேன்…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Srini சொல்கிறார்:

  KM sir,

  Wishing you Happy New Year to you and your family!. May God Bless you with Good Health and Prosperous Year a head. My Prayers to GOD to give you strength to continue writing in the years to come.

  Pranams
  Srini

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி ஸ்ரீநி…
   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
   புத்தாண்டு எல்லா வளத்தையும் கொண்டு வர வேண்டுகிறேன்…..

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.