ஜெயலலிதா அவர்களின் இறப்பில் உயர்நீதிமன்ற நீதிபதிக்கே சந்தேகம் என்றால்…..?


உடலை தோண்டி எடுத்து உடற்கூறு செய்து
உத்தரவிட்டிருப்பேன் – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி….

இதுவரை, பலரும் பல பொதுவெளிகளில் இந்த சந்தேகத்தை தெரிவித்து
வந்தார்கள். இப்போது, இது குறித்த வழக்கை விசாரிக்கும்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அவர்களே இந்த சந்தேகத்தை எழுப்பி
இருக்கிறார்…

இன்று காலை வெளியான செய்திகளிலிருந்து –

jj-final-image

சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவில்
சந்தேகம் இருப்பதாக ஜோசப் என்பவர், பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த
வழக்கு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் அமர்வு
முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த செப்டம்பர் மாதம்
22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார்.
அதுவரை அவருக்கு அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக
கூறப்பட்டு வந்தது. மேலும் ஜெயலலிதா, நடைபயிற்சி மேற்கொள்கிறார். உணவு
சாப்பிடுகிறார் என மருத்துவமனையும், அதிமுகவும் தொடர்ந்து அறிக்கைகளை
வெளியிட்டது.

ஆனால், அவருக்கு எந்தவிதமான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது பற்றி எவ்வித
தகவலும் இல்லை. அதேபோல் அவருக்கு சிகிச்சை அளிப்பதுபோன்ற புகைப்படமோ,
வீடியோ காட்சிகளோ பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் காட்டப்படவில்லை.
இதனால், அவரது இறப்பில் மர்மம் உள்ளது என கூறினார்.

இதை கேட்ட நீதிபதி வைத்தியநாதன், தனக்கும் முன்னாள் முதல்வர்
ஜெயலலிதாவின் இறப்பில் தனிப்பட்ட சந்தேகம் இருப்பதாக கூறினார். மேலும்
அவர் கூறுகையில், 75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்ட ஜெயலலிதாவின்,
புகைப்படம் ஏன் வெளியிடவில்லை. மருத்துவ அறிக்கையும் தெரிவிக்கவில்லை.

ஜெயலலிதா இறப்பதற்கு முன், எதற்காக அதிமுக கூட்டம் நடந்தது.
அவர் இறந்த அதே நாளில் எதற்காக பதவியேற்பு நடத்தப்பட்டது.
அதேபோல், ஜெயலலிதாவின் கன்னத்தில் 4 துளைகள் இருந்தன. அது எப்படி
வந்தன.

இறுதி சடங்கின்போது, அவரது கால்கள் இல்லை. துண்டிக்கப்பட்டுவிட்டது
என பரபரப்பாக பேசப்பட்டது. அதுபற்றி ஏன் விளக்கம் அளிக்கவில்லை.
இதுபற்றி ஏன் விசாரிக்கவில்லை.

முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது, அவரை பார்க்க
ரத்த சொந்தங்கள், உறவினர்கள் வந்துள்ளனர். அவர்களை ஏன் மருத்துவமனையில்
பார்க்க அனுமதிக்கவில்லை. அவருக்கு சிகிச்சை அளித்தபோது, மத்ததிய
அமைச்சர்கள் உள்பட பலர் பார்க்க சென்றனர். அவர்களை ஏன் அனுமதிக்கவில்லை.
இதுபற்றி மத்திய அரசு ஏன் தெரிந்தும், தெரியாததுபோல் நடந்து கொண்டுள்ளது.

இது குறித்து, பிரதமரின் செயலாளர், உள்துறை செயலாளர்,
மாநில தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அனுப்பியுள்ளது ஹைகோர்ட்.

மற்ற தலைவர்கள் இறப்பில் சந்தேகம் இருந்தால், அதனை விசாரிக்க வேண்டும்
என உச்சநீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது. உதாணத்துக்கு சுபாஷ் சந்திர போஸ்
இறப்பில் சந்தேகம் எழுந்தபோது, அதற்கு ஓய்வு பெற்ற தனி நீதிபதிகள் குழு
அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு அமைத்து,
உரிய விசாரணை நடத்த வேண்டும்.

இது விடுமுறைக்கால பெஞ்ச் என்பதால், தொடர்ந்து விசாரிக்க முடியாது
என கூறி, விசாரணையை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தது, தலைமை
நீதிபதியின் அமர்வுக்கு மாற்றி உத்திரவிடுகிறேன் என்றார்….

( http://www.newsfast.in/news/doubt-in-jayaa-death-
says-hc-judge and
http://tamil.oneindia.com/news/tamilnadu/i-have-doubt-
jayalalitha-death-says-high-court-judge-270727.html )

பின் குறிப்பு –

இந்த விஷயம் குறித்த நமது முந்தைய விமரிசனம் தள இடுகை
-ஜெ. அவர்களின் மரணத்துக்கு அப்போலோவிற்கு முந்திய மருந்துகளும் ஒரு காரணமா….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ஜெயலலிதா அவர்களின் இறப்பில் உயர்நீதிமன்ற நீதிபதிக்கே சந்தேகம் என்றால்…..?

 1. GVS சொல்கிறார்:

  மாநில அரசு அல்லது மத்திய அரசு
  விசாரணைக்கு உத்திரவிடுவதை விட,
  நீதிமன்றமே, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில்
  விசாரணைக்கு உத்திரவிடுவது நம்பிக்கையைத்தரும்
  என்று நான் நினைக்கிறேன்.

 2. Tamilian சொல்கிறார்:

  They will fight tooth and nail.

 3. இளங்கோ சொல்கிறார்:

  post-mortem -க்கு எல்லாம் அவசியம் இருக்காது.
  ஜெ.அவர்கள் அப்போலோவில் அட்மிட் செய்யப்படும்போது
  எந்த நிலையில் இருந்தார், அவருக்கு முன்னதாக வீட்டில்
  எந்தவிதமான ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டது ?
  எத்தகைய மருந்துகள் கொடுக்கப்பட்டன ?
  ஸ்டிராய்டு அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டதா ?
  இவற்றை எல்லாம் கண்டறிய ஒரு விசாரணை அவசியம் தேவை.
  உங்களது முந்தைய இடுகையும் –
  ” ஜெ. அவர்களின் மரணத்துக்கு அப்போலோவிற்கு முந்திய
  மருந்துகளும் ஒரு காரணமா….?”
  -இதைத்தான் சொல்கிறது.
  முக்கியமாக அதைப்பற்றி தான் சந்தேகமே எழுகின்றது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நாம் முன்னர் அதையே தான் கேட்டோம்….

   அவர் எந்த நிலையில் அப்போலோவுக்கு அழைத்து வரப்பட்டார்…?
   அப்போது அவருக்கிருந்த உண்மையான பிரச்சினைகள் என்னென்ன…?
   அதற்காக அவருக்கு, அவர் வீட்டிலேயே இருந்த ஒரு டாக்டர்
   (திருமதி சசிகலா அவர்களின் உறவினர் ) கொடுத்து வந்த
   ட்ரீட்மெண்ட் எத்தகையது. அவருக்கு அளவிற்கு அதிகமாக
   ஸ்டிராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டிருந்தன என்று சொல்லப்படுவது
   உண்மையா…?
   அப்போலோவில் இருந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்ட
   ட்ரீட்மெண்டை விட, அதற்கு முன்னதாக அவருக்கு கொடுக்கப்பட்ட
   ட்ரீட்மெண்ட், மருந்து வகைகளைப்பற்றி அறிவது தான்
   இந்த வழக்கில் முக்கியமான விஷயம்…

   இப்போது கூட மறைக்கிறார்கள்…
   நீதிமன்றம் இவ்வளவு சொன்னபிறகும் செய்தி தொடர்பாளர் திருமதி சரஸ்வதி
   அவர்கள் காச் மூச்சென்று கத்துகிறாரே தவிர, மருத்துவ சரித்திரத்தை
   சொல்வதில் அவர்களுக்கு என்ன பிரச்சினை என்று அவர்களால்
   ஒரு காரணமும் சொல்ல முடியவில்லை.

   ஒருவேளை அந்த விவரங்கள் எல்லாம் வெளிவந்தால் –
   புதிய பொதுச்செயலாளருக்கு எதாவது பிரச்சினைகள் வரலாமென்று
   அஞ்சுகிறார்களா…?

   postmortem செய்ய வேண்டுமென்று யாரும் விரும்ப மாட்டார்கள்…
   நீதிபதி அவர்களே கூட போகிற போக்கில் சொன்ன வார்த்தை தான் அது…
   நீதிமன்றம் உரிய விசாரணைக்கு உத்திரவிட்டால் தான்
   இந்த உண்மைகள் வெளிவரும்.
   உண்மைகள் வெளிவருவதில் அதிமுக நிர்வாகிகளுக்கே அக்கரை இல்லை
   என்பதை அறியத்தான் ஆச்சரியமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது….
   அத்தனை பேரும் சுயநலமிகள் ஆகி விட்டார்களே…..!

   – காவிரிமைந்தன்

 4. Kamal சொல்கிறார்:

  //ஜெயலலிதாவின்,
  புகைப்படம் ஏன் வெளியிடவில்லை. //
  When Karuna asked to release the photo of CM, you guys were bullying him blindly. Now you are pointing out this quote from judge. No need to oppose everything without analyzing from a person even though he is an devil.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப கமல்,

   ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பெற்றுவந்தபோது, அவரது
   புகைப்படத்தை வெளியிடச் சொன்னபோது, அது அநாகரிகமாக கருதப்பட்டது.

   இப்போது, அவர் இறந்து விட்ட நிலையில், அதை வெளியிடச் சொல்வது,
   அவர் இறப்பினில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுதற்பொருட்டு….

   இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. Raviii சொல்கிறார்:

  ஒரு குவாட்டர் , + ஒரு பிரியாணி + 2000 ரூபாய் (புது நோட்டு தான்) இருக்கும் வரை அதிமுக அழிவே அழியாது …

  எங்கள் தியாக செம்மல், அமைதியின் மறு உருவம், நாடாளும் சிங்கம் எங்கள் புரட்சி தோழி சின்ன அம்மா சசிகலா அவர்களை ….நாங்கள் ஒரு குவாட்டர் , ஒரு பிரியாணி , 2000 ரூபாய் (புது நோட்டு தான்) வாங்கிக்கொண்டு நிரந்தர முதல்வர்-ஆக்க போகிறோம் .. ஏன் நாங்க வருங்கால பிரதமர் .. மன்னிக்கவும் .. வருங்கால நிரந்தர பிரதமர் ஆகுவோம்

 6. தமிழன் சொல்கிறார்:

  ‘நடைபெறும் நிகழ்வுகள் கொஞ்சம் ஜீரணிக்கமுடியாதவாறு இருக்கிறது. யாருக்குத் தெரியும்… சசிகலா முதல்வர், டி.டி.வி. தினகரன் ஆர்கே நகர் எம்.எல்.ஏ, ஓபிஎஸ் சபாநாயகர் (அல்லது மூத்த அமைச்சர்)…. கட்சியையும் ஆட்சியையும் கட்டிக்காக்கவேண்டியதும், அதற்காகச் சில/பல காம்ப்ரமைஸ்களைச் செய்யவேண்டியதும் அவசியம்தான். ஆனால், வெட்கம் இல்லாமல் சசிகலாவை ஆகாய அளவுக்குப் புகழ்வதைக் கேட்கும்போது, ஜெவின் வெற்றிக்கே இவர்தான் காரணம் என்று சொல்லும்போது, ‘இவர்கள் இவ்வளவு வெட்கம் கெட்டவர்களா? இவ்வளவு சுய’நலவாதிகளா? இப்படிப்பட்ட நடிகர்களா/நடிகைகளா? என்று தோன்றுகிறது. தம்பிதுரை நம்பிக்கைக்குரியவர் அல்லர். இவர், அதிமுகவின் பீட்டர் அல்போன்ஸ். ஓபிஎஸ், செங்கோட்டையன் (அவருடைய பெர்சனல் விஷயத்தை மறந்துவிடுவோம்) போன்ற சிலரைத் தவிர, மற்றவர்கள்மேல் நல்ல அபிப்ராயம் வர மறுக்கிறது. இதில்வேறு, வீரமணியின் மானமிகு(?) அறிக்கைகள்.

  தவிர, ஜெ.வின் இறப்பைவைத்து ஒரு விசாரணையும் நடைபெறாது. எல்லோரும், இனி நமக்கு எது நல்லது, தன் கட்சிக்கு எது லாபம் என்பதில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். வெற்று விசாரணைகளினால் எந்த உபயோகமும் இல்லை. ஸ்டாலின் அடுத்த கருணா’நிதியாக இருந்தால் ஒழிய (கண்டிப்பாக அப்படித்தான் இருப்பார். அவர் ஆட்சியில் ‘நிதி’களின் ராச்சியம் கொடிகட்டிப் பறக்கும்) அதிமுக மீண்டும் செல்வாக்கு பெறுவது கடினம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.