இன்னொரு உலகப் போர் …. வருமா…?

இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பான் நாடு
திடீரென்று யாரும் எதிர்பாராத விதத்தில்,
அமெரிக்காவின் pearl harbour மீது விமான தாக்குதல்
நடத்தி அமெரிக்காவுக்கு மிக பலத்த உயிர் சேதத்தை
ஏற்படுத்தியது. அதன் விளைவாக, அதுவரை
போரிலிருந்து ஒதுங்கியிருந்த அமெரிக்காவும்
இரண்டாம் உலகப்போரில் குதித்தது.

அதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா – ஜப்பானின்
ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகளை வீசி
கோர விளைவுகளை ஏற்படுத்தியதும் –
அவற்றின் கூட்டு விளைவாக 2-ம் உலகப்போர்
முடிவுக்கு வந்ததும் சரித்திரம் சொல்லும் செய்தி.

சென்ற வாரம் ஒரு செய்தி, வீடியோ வெளிவந்தது….

ஜப்பானிய பிரதமர் Shinzo Abe, நேரில் அமெரிக்கா சென்று,
75 ஆண்டுகளுக்கு முன்னதாக, ஜப்பானிய தாக்குதல்களால்,
pearl harbour -ல் உயிரிழந்த அமெரிக்க போர் வீரர்களுக்கு
அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சி குறித்த செய்தி வீடியோ
வெளியானது. 2-ம் உலகப்போரில் நேர் எதிரிகளாக
இருந்த ஜப்பானும், அமெரிக்காவும் இன்று மிக நெருங்கிய
நட்புறவு உள்ள நாடுகள்.

pearl harbour சம்பவத்தில் 2403 அமெரிக்கர்கள் உயிரிழக்க
காரணமான ஜப்பானை அமெரிக்காவும்,
ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டை வீசி,
லட்சக்கணக்கான ஜப்பானிய மக்களை வதைத்த
அமெரிக்காவை ஜப்பானும் –

மன்னித்து, மறந்து – தற்போது இந்த அளவிற்கு நட்பும்,
நெருக்கமும் பாராட்ட முடியுமானால் –

நிரந்தர எதிரி என்று யாரையும்
நாம் ஏன் கருத வேண்டும்
என்று தான் எனக்கு கேட்கத் தோன்றுகிறது….!!!

————

கடந்த சில நாட்களாகவே, முதல் உலகப்போர்
தொடர்பான சில விஷயங்களை தேடி,
படித்துக்கொண்டிருந்தேன்…

முன்பின் தெரியாத நாடுகளில் இறக்கி விடப்பட்டு,
மொழி தெரியாத முகங்களுடன் சேர்ந்து –
யாரென்றே தெரியாத எதிரிப்படைகளுடன் போரிட்டு,

கைகால்களில் சதை தொங்க, ரத்தம் பீரிட –
விழுந்து கிடப்பதும், அதிருஷ்டம் இருந்தால் –
எங்காவது ராணுவ மருத்துவமனை கேம்பிற்கு
எடுத்துச் செல்லப்பட்டு, தரையில் கிடத்தப்பட்டு –
மாதக்கணக்கில் சிகிச்சை தொடர்வதும் …..
அப்பப்பா எத்தகைய கொடுமையான அனுபவங்கள்…..?

யார் விரும்புவர் அத்தகைய அனுபவங்களை….?
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் –
உலகப்போர் என்பது எப்பேற்பட்ட முட்டாள்தனம்…?
மனித சரித்திரத்திலேயே, மிக மிக அவலமான ஒரு நிகழ்வு ..
சில தனிப்பட்ட மனிதர்களின் ஈகோவினால் –
எத்தனை கோடி மனிதர்கள் இன்னலுக்கு ஆளாயினர்…!

இது குறித்து விவரமாகப் பேச முனைந்தால்,
நிறைய செய்திகள் இருக்கின்றன….
அதற்கு முன்னால் –
முதல் உலகப்போர் சம்பந்தமான
சில அரிய புகைப்படங்களை சேகரித்தேன். அவை கீழே,
நண்பர்களின் பார்வைக்கு –

—————————————-

முதலாம் உலகப்போர் –
சில வித்தியாசமான புகைப்படங்கள்.

1915-
மோட்டார் பைக்கில் பிரிட்டிஷ் சிப்பாய்கள் …

 

1915-british-soldiers-on-motorcycles

 

 

August 20, 1917.
பிரிட்டிஷ் சிப்பாய்கள் புதை சேற்றினூடே காயமான
தங்கள் சக சிப்பாயை தூக்கிச் செல்கின்றனர்…

a-stretcher-bearer-patrol

 

 

October 29, 1917
பெல்ஜியத்தில் -ஆஸ்திரேலியாவின் 4வது டிவிஷன் –
சிப்பாய்கள்….

 

australian-soldirs-in-belgium

1918 –
ஆஸ்திரிய-ஹங்கேரி சிப்பாய்கள் –
செர்பிய சிவிலியன்களை பெரும் எண்ணிக்கையில்
தூக்கில் போடுகிறார்கள்….

 

austro-hungarian-troops-executing-serbian-civilians

 

 

August of 1914-
பெல்ஜியம் சிப்பாய்கள் – சைக்கிள், துப்பாக்கி சகிதமாக…

 

belgium-soldiers-in-cycle

அக்டோபர் 1918 –
போரின் கடைசி கட்டம், பிரான்ஸினுள்
4 வருட ஜெர்மனிய ஆக்கிரமிப்பை விரட்டி விட்டு
பிரிட்டிஷ் சிப்பாய்கள் நுழைகின்றனர்…

british-enter-france-october-of-1918-after-four-years-of-german-occupation

 

 

1917 – பிரான்ஸ் –
சிதிலமான வீட்டில்
மிஞ்சி இருக்கும் ஒரு சிப்பாயும், நாயும்….

france-soldiers-and-a-dog-outside-a-ruined-house-in-1917

 

 

1915-
பிரெஞ்சு சிப்பாய்கள் –
பாதிரியார் போர் விமானத்துக்கு பூஜை போடுகிறார்…!

 

french-soldiers-gather-around-a-priest

 

August of 1914
ஜெர்மானிய சிப்பாய்கள்
அணிவகுத்து போருக்கு புறப்படுகிறார்கள்…
பெண்கள் பூச்செண்டு கொடுத்து வழியனுப்புகிறார்கள் –

 

german-soldiers

1915
ஜெர்மனியில் சிப்பாய்களுக்கு
ஹெல்மட் தயாரிக்கும் ஒரு கம்பெனியில்,
வெவ்வேறு தயாரிப்பு நிலைகளில் ஹெல்மெட்கள்…

helmet-factory-in-lubeck-germany

 

1914 –
சீனக்கடலில் உலாவரும் ஜப்பானிய கடற்படை ….

 

japanese-fleet-off-the-coast-of-china-in-1914

 

 

துருக்கிக்கு குதிரைகள் ஏற்றுமதி ஆகின்றன …

unloading-of-a-horse-in-tschanak-kale-turkey

அமெரிக்காவின் யுத்த கப்பல் – USS Nebraska
British enter Lille, France, in October of 1918, after four years of German occupation. Beginning in the summer of 1918,

uss-nebraska-a-united-states-navy-battleship

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to இன்னொரு உலகப் போர் …. வருமா…?

 1. LVISS சொல்கிறார்:

  Japan was once a nation feared by every country — Today Japan and USA have become friends to contain N Korea —
  One hopes there wont be any world war again– Given the nuclear capability of many countries the whole thing will be over in a few minutes with lot of casualties –
  The last picture of USS Nebraska mkes me nostalgic – I had the opportunity to go inside another massive world war II warship USS Wisconsin which is parked in Norfolk -This ship had fought against Japan and N Korea —
  They say that the next war will be fought for water —

 2. G.Rameshkumar சொல்கிறார்:

  ஒரு black & white திரைப்படம் பார்ப்பது போல் இருக்கிறது.
  முதல், இரண்டாவது உலகப்போர் தொடர்பான
  எதைப்படித்தாலும், பார்த்தாலும் –
  interesting -ஆக இருக்கிறது.
  நன்றி கே.எம்.சார்.

 3. GVS சொல்கிறார்:

  pearl habour சினிமாவை நானும் பார்த்தேன்.
  யுத்த வெறி பிடித்த ஜப்பானிய தளபதிகள்
  திட்டம் போட்டு, அமெரிக்கா சற்றும் எதிர்பாராத விதமாக
  pearl habour -ல் குண்டுமழை வீசி,
  அமெரிக்க யுத்த கப்பல்களையும், விமானங்களையும்,
  ஆயிரக்கணக்கான வீரர்களையும் திடீரென்று தாக்கி அழிப்பதை
  அற்புதமாக படம் பிடித்து காட்டி இருந்தது.

  நீங்கள் சொல்வது போல் இன்று அமெரிக்காவும், ஜப்பானும்
  காட்டும் தோழமை உணர்வு உண்மையிலேயே ஆச்சரியமாகத்தான்
  இருக்கிறது.
  யாரையும் நிரந்தர எதிரியாக கருத வேண்டியது அவசியமில்லை
  என்பது உண்மை தான்.

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  சில நாடுகளுக்கு தங்களின் அரசியலுக்கு நிரந்தர எதிரிகள் தேவைப்படுகிறார்கள்.

 5. seshan சொல்கிறார்:

  you may like this 4 cm’s video too

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சேஷன்,

   அற்புதமான, அரிய வீடியோ….
   பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.