இவர்கள் போக வேண்டும்….. மக்கள் தேர்ந்தெடுத்தது இவர்களை அல்ல….!!!

மே, 2016-ல் தமிழக மக்கள், நம்பிக்கையோடு
ஓட்டு போட்டு, தங்கள் மாநிலத்தை ஆட்சி செய்ய
தேர்ந்தெடுத்தது ஜெயலலிதா என்னும் ஆளுமையை தான்…

எட்டு மாதங்களுக்குள் அவர் மறைந்து,
ஒரு நயவஞ்சக நரிக்கூட்டம் ஆட்சியைப் பிடிக்கும்
என்பதை மக்கள் அப்போது அறியாமல் இருந்தார்கள்….

எப்பேற்பட்ட சுயநலக்கூட்டம் ஜெ.அவர்களின் பின்னால்,
அவரை விழுங்கவும், அதிகாரத்தை கைப்பற்றவும்
காத்திருந்தது என்பதை – அவரும் பாவம், அறியாமலே போய்
விட்டார்.

யார், எப்படி என்கிற விவரம் இப்போது தமிழக மக்களுக்கு
நன்றாகவே தெரிந்து விட்டது. தமிழகத்தை ஆள்வதற்கு
மக்கள் இவர்களில் ஒருவரையும் தேர்ந்தெடுக்கவில்லை….
அவர்கள் தேர்ந்தெடுத்தது ஜெயலலிதா என்கிற
ஒரே ஒருவரை மட்டும் தான்…

இன்று அவர் இல்லை – மறைந்து விட்டார்….
அந்த இடத்தில் வெறும் சூன்யம் தான் நிலவுகிறது.
இவர்கள் யாருக்கும் அந்த இடத்தில் அமர
தமிழக மக்கள் அனுமதி கொடுக்கவில்லை.

சிங்கத்தின் இடத்தில்,
சிறு நரிகளையும், ஓநாய்களையும் –
ஏற்க தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள்….

wolves

இப்போது இருப்பவர்கள் ஆட்சியில் தொடர
தங்களுக்கு எந்தவித அருகதையும் இல்லை என்பதை
அவர்களே நிரூபித்து விட்டார்கள்….

சட்டமன்றம் கலைக்கப்படட்டும்…
ஆட்சியில் அமர விரும்புபவர்கள் மக்களிடம் போகட்டும்….
அவர்களின் அனுமதியைப் பெற்று-
எவர் வேண்டுமானாலும் ஆட்சியில் அமரட்டும்…

இவர்கள் போக வேண்டியவர்கள்….!
ஆனால், இவர்கள் தாமாகப் போக மாட்டார்கள்…

தமிழகத்தின் நலன் கருதி –
உடனடியாக வெளியேற்றப்பட வேண்டியவர்கள்…

எனவே, இவர்களை வெளியேற்ற –
யார் முயன்றாலும்,
தமிழக மக்கள், நன்றியுடன்
அந்த முயற்சியை வரவேற்பார்கள் –
துணையாக இருப்பார்கள்….!!!

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to இவர்கள் போக வேண்டும்….. மக்கள் தேர்ந்தெடுத்தது இவர்களை அல்ல….!!!

 1. Raja சொல்கிறார்:

  If they out who will in. Don’t be personal , compare than dmk and their current head and future head aiadmk still better . Pls Don’t read Tamil magazines. I am also against aiadmk new developments but I want aiadmk for tamilnadu.These rumours about Sashikala Only because of she is not blood relation with Amma.She is more than that. In cinemas we praise friendship but not in real. Deepa is the main reason to continue rumours. Amma not interested to meet her for last 14 years. Every one imagination create a new stories about amma’s death. Opposition party cadres want to dissolve assembly you want that . Pls don’t be emotional. I am also a follower of Amma pls educate and convince us

  • Thanmaana Thamizhan சொல்கிறார்:

   Small suggestion Sir, little correction in this article wrongly edited year 2014 instead of 2016

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நன்றி நண்பரே,

    கவனக்குறைவு……
    இப்போது சரி செய்து விட்டேன்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  • Sharron சொல்கிறார்:

   Mr.Raja OPS is there as our CM. Please are very much pleased with that. Now what is the need to bring Sasi in.

 2. தமிழன் சொல்கிறார்:

  அதிமுக ஆட்சியில் தொடரவேண்டும் என்றே விரும்புகிறேன். மக்கள் தி.மு.க வேண்டாம் என்பதனால்தான் திமுக+காங்கிரஸ் கூட்டணி இருந்தபோதும், ஆட்சிக்கு எதிரான பொது மனநிலை (தற்போது ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் கட்சிக்கு எதிரான மன’நிலை, மக்களிடம் ஓரளவு தேர்தலின்போது இருக்கும்) என்ற குறையையும் தாண்டி, அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்தனர். கா.மை. சார் சொல்லியதுபோல் அவர்கள் ஜெ. வை மனதில் கொண்டு வாக்களித்திருந்தாலும், உள்ளூர் கேன்டிடேட்டின் பலமும் அதில் உண்டு. இப்போது, ஆட்சியைக் கலைப்பதற்கு அல்லது பொதுமக்களைச் சந்திப்பதற்கு ஒரு முகாந்திரமும் இல்லை.

  அரசியலில், ஒரு கட்சியில், திருச்சி சிவா, சசிகலா, தம்பிதுரை, வளர்மதி போன்ற புல்லுருவிகளும் உண்டு. ஜெ.வின் வெற்றிடம் நிரப்பப்படவேண்டும், பொதுமக்கள் மனதில் அடுத்த தலைமையைப் பற்றி நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காகவே, பலர், சசிகலாவை இப்போது தூக்கிப்பிடிக்கிறார்கள் என்றே கருதுகின்றேன். அதை வெளிப்படையாக அசிங்கமாக வெளிப்படுத்தியதில் உதயகுமார், தம்பிதுரை போன்றவர்கள் தங்கள் சிறுமதியை வெளிப்படுத்தியுள்ளனர். இதை இன்னும் polishedஆகச் செய்திருக்கவேண்டும். எம்ஜியார் காலமானபின்பு, ஜெ.வையும் இப்படித்தான் சில இரண்டாம் கட்டத் தலைவர்கள் தூக்கிப்பிடித்தனர் (எம்ஜியாரின் திறமையைக் குறை சொல்லி, ஜெ. இன்னும் சிறப்பானவர் என்று பொருள்படும்படியாக). இந்தச் செயல்கள் மன்னிக்கத் தக்கவையே.

  அடுத்தமுறை வாக்கு, சசிகலாவுக்காக மட்டும் வராது, அதிமுகவின் சீனியர் தலைகளான, ஓபிஎஸ், செங்கோட்டையன், ஜெயக்குமார் போன்ற இரண்டாம்கட்டத் தலைவர்களுக்காகவும் வரும். எந்தக் காரணத்துக்காகவும், ஜாதி என்பது மக்கள் மனதில் வரும்படியான நிகழ்ச்சி நடக்கக்கூடாது (தேவர்களை, கவுண்டர்களைத் தலைமையில் வெளிப்படையாகத் தெரியுமாறு போடுவது) இதை மனதில் கொண்டு, அடுத்த 3 ஆண்டுகள், ஜெ.வின் வழியில் மக்களுக்கான அரசாக இவர்கள் ஆட்சியைக் கொண்டுசென்றால், அது அதிமுகவின் செல்வாக்கை, அதன் ஒரிஜினல் ஆதரவாளர்களையாவது நிலை’நிறுத்தச் செய்யும்.

  குறுகிய காலப் பயன்’களுக்காக (அமைச்சர், கட்சியில் பெரிய பொறுப்பு) தம்பிதுரை போன்றவர்கள் கட்சியைக் குலைக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன், (அவர் நம்பிக்கைக்குரியவர் அல்லர் என்றபோதும்).

  இதற்கு மாறாக, சசிகலா, தன்னுடைய மன்னார்குடி கும்பல்களைக் கொள்ளையடிக்கவோ, அதிமுகவில் ஆதிக்கம் செலுத்தவோ விட்டால், ஜெ.வுக்குக் கொடுத்த மரியாதையைப் பத்திரிகைகள் இவர்களுக்குக் கொடுக்காது. மக்கள் ஜெ.வின்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதனால், ஜூவி, நக்கீரன் போன்ற திமுக சார்பு பத்திரிகைகள் எழுதியதையும் தாண்டி ஜெ.வை நேசித்தனர். ஆனால் சசிகலா எப்போதும் tainted person. ஜெ.வின் தவறுகளுக்கெல்லாம் காரணமானவராக மக்களால் நம்பப்படுபவர். சிறு தவறுகளும், பத்திரிகைகளால் சுட்டிக்காண்பிக்கப்படும்போது, மக்கள் நிச்சயமாக அதனை நம்புவார்கள். அவ்வாறு அமையும்போது, கருணானிதியின் காலம் முடிவடைந்துவிட்டதால், ஸ்டாலினை பொதுமக்கள் நம்புவதற்கே வாய்ப்புகள் அதிகம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மன்னார்குடி குடும்பம் ஏற்கெனவே கட்சியை
   தங்களது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து,
   அதிகாரம் செலுத்தத் துவங்கி விட்டது.
   திருமதி சசிகலா முதல்வர் ஆனதும்,
   முழு குடும்பமும், கட்சியிலும், ஆட்சியிலும்,
   தீவிரமாகச் செயல்படத் துவங்கி விடும் என்பது
   நிச்சயமாகத் தெரிகிறது.

   தமிழக மக்கள் ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்தது
   மன்னார்குடி குடும்பத்தை அல்ல என்பது
   மிகவும் தெளிவான விஷயம்.

   ஜெ.அவர்களின் மறைவிற்குப் பிறகு,
   ஒரு கூட்டுத்தலைமையை ஏற்படுத்துவதற்கு
   இந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் முயற்சி
   செய்திருக்க வேண்டும்.

   மாறாக, 100 % சுயநல காரணங்களுக்காக –
   தங்கள் தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்ளவும்,
   அடுத்த சகா தன்னை விட உயர்ந்த இடத்திற்கு
   போய் விடக்கூடாதே என்கிற அற்பத்தனம் காரணமாகவும்,
   ஒரு கூட்டுத்தலைமையை ஏற்படுத்த –
   எந்தவித முயற்சியையும் இவர்கள் எடுக்கவில்லை.

   அருவருக்கத்தக்க ஒரு சுயநலம் அனைத்து
   இரண்டாம் கட்ட தலைவர்களிடத்தும்,
   தோழியிடமும் வெளிப்படையாகவே தெரிகிறது.

   இந்த நிலையை என்னால் ஜீரணம் செய்யவோ,
   ஆதரிக்கவோ முடியவில்லை….

   சுயநலமும், துரோக சிந்தனையும் கொண்டவர்களின்
   ஆட்சி தொடர வேண்டுமென்று
   நாம் ஏன் துடிக்க வேண்டும்..?

   பெரும்பாலான நண்பர்கள், தேர்தல் என்று போனால்
   மீண்டும் திமுக வந்து விடுமோ என்றெண்ணி அஞ்சுவது
   புரிகிறது.

   ஆனால் அந்த நிலை வரவேண்டும்
   என்பது அவசியமே இல்லை.
   நிறைய options இருக்கின்றன.
   புதிய கூட்டணிகள் உருவாகலாம்….
   இவர்களை விட நல்லவர்கள் ஆட்சிக்கும் வரலாம்…!!!

   ஒருவேளை நண்பர்கள் இப்போதைக்கு
   என் கருத்தை ஏற்காமல் இருக்கலாம்.
   ஆனால், இன்னும் சில நாட்கள்
   தொடர்ந்து நடக்கும், நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை
   கவனித்த பிறகு ஏற்பார்கள் என்று நம்புகிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Sanmath AK சொல்கிறார்:

    Dear KM Sir,

    If not ADMK(under Sasikala’s leadership), what is the next option excluding DMK ???….. MaNaKoo or DMDK or BJP or Congress or Vasan’s party or Agila Indiya Naadalum Makkal Katchi ???

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     சன்மத்,

     நாளைய இடுகையில் எழுதுகிறேன்.

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 3. Sanmath AK சொல்கிறார்:

  Dear KM Sir,

  ////சிங்கத்தின் இடத்தில்,
  சிறு நரிகளையும், ஓநாய்களையும் –
  ஏற்க தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள்…./////
  I think the so-called lioness was just hiding behind these foxes and wolves, so that they take the blame(of course media too kept this alive to some extent)….. How can a very brilliant person be unaware of large-scale looting….. These group have not come into prominence overnight….. They were there with JJ from the time she started her political career….. Thirnavukarasu, Karuppasamy Pandian, KKSSR, Ukkam Sandh – had played an important role “DIRECTLY” while helping JJ was garnering support after the death of MGR, Natarajan was a key person making for behind-the-scenes drama – hope you will not deny this…..

  ////மே, 2014-ல்(2016) தமிழக மக்கள், நம்பிக்கையோடு
  ஓட்டு போட்டு, தங்கள் மாநிலத்தை ஆட்சி செய்ய
  தேர்ந்தெடுத்தது ஜெயலலிதா என்னும் ஆளுமையை தான்…////
  I cant accept it completely…. Local players also had their role….. AIADMK won mainly because people had not forgotten the radical activities of local DMK district secretaries during their 2006-11 rule…. I think you will not deny that 2011-16 TN Govt have not done anything constructive or productive in a larger-sense for the development of the state…..

  Let above two paras be put aside – Why there is none to raise voice against this leadership ?? Sasikala & Co., has no hold on the MLAs…. Still, why none were coming out ?? ….. Answer is – That is the architecture of the party…. None over there is confident enough to gain confidence of fellow MLAs and ministers….. All the office-bearers of the party require to stick to their own chairs and want a focus-point, so focusing on her.,…. That is the reality

  There are high chances, the party may face out like Forward Block….. If they do not want that, the present head of the party and govt should do and I hope will do, something good to “estabilish” themselves…..

  Major reason I am stressing upon Sasikala & Co., to run party & govt is the requirement of the existence of the party ADMK, until we get another strong Dravidian Party other than DMK….. Will be more than happy, in case someone from the party(ADMK) revolt against Sasikala & Co., and capture the party to proceed further…… But as of now, to keep ADMK firm, her leadership(controlled by her husband) is required……

  Thanks.

  • Sharron சொல்கிறார்:

   Sir when Sasi gave re -entry she clearly told JJ that she is not going to involve in politics. Now she wants all the high level posts.

   • தமிழன் சொல்கிறார்:

    ‘நண்பர் ஷாரோன்.. ஜெ. அவர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் எண்ணமும் திறமையும் ஆர்வமும் பெற்றிருந்தார் (துணிச்சலும்). அதனை confuse பண்ணக்கூடிய நடராஜனை அதனால்தான் ஆரம்பத்திலிருந்தே அவர் அனுமதிக்கவில்லை. சசிகலா வெறும் communicator, buffer ஆகத்தான் செயல்பட அனுமதி. பலரை, தன் சொந்த நலனுக்காக சசிகலா filter பண்ணியிருக்கலாம். ஜெ. was not God to know all these things. சொந்த மனைவி தன்னைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்பதே நமக்கு உண்மையாகத் தெரியாது. ஜெ. இருந்த பிஸியில், இதற்கெல்லாம் எங்கு நேரம்?

    சசிகலா அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்னதெல்லாம் ‘அப்போ’. இதுபோல ஸ்டாலினை மேலே கொண்டுவருவதற்கு கருணானிதி சொல்லாத காரணங்களா? (திமுக சங்கரமடமல்ல. பொதுக்குழு, செயற்குழு முடிவு செய்யும்… போன்ற craps. யார் யார் ஸ்டாலினுக்குப் போட்டியோ, அவர்களெல்லோரும் வெளியே தள்ளப்பட்டனர்) அல்லது ராமதாஸ் போன்ற மற்ற அரசியல்தலைவர்கள் சொல்லாத சபதங்களா?

 4. selvarajan சொல்கிறார்:

  ஜெயா இறந்த அன்றிரவு ஓ .பி.எஸ் . அவசரமாக முதல்வர் பதவி ஏற்றதற்கு பதிலாக — நேரடியா சசிகலாவை முதல்வராக பதவி ஏற்க வைக்காமல் — பல வித நாடகங்கள் — நடிப்புகள் — வினோதமான வேஷங்கள் — பச்சோந்திகள் பல்லிளிப்புகள் — வற்புறுத்தல்கள் — கூழைக் கும்பிடுகள் — கட்சியின் சட்டவிதிகளில் திருத்தங்கள் என்று ஒவ்வொன்றாக அரங்கேற்றி — கோமாளிகளாக — நன்றி மறந்தவர்களாக அடிபணிந்து ” பொது செயலாளர் ” என்கிற பதவியை சசிகலாவிடம் கொடுத்தவர்களின் …..
  அடுத்த கூப்பாடுதான் ” முதல்வர் என்கிற பதவியையும் ” சசிக்கே தாரைவார்ப்பது என்கிற எண்ணத்தில் — அறிக்கைகளை விட்டுக்கொண்டிருப்பதால் — தற்போதைய ” ஒப்புக்கு சப்பாணி ” முதல்வரும் — அரசு அதிகாரிகளும் — அரசு இயந்திரமும் செய்வதறியாது திண்டாடி கொண்டு இருப்பது வேதனையானது என்பதோடு — நான்கு ஆண்டுகள் பதவிக்கு காலம் இருக்கிறது என்கிற இறுமாப்பில் ….
  எந்தவொரு கட்சிப்பணியையும் செய்யாமல் — முன்னாள் முதல்வருக்கு எடுபிடியாக — வேலைக்காரியாக — தோழியாக .? இருந்தவர் என்கிற ஒரே தகுதியை வைத்து பொ. செயலாளர் — முதல்வர் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் உள்ளவர்கள் யார் என்பது எல்லோருக்கும் புரியும் … அ .தி.மு.க . தேர்தலில் வெற்றி பெற்றதற்கு காரணங்கள் பல இருந்தாலும் எம் .ஜி.ஆரின் . நினைவும் — ஜெயாவின் உழைப்பும் — மாற்று கட்சிகளின் மாறாத வடுக்களும் — கோஷ்டி பூசல்களும் — பணப்பட்டுவாடாக்களும் முக்கியமானவை — இதில் சசி எங்கே இருந்தார் என்பது தானே தொண்டர்களின் கேள்வியாக இருக்கிறது — ஜெயாவுடன் காரில் முகம் தெரியாமல் மறைந்து அமர்ந்து இருந்தவர் என்கிற ஒரே தகுதியை தவிர வேறென்ன இருக்கிறது ….
  என்னதான் இமிடேஷன் செய்து — நடை – உடை – பாவனைகளை ஜெயாபோல மாற்றினாலும் — ஒரு போதும் இவர்- அவராக முடியாது என்பது தான் எல்லோரின் கூற்று — ” மன்னார்குடி மாபியாக்கள் ” ஓ .பி.எஸ்ஸை மிரட்டி ராஜினாமா கடிதத்தை பெற்று விட்டதாக ஒரு செய்தி : — // ஓ பன்னீர்செல்வத்திடம் இருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கியது மன்னார்குடி கோஷ்டி? //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/o-panneerselvam-submists-resignation-letter-sasiakala-270994.html … உலா வர தொடங்கி விட்டதும் — //
  எந்தத் தொகுதி வெற்றித் தொகுதி?! – சசிகலாவுக்கு ‘ஷாக்’ கொடுத்த உளவுத்துறை // http://www.vikatan.com/news/tamilnadu/76584-intelligence-report-reveals-in-which-constituency-sasikala-will-win.art?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=7239 என்றும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன …. கா .மை அவர்களின் கூற்றின்படி — தேர்தலில் ஜெயித்து வந்தபின் பதவியேற்பது என்பது தான் ” நேர்வழி ” யாருடைய உழைப்பிலோ வந்ததை அபகரிப்பது என்பது குறுக்கு வழி … எது எப்படியோ தமிழகத்தின் தலையெழுத்து — இந்தஆங்கில புத்தாண்டில் …. ???

 5. இலக்குமி மோகன் சொல்கிறார்:

  அன்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

  புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் மறைவிற்குப் பின்னே அ தி மு க என்ன பாடு பட்டது என்பதை எல்லோரும் அறிவார்கள்.
  தமிழக அரசியலிலே தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய கலைஞரை வென்று வாகை சூடிய ஜெயலலிதாவிற்கு நிகர் ஜெயலலிதாவேதான்.

  அந்த அளவிற்கு மக்கள் பெருந்தலைவராக இப்போது எவரும் இல்லை என்பது ஒரு சோதனைதான்.
  அதை ஈடு செய்ய கூட்டு தலைமை ஒன்றே வழி என்பதை தங்களின் சுயநலத்தினாலும், பதவி வெறியினாலும் உணர மறுக்கின்றார்கள்.

  ஆனால் மன்னார்குடி கும்பலின் நோக்கம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கக் கூடியது.
  அவர்கள் 91 -96 ல் ஆடிய ஆட்டம் இன்றும் சராசரி மனிதனின் கண் முன் வந்து செல்கின்றது.

  ஒரே ஒரு எடுத்துக்காட்டு:
  http://www.vikatan.com/news/coverstory/76737-sasikala-ilavarasi-sudhakaran-and-a-dream-of-common-man.

  இக்கும்பல் செய்த தவறை உணர போவதும் இல்லை..
  இனி தவறு செய்யாது இருக்கப் போவதும் இல்லை..

  வள்ளுவனின் வாய்மொழி போல “அவ்விய நெஞ்சத்தார் ஆக்கம் அடையப் போவதையும் செவ்விய நெஞ்சத்தார் (தமிழ்நாட்டுக் குடிமகன்) கேடு பெறப் போவதையும்” பல சந்தர்ப்பங்களில் பார்க்கலாம்..

  வேதனையுடன்,
  இலக்குமி மோகன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.