இவர்கள் – ஏன் போக வேண்டும்….? துக்ளக் தலையங்கம் என்ன சொல்கிறது…?

“இவர்கள் போக வேண்டும்…..” என்று நேற்று நான்
எழுதியதை, பொதுவாக என்னுடன் கருத்தொற்றுமை
கொண்டிருக்கும் சில நண்பர்கள் கூட ஏற்றுக் கொள்ளவில்லை…
சிலர் பின்னூட்டங்களின் மூலமும் அதனை
தெரியப்படுத்தினார்கள்…

நான் இப்படி எழுத நேர்ந்ததன் காரணப் பின்னணியை
விளக்கமாக எடுத்துக்கூறி இன்னொரு இடுகை எழுத
விரும்பினேன்… எழுதவும் துவங்கினேன்.

இதில் மிக முக்கியமான காரணம் –
தமிழ்நாட்டின் நலனுக்கு எல்லா விதத்திலும்
கேடு விளைவிக்ககூடிய வகையில் –
தற்போதைய அதிமுக தலைமையை மன்னார்குடி
குடும்பம் கைப்பற்றி விட்டது என்பது தான்.

அதிமுக என்கிற கட்சி, ஒன்றரை கோடி
தொண்டர்களால் ஆன கட்சி…
இதில் – கட்சி நிர்வாகிகளும், எம்.எல்.ஏக்கள்,
எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் மட்டுமே –
விரும்பியோ, கட்டாயத்தினாலோ, சுயநலம் காரணமாகவோ
தற்போதைய தலைமையை ஆதரிக்கையில் –

95 சதவீதத்திற்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்களும்,
ஜெயலலிதா அவர்களின் மீதான நம்பிக்கையால்
அந்த கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்த பொது மக்களும்
இன்றைய தலைமையை முற்றிலுமாக நிராகரித்து
விட்டனர் என்பது தான் உண்மை.

அதிமுகவின் அடிப்படை பலமே பெண்களின்
ஆதரவும், நம்பிக்கையும் தான்…
இன்றைய தலைமையை பெண்கள் முற்றிலுமாக
வெறுக்கிறார்கள் … எதிர்க்கிறார்கள் … என்பது களத்தில்,
நடைமுறையில் – பார்ப்பவர்களுக்கு புரியும்….

ஏன் எதிர்க்கிறார்கள்….?
நான் அதைப்பற்றி விவரமாக எழுத முனைந்தபோது,
இன்று வெளிவந்த “துக்ளக்” வார இதழின் தலையங்கத்தை
பார்க்க நேர்ந்தது.

நூற்றுக்கு நூறு நான் எழுத நினைத்த அத்தனை
செய்திகளையும், காரணங்களையும் அந்த கட்டுரை
தன்னிடத்தே கொண்டிருக்கிறது.

எனவே, நான் தனியாக அதையே எழுதுவதை விட,
அந்த கட்டுரையையே இங்கு பதிப்பிக்கிறேன்….

மற்ற விஷயங்கள் கட்டுரைக்கு கீழே –

t-e-1

t-e-2

t-e-3

t-e-4

துக்ளக் தொடாத இன்னொரு விஷயத்தைப் பற்றி
என்னுடைய எதிர்பார்ப்பு, கருத்தையும் இங்கே சொல்ல
விரும்புகிறேன்.

பெரும்பாலான நண்பர்கள் என் கருத்துக்கு மறுப்பு
தெரிவித்ததன் காரணம், மீண்டும் தேர்தலை சந்திக்க
நேர்ந்தால், திமுக ஆட்சியைப் பிடித்து விடுமோ
என்கிற அவர்களது அச்சம்…

நான் அந்த நண்பர்களுக்கு சொல்ல விரும்புவது –
திமுக ஆட்சியை பிடிப்பதால் ஏற்படக்கூடிய
விபரீதங்களை விட –

எந்தவிதத்திலும் குறைவானதல்ல
மன்னார்குடி குடும்பத்தின் கையில் அதிமுக என்கிற
கட்சியையும், தமிழக அரசு என்கிற நிர்வாகத்தையும்
கொடுப்பது… !!!

என்ன நடக்கும் என்று தெரிந்தே,
அடுத்த நாலரை ஆண்டுகளுக்கு –
தமிழகத்தை படுபாதாளத்தில் கொண்டு போய் தள்ளக்கூடிய
ஒரு ஆட்சியை தொடர அனுமதிப்பதை
நம் மனசாட்சி அனுமதிக்குமா …?

இரண்டுமே பிரச்சினை தான் என்கிற நிலையில் –
கண்ணுக்கு தென்படக்கூடிய
சில நேர்மறை விஷயங்கள் –

மன்னார்குடி குடும்பத்தின் கையில்
ஆட்சி போகாது –
என்கிற செய்தி உறுதியானால் –

கட்சித்தொண்டர்களிடையேயிருந்து ஒரு புதிய தலைமை
உருவாக்ககூடிய வாய்ப்பு இருக்கிறது…அத்தகைய
புதிய தலைமைக்கு 95 சதவீத கட்சி அடிமட்டத்
தொண்டர்களின் ஆதரவு நிச்சயம் கிட்டும்.
( ஒரு சிறு கூட்டம், தற்போதைய தலைமையுடன்
சேர்ந்து கொள்ளலாம்….)

– ஒருவேளை – மன்னார்குடி குடும்பத்தினரை எதிர்த்து
அரசியல் செய்ய ஓபிஎஸ் அவர்களோ, வேறு இரண்டாம்கட்ட
தலைவர்கள் யாராவதோ – துணிந்தால்,
அவர்களுக்கே கூட இந்த ஆதரவு கிட்டலாம்…!!!

மக்கள் ஆதரவு இத்தகைய தலைமைக்கு கிடைக்கும்
என்பது வெளிப்படையாக தெரியும்போது,
ஒரு நல்ல கூட்டணியை உருவாக்கி தேர்தலை
சந்திப்பது கடினமாக இருக்காது. ஜெயலலிதா அவர்கள்
இல்லாத நிலையில் – ஒரு கூட்டுத்தலைமை மட்டுமே
சாத்தியமாகக் கூடும்…..

நண்பர்களிடம் இந்த சமயத்தில்
இன்னொரு கேள்வியையும் கேட்க விரும்புகிறேன்…

ஒரு வேளை திருமதி சசிகலா முதலமைச்சராக
பொறுப்பேற்று, ஆட்சி அதிகாரத்தை மேற்கொண்டால்
மட்டும், அந்த ஆட்சி எத்தனை மாதங்களுக்கு தொடரும்
என்று நினைக்கிறீர்கள்….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to இவர்கள் – ஏன் போக வேண்டும்….? துக்ளக் தலையங்கம் என்ன சொல்கிறது…?

 1. தமிழன் சொல்கிறார்:

  அரசியல், கருணானிதி எதிர்ப்பு என்ற ஒற்றை வாக்கியத்திலேயே கடந்த 40 ஆண்டுகளாக இயங்கியது. அந்தக் கருணானிதி இப்போது அரசியலில் almost இல்லை. ஸ்டாலின் தலைமையில் திமுக செயல்படப்போகிறது.

  அடுத்த ஆட்சி திமுகவுடையதுதான் என்பதில் எனக்கு மிகவும் நம்பிக்கை. அது எப்படிப்பட்ட வெற்றி பெறப்போகிறது என்பது, சசிகலா தலைமையிலான அதிமுக நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்திருக்கிறது. இது, பாஜகவின் எழுச்சிக்கும் வழிகோலலாம். (வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதற்குப் பிந்தைய காலகட்டங்களில் பாஜக எதிர்க்கட்சியாக வளர்ச்சி பெற, அதிமுக சரியாக நடக்கவில்லையானால் வாய்ப்பு ஏற்படும். திராவிடச் சிந்தனை உள்ளவர்கள் திமுக பக்கம்தான் சாய்வார்கள். ஜாதிக் கட்சிகளுக்கு எப்போதும்போல் ஆதரவு இருக்காது). அதிமுகவுக்கு இப்போது தேவை ஸ்டார் தலைவர். மக்களையும் ஈர்க்கவேண்டும், கட்சிக் கொள்கைகளையும் வழிமுறைகளையும் தொடரவேண்டும்.

  பெரும்பாலான அதிமுக தொண்டர்கள், ஜெ./அதிமுக செய்த தவறுகளுக்கெல்லாம் சசிகலாவையும் அவருடைய மன்னார்குடி கும்பலையுமே காரணமாகக் கருதுகிறார்கள். அதனால்தான் சசிகலாவுக்கு இந்தப் பின்னடைவு. என்னால் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளமுடியாத நிகழ்வு, ஜெ.வின் பூத உடலைச் சுற்றி இந்த மன்னார்குடி கும்பலை அனுமதித்தது. அதுதான் எல்லாச் சந்தேகங்களுக்கும் அடிப்படை. சசிகலா தவிர, வேறு ஒருவரும் வெளிச்சத்தில் வந்துவிடக்கூடாது என்பதற்காக இது நடைபெற்றது என்பதுதான் எனது எண்ணம். இருந்தபோதும், ஓபிஎஸ் ஜெ. அருகில் இருக்க எல்லாத் தகுதியும் பெற்றவர். நிற்க….

  இப்போது வெங்கடேஷோ அல்லது தினகரனோ கூட இருப்பதில் எனக்குப் பெரிய ஏமாற்றம் இல்லை. இது சாதாரண நிகழ்வுதான். சசிகலா இன்னும் தன் தலைமைத் தகுதியை, கட்சியை வெற்றிப் பாதைக்குச் சேர்க்கும் தகுதியை வெளிப்படுத்தவில்லை. அவர் ‘உள்ளே’ சென்றால், அவருக்கு இப்போது ஓபிஎஸ் போன்ற தொண்டர் கிடைக்காது. அதனால் கட்சியின் ஆதிக்கத்துக்காக இந்த இருவரும் வெளிச்சத்தில் உள்ளனர். அப்படித்தான் இதனைப் பார்க்கிறேன். இருந்தாலும், முக்கியப் பேச்சாளர்கள் (பல வருடங்கள் அதிமுகவில் இருந்து உழைத்தவர்கள்) சசிகலாவை ஏற்காதது எனக்குமே, அவர் மீதான நம்பிக்கைக் குறைவை ஏற்படுத்துகிறது. (இந்தப் பேச்சாளர்கள் ‘கட்சியின் உள் விஷயங்கள்’ தெரிந்தவர்கள்)

  ராஜராஜன் பெரும்புகழ் பெற்றவன். அவன் மைந்தன் ராஜேந்திரன் பெரும் புகழ் பெற்றான். அதற்குப் பின்பு மற்றவர்கள் புகழ் பெறவில்லை. மாற்றம் என்பது மானிடத் தத்துவம்.

 2. VS Balajee சொல்கிறார்:

  Pl ready about Dr Jayalalitha & Co assets in dinamalar today , it is unimaginable. Same group is going to rule TN for next 4 years.. God save TN

 3. GVS சொல்கிறார்:

  அதிமுகவின் தொண்டர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
  அவர்களை வழிநடத்திச் செல்ல அவர்களுக்கு நம்பிக்கையான
  யாராவது ஒருவர் தேவை. அதற்காகத்தான் காத்திருக்கிறார்கள்.
  தொண்டர்கள் கொதித்துக் கிளம்பும்போது, அந்த கோபம்
  வெளிப்படும்போது, இந்த சரணாகதி இரண்டாம்கட்ட தலைவர்கள் எல்லாம் காணாமல் போய் விடுவார்கள்
  அல்லது U turn அடித்து இந்தப் பக்கம் திரும்பி, தொண்டர்களிடம் சரணாகதி அடைந்து விடுவார்கள்.
  தலைமை தாங்கி வழி காட்டப்போகும் அந்த
  இரண்டாம்கட்ட தலைவர் யார் என்பது மட்டுமே இப்போது கேள்வி.

 4. Srini சொல்கிறார்:

  KM sir,
  I see Sasikala and gang as a pakka political strategic group. If you see the way events were managed, controlled and administered right from the day JJ go admitted to hospital to till date… every small thing has been carefully crafted, and executed. Inside that childish face that sasi carries, is a master political strategist with support of a big family team. I am not able to see how they will fare if an election comes.. but for sure they will manage for long time.

 5. tyaguu சொல்கிறார்:

  Yes sir. Even i prefer Stalin than Sasikala!

 6. செந்தில் - கோவை. சொல்கிறார்:

  2017-ல் மீண்டும் ஒரு சட்டமன்ற தேர்தலை தமிழகம் எதிர் கொள்ளலாம்….

 7. selvarajan சொல்கிறார்:

  என்னத்தை எழுதி என்ன ஆகப்போகிறது … ? ஒன்று ” நிதிகளிடம் ” விட்டால் ” கரன்களிடம் ” மாட்டிக்கொண்டு திண்டாட வேண்டிய நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது …. என்பது தான் கண்கூடு … அவசர கதியில் அனைத்தும் நடப்பது எதனால் … ?

  முன்பு தன்மீது இருந்த வழக்குகள் — சர்க்காரியா கமிஷன்கள் போன்றவைகளை எவ்வாறு மத்தியில் இருந்தவர்களிடம் அடங்கி கிடந்து ஒன்றும் இல்லாமல் ஆக்கி கொண்டாரோ ஒருவர் — அதே பாணியில் முதல்வர் பதவியை ருசிக்க இருக்கும் சசிகலா அம்மையாரும் — மத்தியில் உள்ளவர்களுக்கு ” அடிமையாக — கைப்பாவையாக ” வேடம் தரித்து நாடகம் போட்டால் — ஓரளவு காலம் தள்ள முடியும் – என்பது தான் வெட்ட வெளிச்சமான உண்மை …..

  தன்னுடைய திருமணத்தை முன்னிருந்து நடத்திய ” தானைத்தலைவர் ” பாணியை இவர் கையில் எடுக்க ஆலோசனை வழங்க அருமை கணவர் அருகில் இருக்கும் போது — கவலைகள் ஏது …. ஓ .பி. எஸ்ஸை அவ்வளவு எளிதாக வெளியேற — ஒதுங்க விடமாட்டார்கள் என்பது தான் நடைமுறை சாத்தியம் …. தமிழக மக்களுக்கு எப்படியோ — மத்தியில் உள்ளவர்களுக்கு பல அடிமைகள் சிக்கி விட்டார்கள் …. அப்படித்தானே …. ?

 8. தமிழன் சொல்கிறார்:

  ஜெ.வின் சொத்தாக தினமலர் எழுதியிருப்பதைப் பலர் குறிப்பிட்டுள்ளார்கள். தினமலருக்கு உள்’நோக்கம் இருக்கிறதா என்ற கேள்விக்குள் புகவில்லை. அதன் அதிபர்களில் ஒரு குரூப் பாஜக சார்பாகவும் இன்னொரு குரூப் திமுக சார்பாகவும் ஒரு வருடத்துக்கு மேலாக இருக்கிறார்கள்.

  இந்தச் சொத்துக்கள் எப்போது வாங்கப்பட்டன என்பதையும் குறிப்பிட்டிருந்தால், மிக எளிதாக யார், எப்படி வாங்கியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். ஜெ. வின் சொத்து, சிறுதாவூர், கொட’நாடு (அதுவுமே அவருக்கே உரியதா என்பது தெரியவில்லை), போயஸ் தோட்டம் அவருடைய தாயுடையது. ஹைதராபாத் சொத்து ஜெ.வின் சம்பாத்யம் (என்று நினைக்கிறேன்). மற்றபடி தி.நகரில் இடம் இருக்கலாம். மற்ற இடங்களுக்கு, அதுவும் தஞ்சாவூரில், மன்னார்குடியில், திருச்சியில் ஜெவுக்கு சொத்து இருக்கிறது என்பதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது? இவற்றைச் சரியாக analyze செய்தால், தி.நகரில் உள்ள ஒரு இடமே, (பெரிய இடமாக இருக்கவேண்டும் என்பதற்காக) 6-7 பேரிடமிருந்து வாங்கியிருக்கலாம். இதுவுமே, கொள்ளைக்கூட்டத்தின் கைவரிசையாக இருக்கலாம்.

 9. surya சொல்கிறார்:

  Party has to split as Real ADMK followers and Mannargudi mofi’as followers then only TN will get some good solution until that it will under this mangoose team only…

 10. Raja சொல்கிறார்:

  K M sir, I read your blog for last 5 years but I never reply to you. Your write is always close to my thing. I am also against Amma for 1996,1999,2004 & 2006 . But I admire her for the last 25 years. MGR also expelled her from the party . But she is successor for MGR. Please read last 8 months magazines of nakkeran & Vikatan group they wrote cm is not well she can’t walk long she can’t sit more than 30 minutes she is using small lift for stages she is using flasks for health drink etc… Now they doubt about cm death. These magazines now write about sasikala and aiadmk. No one influence Amma , I support aiadmk for tamilnadu future . Like u I am also like cho and thugIak I like Gurumurthy for his writing about economy and Indian culture. But I totally against his thalaiyangam . If cho is there he is also welcome aiadmk decision. I strongly believe Mannargudi family so…. better than thiruvarur family.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.