ஒரு அழகான, இளமை ததும்பும் வீடியோ – எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, கலைஞர், அண்ணாவும் கூட …..

1966-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு அழகான,
இளமை ததும்பும் வீடியோ –
எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, கலைஞர்,
அண்ணாவும் கூட …..

சந்தடியில் கவனிக்கப்படாமலே போய் விட்டது
ஒரு அழகான, அருமையான வீடியோ க்ளிப்பிங்….

ஆகையால் நண்பர்கள் அனைவரும் கண்டு மகிழ
இங்கு பதிப்பிக்கிறேன்.

எம்ஜிஆர் அவர்களின் அண்ணன் சக்ரபாணி அவர்களின்
மகள் திருமண நிகழ்ச்சி.

ஒப்பனை இல்லாத, வெகு அற்புதமான தோற்றத்துடன்
எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, ஆகிய நட்சத்திரங்களுடன்
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகிய
அரசியல் தலைவர்களும் வந்து போகும் இந்த
திருமணம் நிகழ்ந்த காலத்தில் இந்த வீடியோ
டெக்னாலஜியே அபூர்வம்…

அபூர்வமான இந்த வீடியோ பதிவை அனுப்பிய
நண்பர் சேஷன் அவர்களுக்கு நன்றி.

இந்த வீடியோவுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது.
இதில் வலம் வரும் 4 பேர், பின்னாட்களில்
தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தனர்
என்கிற சிறப்பு ….!!!

(இந்த திருமணத்தில் மணப்பெண்ணாக அமர்ந்திருக்கும்
திருமதி லீலாவதி தான் பின்னொரு காலத்தில்
எம்ஜிஆர் அவர்களுக்கு, தனது கிட்னியை (சிறுநீரகம்)
கொடுத்து எம்ஜிஆர் மேலும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்க உதவினார்…)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ஒரு அழகான, இளமை ததும்பும் வீடியோ – எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, கலைஞர், அண்ணாவும் கூட …..

 1. தமிழன் சொல்கிறார்:

  சாதாரண குழந்தை, அசாதாரணமான தலைவராக வாழ்க்கையில் வருவதே விந்தைதான். காணொலியில் உள்ள நான்கு பேர், பின்னாளில் முதல்வராக ஆகி, தமிழகத்தை ஆண்டதும் ஆச்சரியம்தான். ஆரம்பகாலத்தில் எம்ஜியாரின் அரசியல் எழுச்சிக்கு அண்ணன் சக்கரபாணியும் உதவியிருக்கிறார். சக்கரபாணி அவர்கள் பூலாங்குரிச்சியில் (பொன்னமராவதி அருகில்) கஞ்சித் தொட்டி திறந்து இரவு உரையாற்றியதை நான் என் 9 வயதில் பார்த்திருக்கிறேன். (1972-73)

  இந்தக் காணொலி எனக்கு, சேது படத்தில் வரும், ‘எங்கே செல்லும் இந்தப் பாதை… யாரோ யாரே அறிவாரோ’ என்ற பாடலைத்தான் நினைவுபடுத்துகிறது. காலம்தான் என்ன என்ன கணக்குகளைப் போடுகிறது….

 2. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I could guess where you are going and what you want to convey slowly and steadily. It causes
  me great pain and doubt. You too……

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப கோபாலகிருஷ்ணன்,

   எனக்கு மறைவான அஜெண்டா எதுவுமே கிடையாது.

   நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பது
   உண்மையாகவே எனக்கு புரியவில்லை. இன்னும்
   கொஞ்சம் வெளிப்படையாக சொல்லுங்களேன்.
   நான் தவறாக நினைக்க மாட்டேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I will have to observe some more of your articles.Then I will be completely frank.If I feel that
  my view is not correct, I have the courage to tender my apology to you. Meanwhile. if you desire to tell me your e-mail id please send. I will not disturb often.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Mr.Gopalakrishnan,

   You are most welcome to communicate with me.

   If you want to send it to my personal ID
   then – instead of writing it in this marumozhi column –

   please draft the mail and address it separately as
   kavirimainthan@gmail.com

   then it comes to me as a personal mail.

   with all best wishes,
   Kavirimainthan

 4. srinivasanmurugesan சொல்கிறார்:

  ஹா…..அருமையான வீடியோ…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.