செத்துப்போனது தெரிந்தவர்களுக்கு – ஏன், எப்படி செத்தார்கள் என்பது தெரியாதா…?

வறண்ட மேட்டூர் அணை

வறண்ட மேட்டூர் அணை

செத்துப்போனது தெரிந்தவர்களுக்கு –
ஏன், எப்படி செத்தார்கள் என்பது தெரியாதா…?

drought-in-tn

இன்று மாலை வெளிவந்த செய்திகளின்படி –

– தேசிய மனித உரிமைகள் ஆணையம்,
ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின்
அடிப்படையில்,

தமிழகத்தில், கடந்த ஒரு மாதத்தில் 106 விவசாயிகள்
மரணம் அடைந்தது எப்படி என விளக்க அளிக்க வேண்டும்
என்று தமிழக அரசு தலைமைச் செயலருக்கு
நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகத் தெரிகிறது…

விவசாயிகள் செத்துப்போனதை ஊடகங்களின் மூலம்
தெரிந்து கொண்டவர்களுக்கு,

அந்த விவசாயிகள் – ஏன், எப்படி, எதற்காக
செத்துப்போனார்கள் என்பது தெரியாதா…? அந்த விவரமும்
அதே ஊடகங்களில், அந்த செய்திகளுடனேயே
வந்திருப்பது தெரியாதா…?

விளக்கம் சொல்லி விட்டால் மட்டும் ….?

உடனே விடிவு ஏற்பட்டு விடுமா…?
போன உயிர்கள் திரும்ப வந்து விடுமா…?
இல்லை இனியும் ஏற்படவிருக்கிற இழப்புகளை
தடுத்து விடுமா…?

உச்சநீதிமன்றம் கொடுத்த உத்திரவை கர்நாடகா அரசு
மதிக்காததன் விளைவு தானே இந்த சாவுகள்….?

கோர்ட் தீர்ப்பை நிறைவேற்றாத கர்நாடகா அரசை
மத்திய அரசு தட்டிக்கேட்காததால் விளைந்த
சாவுகள் தானே இவை …?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்
என்று தனக்கு உத்திரவு போட உச்ச நீதிமன்றத்திற்கே
அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு
சொன்னதாலும் ஏற்பட்டவை தானே இந்த சாவுகள்…?

விவசாயிகளின் சாவுக்கு இவை தான் காரணம் என்று
தமிழக அரசு விளக்கம் அனுப்பினால்….?

தெரிந்தே தவறு இழைத்த,
நீதிமன்ற உத்திரவை மீறிய –
கர்நாடகா அரசு கலைக்கப்பட்டு விடுமா…?

அலட்சியம் காட்டிய,
இதிலும் அரசியல் செய்த
மத்திய அரசு தண்டிக்கப்படுமா…?

———————————————

பின் குறிப்பு –

உச்சநீதிமன்ற உத்திரவை கர்நாடகா அரசு
நிறைவேற்றத தவறியதும் –

காவிரி ட்ரைப்யூனல் இறுதித்தீர்ப்பை கொடுத்து
ஆண்டுகள் பல ஆயினும், காவேரி மேலாண்மை வாரியத்தை
அமைக்க மத்திய அரசு தவறியதும் தான்
விவசாயிகளின் சாவுக்கான காரணங்கள்
என்று தமிழக அரசு பதில் அனுப்ப வேண்டும்…

அப்போதாவது யாருக்காவது குற்ற உணர்வு வருகிறதா
என்று பார்க்க வேண்டும்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to செத்துப்போனது தெரிந்தவர்களுக்கு – ஏன், எப்படி செத்தார்கள் என்பது தெரியாதா…?

 1. இளங்கோ சொல்கிறார்:

  இது குஜராத்தில் நடக்குமா ?
  நர்மதையில் நீர் விட மாட்டோம் என்று மத்திய பிரதேசம்
  சொல்லி விடுமா ?
  மத்திய அரசு பார்த்துக் கொண்டிருக்குமா ?

 2. G.Rameshkumar சொல்கிறார்:

  இந்த விவசாயிகளின் சாவுக்கு கர்நாடகா அரசும்,
  மத்திய அரசும் தான் பொறுப்பு.
  அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்.
  இறந்துபோன விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு
  உடனடியாக மத்திய அரசால் அளிக்கப்பட வேண்டும்.
  வறட்சி பாதித்த தமிழக விவசாயிகளுக்கு
  உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு
  உடனடியாக அறிவிக்க வேண்டும். இனியும் உயிரிழப்பு
  நேரிடாமல் இருக்க இது அவசியம்.

 3. Baskar சொல்கிறார்:

  வலுமையான வாதம் ஓதிக்கித்தள்ள முடியாது. ஒருவிதத்தில் உணர்ச்சி வசப்பட்டு எழுதியமாதிரி இறுகின்றது. ஒருவாதத்திற்கு மேட்டுரில் தண்ணீர் இருந்தாலும் வயலுக்கு பாயும் என்பதற்கு பல இடங்களுக்கு வழி இல்லை. இதை நான் நினைப்பதற்கு சில காரணங்கள். 1) பல வாய்க்கால், மதகு, பாய்கால், வடிகால் மேற்றும் கன்னிகால் இருந்த இடம் தெரியவில்லை ஆக்கிரமிப்புகளால் – இவை பராமரிக்காமல் தண்ணீர் வயலூக்கு வர வழி இல்லை. 2) இலவச மின்சாரம் விவசாய்களை nilathadi நீரை அளவுக்கு மீறி எடுக்க வழிவகுத்தன் விளைவு, பல இடங்களில் நிலத்தடி நீர் மிக குறைத்தது. ஆற்று மணல் அளவுக்கு மீறி அள்ளியததும் மிக முக்கிய காரணம். 3) பொதுவான மழை குறைவு காரணத்தினாலும் மற்றும் கிராம குள்ளம், குட்டை தண்ணீர் இல்லாததுனாலும் நிலத்தடி நீர் உயரவில்லை.

  இந்த வருடம் பொதுவான மழை இருத்திருந்தால், நிலத்தடி நீர் உயர்ந்திருக்கும் நாம் மேட்டூர் பற்றி பேசியிருக்கமாட்டோம். நியாயமான வழி என்னவென்றால் 1) கர்நாடகம் தண்ணீர் விட வேண்டும் – இருப்பதை பிரித்து கொள்ளவேண்டும். 2) முன்பு இருந்ததை போல வாய்க்கால், வரப்பு, தண்ணீர் பாதைகளை மீட்டு எடுத்து பராமரிக்க வேண்டும். எதனால் ஊர் குளம், குட்டை நிரம்பி நிலத்தடி நீர் உயரும் – தண்ணீர் கஷ்டம் குறையும். 3) இலவச மின்சாரத்தை நிறுத்தி முறைப்படுத்தப்பட்ட/தரமான மின்சாரம் நியமன விலைக்கு – இது வாய்க்கால், வரப்பு பராமரிப்புக்கு தூண்டுகோலாக இறக்கும், நிலத்தடி நீர் துஷ்ப்ரயோகம் குறையும்.

  எல்லாவற்றுக்கும் மேலாக விளைபொருளுக்கு நியாமான விலை கிடைக்க வழியிருந்தால் இத்தகைய மரணங்களை தவிர்க்கலாம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.