இரண்டு “ஜி” -கள் …சிறந்த அரசியல் வியாபாரிகள்….!!!

modiji-and-nithishji

லாலுஜி எப்படி உட்கார்ந்திருக்கார் பார்த்தீர்களா ஜீ… ???

lalu-prasad-yadav_

ஆக – என்னை கீழ தரையில உட்கார வெச்சூட்டிங்க இல்லே…..?

மோடிஜி, நிதிஷ்ஜி – இந்திய அரசியலின் இரண்டு
அதி சிறந்த வியாபாரிகள் – ஒருவருக்கொருவர் மகுடம்
அணிவித்துக் கொள்ளும் காட்சி –
இன்றைய நாளிதழ்களின் கார்ட்டூன்கள் கீழே –

இது ‘ஹிந்து’ ஆங்கில இதழின் கேசவ் கார்ட்டூன் –

keshav-cartoon

இது நம்ம ஊர் தினமலர் “கர்ணா”வின் கார்ட்டூன் –

dinamalar-cartoon-1

இந்த வியாபாரிகளின் சிறந்த தகுதி –
பழசை மறப்பது….மறக்கடிப்பது …. !

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் –
பாராளுமன்ற தேர்தலின் போதும்,
பீஹார் சட்டமன்ற தேர்தலின்போதும் –

இவர்கள் இருவரும் –

ஒருவரை ஒருவர் எப்படி எல்லாம் ஏசிக்கொண்டனர்
என்பதெல்லாம் இன்னமுமா உங்களுக்கு
நினைவில் இருக்கிறது….?

அதையெல்லாம் மறக்கடிக்கச் செய்ய வேண்டும்…
என்பது தான் இப்போதைய முதல்,
முக்கிய குறிக்கோள், லட்சியம் எல்லாமே…..!!!

அடுத்து, கூடிய விரைவில் –
கூட்டணியை மாற்றியாக வேண்டுமே …!!!

இந்த வியாபாரிகளின் முக்கிய மூலதனம் – மக்களின் மறதி…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to இரண்டு “ஜி” -கள் …சிறந்த அரசியல் வியாபாரிகள்….!!!

 1. LVISS சொல்கிறார்:

  This is only temporary truce – — Nitish Kumar perhaps wants to tell lalu Prasad that he has other options if their party chose to break the aaliance — Their alliance is not strong as it was forged to keep away BJP –Lalu has been trying to push his son forward -Except perhaps himself most of his other relatives are in some position –As of now they need ech other so we should not read much into this– As Goundamani says ” arasiyalla idhellam sagajamappa”–
  Nitish is the only opposition eader who is supporting the note ban and he has taken bold to enforce prohibition in the state —

 2. GVS சொல்கிறார்:

  இரண்டு பேருமே தங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக
  எதையும் செய்யத் தயாராக் இருப்பவர்கள்.

 3. selvarajan சொல்கிறார்:

  அய்யா ….இந்த இடுகைக்கு ஏற்ற பின்னூட்டம் இல்லையென்றாலும் — நமது பிரதமர் சார்ந்தது —– தற்போது நடக்கின்ற மத்திய அரசின் நடவடிக்கைகள் எதை நோக்கி என்பது மக்களுக்கு புரியாத புதிராவே இருக்கட்டும் … ! ஒரு முந்தைய இடுக்கை ஒன்று மனதில் இருந்துகொண்டு — திரு மோடிஜியின் பின்னணி என்பதில் ஆரம்பித்து —- அந்த இடுகையில் தாங்கள் எழுப்பியிருந்த பல கேள்விகளை — மீண்டும் – மீண்டும் கேட்டு மிகவும் தொல்லைப்படுத்துகிறது — அதில் பல கேள்விகளை அடுத்து …..

  // பொதுவாக ஒரு கணிப்பு இருக்கிறது –
  நரேந்திர மோடி பிரதமராக வந்தால் – ஒரு
  ஜனநாயகவாதியாக செயல்படமாட்டார்,
  தன் விருப்பப்படி தான் செயல்படுவாரென்று.

  தொடைநடுங்கிகளையும், பொம்மைகளையும்
  பார்த்துப் பழகிவிட்ட நமக்கு
  ஒரு சர்வாதிகாரியை – உண்மையான
  அதிகாரத்தில் பார்ப்பது ஒரு வித்தியாசமான
  அனுபவமாக இருக்கும். // என்றும் கூறியிருந்திர்கள் … இந்த கருத்தில் ஏதாவது மாற்றம் உண்டா … ?
  அந்த இடுக்கை :– // நரேந்திர மோடி – வரலாமா ? வந்தால் என்ன ஆகும் ?
  Posted on ஜூன் 10, 2013 by vimarisanam – kavirimainthan // — அன்று தாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கான விடை தங்களுக்கு கிடைத்து விட்டதா – என்பதை விளக்குவீர்களா … ? விளக்கினால் பல சந்தேகங்கள் பலருக்கும் — தீருமல்லவா … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   ஒரு mid-term review அவசியம் தேவை தான்…

   கைவசம் உள்ள சில பணிகளை முடித்து விட்டு,
   இதனையும் நிச்சயமாக நாம் அனைவரும்
   சேர்ந்தே ஆய்வு செய்யலாம்…..!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. SELVADURAI சொல்கிறார்:

  “ஒரு mid-term review அவசியம் தேவை தான்…”

  நன்றி, திரு கா.மை. அவர்களே . தங்களைப் போன்ற விவரம் அறிந்தவர்களின் லாஜிக்கலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.