காஷ்மீரில் பனி மழை …!!!

காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு என்று செய்திகள்
வருகின்றன…. சாதாரணமாகவே டிசம்பர் கடைசியிலும்,
ஜனவரியிலும் மிகக்கடுமையான குளிர் இருக்கும்…
இந்த வருடம் இன்னும் கடுமை என்று சொல்கிறார்கள்.

சென்ற வருடம் கிட்டத்தட்ட இதே காலத்தில் நான்
காஷ்மீர் சென்றிருந்தேன்…. திட்டமிட்டு, இந்த குளிர்காலம்
அங்கே எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காகவே…!!

நம்மைப்போன்ற வெளியூர்க்காரர்களுக்கு தான் குளிரும்,
பனியும்… உள்ளூர் மக்கள் இதை சகஜமாக எதிர்கொள்கிறார்கள்
என்பதை நேரில் பார்க்க முடிகிறது. அங்கேயே பிறந்து
வளர்ந்தவர்களுக்கு இது ஒரு பொருட்டாகவே இல்லை.

பாவம், ராணுவத்தினருக்கு தான் இது கொடுமையான
அனுபவம். 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டி
இருப்பதால், காலநிலை அவர்களை கடுமையாக
பாதிக்கிறது.

அதுவும், அங்கு ராணுவத்தில் பாதிக்கு மேல், நம்ம ஊர்
தமிழர்கள் தான்… கடுமையான பனிப்பொழிவுக்கு இடையேயும்
அயராது விழித்திருந்து நாட்டைக் காக்கும் பணியில்
ஈடுபட்டிருக்கும் ராணுவத்தினருக்கு நமது “சல்யூட்”…

கீழே நேற்று செய்தி தளங்களில் வெளியான சில
புகைப்படங்கள்…

அதற்கு கீழே சென்ற ஜனவரியில் காஷ்மீர் சென்றிருந்தபோது
நான் எடுத்த சில புகைப்படங்கள்…!!!

jk-1

சென்ற ஜனவரி முதல் தேதியன்று மதியம் நான் இதே இடத்தில் இருந்தேன்….

jk-2

jk-3

jk-4

jk-5

jk

இவை சென்ற ஜனவரியில் காஷ்மீர் சென்றிருந்தபோது
நான் எடுத்த சில புகைப்படங்கள்…!!!

wp_20151226_001

jk

gulmark-ice-sheet

gulmarg-2

gulmarag

dal-lake

boat-house

ஸ்ரீநகர் அருகே 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு புராதன ஹிந்து கோவில் - நினைவுச்சின்னமாக.....

ஸ்ரீநகர் அருகே 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு புராதன ஹிந்து கோவில் – நினைவுச்சின்னமாக…..

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to காஷ்மீரில் பனி மழை …!!!

  1. தமிழன் சொல்கிறார்:

    அங்கே பணியாற்றும் வேறு மா’நிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ராணுவத்தினருக்கும் கடும் சவால்தான். அவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்.

    (ஆனாலும், எனக்கு இந்த மாதிரி பனிபொழிவு, பனி சூழ்ந்த இடத்தில் ஒரு வாரமாவது சென்று தங்கியிருக்கவேண்டும் என்று ஆசை. அதற்கு வாய்ப்புதான் வரமாட்டேன் என்கிறது. நம்ம ஊர்லனா, இந்தி பேசத் தெரியணும். சரி.. உங்களுக்காவது போகக் கொடுத்துவைத்திருக்கிறதே)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.