விடாக்கண்டர் கொடாக்கண்டர் பேட்டி….!!! திரு.எஸ்.குருமூர்த்தி – திரு.ரங்கராஜ் பாண்டே –


sg-and-pande

சனி (07/01/2017) இரவும், ஞாயிறு மறு ஒளிபரப்புமாக
தந்தி டிவியில் ஒளிபரப்பாகிய திரு.எஸ்.குருமூர்த்தி
அவர்களை திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள்
பேட்டி கண்ட நிகழ்ச்சியை நண்பர்கள் பலரும்
பார்த்திருப்பீர்கள்….

( பார்க்காத நண்பர்களுக்காக,
கீழே லிங்க் கொடுத்திருக்கிறேன்..)

நிகழ்ச்சி மிகவும் விருவிருப்பாகவும், சுவையாகவும் இருந்தது
என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க வாய்ப்பில்லை
என்றே நினைக்கிறேன்.

இதில் கேள்வி கேட்டவர், பதில் விளக்கம் அளித்தவர் –
இரண்டு பேருமே விடாப்பிடியாக தங்கள் நிலையை
வலியுறுத்துவதில் திடமாக இருந்தார்கள்.

திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் பாஜக ஆதரவாளர்…
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முக்கிய பணியாற்றுபவர்…

எனவே, மோடிஜியையும் பாஜக அரசையும் எந்த இடத்திலும்
விட்டுக் கொடுக்க கூடாது என்று பிடிவாதமாக இருந்ததை
பார்க்க முடிந்தது.

ஆனால், அவரது இந்த ஒருதலைப்பட்சமான
கட்சி சார்பு நிலை, அவரது புத்திசாலித்தனத்தையும்,
பேச்சுத்திறமையையும் சில இடங்களில் மங்கலாக்கி,
வாதத்தில் அழுத்தமில்லாத
தன்மையை உருவாக்கி விட்டது என்பதைச்
சொல்லித்தான் ஆக வேண்டும்.

Demonetisation என்கிற கொள்கையையும், அது ஏன்
தேவைப்பட்டது என்பதையும், புள்ளி விவரங்களுடன்
விளக்கமாக எடுத்துச் சொன்ன வகையில், அவரது
புத்திசாலித்தனம் பளிச்சிட்டது.

ஆனால், மத்திய அரசு, அதை ஒழுங்காக திட்டமிட்டு
செயல்படுத்துவதில் உண்டாக்கிய செயற்கை சிக்கல்களை
அவர் அநியாயத்திற்கும் நியாயப்படுத்தி பேசிய வகையில் –

அவருக்கே, சில சமயங்களில், எரிச்சல் கூடி –
எதிர்க் கேள்வி கேட்பவர்களை
( எதிரில் இருப்பவரையும் சேர்த்து ….)

முட்டாள்தனம்,
அல்பத்தனம்,
நிவாரணம் வேண்டுமென்றால்
கோர்ட்டுக்கு போக வேண்டியது தானே…… ? என்றெல்லாம்
தூக்கியெரிந்து பேச வைத்தது.

சில சமயம் அரசின் தரப்பில் ஏற்பட்ட தவறுகளை சுட்டிக்
காட்டியதை ஒப்புக்கொள்ளாமல் –

ரங்கராஜ் பாண்டே அவர்களின் கேள்விகளுக்கு –
திரும்ப திரும்ப தவறான வாதத்தையே முன் வைத்தது –

கவுண்டமணியின் –
“இன்னொரு பழம் எங்கே…? யையும்
செந்திலின் ” அது தாங்க இது ” வையும்
நினைவு படுத்தி சிரிப்பை வரவழைத்தது….!

முதல் பாதியில், திரு.குருமூர்த்தி சறுக்கினார் என்றால்,
இரண்டாவது பாதியில் திரு.பாண்டே சறுக்கிக்கொண்டே
இருந்தார்….

திருமதி சசிகலா தலைமையில் அதிமுக பற்றியும்,
திரு ஸ்டாலின் தலைமையில் திமுக பற்றியும்,
திரு.குருமூர்த்தி அவர்கள் சரியான வாதத்தையே
முன்வைக்க –

பாண்டே அவர்கள் தவறான வாதத்தையே
வற்புறுத்திக் கொண்டிருந்தார்….( பார்க்கும் சிலருக்கு –
பாண்டேக்கும் “இன்னொவா” கிடைத்திருக்குமோ
என்று கூடத் தோன்றி இருக்கலாம் -அந்த அளவிற்கு
தீவிரம்….!!!)

ஆனால், பாண்டே அவர்களின் நோக்கம்
முடிந்த அளவு எதிராளியிடமிருந்து வார்த்தைகளைப்
பிடுங்க வேண்டும் என்பது தான்
என்று நான் நம்புகிறேன்….!!! 🙂 🙂

ஆக மொத்தம் – ஒரு சுவையான,
விருவிருப்பான பேட்டி தான்…

ஒரு பேட்டியின் வெற்றி,
பேட்டி காணப்படுபவரிடமிருந்து –
அதிக பட்ச செய்திகளை / கருத்துக்களை
வெளியே கொண்டுவருவது தான்…

அந்த வகையில் – திரு. ரங்கராஜ் பாண்டே
பாராட்டிற்குரியவரே….!!!

http://www.thanthitv.com/schedule/schedule.aspx?pgid=2

—————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to விடாக்கண்டர் கொடாக்கண்டர் பேட்டி….!!! திரு.எஸ்.குருமூர்த்தி – திரு.ரங்கராஜ் பாண்டே –

 1. selvarajan சொல்கிறார்:

  வழக்கமான ” அவரவர் சார்புநிலை ” பேட்டிகளை பார்ப்பதால் — ரொக்கமற்ற பரிவர்த்தனை நீங்கிவிட போகிறதா .. ? சசிகலா அ. தி.மு.க. வை யும் — பொது செயலாளர் பதவியை விட்டுவிட போகிறாரா …? இரண்டுமே நடக்க போவதில்லை …! அதைவிட ….

  // “நாங்க சென்னைப் பசங்கண்ணா.. எங்களுக்கே வலிக்குதே, அவங்களுக்கு எப்படி இருக்கும்” //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/thousands-youths-hold-firsever-grand-rally-support-jallikkattu-271367.html என்று ” ஜல்லிக்கட்டுக்காக ” அணிதிரண்ட இளைஞர்களையும்……

  // விவசாயிகளுக்காக.. சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருக்க குவிந்த இளைஞர் பட்டாளம்…! //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/mass-youth-gathered-jallikkattu-farmers-chennai-271373.html இந்த ஜல்லிக்கட்டு — மற்றும் விவசாயிகளின் இன்றைய நிலைக்காக ” களமிறங்கிய ” இளைஞர்களின் துடிப்பையும் வீறுகொண்டெழுந்ததையும் …. மனதார பாராட்டலாம் — !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இதைப்பற்றி எனக்கு நேற்று மாலை தான்
   முதல் தடவையாகவே தெரிய வந்தது….
   பாக்கியராஜ் மொழியில் சொல்வதானால் ஒரு “இன்ப அதிர்ச்சி”…!!!
   தமிழகத்தில் இவ்வளவு “சூடு” உள்ள
   இளைஞர்கள் இருக்கிறார்களே என்று….!!!

   இதை யார், எப்படி organize செய்தார்கள்
   என்கிற விவரங்கள் எதாவது தெரியுமா…?
   விவரமாகச் சொல்ல முடியுமா,,?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • selvarajan சொல்கிறார்:

    // சென்னையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி…

    கேர் என்ற தனியார் தொண்டு நிறுவனம், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மென்பொருள் நிறுவன ஊழியர்களை ஃபேஸ்புக் மூலம் ஒருங்கிணைத்தது. இதன் அடிப்படையில், சென்னை கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கானோர், கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை பிரம்மாண்டமான பேரணி நடத்தினர். இந்த ஆண்டு தைப் பொங்கலின்போது ஜல்லிக்கட்டை கட்டாயம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தும் பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.// http://polimernews.com/2017/01/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/ … அய்யா … இவர்களை இணைய முக்கியக் காரணம் ” டிவிட்டரும், பேஸ்புக்கும்தான்.” அதன் மூலமாக ஒருவருக்கொருவர் அழைப்பு விடுத்து திடீரென குவிந்து அசத்தி விட்டனர்…. என்பதும் — முன்னெடுத்த ” கேர் தொண்டு நிறுவனத்திற்கும் ” வாழ்த்துக்களும் — நன்றியும் சொல்வது தானே தமிழனின் தலையாய கடமை … பாரம்பரியம் காக்க இளைஞர்களின் எழுச்சி — இன்னமும் ” தமிழனின் வீர குருதி ” வற்றிவிடவில்லை என்பதை காட்டுகிறது … அப்படித்தானே … ?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     செல்வராஜன்,

     தேவைப்படும்போது, திரண்டெழுவோம் என்பதை
     நிரூபித்துக் காட்டிய இளைஞர்களும், இவர்களை
     தட்டியெழுப்பி, ஒருங்கிணைத்த அமைப்பும்
     நிச்சயம் பாராட்டப்பட வேண்டுபவர்கள் தான்.

     ஒரே ஒரு கவலை…
     இந்த இளைஞர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக,
     உணர்வுடன் இயங்க வேண்டும்.
     எந்த அரசியல் கட்சிகளின் வலையிலும் விழாமல்,
     தமிழகத்தின் ஒட்டு மொத்த நலன்களை
     மீட்டெடுக்கவும், காக்கவும், தங்களை
     ஈடுபடுத்திக் கொள்ள உறுதி கொள்ள வேண்டும்.

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 2. raja சொல்கிறார்:

  dear km sir, gurumurthi ji – first time against his heart , it shows his body language , people never forget demonstration it will revert in upcoming polls .I am also against his stands about stalin & sasikala . He personally attack sasikala with out authentic proof ,I am also against admk new developments, but i accept it because of dmk attitude. Dear sir, you are also raise doubt AMMA’s death.you also forget about Mr.Gunha verdict. That is the main reason for amma’s health problem. PLEASE WATCH AMMA’S VIDEO BEFORE AND AFTER PARAPANA AGRAHARA . he also support stalin for family politics .Stalin have problem with daya,alagiri,kanimozhli &others because of his insecurity he not to entertain ..But stalin wife ,his son in law,his daughter and son ,and his wife’s family members interfere party and make decisions every dmk cadres know that. But he praise . CHO SUPPORTS JAYA BECAUSE OF DMK .HE KNOWS THIRUKUVALAI FAMILY IS MORE DANGEROUS THAN MANNARGUDI FAMILY .
  NO ONE REPLACE AMMA IN TAMILNADU LIKE THAT NO ONE REPLACE CHO IN THUGLAK & JOURNALISIM

  KM SIR PLEASE GIVE REPLY TO ME

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ராஜா,

   நீங்கள் நான் பதில் எழுத வேண்டும் என்று
   குறிப்பாக கேட்டிருக்கிறீர்கள்.
   இந்த விஷயம் குறித்த என் கருத்துக்களை எல்லாம்
   அவ்வப்போது இடுகைகளின் மூலம்
   சொல்லிக் கொண்டு தானே வருகிறேன்…?

   ஜெயலலிதா அவர்களின் அரசியல் வாரிசாக
   திருமதி சசிகலா உருவெடுப்பதை என் மனது ஏற்கவில்லை.
   அவர் வந்தால், அந்த குடும்பமும் கூடவே வரும்….
   கடந்த 2011 தேர்தலுக்குப் பின்
   அந்த குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபட
   ஜெ. அவர்களுக்கு “சோ” உதவிக்கு வரவேண்டியதாயிற்று.

   ஜெ. அவர்களின் அரசியல் பின்னடைவு, சிறைவாசம்
   எல்லாவற்றிற்கும் மன்னார்குடி குடும்பம் ஒரு முக்கிய காரணம்
   என்பது என் கருத்து.

   அதிமுக ஒரு மரியாதையுள்ள கட்சியாக நீடிக்க வேண்டுமானால்,
   அது ஒரு கூட்டுத்தலைமையால் தான் முடியும்.
   இல்லையேல், கட்சியே நீர்த்துப்போய், கரைந்து போய் விடும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. SELVADURAI சொல்கிறார்:

  இத்தகைய பெரும் அளவில் ஒரு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை உலகில் எங்கும் பரீட்சித்துப் பார்க்கப்படவில்லை என்பதை திரு குருமூர்த்தி பதிவு செய்கிறார். இரகசியம் பாதுகாக்கப்பட வேண்டிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு விவரம் அறிந்தவர்களிடம் கலந்தாலோசனை செய்யமுடியாத நிலையையும் குறிப்பிடுகிறார். பெருவாரியான பொதுமக்கள் கஷ்டம் இருந்தாலும் அதனைப் பொறுத்துக்கொண்டு ஒத்துழைத்ததையும் பார்க்கிறோம். இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய அவசியத்தினையும் இன்னும் சிலமாதங்களில் இந்த நடவடிக்கையின் பலன் கண்டிப்பாகக் கிடைக்கும் என்றும் உறுதியாகக் கூறுகிறார். இத்தனையையும் கேட்டுக்கொண்டு மோடி மக்களிடம் பொய் சொன்னாரா என்று கேட்டால் திரு குருமூர்த்தியின் மனோநிலை எப்படி இருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். மோடி அவர்களின் துணிகரமான பொருளாதார நடவடிக்கையினை பாராட்டாவிட்டாலும் திரு குருமூர்த்தி அவர்கள் இவ்வளவு நிதானத்துடன் பதில்கொடுத்த விதத்தினையாவது பாராட்டுங்களேன்.

 4. SELVADURAI சொல்கிறார்:

  திருமதி சசிகலா அவர்களின் பதவியேற்பு குறித்து திரு குருமுர்த்தியின் கருத்து சரியே.
  திருமதி சசிகலா அவர்கள் முதல் நாளிலேயே அட்லீஸ்ட் பெயரளவிலாவது ஜெயலலிதா அவர்கள் வெறுத்து ஒதுக்கிய தனது குடும்பத்தினரை முன்னிலைப்படுத்தாமல் கட்சிக்காரர்களை முன்னிலைப்படுத்தி பின்பு கட்சிக்காரர்கள் ஒத்துக்கொள்ளும்படியான ஒரு கூட்டுத்தலைமையினை உருவாக்கி அதில் அவரும் பங்குபெற்று சிலகாலம் பொறுத்து ஏற்ற வேளையில் அவர் விரும்பும் நபர்களை உள்வாங்கி இருந்தால் அவர் ஜெயலலிதாவைப் போன்ற சாணக்கியத்தனம் உள்ளவர் என்பதை நாம் நம்பலாம். ஆனால் அவர் இன்றுவரை தனது குடும்பத்தினரையே சூழவைத்துக்கொண்டு இருப்பதால் அவர் தன்னம்பிக்கை அற்றவராய் அவர்களையே நம்பிக்கொண்டு இருப்பவராய்த்தான் காணப்படுகிறார். இந்தக் கூட்டம் அவரை நிலைநிற்கச் செய்யாது என்பதுதான் பலரின் கணிப்பும். எதோ சந்தர்ப்ப வசத்தால் மேலே வந்தவர் காலப்போக்கில் காணாமல் போய்விடுவார் என்றே நம்பவேண்டி உள்ளது.

 5. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I have already noticed Sh.Gurunjurthi’s weak arguements during his interview with Karthikeyan.
  It can’t be compred with PC’s strong message already caused considerable damage among common people on demonitization.

 6. LVISS சொல்கிறார்:

  Mr Gurumoorthy was put off by some questions posed to him—-Answers to all the quetions may be clear when the RBI Governor appears before the Parliamentary Committee because some of the questions cannot be answered by other than those directly involved in the exercise –It is always easy to be a quetioner than an answerer and defending a govt is not easy —

 7. GVS சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  நாமெல்லாம் கறுப்புப்பண விசுவாசிகளாமே…?
  மோடிஜி கூறுகிறார் –

  “” பணமதிப்பு நீக்கத்தை விமர்சிப்பவர்கள்
  கறுப்புப் பண விசுவாசிகள்: “””

  வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில்
  பிரதமர் மோடி பேச்சு –

  (தினமணி செய்தி )

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.