இன்னும் அதிக மர்மம் – சஹாரா டைரி- V.V.I.P. விவகாரம் ….!!!

prashant-bhushan

” தடயங்களை அழிக்க முற்படும்போது –
உருவாகும் புதிய காட்சிகள் ” – என்கிற தலைப்பில்
06/01/2017 அன்று இதே வலைத்தளத்தில் வெளியான
இடுகையை நண்பர்கள் படித்திருக்கலாம்…
படிக்கத் தவறியவர்கள் அதை முதலில் படித்து விட்டு
இந்த இடுகையை படித்தால்
விஷயத்தை புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்….

( “தடயங்களை அழிக்க முற்படும்போது – உருவாகும் புதிய காட்சிகள் ” இடுகையை படிக்க)

புதிதாக வெளிவந்திருக்கும் மர்மப் பின்னணியை
பார்த்தால், இந்த விவகாரம் இன்னும் பெரிய அளவிற்கு
போகும் என்று தோன்றுகிறது….

தற்போது வெளிவந்திருக்கும் விவகாரங்கள் –

Income Tax Settlement Commission (ITSC), என்பது,
வருமானவரி சம்பந்தமான அப்பீல் வழக்குகளை
விசாரித்து தீர்ப்பளிக்கும் ஒரு தீர்ப்பாயம்.

டெல்லியில் இருக்கும் இந்த அலுவலகத்தில்
ஒரு குழுமத்தலைவரும் (Chairman),
இரண்டு உறுப்பினர்களும் (Board Members) இருப்பார்கள்.

மார்ச், 2016-ல் இந்த அலுவலகத்தில் காலியாக இருக்கும்
ஒரு உறுப்பினர் பதவிக்கு இந்திய ரெவெனியூ சர்வீசை
சேர்ந்த அதிகாரி ஒருவர் ( 1981 IRS Batch )
இரண்டு ஆண்டு காலத்திற்கு,
டெல்லி அலுவலகத்தில் பணி என்று குறிப்பிடப்பட்டு
மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார்.

முந்தைய இடுகையில் குறிப்பிட்டிருந்த –
சஹாரா குழுவினரின் டைரி சம்பந்தமாக
வருமான வரி இலாகாவினர் மேற்கொண்டு
எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல்,
தங்களது வரி விதிப்பை முடித்து வைக்க
உத்திரவிட வேண்டுமென்று கோரிக்கை வைத்து –

அப்பீல் வழக்கு ஒன்று இந்த
தீர்ப்பாயத்தின் முன்னர் விசாரணைக்கு வருகிறது….

என்ன காரணமோ தெரியவில்லை –
அந்த வழக்கு விசாரணை தீர்ப்புக்கு வரும் நிலையில்
ஜூலை 19-ந்தேதி,
அந்த உறுப்பினரை டெல்லியிலிருந்து, சென்னைக்கு
இடமாற்றம் செய்து ஒரு அவசர உத்திரவு பிறப்பிக்கப்படுகிறது.

அந்த உத்திரவு, நிதியமைச்சக அதிகாரி ஒருவரால்,
நேரடியாக கொண்டு வந்து அவர் கையில் கொடுக்கப்பட்டு,
அன்றைய தினமே அவர் பதவியிலிருந்து அவசர அவசரமாக
விடுவிக்கப் படுகிறார்.

” என் நியமனம் இரண்டு ஆண்டு காலத்திற்கு,
அதுவும் குறிப்பாக டெல்லியில் என்று கூறப்பட்டிருக்கிறபோது
என்னை எப்படி சென்னைக்கு இடமாற்றம் செய்யலாம் ?” என்று
கேள்வி எழுப்பி அந்த உறுப்பினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடுக்கிறார்…

அந்த மாற்றல் உத்திரவுக்கு –
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி Justice Najmi Waziri
என்பவரால் அக்டோபர் 27-ந்தேதி
தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது…

குறிப்பாக டெல்லியில் உள்ள காலி இடத்திற்காக
நியமனம் செய்யப்பட்ட ஒருவரை, அவரது சம்மதமின்றி,
எப்படி சென்னைக்கு மாற்றம் செய்யலாம் என்று
நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது…

தடை உத்திரவுடன் அலுவலகத்திற்கு செல்லும் அதிகாரி,
எந்தவித பணியும் கொடுக்கப்படாமல்,
அடுத்த 3 நாட்களுக்கு, வரவேற்பறையிலேயே உட்கார
வைக்கப்படுகிறார்.

இதற்குள்ளாக, மத்திய அரசு, டெல்லி உயர்நீதிமன்றத்தில்,
இரண்டு நீதிபதிகள் முன்னிலையில் ஒரு அப்பீல் மனுவை
தாக்கல் செய்து, (சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு நோட்டீஸோ,
அறிவிப்போ கொடுக்காமலே) –

single judge தடையுத்தரவுக்கு மாற்றாக –
ஒரு பதில் தடையுத்தரவை பெற்று,
பழைய மாற்றல் உத்திரவை
மீண்டும் அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது.
இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பாக
மிக உயர்ந்த பதவியில் உள்ள
Additional Solicitor-General ஆஜராகி வாதாடுகிறார்….!!!

அந்த உறுப்பினர்(அதிகாரி), தற்போது விடுமுறைக்கு
விண்ணப்பித்து விட்டு, மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில்
மேல் விசாரணைக்காக காத்திருக்கிறார்….

இதற்கிடையில், நவம்பர் 10-ந்தேதியன்று,
Income Tax Settlement Commission (ITSC), சஹாரா வழக்கை
அவசரமாக விசாரித்து, அவர்களது கோரிக்கையை ஏற்று,
அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து தீர்ப்பும் வழங்கி விட்டது.

சஹாரா வழக்கில் இவ்வளவு அவசரம் காட்டப்பட்டது ஏன்…?
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது,
அந்த உறுப்பினர்(அதிகாரி) அவசர அவசரமாக
டெல்லியிலிருந்து – சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டது ஏன்..?
அவரை ஒதுக்கி வைத்து விட்டு தீர்ப்பு
அளிக்கப்பட்டதன் பின்னணி என்ன….?

இது திரு.பல்தீப் சிங் சந்து, ( 1981 IRS Batch ) என்பவரின்
தனிப்பட்ட சோகம் மட்டும் தானா….? அல்லது
இந்திய அரசியலில் மக்களை ஏமாற்றும் சித்து விளையாட்டா…?
– என்று பல கேள்விகள் கிளம்புகின்றன…

ஆனால், ஒரு விஷயம் மட்டும் எந்த விசாரணையும்
இல்லாமலே தெளிவாகிறது….
ஏதோ ஒரு உண்மை ஆழக்குழி தோண்டி புதைக்கப்படுகிறது ….
யாரையோ சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற முயற்சி நடக்கிறது….
அது என்ன உண்மை …? யார் அந்த வி.வி.ஐ.பி…?

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்….!!!

இந்த செய்தி விவரங்கள் தமிழ் நாளிதழ்களில்
வந்ததாகத் தெரியவில்லை….
ஆங்கில நாளிதழ்களில் வெளிவந்திருக்கும் செய்தியை
அப்படியே படித்தால் தான், அதன் ஆழம்(depth) விளங்கும்
என்பதால் அதை அப்படியே கீழே கொடுத்திருக்கிறேன்….

——————————
https://thewire.in/98125/sahara-income-tax/
————-
Months Before Sahara Was Granted Immunity,
Tax Panel Member Was Abruptly Transferred
——

New Delhi: Five months before the Income Tax Settlement Commission (ITSC) granted Sahara India immunity from any future prosecution and penalty over the Sahara diaries, a member of the bench that eventually heard the company’s application was transferred under less than normal circumstances.

According to a report in The Hindu, IRS officer Baldip Singh Sandhu was appointed in March 2016 as a member of the ITSC in Delhi and was appointed to the principal bench headed by the chairman of the tax settlement commission.

The bench that Sandhu was appointed to was the same bench that, on November 10 2016, issued the immunity order for the Sahara group.

However, before that, on July 19, Sandhu “was transferred out to Chennai” even though his appointment was “location-specific and non-transferable”. The Hindu reports that on July 19, Sandhu was relieved of his duties and a finance ministry
official came to the commission to serve him his transfer order.

Sandhu’s transfer was then taken to the Delhi High Court, which in an October 26 order, declared that he could not “now be transferred to the Additional Bench, Chennai; the appointment is against a particular vacancy and the appointee is not transferable to another vacancy that may have arisen, without the consent of the
appointee”.

His transfer case, however, is still before the Delhi High Court, after the Centre moved an appeal on the initial stay and Sandhu filed an appeal against the stay on the original stay.

Fishy or not?

The Sahara group did not initially have easy sailing with the ITSC. Because the company’s group headquarters was in Lucknow, the firm first had to file its settlement petition before the Additional Bench II. This bench rejected Sahara’s petition in August.

Clearly disappointed, Sahara put up another application before the ITSC’s Chairman, asking that its case be transferred to the principal bench in New Delhi;

this bench was the one that Sandhu was appointed to in March.

Days after Sandhu was transferred out of the New Delhi bench, it agreed to begin hearing the Sahara case.

As the Indian Express notes, the ITSC’s final order that granted immunity to Sahara was unusually quick. It began hearing the application in August 2016, held another hearing on November 7th 2016 and then passed a final order on November 10th, 2016. The ITSC’s decision, as The Wire reported last week, may
have glossed over crucial evidence furnished by the tax inspectors who had acquired the Sahara diaries following the 2014 and 2013 raids.

——————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to இன்னும் அதிக மர்மம் – சஹாரா டைரி- V.V.I.P. விவகாரம் ….!!!

 1. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! இருங்க … இருங்க … // ஏதோ ஒரு உண்மை ஆழக்குழி தோண்டி புதைக்கப்படுகிறது ….
  யாரையோ சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற முயற்சி நடக்கிறது….
  அது என்ன உண்மை …? யார் அந்த வி.வி.ஐ.பி…?

  காலம் தான் பதில் சொல்ல வேண்டும்….!!! // பதில் சொல்லுமா — இல்லை – இதுபோன்ற பலவற்றை — பல காலமாக விடை கிடைக்காமலேயே புதையுண்டு போனதைப்போல — போய்விடு [ மா ..? ] ம் …. என்பது தானே நமது நிலை ….?

  அடுத்து பார்த்தித்தீர்களா … தமிழக இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கான எழுச்சி பல ஊர்களிலும் தொடர்வதைக்கண்டு — மத்திய அரசின் நடவடிக்கைளை — // பொங்கல் இருந்தால்தானே ஜல்லிக்கட்டு கேட்பார்கள்.. மத்திய அரசின் கேம் பிளான்! //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/first-jallikattu-now-pongal-271444.html மாட்டை கடித்தவர்கள் — தற்போது மனிதனை கடிக்க ஆரம்பித்து விட்டார்கள் தானே ….. ? அய்யா … தாங்கள் மத்திய அரசில் பல பதவிகளில் இருந்தவர் … அதனால் பொங்கலுக்கு பொது விடுமுறை இருந்ததா … இல்லையா .. ? ஏனென்றால் இங்கே அன்புமணி விட்ட ஒரு அறிக்கை குழப்பிவிட்டது அந்த அறிக்கை : — // 15 ஆண்டுகளுக்கும் மேல் விருப்ப விடுமுறை பட்டியலில் தான் பொங்கல் உள்ளது: அன்புமணி //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/pongal-holiday-anbumani-ramadoss-clarifies-271464.html ….. அப்படியே இல்லாமல் இருந்து இருந்தால் — தற்போது அதை மீண்டும் ” பொது விடுமுறை ரத்து ” என்று அறிவிப்பது ஏன் .. ?

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  செல்வராஜன்,

  துவக்கத்திலிருந்தே இந்த விஷயத்தை
  சிலர் தவறாகப் புரிந்து கொண்டு கோபப்பட,
  அந்த கோபம் எல்லா இடங்களுக்கும் பரவி விட்டது.
  இது ஏற்கெனவே வழக்கத்தில் இருப்பது தான்…
  இதில் புதிதாக மத்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை…
  வழக்கம் என்ன என்பதை புரிந்து கொண்டால் இது
  விளங்கி விடும்….

  (மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள்
  கிட்டத்தட்ட சரியான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்…
  எனவே அவர் சொன்னதையே இங்கு தருகிறேன். )

  விடுமுறை விளக்கம் –

  அரசு விடுமுறைகளை பொறுத்தளவில் மத்திய அரசின் கட்டாய விடுமுறை 14 நாட்கள்தான். குடியரசு தினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம், இந்த மூன்று விடுமுறை தினங்களோடு சேர்த்து,

  புத்தர் பிறந்த நாள்,
  ஏசுநாதர் பிறந்த கிறிஸ்துமஸ்,
  புனித வெள்ளி,
  தசரா,
  தீபாவளி
  குருநானக் பிறந்த நாளுக்கு ஒரு நாள் .
  இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் / மொகரம்

  – போன்றவை கட்டாயவிடுமுறை தினங்களாகும்.

  3 நாட்கள் கூடுதல்

  இதுபோக, 12 பண்டிகைகளுக்கு அகில இந்திய அளவில் பட்டியலிடப்பட்டு இந்த பண்டிகைகளுக்கு விடுமுறை, எந்தெந்த மாநிலங்களில் தேவையோ அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் ஊழியர்கள் கொண்ட நலக்குழு கூடி முடிவெடுக்கும். 12 திருவிழாக்களில் 3 பண்டிகைகளை மட்டும் அவர்கள் கட்டாய விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம். இப்பட்டியலில் தசராவுடன் ஏதாவது ஒரு கூடுதல் நாளை எடுத்துக்கொள்ளலாம். ஹோலியன்று விடுமுறை தேவைப்பட்டால் எடுக்கலாம். ஜென்மாஸ்டமி, ராமநவமி, மகாசிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, மகர சங்கராந்தி, பூரி ரத யாத்திரை, ஓணம், பொங்கல், வசந்த பஞ்சமி, விஷு ஆகியவை இப்பட்டியலில் உள்ள ஏனைய பிற பண்டிகைகள்.

  இரண்டாவது சனிக்கிழமை

  இந்த பண்டிகைகளில்தான் அந்தந்த மாநில ஊழியர் தேவைக்கு ஏற்ப 3 நாட்களை கட்டாயம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த பண்டிகைகள் என்று வருகிறதோ அன்றுதான் எடுக்க முடியுமோ தவிற வேறு நாட்களுக்கு மாற்ற முடியாது. அது ஞாயிற்றுக்கிழமை வந்தால் திங்கள்கிழமைக்கு மாற்ற முடியாது. இந்த ஆண்டு 2வது சனிக்கிழமையான 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே அன்று விடுமுறையை எடுத்து ஒருநாளை வீண் செய்ய அரசு ஊழியர் குழு விரும்பவில்லை. எப்படியும் லீவுதானே என்பதால் வேறு ஒருநாள் அந்த லீவை எடுக்க குழு முடிவு செய்துள்ளது. இதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

  (சந்தடி சாக்கில், பொன்.ரா. அவர்கள் திமுகவையும்
  ஒரு சாத்து சாத்தி விட்டார்….!!! )

  திமுக-காங்கிரஸ் கூட்டணி

  பொங்கலை ஏன் விருப்ப பட்டியலில் கொண்டுவந்தனர் என்று இன்னொரு கேள்வி எழலாம். நியாயமான கேள்விதான். ஆனால் விருப்ப லீவு பட்டியலில் பொங்கலை கொண்டு வந்துவிட்டது எப்போது தெரியுமா? 2008ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி முதல் முறையாக அப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று யார் அரசாங்கத்தில் இருந்தது? திமுக, காங்கிரஸ் கூட்டணி.

  துரோகம்

  திமுக தமிழர்களுக்கு செய்துள்ள துரோகத்தில் இது ஒரு கூடுதல். இது அவர்கள் செய்த துரோகம், அவர்கள் செய்த தப்பு. இந்த பட்டியலைத்தான் அவர்கள் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் இவ்வாறுதான் விடுமுறை தினத்தை எடுத்து வருகிறார்கள்

  – இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 3. GVS சொல்கிறார்:

  இந்த சஹாரா டைரி வழக்கு
  பிற்காலத்தில் பரபரப்பாக பேசப்படும் அளவிற்கு
  பெரிய வழக்காக உருவெடுக்கும் என்று தோன்றுகிறது.
  வழக்கை கையில் எடுத்திருப்பவர் லேசுப்பட்ட ஆசாமி அல்லவே…

 4. Ramasubramanian.S. சொல்கிறார்:

  If all the cases that were decided after
  July 19th 2016, were examined,
  the person for whom this has been done
  will be clearly known.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   firstpost reports –

   // Bhushan, meanwhile, has slammed the Supreme Court’s verdict stating that it will go down as “one of the worst judgement” in the history, adding that it is a black day.

   “It’s a very unfortunate and abject judgement and it will go down as one of the worst judgement in history… It is a black day at the top court today” NDTV 24×7 quoted Bhushan as saying.

   Moreover, speaking to Times Now, Bhushan said, “The verdict shows that when it comes to dealing with the high and mighty, sometimes even the Supreme Court wilts under pressure.”

   Bhushan also asserted that especially in the Birla case, there was a humongous volume of incriminating documents, which included several recorded entries of payments and hundreds of emails with cross references to politicians. He wondered how could the Supreme Court dismiss them on face value without even ordering a free and fair probe.

   “Saboot to investigation me hi niklenge. isme aap ye kaanon aur samvidhan ka makhaul udane ke barabar hai (Evidence will only be found once an investigation is launched into an issue. This (the judgement) is a mockery of the Constitution),” Bhushan said.

   (http://www.firstpost.com/politics/breather-for-modi-sc-dismisses-prashant-bhushans-plea-seeking-probe-into-sahara-birla-diaries-3199222.html )

 5. LVISS சொல்கிறார்:

  Mr K M Please wait for some more days -You may get to hear more on this —

 6. Ramasubramanian.S. சொல்கிறார்:

  // Bhushan also asserted that especially in the Birla case, there was a humongous volume of incriminating documents, which included several recorded entries of payments and hundreds of emails with cross references to politicians. He wondered how could the Supreme Court dismiss them on face value without even ordering a free and fair probe.//

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.