சத்தம் இல்லாமல், சுங்கச் சாவடிகளுக்கு 922 கோடி அள்ளிக் கொடுக்கப்படுகிறது…!!!

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதன்
விளைவாக, 8-ந்தேதி இரவிலிருந்து, நாடு முழுவதும் இருந்த
நெடுஞ்சாலைகளில், டோல் கேட்களில்
(சுங்கச் சாவடிகள்) பிரச்சினைகள் உருவாயின.

சில்லறை இல்லாமல், கட்டணம் செலுத்த முடியாமல்,
வண்டிகள் மைல்கணக்கில் நின்றன.
ஹைவே-க்களில் பெரும் நெருக்கடி உண்டாயிற்று.

பெரும் அதிருப்தியிலும், கடும் கோபத்திலும் இருந்த
மக்களை சாந்தப்படுத்தவும்,
பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணவும்,
மத்திய அமைச்சர் திருவாளர் கட்காரி, மறு அறிவிப்பு
வரும் வரை டோல் கேட்களில் பணம் வசூலிக்கப்பட மாட்டாது
என்று அறிவித்தார். தொல்லை விட்டது என்று மக்களும்
பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

ஆனால், அதற்கு இவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டும்
என்பது அப்போது யாருக்கும் தெரியாது.

ஆமாம் – சுங்கச்சாவடிகளில் நவம்பர் 9 முதல்,
டிசம்பர் 2 வரையிலான 24 நாட்களுக்கு கட்டணம்
வசூலிக்காததால் ஏற்பட்ட இழப்பினை சரிக்கட்ட –
மத்திய அரசு, மொத்தமாக அவர்களுக்கு 922 கோடியை
தத்தம் செய்கிறதாம்….!!!

நாட்டில் எதிர்காலத்தில் கட்டமைப்புகளை மேற்கொள்ள
முன்வரும் நிறுவனங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே இந்த
நடவடிக்கை…!!!

நாட்டில் மொத்தம் 317 டோல் ப்ளாஸாக்கள் உள்ளனவென்றும்,
அவற்றின் ஒரு நாள் சராசரி வசூல் 51.59 கோடி ரூபாய் என்றும்
தெரிகிறது… அவர்களின் இழப்பில் பெரும் பகுதியை
மத்திய அரசு இழப்பீடு கொடுத்து சரி செய்கிறது…

இந்த தருணத்தில், மத்திய அரசு அனைத்து
டோல் ப்ளாஸாக்களைப் பற்றியும் ஒரு சரியான மதிப்பீடு /
மறுபரிசீலனை செய்து, அவசியமான
சில ஆலோசனைகள் / முடிவுகளை அவர்களுக்கு தெரிவித்து
நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்….

பல டோல் ப்ளாஸாக்கள், முதலீடு செய்ததைப் போல் பல மடங்கு
பணத்தை வசூல் செய்த பிறகும், சுங்கக்கட்டணத்தை குறைக்கவே இல்லை. குறிப்பிட்ட காலங்களில் கட்டண விகிதங்களை ஏற்றுவதை மட்டும் சரியாகச் செய்து வந்தவர்கள்,
ஒப்பந்தப்படி வசூல் காலம் முடிந்த பிறகு கட்டணங்களை
குறைப்பதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

பல நெடுஞ்சாலைகளில், குத்தகைக்கு எடுத்திருப்போர்
ஒப்பந்த விதிகளின் படி, நெடுஞ்சாலை பயணிகளுக்கு
குறிப்பிட்ட இடைவெளி தூரங்களில், செய்து கொடுக்க
வேண்டிய, rest room / கழிவறை, குடிநீர், இளைப்பாற வசதி
போன்றவற்றை செய்யவே இல்லை. இது பற்றி
கடந்த காலங்களில் பயணிகள் எத்தனை முறை
புகார் கொடுத்தபோதும், பயன் ஏதும் விளைந்ததில்லை.
மத்திய நெடுஞ்சாலைத்துறையும் இதைப்பற்றி எல்லாம்
கவலைப்படுவதே இல்லை.

922 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக கொடுக்கும்
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டாவது,
– மத்திய நெடுஞ்சாலைத்துறை இந்த விஷயங்களை
எல்லாம் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

காம்பென்சேஷன் கொடுத்து காண்டிராக்டர்களை
கவனித்துக் கொள்ளும் நேரத்தில்,
திருவாளர் கட்காரிஜி அவர்கள், பொது மக்களின் தேவைகளையும், கஷ்டங்களையும்
கூடவே கொஞ்சம் மனதில் நினைத்துப்பார்த்து,
கருணை காட்டினால் தேவலை….!!!

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

சத்தம் இல்லாமல், சுங்கச் சாவடிகளுக்கு 922 கோடி அள்ளிக் கொடுக்கப்படுகிறது…!!! க்கு 10 பதில்கள்

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  பொது மக்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும். வாரி கொடுக்கும் வள்ளல்களுக்கு மட்டுமே சலுகை.

 2. selvarajan சொல்கிறார்:

  // 125 சுங்கச் சாவடிகள் இம்மாத இறுதியில் மூடப்படும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் // http://tamil.thehindu.com/india/125-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article6889999.ece … இந்த 125 சுங்கச் சாவடிகள் மூடிவிட்டார்களா … என்பது யாருக்காவது தெரியுமா …? 922 கோடிகளை வாரி வழங்குவதால் யாருக்கு லாபம் … ? ஒவ்வொரு வண்டிக்கும் சாலை வரி கட்டிய பின்னும் — இந்த வசூல் எதற்காக … ? சாலை மேம்பாட்டிற்கு என்றால் — சாலை வரி என்னவானது .. ?

  ” கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதை போல ” சுங்கச்சாவடிகள் அடித்த கொள்ளைக்கு ” டிப்ஸ் ” கொடுக்கிறார்கள் போல தெரிகிறது — அவர்களுக்கு அரசின் கொள்கையால் ஏற்பட்ட நஷ்டம் என்றவுடன் ஏகப்பட்ட கரிசனம் காட்டும் அரசு …

  பொதுமக்களும் — அன்றாடம் பிழைப்பை ஓட்டுபவர்களுக்கு அதே கொள்கையால் அடைந்த வருமான இழப்புக்கு என்ன கரிசனம் காட்டியிருக்கிறார்கள் ….?

  கிரெடிட் கார்டைதேய்த்து 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் ரூ 514 .38 – ம் அதனோடு பெட்ரோ சார்சார்ஜ் வைவர் ரூ .12 .55 – ம் சேர்த்து ரூ 526 . 93 சேர்த்து அழவேண்டியிருக்கிறது — ரொக்கமற்ற பரிவர்த்தனையில் பயனை அனுபபூர்வமா கண்டா ஒரு ஏமாளியின் புலம்பல்தான் இது — யாரால் இந்த அவலம் ….?

  பதவியில் உள்ளவர்கள் யாருக்காவது இந்த கஷ்டம் புரியுமா …ஏனென்றால் ஓசியில் பல சலுகைகளை அனுபவித்து கொண்டு இருப்பவர்களுக்கு இதெல்லாம் தெரிய நியாயம் இல்லை தானே … மக்களுக்காக இவர்கள் உழைக்கும் — உழைப்பு சொல்லித்தீர்ப்பது எளிமையல்ல …?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இந்த செய்தியை திருவாளர் கட்காரிஜி
   February 13, 2015 அன்று வெளியிட்டிருக்கிறார்….

   நாட்டில் இருந்த மொத்த சுங்கச்சாவடிகளின்
   எண்ணிக்கை எவ்வளவு…?
   அதில் கட்காரிஜி வந்த பிறகு மூடப்பட்டவை
   எவ்வளவு…?
   தற்போது மீதி இருப்பவை எவ்வளவு…?

   – என்று கட்காரிஜியோ,
   அல்லது அவருக்குப்பிடித்த –
   அல்லது அவரைப் பிடித்த – (!!!)
   யாராவது கண்டுபிடித்து சொன்னால் தேவலை….

   ( நான் படித்த, உறுதி செய்யப்படாத
   செய்திப்படி, லேடஸ்ட் எண்ணிக்கை – 317 )

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சாதாரணமாக நான் ரெயிலில் தான் பயணம் செய்வது
   வழக்கம். ஆனால், அண்மையில், ஒரு அவசரம்
   காரணமாக திருச்சியிலிருந்து சென்னை வரை காரில்
   பயணம் செய்ய வேண்டியிருந்தது.

   வழியில் நான் கட்ட வேண்டியிருந்த சுங்க சாவடி கட்டணம்
   மட்டும் ரூபாய் 305/- (முன்னூற்று ஐந்து ).
   இந்த பணத்தில் இரண்டு பேர் ரெயிலில் டிக்கெட் வாங்கிக்கொண்டு திருச்சியிலிருந்து
   சென்னை வந்து விடலாம்….!!!

   இதே போல் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள்
   வருடக்கணக்காக தண்டம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. LVISS சொல்கிறார்:

  According to one news published in 2015 about 200 toll plazas have been scrapped –Latest figures are not available Something has to be done for others also –

  http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3145051/Over-200-toll-plazas-scrapped-NDA-regime.html

 4. Amuthan சொல்கிறார்:

  அப்படியானால் இதனால் பாதிக்கப்பட்ட சிறு/குறு தொழிலாளர்கள் மற்றும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனரே அதற்கு ஏதேனும் கருணை கிடையாதா??? எத்தனையோ சிறு முதலீட்டில் தொழில் செய்வோர் தொழிலை விட்டு மாத வருவாய்க்கு உள்ளூரிலும் அயல் நாட்டிற்கும் சென்று விட்டனர். இதற்கு என்ன இந்த அரசு செய்யப் போகிறது???? பணப்புழக்கம் இல்லாமல் அவதிப்படும் சிறு வியாபாரிகளுக்கு என்ன செய்யப்ப் போகிறார்கள்????

 5. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Daylight robbery

 6. selvarajan சொல்கிறார்:

  Posted Date : 16:56 (11/01/2017) Last updated : 17:23 (11/01/2017)
  // இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை // http://www.vikatan.com/news/india/77559-chinese-army-honours-jaswant-singh-rawat.art?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=7520

  அய்யா …! இவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு — எதிரிகளே சிலை வைத்து போற்றுகின்ற வீரனுக்கு ஒரு வீர வணக்கம் செலுத்துவோம் —

  இதயெல்லாம் படிக்கும் போது இதைப்போன்ற வீர புருஷர்களின் செயலையும் — இங்கே குண்டு துளைக்காத கார்களில் பவனி வரும் அரசியல் தலைவர்களையும் –நினைத்தால் … என்ன தோன்றுகிறது … ?

  மக்கள் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு ஏகப்பட்ட காவலர்கள் புடை சூழ மக்களை சந்திக்கும் பிறவிகளை கண்டால் ஒரு வெறுப்புதான் ஏற்படுகிறது …

  குறைந்தது ஒரே – ஒரு வருடமாவது – பள்ளிக்கல்வி முடிந்தவுடன் இளைய தலைமுறையினருக்கு ” ராணுவ பயிற்சியை ” கட்டாயமாக்கினால் — ஓரளவு நாட்டுப்பற்றும் — ஊழலில் வெறுப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டல்லவா …?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நல்ல செய்தியை கவனத்திற்கு கொண்டு வந்தீர்கள்…

   நீண்ட நாட்களாக என் மனதில் இருக்கும் கனவு, ஆசை இது…
   நீங்கள் சொல்லி விட்டீர்கள்…!

   சிங்கப்பூரில் பத்தாவது முடித்தவுடன், கல்லூரிக்கு செல்லும் முன்னர்
   அனைவருக்கும் ராணுவப் பயிற்சி கொடுக்கப்படுகிறது
   என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

   இந்தியாவிலும் அப்படி ஒரு முறை வந்தால் –
   நாட்டுப்பற்றும் கூடும், ஊழலும் குறையலாம்…!!!

   வருவார் – எதிர்காலத்தில் யாராவது ஒரு தலைவர் –
   இத்தகைய திட்டங்களையெல்லாம் கொண்டு வர….
   அதுவரை – கனவுகளுடன் காத்திருப்போம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  There should not b any monetary benefits to politicians, (cash &kind)Politics to be service oriented

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s