திரு.ராகுல் காந்தி எப்போதும் பிரதமர் வேட்பாளராக மட்டும் தான் இருக்க முடியும்….!!!

ரூபாய் நோட்டு தடை விவகாரம் தொடர்பாக
” ஜன் வேதனா “என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று மாநாடு நடந்தது.

இந்த மாநாட்டுக்கு தலைமை ஏற்று பேசிய கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பிரதமர்மோடியையும் அவரின் அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசி இருக்கிறார்…

திரு.ராகுல் காந்தி பேசியதிலிருந்து சில பகுதிகள் கீழே –

நாள்தோறும் யோகா செய்கிறேன் என்று கூறும் பிரதமர் மோடி
பத்மாசனம் (அமர்ந்தநிலையில் இருத்தல்) செய்வதில்லை.
ஏனென்றால், முறையாக யோகா செய்பவர்களால் மட்டுமே
அதைச் செய்ய முடியும்….

“ சர்வதேச யோகா தினத்தன்று பிரதமர் மோடி யோகா
செய்வதைப் பார்த்தேன். பிரதமர் மோடி அனைத்து வகையான
ஆசனங்களையும் சிறப்பாகச் செய்தார். ஆனால்,
அமர்ந்தநிலையில் செய்யப்படும் பத்மாசனத்தை மட்டும்
அவர் செய்யவில்லை.

நானும் யோகா கற்றுக்கொண்டேன், செய்து இருக்கிறேன்.
அதில் நான் ஒன்றும் தேர்ந்தவன் இல்லை. என்னுடைய
யோகா குரு என்னிடம் யோகாவை முறையாக
பயிற்சி செய்பவர்கள் மட்டுமே, அமர்ந்தநிலையில் செய்யும்
பத்மாசனத்தை எளிதாகச் செய்ய முடியும். யாரெல்லாம் நாள்தோறும் முறையாக ஆசனங்களை செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களால் பத்மாசனத்தை செய்ய முடியாது – என்று கூறி இருக்கிறார்…!!!

——————————————————————

ராகுல் காந்தி, மோடிஜியின் திறமைகளை,
சாமர்த்தியங்களை அசாதாரணமாக எடை போட்டு விட்டார்….

சர்வதேச யோகா தினத்தன்று எடுக்கப்பட்ட
இந்த புகைப்படங்களை
வைத்து ராகுல்ஜி இந்த முடிவிற்கு வந்து விட்டார் போலும்….

modiji-vajrasana

இதில் மற்றவர்கள் எல்லாரும் பத்மாசனத்தில்
அமர்ந்திருக்கும்போது,
மோடிஜி மட்டும் வஜ்ராசனத்தில் அமர்ந்திருக்கிறார்….

modiji-just-like-padmasana

இது பத்மாசனம் ” மாதிரி ” ….
ஆனால் பத்மாசனம் அல்ல….!!!

ஆனால், மோடிஜி பல வருடங்களாக யோகாசனம்
செய்து வருபவர்.
யோகாசனத்தில் அவருக்கு நல்ல பயிற்சியும் உண்டு…
கீழ்க்கண்ட புகைப்படத்தில் அவர் அமர்க்களமாக பத்மாசனத்தில்
அமர்ந்திருப்பதை பார்க்கலாம்…

modiji-yoga

ஆனால், நீண்ட நேரம் இப்படி உட்காருவது அசௌகரியமாக
இருந்தால், நைசாக இப்படி மாற்றி, வசதியாக –
பத்மாசனம் “மாதிரி” உட்கார்ந்து கொள்ளலாம்…!!!!!

m-2

——————————————————-

ராகுல் காந்தியின் இன்னும் கொஞ்சம் மழலைப் பேச்சு –

” ஒரு நிகழ்ச்சியில் மோடி பேசும் போது, மக்களிடம்
துடைப்பத்தைக் கொடுத்து, தானும் துடைப்பத்தை கையில்
வைத்துக்கொண்டு நாட்டில் இருந்து ஊழலை எப்படி
ஒழிக்கப்போகிறேன் என்று பேசினார்.

பிரதமர் மோடிக்கு துடைப்பத்தை எப்படி கையில் பிடித்து
இருந்தார் என்பதை பார்த்து இருக்கிறீர்களா?.
மோடி பிடித்திருப்பதைப் போல் பிடித்திருந்தால்
ஒருபோதும் நாட்டை சுத்தம் செய்ய முடியாது….!!!

ராகுல் காந்தி சொல்வது சரியா….?

போஸ் கொடுப்பதற்கு மோடிஜிக்கு சொல்லியா தர வேண்டும்…?
இருந்தாலும் ராகுல்காந்தி அநியாயத்திற்கு
ஒரு புகைப்படத்தை மட்டும் பார்த்து,
ஏமாந்து கருத்து சொல்கிறார்……

கீழே பாருங்கள் – எத்தனை போஸ்கள்….!
இதில் எதைப்பார்த்து ராகுல்ஜி ஏமாந்து போனாரோ…!!!

modiji-swachchata-1

modiji-swachchata-2

modiji-swachchata-4

modiji-swachchata-5

——————————————————-

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் –
திரு.ராகுல் காந்திக்கு
போட்டியே கிடையாது. அவர் தான் அதன் நிரந்தரமான
பிரதமர் வேட்பாளர் என்பது உண்மையே….!

ஆனால், அவர் இந்த மாதிரி, குழந்தைத்தனமாக,
அசட்டுத்தனமாக
பேசிக்கொண்டிருக்கின்ற வரையில் –

பிரதமர் வேட்பாளர் என்கிற அந்தஸ்திலேயே
இருக்க வேண்டியது தான் ….
நிஜத்தில் பிரதமர் பதவி என்பது கனவாகவே இருக்கும்….!!!

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

திரு.ராகுல் காந்தி எப்போதும் பிரதமர் வேட்பாளராக மட்டும் தான் இருக்க முடியும்….!!! க்கு 4 பதில்கள்

 1. தமிழன் சொல்கிறார்:

  சாப்பிட்ட பின்போ, கொஞ்சம் சோர்வாக இருக்கும்போதோ, அல்லது பத்மாசன பிராக்டிஸ் விட்டுப்போகும்போதோ அர்த் பத்மாசன் போஸில் உட்காருவார்கள். பிரதமர் உட்கார்ந்திருக்கும் வஜ்ராசன் ரொம்ப நல்லது. அதுவும் பின்னங்காலில் உட்காராமல் கால்களைச் சிறிது விலக்கி வஜ்ராசனத்தில் உட்காருவது இன்னும் பலனளிக்கும்.

  ராகுல் அவர்களின் விமரிசனம் குழந்தைத்தனமானது. மோடி அவர்களின் கொள்கைகளையும் ஆட்சியையும், அமைச்சர்களையும், தனக்குப் பக்கபலமாயுள்ள காங்கிரசின் துணைகொண்டு எதிர்க்காமல் தனிப்பட்ட விஷயங்களைச் சொல்வது பயன் தராது. காங்கிரசின் மூத்த நிர்வாகிகளின் அனுபவம் ராகுலை வள்ர்பதில் (அரசியல்ரீதியாக) ஈடுபடாத்து ஏமாற்றமே.

  மோடி அவர்கள், நல்லதோ கெட்டதோ, தான் நம்பும் விஷயங்களைச் செயல்படுத்துகிறார். மன்மோகன்சிங் போல எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன.. என்று பிரதமர் பதவியில் இருந்துகொண்டு கையாலாகாதவராகத் தன்னைக் காட்டிக்கொள்வதில்லை. அதுவரையில் பெட்டர்.

 2. selvarajan சொல்கிறார்:

  யார் எப்படி ஆசனம் போட்டாலும் ஒருவர் ” அந்த ஆசனத்தில் ” அமர்ந்து விட்டார் — ஒருவர் அமர துடித்து தத்து பித்து என்று உளறுகிறார் … எல்லாமே ” அந்த ஆசனம்…? ” — படுத்தும் பாடு … !

  அய்யா … ! ” வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் ” என்று வருந்திய வள்ளலார் இராமலிங்கம் — தற்போது இருந்திருந்தால் கழனியெல்லாம் காய்ந்து – பயிர்கள் எல்லாம் கருகியிருப்பதை கண்டு ” கருகிய பயிர்களை கண்டபோதெல்லாம் கருகினேன் ” என்று கூறிப்பார் என்பதில் சந்தேகமே இல்லை ….

  எமது பாரம்பரிய — உணர்வோடு ஒன்று கலந்த – கலாச்சாரத்தை தொன்று தொட்டு பறைசாற்றிய — பண்பாட்டின் வேராக இருந்த ” தமிழர் திருநாளாம் பொங்கலே ” நீ எங்கே சென்றாய் … எப்படி மறைந்து போனாய் — யாரால் நீ எங்களிடம் இருந்து விலகி விட்டாய் … ?

  பல காட்சிகள் கண்ணிலிருந்து காணாமல் போய்விட்டன — மார்கழியிலிருந்தே ஆரம்பிக்கும் தூதுகலம் எங்கே … ?
  மார்கழியில் அனைத்து வீடுகளின் வாசலிலும் சாணம் தெளித்து — கூட்டி பெருக்கி — மாக்கோலம் இட்டு நடுவிலே சாணத்தின் மீது வைக்கும் பூசணி பூவே — நீ எங்கே … ? வீடுகளுக்கு வெள்ளையடித்து — வர்ணம் தீட்டி – புது பொலிவு ஏற்படுத்தும் செயல் எங்கே … ?

  பொங்கல் வாழ்த்து அட்டைகள் விற்கும் கடைகள் எங்கே … ? மக்களின் முகங்களில் தெரியும் மகிழ்ச்சி எங்கே … ? ஏர் – கலப்பை – மாட்டு வண்டிகள் எங்கே … ? ” விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக ” மாற்றியது யார் … ? இந்த நிலைக்கெல்லாம் காரணம் எது … ? …
  அனைவருக்கும் உணவளிக்கும் தற்போது இருக்கின்ற கொஞ்ச விளை நிலங்களின் வெடிப்புகளையும் — நீரின்றி பயிர் கருகியதால் உயிர் துறந்த விவசாயிகளையும் மனதில் நினைத்து — முழு திருப்தி இல்லாமலேயே — அனைவரும் ஒப்புக்கு ஒருவருக்கொருவர் ” பொங்கல் நல் வாழ்த்துக்களை ” தெரிவித்து — பரம்பரை நினைவில் மூழ்குவோமாக …!!!

 3. LVISS சொல்கிறார்:

  Really surprising why Raghul is attacking the PM in this manner relentlessly —-This sometimes looks like Modi phobia — Of course the PM also sometimes makes a reference to him but he mostly sticks to his main agenda — But Raghul’s agenda seems to be to ridicule the PM on a daily basis — One gets the impression that the seniors in the party are afraid to tell him how to go about his campaign —This kind of jibe politics is meant for local leaders and it may turn out to be counter productive in the long run – – There are lot of issues on which he can criticise the the govt but not by touching on the personality of the head of the govt —
  Trying to paint the PM as a corrupt person will not work given his reputation as a person who never allowed any relative of his near the corridor of power –Raghul is born with a silver spoon so he will not gain anything by saying that the PM cares only for the rich because every one by now knows how the PM lived in his younger days —

 4. seshan சொல்கிறார்:

  New Year Development …..He will become more and more childish….good for nation…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s