திரு.ப.சிதம்பரத்தை, ராகுல் காந்தியாக எண்ணி பதில் சொல்லி விட முடியாது…..!!!

p-c

திரு.ப.சிதம்பரம் அவர்களின் செயல்பாடுகளைப்பற்றி
நம்மிடையே பல விதமான விமரிசனங்கள் உண்டு.

ஆனால், எத்தகைய விமரிசனத்திலும்,
நாம் திரு.ப.சி.அவர்களின்
புத்திகூர்மையையும், மற்றவர்களுக்கு
எந்த விஷயத்தையும், வெகு எளிதாக புரியும் வண்ணம்
விளக்கி வாதாடும் திறமையையும்,
சாமர்த்தியத்தையும்
குறை சொன்னது கிடையாது.

அவரது புத்திசாலித்தனம் மட்டும் –
விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டது….( அந்த புத்திசாலித்தனம்
சில சமயம் எத்தகைய காரியங்களுக்கு பயன்படுகிறது என்பது
குறித்த விமரிசனங்கள் தனி…….!!! )

நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட
“ஜன் வேதனா” மாநாட்டில் பண மதிப்பிழப்பு பற்றி கூறிய
பல கருத்துக்கள் சிந்தனையை கிளறுவன….

1) யாரையும், கலந்து ஆலோசிக்காமல் ஒரே ஒரு மனிதரால்
தனிப்பட எடுக்கப்பட்டது இந்த முடிவு…..அதன் விளைவாக
இந்த தேசத்திற்கு இதுவரை ஏற்பட்டுள்ள இழப்பின் மதிப்பீடு
சுமார் 1.5 லட்சம் கோடிகள்….

2) சாதாரணமாக, இது குறித்து யோசித்து முடிவெடுக்க வேண்டிய
பொறுப்பு ரிசர்வ் வங்கியுடையது…
ஆனால், அந்த சுதந்திரத்தை அரசு பறித்துக் கொண்டது.
மத்திய அரசு தானே முடிவெடுத்து விட்டு, அந்த முடிவை
நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பை மட்டும்
ரிசர்வ் வங்கியின் தலையில் கட்டி விட்டது….

3) நவம்பர் 7-ந்தேதி, மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் கவர்னரை
பண மதிப்பிழப்பு குறித்து ஆலோசனை கூறி, உடனடியாக
அதன் மீது ரிசர்வ் வங்கி போர்டின் முடிவைக்கூறுமாறு
வற்புறுத்தி இருக்கிறது.

8-ந்தேதி, ரிசர்வ் வங்கி தனது போர்ட் மீட்டிங்கை கூட்டி,
மத்திய அரசின் “ஆலோசனைக்கு” அன்றே தனது ஒப்புதலை
மத்திய அரசுக்கு தெரிவித்திருக்கிறது.

அன்றிரவே, தொலைகாட்சிகளில் அறிவித்ததன் மூலம்
அதனை பிரதமர் நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டார்.

7-ந்தேதிக்கும், 8-ந்தேதி இரவுக்கும் இடையே
யார் யாருக்கு இந்த முடிவைப் பற்றிய செய்திகள் தெரியும்…?

4) ரிசர்வ் வங்கியின் கவர்னர், தனது போர்டு உறுப்பினர்களுக்கு
( Board of Directors, Reserve Bank of India..) இந்த மீட்டிங்கை
பற்றி எப்போது, எப்படி, கூட்டம் நடைபெற எவ்வளவு
அவகாசம் கொடுத்து – தெரிவித்தார்… ?

அந்த கூட்டம் எப்போது நடைபெற்றது..?
இவ்வளவு அதிமுக்கியமான விஷயத்தை பற்றி
கலந்தாலோசித்து, விவாதித்து முடிவெடுக்க அந்த போர்டு
எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு ….?

5) கடந்த 70 நாட்களில், இந்த முடிவால்,
நாட்டில் 45 கோடி மக்கள்
வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்த நோட்டு மதிப்பிழப்பால், வேலை இழந்த,
வருமானம் இழந்த தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும்,
சிறு வியாபாரிகளுக்கும் மத்திய அரசு எந்த வகையில் இழப்பீடு
செய்யப்போகிறது….?

6) ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் மூலம் கருப்புபணம்
மற்றும் ஊழலை குறிவைப்பதற்கு பதிலாக, இந்த அரசு
ஏழை மக்களை குறிவைத்துவிட்டது.

மோடி அரசின் ரூபாய் நோட்டு தடையால் கடந்த 50 நாட்களில்
வங்கியில் பணம் எடுக்க காத்திருந்து உயிரை இழந்த 100-க்கும்
மேற்பட்ட குடும்பத்தினர்களுக்கு மோடிஜி அரசு
என்ன இழப்பீடு கொடுக்கப்ப்போகிறது….?

7) உழைத்துப்பணம் சம்பாதிக்கும் மக்களை குறிப்பிட்ட
விதத்தில் தான் செலவழிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும்
உரிமையை மத்திய அரசுக்கு யார் கொடுத்தது…?

8) மின்னணு பரிவர்த்தனை மூலம் தான் மக்கள் தங்களது
அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்
என்று உத்திரவு இட, கட்டாயப்படுத்த – மத்திய அரசுக்கு
எந்த சட்டம் அதிகாரம் கொடுக்கிறது….?
அரசியல் சட்டத்தின் எந்த விதியின் கீழ் மக்கள் இவ்வாறு
கட்டாயப்படுத்துகிறார்கள்…?

9) 500 – 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக்கியதன்
மூலம் கருப்புப் பணமும், கள்ளப்பணமும் ஒழிந்து விட்டது
என்று பிரதமரால் உறுதியாகச் சொல்ல முடியுமா…?

அவ்வறெனில், கோடிக்கணக்கில் இப்போது புதிய 2000 ரூபாய்
நோட்டுக்கள் கண்டு பிடிக்கப்படுவது எப்படி…?

10) வருகிற மே – ஜூன் மாதங்களில், பொறி இயல்,
மருத்துவக் கல்லூரிகளில் உயர்வகுப்புகளுக்கான
மாணவர் சேர்க்கை நடக்கப்போகிறது..
எந்த கல்லூரியிலும், அதிக கட்டணம் வசூலிக்காமல்,
ரொக்கப்பணம் கேட்காமல் – மாணவர்கள் சேர்த்துக்
கொள்ளப்படுவார்கள் என்று பிரதமர் உறுதி அளிப்பாரா…?

பெற்றோர்கள் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை…
நன்கொடை வாங்காமல் தடுப்பேன் என்று
மோடி உறுதி கூறமுடியுமா?
நன்கொடை வசூலிக்கப்படாது என்று உறுதி தர முடியுமா?

11) சர்வதேச சூழலை பார்க்க வேண்டும்….
அமெரிக்காவில் 42 சதவீதமும், பிரான்சில் 56 சதவீதமும்,
பணப்பரிமாற்றம் இருக்கிறது.
உலகம் பூராவும், எல்லா நாட்டிலும், மக்கள் பணமாகவோ
அல்லது கார்டுகள் மூலமோ பொருட்கள் வாங்க உரிமை
அளிக்கப்பட்டுள்ளது.

உலகில் எங்குமே நடைமுறையில் இல்லாத
பணமில்லா பொருளாதாரத்தை பற்றி மோடி பேசி வருகிறார்.
இது குறித்து முடிவு செய்ய அவருக்கு யார் உரிமையும்,
அதிகாரமும் கொடுத்தது…?

—————————–

இதே கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர்
ராகுல் காந்தியும் பேசினார்… ராகுல் காந்தியின் பேச்சு
சிறுபிள்ளைத்தனமாக இருந்தது என்று நாமே விமரிசனம்
செய்திருந்தோம்….

ஆனால், திரு.ப.சிதம்பரம் அவர்களின் வார்த்தைகளையும்,
வாதங்களையும் – அப்படி யாரும் ஒதுக்கி விட முடியாது.
அவர் வாதம் பெரும்பாலும் உண்மை மற்றும்
மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை அடிப்படையாகக்
கொண்டிருக்கிறது.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு.
மக்கள் தங்களை துன்பத்தில் ஆழ்த்துவதற்காக
இந்த ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கவில்லை.

எனவே, இந்த கேள்விகளுக்கு உரிய பதில்களையும்,
விளக்கங்களையும் தர வேண்டிய கட்டாயமும் –

மக்கள் துயரங்களிலிருந்து வெளிவர,
உரிய நிவாரணங்களை உடனடியாக அறிவிக்க
வேண்டிய அவசியமும் மத்திய அரசுக்கு இருக்கிறது….

பெரும்பாலான ஏடிஎம்- கள் இன்னமும்
செயல்படவில்லை…
வங்கிகளிலிருந்து, மக்களால் தங்கள் பணத்தை
(அரசே அனுமதித்த 24,000-த்தை கூட )
இன்னமும் எடுக்க முடியவில்லை…
சட்டவிரோதமான இந்த தடைகள் உடனடியாக
நீக்கப்பட வேண்டும்….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to திரு.ப.சிதம்பரத்தை, ராகுல் காந்தியாக எண்ணி பதில் சொல்லி விட முடியாது…..!!!

 1. இளங்கோ சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  ப.சி.அவர்களைப்பற்றி மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.
  நான் கூட பலமுறை அவரது திறமையைக் கண்டு வியந்ததுண்டு.
  பின்னர் திட்டியதும் உண்டு.

  ” Fehrar ” – பற்றி சொன்னதை விட்டு விட்டீர்கள் போலிருக்கிறதே ?

 2. தமிழன் சொல்கிறார்:

  கா.மை சார்… ப.சிதம்பரத்தின் வாதங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. உண்மையில் 2004-2013 வரை ஆட்சியிலிருந்த கட்சிகளும், பொறுப்பில் இருந்த அரசியல்வாதிகளும் மக்கள் கஷ்டத்தை எண்ணி நீலிக்கண்ணீர் வடிக்கவேண்டாம். பல்லாயிரக்கணக்கான கோடிகளை ஊழல் செய்து சம்பாதித்தவர்கள், ரொம்பத்தான் ஏழை எளியவர்களைப் பற்றி அக்கறை காண்பிக்கிறார்கள்.

  பிரதமர் என்ற முறையில், இந்த முடிவு மக்களுக்கு நல்லது என்று எண்ணி மோடி அவர்கள் முடிவு எடுத்திருக்கிறார். இவர்களைப்போல் சட்டத்தை வளைத்து …யோக்கியத்தனம் பண்ணவில்லை. அது ஹெலிகாப்டர் ஊழல், இத்தாலியக் குற்றவாளிகளைத் தப்பிக்கவைத்தது, மொரீஷியஸ்மூலம் கொண்டுவந்து வெள்ளையாக்கிய ஊழல்பணம், கடலில் சேதுசமுத்திரத் திட்டம் என்றபெயரில் மணலெடுத்த ஊழல்,2 ஜி, சிபிஐ இயக்குநர் மூலமாகக் குற்றவாளிகளிடம் பேர்ம், மும்பைப் தாக்குதலில் செயலின்மை என்று இவர்கள் ஆட்சியில் எல்லாம் சட்டப்படித்தான் நடத்தினாரா?

  ஊழல் எதிர்ப்பு பற்றிப் பேசுகின்ற மக்கள், அரசு அலுவலகங்கள், ஓட்டுநர் உரிம்ம் போன்ற எல்லா இடங்களிலும் சட்டப்படித்தான் நடந்துகொள்கின்றனரா?

  பொறியியல் கல்லூரிகளைத் தமிழ்நாட்டில் நடத்துவது முழுக்கமுழுக்க அரசியல்வாதிகள். அதில் கொள்ளையடிக்கும் வாய்ப்பு குறைகிறதே என்று ப.சிக்கு எரிச்சலாகத்தான் இருக்கும். (பீட்டர் அல்போன்ஸ், தம்பிதுரை, பச்சமுத்து, ஜேப்பியார், எ.வ.வேலு, ராம்தாஸ், துரைமுருகன், ஏசி சண்முகம், ஜி.விஸ்வநாதன்…….. எல்லோரிடமும் என்ஜினீரிங் காலேஜ்.. இவர்கள் தகுதி நமக்குத்தெரியும்)

  பணமில்லாப் பொருளாதாரத்தை நோக்கிப் போகவேண்டும். இன்றைக்கு 5 சதவிகிதமாம இருப்பது அப்போதுதான் 60 சதவிகித்த்தை நோக்கிச் செல்லும். 30 லட்சம் கொடுத்து பொறியியல் சீட்டு வேண்டுமென்றால் சம்பாதித்த பணத்திலிருந்து செக் கொடுப்பதற்கு என்ன? தேவையானதற்கு அமெரிக்காவைக் காட்டும் நாம் அமெரிக்கர்கள் போல் சட்டத்தை முதலில் மதிக்கக் கற்றுக்கொண்டால் என்ன.

  கோடிக்கணக்கில் புதிய ரூபாய் கண்டுபிடிக்கக் காரணம் தேசவிரோத வங்கி அதிகாரிகளும், பணத்திற்காக்க் கயமைத்தனம் செய்யும் (கியூவில் நின்று பணத்தைப் பிறருக்காக மாற்றிக்கொடுத்த) சில மக்களும்தான். இத்தகைய கோடிக்கணக்கான பணம், அரசியல்வாதிகளிடம்தான் பிடிபடுகிறது. “கருப்புப் பணம் ஒழிந்துவிட்டது” என்று பிரதமர் எப்படி உறுதியாகச் சொல்லமிடியும். இது சிறுபிள்ளைத்தனமான கேள்வி. நம் சட்டங்களின்மூலம் குற்றவாளிகள் எல்லாரும் தண்டிக்கப்படுகிறார்கள் என்று யாரேனும் உறுதிசொல்ல முடியுமா?

  அரசு, நீ இப்படித்தான் செலவழி என்று கட்டாயப்படுத்தவில்லை. Govt wants accountability. வேறு எப்படி கருப்புப் பணத்தை ஒழிப்பது? ப்சி ஒரு துரும்பை அவர் அரசியல் வாழ்க்கையில் கிள்ளிப்போட்டிருக்கிறாரா?

  உண்மை. லைட் இதயம் கொண்ட நூறுக்கும் அதிகமானவர்கள் இறந்துவிட்டனர். ஆனால் தன் உள்துறை அமைச்சர் வேலையை ஒழுங்காகப் பார்க்காத்தனால் ஏற்பட்ட மும்பைத் தாக்குதலுக்கு, அதனால் இறந்தவர்களுக்கு இவர் என்ன செய்தார்?

  லட்சம் கோடி இழப்பெல்லாம் நாட்டுக்கு அறிமுகப்படுத்திய (இஸ்ரோ, 2ஜி இழப்புகள் 4 லட்சம் கோடி) ப.சி பங்கேற்ற கட்சி நாட்டைப் பற்றி இப்போது கவலைப்படுவது வேடிக்கையாயிருக்கிறது.

  நான் இந்தியாவில் இருந்த பத்து நாட்களில் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளவில்லை. நான் கிட்டத்தட்ட 20 ரூவைப் பணமாகவும், 15ஐ வங்கி மூலமும் செலவழித்தேன். ஒரு நாளைக்கு 2000ம்தான் ஏடிஎம்மில் கிடைக்கும் என்ற மன பயத்தால் வாய்ப்புக் கிடைக்கும்போது ஏடிஎம்மில் எடுத்தேன். வங்கியிலும் வாரத்திற்கு 24 எடுக்கத் தடையில்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக
   ஒரு “மூத்த”தமிழன் வந்து –

   “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
   அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு ”

   என்று சொல்லி விட்டு போனார்….

   அது நமக்காகத் தான் என்று
   நான் நினைத்துக் கொண்டிருந்தேன்… 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப தமிழன்,

   குற்றம் சாட்டும் திரு.ப.சி. இருந்த காங்கிரஸ் அரசு
   முன்னதாக ஊழலை வளர்த்திருக்கிறது…. எனவே,
   அவர் சொல்லும் குற்றச்சாட்டுகளை ஏற்க மாட்டீர்கள்…

   குற்றம் சாட்டும் பொது மக்கள்,
   traffic rules-ஐ மதிப்பதில்லை,
   தவறான வழியில் ஓட்டுநர் உரிமம் வாங்குகிறார்கள் –
   எனவே அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளையும்
   ஏற்க மாட்டீர்கள்.

   மீதி எல்லாருமோ –
   பாஜகவுக்கும், மோடிஜிக்கும் எதிரானவர்கள்..
   எனவே அவர்கள் சொல்வதையும் ஏற்க மாட்டீர்கள்.

   ஆக – மோடிஜி அரசையோ, நடவடிக்கைகளையோ
   குறை கூற இங்கு யாருக்கும் யோக்கியதை கிடையாது –
   அப்படித்தானே….?

   —————
   வாரத்திற்கு 24,000 ரூபாய் வரை வங்கியிலிருந்து பணம்
   எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு உத்திரவு சொல்கிறது.
   இன்று வரை அது நடைமுறைக்கு வரவில்லை.

   இன்று காலை கூட நான் வங்கிக்கு சென்று 15,000 ரூபாய்
   கேட்டேன். அவர்கள் 10,000 -க்கு மேல் கொடுக்க முடியாது
   என்று சொல்லி விட்டார்கள்.
   ஏன் இப்படி …? செயல்படுத்த முடியாத உத்திரவுகளை
   மீடியாவுக்காக ஏன் அரசு வெளியிட வேண்டும்.

   என் வீட்டிலிருந்து ஒரு கி.மீ. தூரத்திற்குள் 6 ஏடிஎம்-கள்
   இருக்கின்றன. அந்த ஆறும் மூடியே இருக்கின்றன…
   யார் காரணம்….?
   செயல்படுத்த முடியாத உத்திரவுகளை போடும் அரசை
   கையாலாகாத அரசு என்று சொல்லாமல் வேறு
   எப்படி சொல்வார்கள் …..?

   ——————–

   தமிழ்நாட்டில் அதிகபட்ச கருப்புப்பணம் வைத்திருக்கும்
   “கல்வித்தந்தை” கள் இருவரின் கட்சியுடன், கடந்த
   இரு தேர்தல்களிலும், பாஜக கூட்டணி வைத்திருந்தது
   உங்களுக்கு தெரியுமா – தெரியாதா…?

   அந்த கூட்டணி இன்னமும் live -ஆகத்தான் இருக்கிறது…!
   கருப்புப்பண, கல்வித்தந்தைகளுடன் கூட்டணி
   வைத்துக் கொண்டு, கருப்புப்பணத்தை ஒழிப்பதைப்பற்றி
   பேச இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது..?

   ——————

   இந்தியாவின் டாப் 10,
   சரி வேண்டாம் டாப் 100,
   சரி அதுவும் வேண்டாம் டாப் 1000 பணக்காரர்களில்
   ஒருவரிடமாவது இதுவரை கருப்புப்பணம் பிடிபட்டதா…?
   So – இந்தியாவில் பணக்காரர்கள் யாரிடமும்
   கருப்புப்பணம் இல்லை…
   தினமும் க்யூவில் நிற்கும் அன்றாடங்காய்ச்சிகளிடம்
   தான் இருக்கிறது – அப்படித்தானே…?

   ——————-

   சரி, இந்தியாவில் அதிகபட்சம் கருப்புப்பணம் புழங்கும் இடம்
   திரைப்பட தொழில்…. இந்தியிலும், தமிழிலும், டாப்
   நட்சத்திரங்கள் யாராவது இதுவரை பிடிபட்டதுண்டா…?
   நடவடிக்கை எடுத்ததுண்டா…?
   அத்தனை பேருமே வெள்ளையில் வாங்கும் யோக்கியர்களா..?

   —————–

   சரி- real estate – மிக அதிகமாக கருப்புப்பணம் புழங்கும் இடம்
   என்று மத்திய அரசே certificate கொடுத்திருக்கிறது…
   இதுவரை, எத்தனை பில்டர்கள் பிடிபட்டார்கள்…?
   எத்தனை பேர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது…?

   ———————–

   45 நாட்கள் ஊதியம் இழந்து தவித்த தொழிலாளிகளுக்கு
   எதாவது நஷ்ட ஈடு உண்டா என்று கேட்டால் –

   மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சிதம்பரம்
   என்ன செய்தார் என்று கேட்கிறீர்களே –
   இது வாதமா அல்லது விதண்டாவாதமா…?
   எனக்கு பதில் சொல்ல வேண்டாம்… உங்களுக்குள்ளேயே
   யோசித்து வைத்துக் கொள்ளுங்கள்… அதுவே போதும்..

   ————–

   இறுதியாக ஒரு வார்த்தை –

   demonetisation – நடவடிக்கையால்
   இங்கு பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை
   எல்லாம் மிகைப்படுத்தல் – என்று சொல்பவர்கள்
   இரண்டே வகையினர் தான்….

   ஒன்று – மோடிஜி /பாஜக ஆதரவாளர்கள்…

   இரண்டு – இதனால் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல்
   வெளிநாடுகளில் இருந்துகொண்டு “தத்துவம்” பேசுபவர்கள்…

   ————–

   உங்கள் கருத்துக்களை நான் அப்படியே ஏற்காவிட்டாலும்,
   சில விஷயங்களில் எனக்கு ஒப்புதல் உண்டு.
   உங்களது விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • R KARTHIK சொல்கிறார்:

    Not exact reply to this article.

    In Bangalore, i have dropped 24K every week several times and i have not seen my banks (SBI, HDFC) hesitating to give me my ask. Only thing they will give 2K notes and sometime give 100s or 20s for few thousands.

    Surprised that the situation is still bad in chennai. Not sure if something fishy is happening in chennai.

   • தமிழன் சொல்கிறார்:

    நேரமில்லாத்தால் ஐபேடில் amend செய்ய நினைத்திருந்ததைச் செய்யவில்லை. பிறகு பதிலளிக்கிறேன். (நீங்கள் விரும்பினால்) நான் மோடி அவர்களின் ஆதரவாளன் அல்ல. ஜெ. இருந்தவரை அதிமுக அனுதாபி, கருணாநிதியின் அரசியலால் வெறுப்புற்றவன். “கை”க்கு வாக்களித்திருக்கிறேன். தாமரைக்கு இதுவரை இல்லை. Amendment: நடுத்தரக் குடும்பங்களுக்குக் கீழ் உள்ளவர்களின் கஷ்டம் தெரியாத்தால் குறிப்பிடவில்லை. நான் SBI கணக்கு வைத்துள்ளேன்

    உங்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள். தை நல்ல வழி பிறக்க வைக்கட்டும்

   • தமிழன் சொல்கிறார்:

    கா.மை சார்… Core of the issue is demonetisation.
    *பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்கிறது. இது unorganized லிருந்து organizedக்குச் செல்லும் பாதையின் பாதிப்பு

    *அரசே சொல்லியிருப்பதுபோல், தேவையான பணப்புழக்கத்தை வேண்டுமென்றே ஏற்படுத்தவில்லை போல் தெரிகிறது (பணம் அச்சடிப்பதில் ஏற்படும் பெரிய தாமதமும் இதன் பின்புலத்தில் இருக்கலாம்). எனக்கு 24 கிடைத்ததற்கும், உங்களுக்குக் கிடைக்காததற்கும் காரணத்தை நான் புரிந்துகொள்கிறேன். நீங்கள் சொல்லியிருப்பதுதான் உண்மை நிலையாயிருக்கும். (ஆளைப் பொருத்து வங்கிகள் செயல்படும் நிலை உண்மைதான்). இதனால் நிறையபேர் பாதிப்புக்குள்ளாயிருப்பார்கள், இன்னும் பாதிப்புடன் இருந்துகொண்டிருப்பார்கள்.

    *பிரதமரின் நடவடிக்கைகளைக் குறைகூறுவது தவறல்ல. எந்த முடிவை, யார் எடுத்தாலும் அதனால் ஒரு பகுதி அவஸ்தைக்குள்ளாவது இயற்கைதான். இந்த முடிவு நாட்டுக்கு நல்லது என்று நான் இன்னமும் நம்புகிறேன். பெரிய முட்டுச்சந்தில் நின்றுவிடக்கூடாது என்பதற்காக அரசு காம்ப்ரமைஸ் செய்துகொள்கிறது (900 கோடி டோலுக்குக் கொடுத்தது போன்று) என்று நம்புகிறேன். ஆனால் குறைகள் எல்லாம் ஒவ்வொன்றாகச் சரி செய்யப்பட்டுவிடும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

    *தேச நலனுக்காகத்தான் பிரதமர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். Adverse effect இருந்தபோதிலும், இந்த முடிவை எடுப்போம் என்று நம்பி எடுத்திருக்கிறார். இது கடுமையாகத் தோல்வி அடைந்தால் பாதிக்கப்படப்போவது மோடி அவர்கள்தான். அதற்குப் பின் பாஜக. ‘யாரைக் கலந்தாலோசித்தார் மோடி’ என்று கேட்கும் ப.சி., இலங்கையுடன் சேர்ந்து போரிட்டதற்கு யாரிடம் ஆலோசனை பெற்றார்கள் என்று சொல்வாரா? இஷ்டப்படி 2 ஜி போன்ற கொள்ளைகளை அடித்ததற்கு யாரிடம் ஒப்புதல் பெற்றார்கள்? ப.சி செய்வது வெற்று அரசியல். அப்படிச் செய்தால்தான், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது ஜனாதிபதி வாய்ப்பு கிடைக்கும் என்பது அவரின் எண்ணம்.

    *பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் நம் நாடு முன்னேறுவது சாத்தியமில்லை. பிறருக்காக கியூவில் நின்று பணம் மாற்றியவர்கள் தேசத் துரோகிகள்தான். பல பிரமுகர்கள், புதிய நோட்டுக்களை வங்கி அதிகாரிகளின் மூலமாகப் பெற்றுக்கொண்டதும் தேசத் துரோகம்தான். காசு வாங்கிக்கொண்டு ஓட்டுனர் உரிமம் கொடுத்ததும் தேசத் துரோகம்தான். அதேசமயம், நம் நாட்டின் சூழலால், பலரும் (அனேகமாக அனைவரும்) சட்டவிதிகளை மீறவேண்டிவருகிறது. சட்டத்திற்குப் புறம்பாகக் குற்றம் செய்யவேண்டிவருகிறது. இதனை யார் களைகிறார்களோ அப்போதுதான் இந்தியா நல்ல முன்னேற்றம் அடையும். ஆனால் இது சத்திரச் சிகிச்சை போன்றது. வேதனை அதிகம் தரும்.

    *நீங்கள் எதிர்பார்க்கும் ‘குற்றவாளிகள் பிடிபடுவது’ நிச்சயம் down the line நடக்கும். மக்கள், கஷ்டத்தோடு நேர்மையாக இருப்பதற்கு அவசியம் நேரும்போது, அவர்கள், தங்கள் ஆட்சியாளர்களை நேருக்கு நேர் எதிர்க்கும் வலு அவர்களுக்கு வந்து சேரும்.

    எங்கள் குடும்பமும், மற்ற உறவினர்களும் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். நான் 95% இந்தப் பணப் பரிவர்த்தனையினால் கஷ்டப்படவில்லை. (ஆனால் மனதில் 2000க்கு 100 ரூ சில்லரை வாங்கியபோது லாபம் அடைந்துவிட்டதுபோலும், என்னிடம் இருந்த 100ரூவைச் செலவழிக்கும்போது மனதளவில் நஷ்டம் அடைந்துவிட்டதுபோல் எண்ணினது உண்மை. ஆனால் 100ரூ கிடைக்க கஷ்டப்படவில்லை. கொண்டு சென்றது 6000 ரூக்கு 100 ரூ. அங்கிருந்து கிளம்பும் அன்று என்னிடம் 24 க்கு 100 ரூ இருந்தது) நீங்கள் சொல்லியிருக்கும் ‘வெளி’நாடுகளில் இருந்து தத்துவம் பேசுபவர்கள்’, வெளிநாட்டில் முழுவதுமாக செட்டில் ஆனவர்களைத்தான் குறிக்கும் என்று நினைக்கிறேன். அதில் அர்த்தமும் உள்ளது. அவர்கள்தான் Overnightல் இந்தியா வெளிநாட்டுக்கு ஈடான நிலைமை அடைந்துவிடவேண்டும் என்று பகல் கனவு காண்கிறார்கள்.

 3. LVISS சொல்கிறார்:

  We have to see what Mr Arun Jaitley has to say about this — He may come up with reply to all these technical issues involved in this —
  We must concede that Arun Jaitley and the PM ALSO would have gone through the procedure to be followed thoroughly before taking this important step —
  There is also a view that an elected govt has the mandate from the people to guide the course of the country’s economy —
  As for hulabuloo about economy taking a severe hit because of demonetisation the link below will provide the answer –If this was the situation two months after demonetisation when there was not much cash flow according to many experts how would it be when the whole thing stabilises in the comming months —

  http://economictimes.indiatimes.com/news/economy/indicators/reports-of-industrial-and-economic-activity-in-november-december-show-growth-in-sectors/articleshow/56507955.cms

  http://zeenews.india.com/economy/rbi-recommended-note-ban-after-govts-advice-central-bank-to-parl-panel_1966064.html

  From the above link it is clear (II para and III para) that the the govt advised that the RBI MAY consider (not “should ” It did not ask the RBI to immediately decide on the issue ) etc etc and that the RBI recommended demonetisation only after deliberating on the matter the next day — How long did they deliberate, may be the whole day . does it matter ? In these days of computer and advanced technology how long will it take to convey a decision back to the govt — Is there a stipulation that the gov has to wait for a few days to announce a decision arrived at and not do it immediately when it thinks it is to be announced and implemented asap — And how long it will take to convene a cabinet meeting , convey the decision to the cabinet discuss it and seek its approval —( the announcement regarding the PM address was on in the channels much before the address ,may be when the cabinet was discussing the matter )
  I expect to hear more about the step by step procedure followed in this issue –Let us not be naive to think that the PM and FM would do anything without deep consideration —
  With the use of micro ATMs in a big way in the days to come the ATMs may become irrelevant and get phased out –Even prior to Nov 8th not all ATMs had cash 24×7 and on all 365 days —

 4. LVISS சொல்கிறார்:

  The link I have sent ,RBI reply,reveals many other things —
  May 18 2016 –Govt concurred with the introduction of Rs 2000 notes
  May 27 2016 -RBI recommended to the govt that Rs 2000 notes be introduced
  June 27 2016 -Govt gave approval and the presses were advised to initiate production of new series notes —
  Mr Raghuram Rajan the RBI Governor during this period must be aware of these things –
  in the final paragraph there is THE mention of electronic transaction taking a part of transaction load hitherto met by physical currency — Were we not told repeatedly that the cash less economy idea was an after thought of the govt —

 5. SELVADURAI சொல்கிறார்:

  திரு.ப.சி. அவர்கள் எழுப்பியுள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் பல சொற்பொழிவுகளில் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். இச்சொற்பொழிவுகளின் பதிவுகள் அநேகம் YOUTUBE இல் உள்ளன. இவைகளின் மூலம் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் இதனால் ஏற்படுகின்ற அசௌகரியங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை தக்க விளக்கங்களுடன் தெளிவு படுத்துகிறார் திரு குருமூர்த்தி. திரு சிதம்பரம் போன்றோர் தங்களது கேள்விகளை திரு குருமூர்த்தி போன்றோரிடம் எழுப்ப வேண்டும். பொத்தாம் பொதுவில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவது அவர் போன்றோருக்கு அழகல்ல என்பது என் கருத்து.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப செல்வதுரை,

   உங்களுக்கு திரு.குருமூர்த்தியை பிடிக்கும் என்பதால்,
   அவர் சொல்வது எல்லாவற்றையும் சரியென்று நீங்கள்
   வேண்டுமானால் ஏற்கலாம்…. எல்லாரும் ஏற்க முடியாது.

   திரு.ப.சிதம்பரம் எழுப்பியுள்ள பல கேள்விகளில்,
   சிலவற்றிற்கு திரு.குருமூர்த்தி இன்று வரை பதில் அளிக்கவில்லை.
   சிலவற்றிற்கு தவறான விளக்கங்களை தந்திருக்கிறார்….

   பாஜக சார்புள்ள குருமூர்த்தி, மத்திய அரசின் நடவடிக்கைகளை
   ஆதரித்து தான் பேசுவார் என்பதில் வியப்பு ஏதுமில்லையே…

   அரசின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட குளறுபடிகளை எல்லாம்
   சுட்டிக் காட்டும்போது, குருமூர்த்தி அவர்கள் எரிச்சலாகி
   முட்டாள்தனம், அல்பத்தனம் என்று தான் சொல்கிறாரே தவிர,
   யதார்த்த நிலையை அவர் ஒப்புக்கொள்வதில்லை. அவரால்
   ஒப்புக்கொள்ள முடியாது… அவரது சார்பு நிலை அப்படி…

   உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தால், ரங்கராஜ் பாண்டே –
   குருமூர்த்தி ஆகியோரிடையேயான விவாதத்தை
   (இதே தளத்தில் இருக்கிறது…)
   மீண்டும் ஒரு முறை பாருங்கள்… ஒருவேளை புரியலாம்.
   ஆனால், புரிந்தாலும், நீங்களும் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள்…
   உங்கள் நிலை அப்படி …!!!

   திரு.குருமூர்த்தி அவர்களின் கருத்தரங்கு ஒன்றிற்கு நான்
   நேரிலும் போயிருந்தேன்… சங்கடமான கேள்விகளுக்கு
   ( பதில் – மோடிஜிக்கு பாதகமான இருந்ததால் ) அவர் பதில்
   சொல்வதையே தவிர்த்து விட்டார்….

   உதாரணத்திற்கு ஒன்று –

   உலகம் பூராவும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது,
   இந்தியா மட்டும் தப்பித்தது எப்படி என்று விவரித்து
   முன்னதாக குருமூர்த்தி அவர்கள் ஒரு கட்டுரை எழுதி
   இருந்தார்….

   அதில் வீடுகளில், யார் கண்களிலும் படாமல்,
   பெண்கள் சேர்த்து வைத்திருந்த
   சேமிப்பு தான் இந்தியாவை காப்பாற்றியது என்றார்.

   இப்போது “செல்லாக்காசு” மூலம், வீட்டில் பெண்கள்
   அஞ்சரைப்பெட்டிகளில் வைத்திருந்த பணம் அத்தனையையும்
   துடைத்து எடுத்து வங்கியில் போட வைத்து விட்டீர்களே…
   உங்கள் domestic savings policy -க்கு இது உடன்பாடு தானா
   என்று ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது.

   இதற்கு பதில் சொல்வதை அவர் தவிர்த்து விட்டார்….
   ( அவரது முந்தைய பொருளாதார கருத்து தவறு என்று
   அவரே எப்படி ஒப்புக்கொள்ள முடியும்….? அதே சமயம்
   மோடிஜிக்கு எதிராகவும் கருத்து கூற முடியாது…
   விளைவு – deep silence – பலத்த மவுனம்….!!! )

   இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள
   பல குளறுபடிகளை சரியாக திட்டமிட்டிருந்தால்
   நிச்சயம் தவிர்த்திருக்கலாம் என்பது தான் உண்மை…
   யதார்த்தம்

   ஆனால், பாஜகவினர் யாரும் இதை ஒப்புக்கொள்ள
   மாட்டார்கள்.. இதுவும் உண்மை.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  நீங்கள் இன்னமும் பாஜகவை பழைய நிலையிலேயே
  நினைத்துக் கொண்டு எழுதுகிறீர்கள் மாதிரி தெரிகிறது.
  மோடிஜியின் தற்போதைய பலம் உங்களுக்கு தெரியவில்லை
  என்றுநினைக்கிறேன்.

  தமிழ் நாட்டின் 3வது பெரிய்ய்ய்ய்ய கட்சியுடன் நீங்கள்
  மோதுகிறீர்கள். மோடிஜியைப்பற்றி எதாவது குறை
  சொன்னீர்களோ நாலாம் பக்கத்திலிருந்தும் அம்புகளும்,
  ஈட்டிகளும் பாயும் – ஜாக்கிரதையாக இருங்கள்.

 7. LVISS சொல்கிறார்:

  I am afraid P C is wrong regarding USA — I have been there twice( Virginia) –It is 99 .9 % cashless society — Only purchases below $ 10 is done in cash and this is displayed in a board in malls -Cash transactions are very rare,almost nil — Why, even when you have a haircut the payment is made only via card –In petrol bunks you wont find any one to help you -Just fill up yourself and swipe the card –I dont know where he got the 42% pana parivarthanai from —

  • A Baluchamy சொல்கிறார்:

   I am living in US for the past ten years. Only the salaried class people use cashless that too if it is more than $10. All other transactions & purchase by lower middle class & labors are still done with cash only. The figure may be more than 50%

  • Seshan சொல்கிறார்:

   Two suggestions Mr.LVISS:

   one – What is the necessity that we should follow
   the sysstems of USA or any other country and undergo unwanted
   miseries ?

   two – It seems you find US a better living place
   than India. Why not you get out of India
   and shift your residence Permanently to USA ?

   • LVISS சொல்கிறார்:

    Mr Seshan, Did I ever say we should follow the sytem in US — I only narrated my experience -=Let me tell you one more thing I am not enamoured of US -I am better off here and I like it the way we are living –Nothing like being in your own country “sorgame enralum”
    Having said you must be aware of some thing that is in the offing –There is a move to encourage people to use aadhaar cards for using for purchases and drawing cash from ATM by using finger prints –This will help people who cannot operate atm machines or swipe machines like others –If this becomes the norm and gets implemented there can be near less cash society –I think the govt is seriously working on it –

 8. LVISS சொல்கிறார்:

  Mr K M I will touch upon one subject you have been bringing up at every opportunity without understanding the subject —Neither the govt nor the RBI can be blamed for ATMs not getiing filled up –They do not oversee the distribution of cash to individual branches of banks –This is done by the currency chest branches —Moreover , In many of the ATMs the cash replenishment is outsourced — In SBI ATMs, the people say, the cash is managed much better than other banks– This may be because the cash in ATM is kept by the branch itself —
  Even before 8th Nov I have come across many ATMs without cash —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Mr.LVISS,

   I have also said –

   //வாரத்திற்கு 24,000 ரூபாய் வரை வங்கியிலிருந்து பணம்
   எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு உத்திரவு சொல்கிறது.
   இன்று வரை அது நடைமுறைக்கு வரவில்லை.

   இன்று காலை கூட நான் வங்கிக்கு சென்று 15,000 ரூபாய்
   கேட்டேன். அவர்கள் 10,000 -க்கு மேல் கொடுக்க முடியாது
   என்று சொல்லி விட்டார்கள்.
   ஏன் இப்படி …? செயல்படுத்த முடியாத உத்திரவுகளை
   மீடியாவுக்காக ஏன் அரசு வெளியிட வேண்டும்.//

   You may have some justifications for this also….!!!

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Mr.LVISS,

    //you have been bringing up at every opportunity without understanding the subject
    Neither the govt nor the RBI can be blamed for ATMs not getiing filled up //

    ஒப்புக் கொள்கிறேன்…
    நான் ஒரு முட்டாள்….
    பாஜக அறிவுஜீவிகளுக்கு தெரிந்தது –
    ஒன்றுமே எனக்கு தெரியாமல் தான் எழுதுகிறேன்….

    எல்லாம் அறிந்த பெருமகன் நீங்கள் தான் தயவுசெய்து விளக்குங்களேன் –

    ” நோட்டு அச்சடிப்பது, அச்சடித்த பணத்தை
    வங்கிகளுக்கு பட்டுவாடா பண்ணுவது யாருடைய
    பொறுப்பு… வேலை…? ”

    “வங்கிகளுக்கு போதுமான பணம் கிடைக்காமல்
    இருப்பதற்கு யார் பொறுப்பு…? ”

    ” வாரத்திற்கு 24,000 ரூபாய் எடுத்துக் கொள்ளலாம்
    என்று உத்திரவு போட்டது யார்…?”

    “அந்த உத்திரவு நிறைவேற்றப்படாததற்கு யார் காரணம்…? ”

    வங்கி கிளார்க்கா….?

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    I have my account in two branches of SBI — But I draw cash from two other branches ofthe bank close to my house — I do not know whether other banks allow this –Core banking has this advantage — In small branches you will not get the required cash at one go -This is my experience too –In one of the branch they allowed full withdrawal of 24000 ‘/ It all boils down to availabilty of cash and cash holding limit of a bank- In one branch they put up a board telling how much they will give for the day –The whole idea was sabotaged by a few persons who gave the new currencies to others through the back door —
    This is one area which could have been handled better—

  • இளங்கோ சொல்கிறார்:

   திரு.எல்விஸ் சொல்வது வடிகட்டிய உளறல்..
   பணப்பட்டுவாடாவுக்கு ரிசர்வ் வங்கி தான் பொறுப்பு.
   ரிசர்வ் வங்கியிடம் அச்சடிக்கப்பட்ட நோட்டு போதிய அளவு
   இல்லை என்பது தெரிந்தும், 24,000 கிடைக்கும் என்று
   மத்திய அரசு அறிவித்தது மக்களை முட்டாளாக்கும் செயல்.
   மத்திய அரசு தெரிந்தே, வேண்டுமென்றே மக்களை ஏமாற்றுகிறது.
   இது மோடி அரசு செய்யும் மோ(ச)டி.

 9. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! அமெரிக்காவை பாரு — பிரான்ஸை பாரு — அங்கபாரு —
  அதையும் தாண்டிப்பாரு என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள் ….
  // அடுத்து முழுவதும் ரொக்கமற்ற பொருளாதார பரிவர்த்தனையே இந்தியா போன்ற ஏழை நாடுகளில் சாத்தியமில்லை என்பதை வளர்ந்த பணக்கார நாடுகளின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் ரொக்கமற்ற பரிவர்த்தனை எந்த அளவுகளில் நடக்கிறது என்பதை கீழே உள்ள படத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்: புரிந்துகொள்ள // http://www.vinavu.com/wp-content/uploads/2017/01/cashless.jpg சொடுக்கவும் …..

  மேலும் இந்த :– https://www.bloomberg.com/news/articles/2016-12-04/cashless-economy-still-a-fantasy-for-indians-snubbed-by-banks லிங்க் சென்று அதில் பல வார்த்தைகளுக்கு அடிக்கோடிட்டு பல பத்திகளில் வருவதை — நண்பர்கள் பொறுமையுடன் வாசித்தால் — பல விஷயங்கள் நன்கு புலப்படும் — சிலருக்கு ஒரு சார்பு நிலை என்பது அவர்களின் வறட்டு மற்றும் துதிபாடும் தன்மையாக இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை– எதார்த்தத்தை ஏற்காத இவர்களுக்கு வாரம் 24000 ரூபாய் என்பது போதுமானதாக தான் இருக்கும் — ஒரு நான்கு அன்றாட கூலி தொழிலார்களை வைத்து வேலை வாங்குபவர்களுக்கு தான் அதன் கஷ்டம் என்ன வென்று புரியும் ….

  ஒரு காசோலை ஒருவருக்கு கொடுத்து — கொடுத்தவர் கணக்கில் பணம் இல்லையென்று திரும்பினால் — கொடுத்தவர் மீது வழக்கு தொடரலாம் — கணக்கில் போதிய பணம் இருந்து ஒருவருக்கு அவரது சேமிப்பிக்குள் அவர் விரும்புகிற தொகையை கொடுக்க மறுப்புபவர்கள் மீது வழக்கு தொடுத்தால் — என்னவாகும் — பதில் சொல்லுவது யார் … ?

 10. Sundar Raman சொல்கிறார்:

  சிதம்பரம் அவர்களுக்கு ரொம்ப நிறய அறிவு இருக்கு. மதுரைக்கு மிக அருகில் உள்ள சிவகங்கை காரரான அவர், அந்த PETA அமைப்புக்கு திருவாளர் ராஜா அவர்கள் அனுமதி கொடுக்கும் பொழுது , கேபினெட்டில் தானே இருந்தார் … தனது மாவட்டத்தில் என்ன பண்டிகை உண்டு , யார் யார் வாழ்கிறார்கள் என்ற கவலையே இல்லாமல் இந்தியா நாசமாக வேண்டும் என்ற ஒரே குறிக்கோகோளில் இன்னும் எத்தனை எத்தனை காரியங்கள் செய்து வெட்டு சென்றாரோ – அந்த சிவகங்கை குளத்தருகே சிற்றாடை உடை உடுத்தி உள்ள அந்த அம்மனுக்கு தான் வெளிச்சம் .

  ஒரு மனிதராய் இருந்தால் என்ன குழுவால் இருந்தால் என்ன – அது என்ன முடிவு , நாட்டுக்கு நல்லதா அதை பற்றி ப.சி அவர்கள் கருத்து என்ன ?
  இது போன்ற முக்கிய ..எல்லாரையும் பாதிக்கும் முடிவு , சர்க்காரால் தான் எடுக்க முடியும் . RBI தான் அதை நடை முறை படுத்த முடியும் .. பின் மற்ற யாரால் செய்ய முடியும்
  45 கோடி மக்கள் வாழ்வின் ஆதாரத்தையே இழந்து விட்டார் என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர். கிட்ட தட்ட , 18 அல்லது 20 கோடி மக்களிடம் பணம் எப்போதுமே கிடையாது – இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாய் மாறி …இப்போ இன்னும் கூடிய சீக்கிரம் டோட்டல் நார்மல் ஆகிவிடும் என்று எல்லா புள்ளி விவரங்களும் சொல்கின்றன.
  கல்லூரி அட்மிஷன் , கல்யாணம் , நிலம் , வீடு , நகை …இதில் எல்லாவற்றிலும் , யார் வாங்குகிறார்கள் , யார் விற்கிறார்கள் , அதில் எத்தனை வரி , எல்லா விவரங்குளும் ஓரளவுக்கு அரசிடம் சேரும் . இது நல்லதுக்கு தானே. நாம் ஏன் பிரான்ஸ் பற்றியோ அமேரிக்கா பற்றியோ கவலை படவேண்டும் .

 11. தமிழன் சொல்கிறார்:

  “அந்த சிவகங்கை குளத்தருகே சிற்றாடை உடை உடுத்தி உள்ள அந்த அம்மனுக்கு தான் வெளிச்சம்” – இது நிறைய பேருக்குப் புரிந்திருக்கலாம். இந்த வரிகள் எனக்கு வெகு காலத்துக்கு முன், ரசித்துக்கேட்ட, அடிக்கடி பாடும், சீர்காழி கோவிந்தராஜன் பாடிய இந்தப் பாடலை நினைவுபடுத்திவிட்டது.

  சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடையுடுத்தி
  சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்க்கை வீற்றிருப்பாள் – சின்னஞ்சிறு..

  பெண்ணவளின் கண்ணழகைப் பேசி முடியாது
  பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது – சின்னஞ்சிறு

  ….. பாடல் முழுவதுமாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. நினைவுகூற வைத்ததற்கு நன்றி சுந்தர்ராமன் அவர்கள்..

  • Sundar Raman சொல்கிறார்:

   கா.மை சாருக்கும் நன்றாக தெரியும் என நினைக்கிறேன் அதனால் தான் அந்த பாடல் வரிகளை எழுதினேன்.

   எனக்கும் இப்படி நடந்தால் ஆசை தான் , அதாவது …. இந்த அபரிதமான வங்கிகளில் உள்ள பணத்திலோ அல்லது மத்திய அரசு திட்டம் மூலமாகவோ , வறட்சி உள்ள மாநிலங்களில் , தூர் வாருதல் , ஏரி ,குளம் , வாய்க்கால்ககளை ஆழப்படுத்துதல் , எங்கும் மரம் வளர்த்தல் , நீர் நிலைகளில் மாசு கலக்காது பாதுகாத்தல் …போன்ற தூர் நோக்கு திட்டங்களை செயல் படுத்துவார்கள் என எதிர் பாப்போம் ….நிவாரணம் மட்டும் இல்லாமல் , மற்ற காரியங்களுக்கும் நிறைய நிதி ஒதுக்கி , அந்த நிதியை சரியாக செலவு செய்வார்கள் என எதிர்பார்ப்போம்.

   மேலும் முத்ரா கடன் திட்டம் மிக நல்ல திட்டமாகும் , R 3 அதை நிறுத்தினார் என்று கேள்வி , அதில் நிறய பேர் பயனடைய வாய்ப்பு அதிகம் .

   சாலை மற்றும் வீடு கட்டும் வேலைகளிலும் நல்ல பணம் பரிவர்த்தனை ஆக வாய்ப்பு.

   நாளை நல்லவை நடக்க நிறய வாய்ப்புண்டு .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.