அட, இதை இன்னும் பார்க்கவில்லையா அவர்கள்… !!!

2000_inr_obs_2016

யார் கண்டது – காலம் போகிற போக்கில்,
ஜால்ராக்கள் ஒலிக்கின்ற வேகத்தை பார்த்தால்,
ரூபாய் நோட்டுகளில் காந்திஜியின் படம் கூட
விரைவில், கடந்த கால சரித்திரம் ஆகக்கூடும்…!!!

modi-khadi-calendar-ians_650x400_81484281081-1

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to அட, இதை இன்னும் பார்க்கவில்லையா அவர்கள்… !!!

 1. இளங்கோ சொல்கிறார்:

  அப்படியானால், கைராட்டையை கண்டு பிடித்தவர்
  மோடிஜி இல்லையா காவிரிமைந்தன் சார் ?!?

 2. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! 2000 ரூபாய் நோட்டை போட்டு — // அட, இதை இன்னும் பார்க்கவில்லையா அவர்கள்… !!! // என்று வினவியுள்ளதற்கு — அரசல் -புரசலாக இந்த 2000 மதிப்புள்ள தாளும் கொஞ்ச காலத்தில் ” செல்லா நோட்டாக ” மாறும் என்கிற செய்தி வெளிவருகிறது … அந்த நேரத்திற்காக காத்து இருந்து அதிலும் ” காந்தியை மாற்றிவிட்டால் ” … யார் கேட்க போகிறார்கள் …? கீழே உள்ள செய்தியில் ஹிட்லர் கூறியதாக ஒரு கொட்டேஷன் இருக்கிறது — அது ….

  ” மக்களை பரபரப்பாகவே வைத்திருக்க வேண்டும் … புதிதாக சிந்திக்க விடக்கூடாது — சிந்தித்தால் கேள்விகள் கேட்பார்கள் ” இதுவே நமது ……. தாரக மந்திரமாகி விட்டதா … ?

  // காதி கலண்டர்களில் காந்திக்கு பதிலாக மோடியின் படம் // http://namathu.blogspot.in/2017/01/blog-post_363.html … இதில் ” காந்தி — மாறி — மோடியான ” எல்லாவற்றிற்கும் விளக்கமாக இருப்பதால் … அது போதும் என்று நினைக்கின்றேன் — நீங்கள் … ? பாவம் … பருத்தியும் — காந்தியும் …. அப்படித்தானே …. ?

 3. LVISS சொல்கிறார்:

  In our country there is hero worship so the leader of a party gets “sycophanced” –This applies to the political parties and also actors – Some time back there was a move to open a temple in his name in Gujarat – Before it was opened the PM intervened and got it demolished —
  In the above video there are many others who are weaving with the charka -Theu could have shown put all of them in the picture —

 4. rramanisankar சொல்கிறார்:

  கவலைப் படாதீர்கள். பார்த்து விட்டார்கள். கண்டிப்பாக உடனே மோடிஜி அல்லது கோட்ஸே படம் 1000 அல்லது புதிய 2000 ரூபாய் நோட்டில் வந்துவிடும்.

 5. தமிழன் சொல்கிறார்:

  அல்லக்கை அரசு அதிகாரிகளின் தொல்லை தாளவில்லை. இப்படிப் படத்தை வெளியிட வெட்கப்பட்டிருக்க வேண்டாமா? இது மார்ஃபிங் இல்லாமல் பிரதமர் அவர்கள் கொடுத்த போஸ் என்றால் வருத்தத்திற்கும் கண்டிப்பிற்கும் உரியது. காந்தியடிகள் இந்திய தேசத்தின் ஆன்மா.

 6. Shankar சொல்கிறார்:

  The great-grandson of Mahatma Gandhi, Tushar A Gandhi,
  has commented on this –

  “Haath me Charkha, Dil me Nathuram. ”
  ” First, Bapu disappeared from few Rs 2,000 currency notes,
  now he disappears from KVIC office and calendar
  to be replaced by Rs 10 lakh-ka suit loving prime minister.”

 7. Shankar சொல்கிறார்:

  PMO has issued a statement
  defending the Calander and asking
  what is wrong in it.

 8. selvarajan சொல்கிறார்:

  // குடும்ப அரசியலை பார்த்துக் கொண்டு துக்ளக் சும்மா இருக்காது – ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-under-family-politics-says-thuglak-editor-gurumurthy-271836.html … அப்படியா … ?

 9. selvarajan சொல்கிறார்:

  அய்யா ….. ! ஜல்லிக்கட்டு : தடைகள் — நடத்த முடியாது — கூடாது என்று கொக்கரிப்புகள் — ஆட்சி டிஸ்மிஸ் என்று மிரட்டல்கள் — மனுவை வாங்க மறுப்புகள் — மீறியவர்கள் கைதுகள் என்று ஏகப்பட்ட வழிகளில் ஜல்லிக்கட்டு நடத்த முட்டுக்கட்டைகள் போட்டும் — வெகு ஜோராக அங்கங்கே நடப்பது எதை எடுத்துக் காட்டுகிறது … ? ” குனிய – குனிய குட்டுறவனும் முட்டாள் ….குட்ட – குட்ட குனியரவனும் முட்டாள் ” — என்று எதற்காக கூறினார்கள் ….

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   மக்களுக்காகவே சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்…
   மக்களைப்பற்றியோ, அவர்களது விருப்பங்களை பற்றியோ,
   பண்பாடு-வாழ்க்கை முறைகளைப்பற்றியோ –
   எந்த அக்கறையும் இல்லாமல்,

   எங்கேயோ தொலைதூரத்தில், நமக்கு சம்பந்தமே இல்லாதவர்கள்
   சிலர் உட்கார்ந்து கொண்டு, எங்களிடம் அதிகாரம் இருக்கிறது –
   நாங்கள் போடுவது தான் சட்டம் என்று தீர்மானம் செய்தால் –

   மாநில அரசுக்கும், மக்களுக்கும் விருப்பம் ஒன்றேயானால் –
   அந்த சட்டத்தின் சந்து பொந்துகளுக்கிடையே புகுந்து
   வெளிவருவது, செயல்படுத்திக் காட்டுவது எப்படி என்பதையே
   நடந்து கொண்டிருப்பவை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

   தமிழ் மக்களுக்கும், தமிழக அரசுக்கும் – சேர்த்தே நமது
   வாழ்த்துகளும், பாராட்டுகளும்….

   கைதுகள் நடந்தாலென்ன – வழக்குகள் மேற்கொண்டு
   தொடரப்பட்டால் தானே…கவலைப்பட வேண்டும்….
   எத்தனையோ கிடக்கின்றன ஏற்கெனவே….!
   பத்தோடு பதினொன்று – அத்தோடு இதுவும் ஒன்று…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.