சந்தேகம் வேண்டாம் சொந்தக்காரர்கள் சொல்லி விட்டார்கள் – இனி அது அ.ம(ன்னார்குடி).தி.மு.க …!!!

பேசிக்கொண்டிருப்பவர் திரு.திவாகரன் அவர்கள்

பேசிக்கொண்டிருப்பவர் திரு.திவாகரன் அவர்கள்


( முதல்முறையாக திரு.நடராஜன் அவர்கள் நிகழ்த்தும்
ஒரு விழாவில், திருமதி சசிகலா அவர்களின் உருவம்
பெரிய அளவில் பொறிக்கப்பட்ட பின்னணி பேனர்…)


திருமதி சசிகலா முதலமைச்சர் நாற்காலியில் அமரும்
வரையிலாவது அமைதியாக, அடக்கமாக, மறைவாக இருப்பார்கள் என்று நினைத்தது தவறாகப் போய் விட்டது.

இந்த கட்சி எங்களுக்கு தான் சொந்தம் என்று
declare செய்து விட்டார் திருவாளர் திவாகரன் –

( ஆமாம் – ஜெயலலிதா அவர்களாலேயே,
பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில்,
2011-ல் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில்,
புகழ்பெற்ற சகோதரர்களில் – முக்கியமானவர்…)

திருமதி சசிகலா அவர்களின் கணவர் திரு.ம.நடராசன்
தஞ்சையில் நேற்று நிகழ்த்திய பொங்கல் விழா கூட்டத்தில்
திருவாளர் திவாகரன் பேசியதிலிருந்து கொஞ்சம் கீழே –

—————————————–

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்
அல்ல…அதிமுகவில் எங்கள் பங்கு அதிகம்-

அதிமுகவின் சரித்திரத்தில் எங்களது குடும்பத்தின்
பங்கு அதிகம்; அதிமுகவை எம்ஜிஆருக்கு பிறகு
காப்பாற்றியதிலும் எங்களுக்கு அதிக பங்கு உண்டு…

புரட்சித்தலைவர் இந்த கட்சியை துவங்கும்போது
இந்தபகுதியில் மிகப்பெரிய பங்காற்றியவர் அண்ணன் எஸ்.டி.எஸ்.

அதையும் யாரும் மறைக்கவும் முடியாது,
மறக்கவும் முடியாது. அந்த நன்றியை யாரும் மறக்கக்கூடாது.
எந்த நேரத்தில் யார் உதவி செய்திருந்தாலும் அதை
மறக்கக் கூடாது.

திண்டுக்கல் தேர்தலை ஒரத்தாடு, மன்னார்குடி
தொண்டர்களை வைத்துதான் நடத்தினார் எஸ்.டி.எஸ்.
ஆகையால், நாங்கள் ஒன்றும் நேற்று பெய்த மழையில் இன்று
முளைத்த காளான் அல்ல.

அ.தி.மு.க.வின் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் எங்கள் பங்கு
இருக்கிறது. இது திராவிடர் கட்சி, ஆரியர்கள் கட்சி அல்ல.
இப்போதும் எவ்வளவோ சதிகள் நடந்துகொண்டிருக்கிறது.
எப்படியும் உடைத்துவிடலாம், ஏதாவது செய்து விடலாம்
என பல சதிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

அப்படி எது நடந்தாலும்
எங்கள் சடலத்தின் மீதுதான் நடக்கும்.

அதிமுகவை காப்பாற்றிய நடராஜன் மீது
– 2011ல் மிகப்பெரிய சதி நடந்தது.

அம்மாவைவிட்டு எங்களையெல்லாம் நகர்த்தினால்
போதுமென்று நினைத்தார்கள் அது நடக்கவில்லை.
நடக்கவும் நடக்காது.
புரட்சித்தலைவருக்கு பிறகு அ.தி.மு.க.வை கட்டிக்காத்ததில்
மிகப்பெரிய பங்கு நமக்கு உண்டு, அதுவும் குறிப்பாக தஞ்சை

மாவட்டத்தினருக்கு உண்டு. அதில் மிகப்பெரிய
பங்கு முனைவர் ம. நடராஜனுக்கு உண்டு. நானும் அவரும் இணைந்து செயல்பட்டிருக்கிறோம்.
எங்கள் உயிர்களுக்கெல்லாம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

அதையெல்லாம் துச்சமென மதித்து கட்சியை கைப்பற்றினோம்.

அப்போது இரட்டை இலை முடக்கப்பட்டது. இரட்டை இலையை
மீட்டெடுத்த பெருமை முனைவர் நடராஜனுக்கு உண்டு.
அதிமுகவின் தளபதி நடராஜன். இப்போது இருக்கின்ற இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியாது.

அ.தி.மு.க.வுக்கும், பொதுச்செயலாளர்,
எங்களை போன்றவர்களுக்கும் நிறைய மிரட்டல் இருக்கிறது.
நாம்தான் எப்போதும்போல, அ.தி.மு.க.வை ஆரம்பித்திலிருந்தே
காத்து வருகிறோம். நாம் ஒன்றுமையுடன் இருந்து
எதிரிகளை வேரறுக்க வேண்டும்

——————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to சந்தேகம் வேண்டாம் சொந்தக்காரர்கள் சொல்லி விட்டார்கள் – இனி அது அ.ம(ன்னார்குடி).தி.மு.க …!!!

 1. selvarajan சொல்கிறார்:

  அய்யா … இதே போல 2012 – ல் ஒரு பொங்கலின்போது, தனக்குச்
  சொந்தமான திருமண மண்டபத்தில் நடத்திக்
  கொண்ட விழாவிலிருந்து சில காட்சிகள் – என்று ஒரு இடுக்கை பதிவிட்டு இருந்தீர்கள் — அந்த இடுக்கை மறுபதிப்பிட வேண்டிய நேரம் இது என்பது அபிப்பிராயம் { திருமதி சசிகலாவின் கணவராகிய ம.நடராசன் என்கிற …IPC-420
  Posted on ஜனவரி 22, 2012 by vimarisanam – kavirimainthan }….

  அப்போது நடந்த விழாவில் ” கரன்கள் ” கலந்துகொண்டார்களா …? தற்காலிக பி.ஆர். ஓ . பணியில் கடலூரில் — ஆசிட் புகழ் சந்திரலேகா கலெக்டராக இருந்தபோது — கலைஞர் பிச்சையில் வேலைபார்த்தார் என்பதும் நிறைய நண்பர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை — அன்று யாரும் இவரை ” தளபதி ” என்று அழைக்கவில்லை …. ஜெயா வெளியே துரத்திய போது இந்த கூட்டம் — இப்போது கூறிய அனைத்தையும் சொல்லாமல் இருந்தது ஏன் … ? என்பது தான் கேள்வியாக தற்போது ஒலிக்கிறது ….

  அதே எஸ்.டி.எஸ் . தனிக்கட்சி ஒன்று ஆரம்பித்து ” போனியாகாமல் ” மீண்டும் அ .தி.மு.க. வில் இணைந்தாரே — அது ஏன் ..என்பதையும் திவாகரன் தான் விளக்க வேண்டும் …. அன்றைய பொங்கல் விழாவில் தனது கார்களை ஏலம் விட்டார் நடராஜன் — அந்த கார்கள் எப்படி வந்தது என்று கூற முடியாத நிலையில் தற்போது ….

  லண்டனில் இருந்து புத்தம் புதிய லெக்ஸஸ் காரை இறக்குமதி செய்து — வரி ஏய்ப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீண்ட நாட்களாக கிடப்பில் கடந்த வழக்கு மீண்டும் தற்போது விசாரணைக்கு வருகிறதே — அவ்வளவு விலை உயர்ந்த காரை வரவழைக்கும் அளவுக்கு ஒரு தற்காலிக பி.ஆர்.ஓ . வாக வேலை பார்த்தவருக்கு எப்படி பணம் கிடைத்தது — என்பதும் ஒரு கேள்விதானே … ? — // நாம் ஒன்றுமையுடன் இருந்து
  எதிரிகளை வேரறுக்க வேண்டும் // இதை நமக்கு தானே … தமிழக மக்களுக்காக தானே — கூறியிருக்கிறார் திவாகரன் அவர்கள் …. ?

 2. தமிழன் சொல்கிறார்:

  சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வது எப்படி என்று இந்த மன்னார்குடி கும்பலிடம்தான் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். இந்தக் ‘கரன்’கள், அதிமுகவுக்குக் கேடு விளைவிக்கும் ஆக்டோபஸ்கள். பொதுமக்களிடமிருந்து, அனுதாபிகளிடமிருந்து அதிமுகவை விலக்கி வைப்பதே இப்போது அவர்களுடைய முதன்மை அஜெண்டா போலிருக்கிறது. அதனால் அதிமுகவுக்குக் கஷ்டம் வரும்போது, ஆதரவு தர, ஆட்கள் இருக்கமாட்டார்கள். ‘திராவிடம்’ பேசுபவர்கள் திமுகவைத்தான் ஆதரிப்பார்கள். ஆரிய ஆதரவு, மெதுவாக பாஜகவிடம் சேர்ந்துவிடும்.

  ‘தாற்காலிக பி.ஆர்.ஓ’க்கள் உலகப் பெரும் கோடீஸ்வரர்கள் ஆவது அரசியலில் அதிசயமல்லவே.. ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதற்கு இந்தக் ‘கரன்’களின் பேச்சுதான் உதாரணம்.

 3. GVS சொல்கிறார்:

  ஜெயலலிதா அவர்கள் பட்ட அத்தனை துயரங்களுக்கும்
  காரணமாக இருந்தது இந்த கூட்டம் தான்.
  ஆத்திரமும், அவசரமுமாக, அக்கா அரியணை ஏறும் முன்னரே
  இவர் பேசி இருப்பது, இன்னும் கொஞ்ச நாட்கள் கூட
  பொறுக்க அவர்கள் தயாராக இல்லை என்பதுடன்,

  ஜெயலலிதா அவர்களின் இறப்பு இயற்கையானதல்ல என்பதை
  மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
  மாநில அரசு இந்த விஷயத்தில் ஒன்றும் செய்யாது.
  மத்திய அரசு இதை ஒரு ஆயுதமாக கையாளவெ விரும்பும்.
  நீதிமன்றம் தான் ஒரு விரிவான விசாரணைக்கு
  உத்திரவிட வேண்டும்.
  மீடியாக்கள் ஏன் இந்த விஷயத்தில் மவுனம் சாதிக்கின்றன
  என்பது தான் புரியவில்லை.

 4. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இது குறித்து லேடஸ்ட்டாக வந்திருக்கும் செய்தி –

  ( http://tamil.oneindia.com/news/tamilnadu/mannarkudi-family-trying-capture-admk-says-kp-munusamy/slider-pf219264-271895.html )

  அதிமுகவை கைப்பற்ற ஒரு குடும்பம் சதி;

  அதிமுகவை கைப்பற்ற மன்னார்குடி குடும்பம் சதி செய்கிறது; உண்மையான வரலாற்றை திரித்து பேசும் நடராஜனும்
  திவாகரனும் அதிமுக தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்க
  வேண்டும் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி வலியுறுத்தியுள்ளார்.

  அதிமுகவில் சசிகலாவின் தலைமைக்கு எதிரான
  கலகக் குரலாக கேபி முனுசாமி வெளியே வந்துள்ளார். கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களிடம் கேபி முனுசாமி கூறியதாவது: அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் கூட
  இல்லாதவர்கள் தற்போது கட்சியை கைப்பற்ற துடிக்கிறார்கள்.
  பொங்கல் விழாவில் திவாகரன் பேசும்போது 1972-ம் ஆண்டு
  திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எஸ்.டி.சோமசுந்தரம், நடராஜன் பங்கும் பெரியது என
  கூறியுள்ளார்.

  திவாகரன் அபத்த பேச்சு இது மன்னிக்க முடியாத
  அபத்தமான பேச்சு. எஸ்.டி.சோமசுந்தரம் தேர்தல் களத்தில் பணியாற்றினார். நானும் 10 பூத்துக்களில் பணியாற்றினேன்.

  திவாகரனோட வயசு என்ன? அப்போது நடராஜன் எங்கிருந்தார்? திவாகரன் எங்கு இருந்தார்? அப்போது திவாகரனுக்கு
  என்ன வயது என எங்களுக்கு தெரியாதா?

  கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாத, கட்சிக்காக உழைக்காத
  சாதாரண நபர் இன்றைக்கு கட்சியை நாங்கள் தான் வழிநடத்துவதாகவும், கட்சியை காப்பாற்றியது நாங்கள்தான் எ
  ன்றும், ஒரு பொய்யான மாயையை இளைஞர்கள்
  மத்தியில் உருவாக்க நினைக்கிறார்கள். இரட்டை இலையை
  மீட்டது யார்? எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெ., ஜா என
  அணிகள் பிரிந்தபோது இரட்டை இலையை நாங்கள்தான்
  மீட்டுக் கொடுத்தோம் என பேசியிருக்கிறார்.

  ஆனால் உண்மையில் அதிமுகவில் எம்ஜிஆருக்குப் பிறகு
  தொண்டர்கள் அம்மா பின்னால் இருந்தார்கள். அதை ஜானகி ஏற்றுக்கொண்டார்கள். இரட்டை இலையை ஜெயலலிதாவிடம்,
  ஜானகி அம்மா கடிதம் எழுதி ஒப்படைத்தார்கள். இந்த மாதிரி உண்மையான வரலாறு இருக்கும்போது நடராஜன் என்ன பாடுபட்டடாரு? திவாகரன் என்ன பாடுபட்டாரு?

  மன்னிப்பு கேளுங்க… ஒரு கட்சியை முழுக்க முழுக்க
  ஒரு குடும்பம் கைப்பற்ற சதி நடக்கிறது. அந்த சதிக்கான இந்த கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகிறார்கள். அதிமுக உறுப்பினர் ஒவ்வொருவரிடமும் திவாகரனும், நடராஜனும் மன்னிப்பு கேட்க வேண்டும். முதல் அமைச்சராக ஒ.பன்னீர்செல்வத்துக்கு தேவையில்லாத நெருக்கடியை கொடுக்கிறார்கள்.
  இன்று மக்கள் எளிமையாக சந்திக்கக் கூடியவராக
  அவர் இருக்கிறார். தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நேரிடையாக
  ஆந்திரா சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
  அப்படிப்பட்டவருக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.
  நடராஜன், திவாகரன் செயல்களால் அதிமுகவின்
  உண்மையான தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளார்கள்.
  இவ்வாறு முனுசாமி கூறினார்.

 5. srinivasanmurugesan சொல்கிறார்:

  இது மிகப்பெரிய மோசடி கும்பல். இவர்களால் தான் அம்மா சிறைக்கு செல்லும்படி நேர்ந்தது.இவர்களை கூண்டோடு அப்புற படுத்த வேண்டும்

 6. mathi சொல்கிறார்:

  பிடிங்க சார்…பிடிச்சி உள்ள போடுங்க சார்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.