அக்கினிக் குஞ்சு – பொங்கி எழும் தமிழ் இளைஞர்கள் ….!!!

marina

பாரதியின் வார்த்தைகள் நினைவிற்கு வருகின்றன –

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு- தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்! ”

தமிழகம் இன்று ஒரு வித்தியாசமான,
முற்றிலும் மாறுபட்ட
சூழ்நிலையை எதிர் கொண்டிருக்கிறது…

யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது – ஜல்லிக்கட்டுக்கான
போராட்டம் இவ்வளவு தீவிரமான வடிவம் எடுக்குமென்று…

இரண்டு விஷயங்கள் எனக்கு நிம்மதியும், நம்பிக்கையும்
அளிக்கின்றன –

ஒன்று – போராட்டம் முற்றிலும் அமைதியான வழியில்,
எந்தவித வன்முறைக்கும் இடம் கொடாமல் நிகழ்கிறது…

இரண்டு – அரசியல்வாதிகள் யாரையும், இந்த இளைஞர்கள்
அருகிலேயே சேர்க்கவில்லை. ஒட்டிக்கொள்ள வந்தவர்களை
எல்லாம் உடனடியாக வெட்டி விட்டார்கள்.

அமைதியான வழியில் நடக்கும் போராட்டம் –
அரசியல்வாதிகளை அருகில் சேர்க்காமல் நடக்கும் போராட்டம் –

இந்த இரண்டு காரணங்கள் போதும் –
இவர்கள் நிச்சயம் தங்களது
நோக்கத்தில், லட்சியத்தில் வெற்றி பெற….

உடனடியாக கோரிக்கைகள் நிறைவேறி விடும் என்று
யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இந்த உணர்வுகள்
போய்ச்சேர வேண்டிய இடங்களுக்கு நிச்சயம் போய்ச்சேரும் –
இன்றில்லாவிட்டால், நாளையாவது – அதற்கடுத்தாவது
நமது நோக்கம் நிச்சயம் நிறைவேறும் என்று நம்பலாம்.

தமிழக சரித்திரத்தில் முதல் தடவையாக –
(இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின்னர் ) மாணவர்களின்
உணர்வும், எழுச்சியும் கிளர்ந்தெழுந்திருக்கிறது….

இதற்கு ஜல்லிக்கட்டு மட்டும் தான் காரணம் என்று
நினைத்தால், அது, நம்மை நாமே
ஏமாற்றிக்கொள்வதாகவே முடியும்…

தமிழகம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டது,
தமிழர்கள் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டது –

நமக்குரிய காவிரி நீர் கிடைக்காதது,
மேகதாது அணை விவகாரம்,
சட்டத்தை மீறிய கர்நாடகா அரசுடன் மத்திய அரசும்
கை கோத்து நடந்தது…

உச்சநீதிமன்றத்தையே கர்நாடகாவும், மத்திய அரசும்
மதிக்காமல் ஏமாற்றியது …
காவிரி மேலாண்மை வாரியம்
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்,
தொடர்ந்து மீனவர்கள் இலங்கை படையிடம் வதைபடுவது,
இலங்கை செய்யும் அட்டூழியங்களை மத்திய அரசு
கண்டு கொள்ளாமல் இருப்பது –
கச்சத்தீவில் ஏமாற்றப்பட்டது –

இது போல் பல விஷயங்களிலும், தொடர்ந்து
தமிழகம் ஏமாற்றப்படுவதும்,
ஏளனப்படுத்தப்படுவதும் –
தமிழக இளைஞர்களின் ஆழ்மனதில் ஒரு
அணையாத தணலை, வடுவை,
தாக்கத்தை – ஏற்படுத்தி இருக்கிறது…

இது ஒரு துவக்கம் தான்….
தமிழகத்துக்கு பொதுவான அத்தனை பிரச்சினைகளிலும்
இனி இந்த போராட்டத்தின் தாக்கம் இருக்கும் –
இருக்க வேண்டும்…

எந்தவித சேதமும் இன்றி –
வெற்றி பெறுக என்று இந்த இளைஞர் கூட்டத்தை
வாழ்த்தும் அதே வேளையில் –

அமைதி வழி,
அரசியல்வாதிகளை அண்டவிடாதது –

ஆகிய இரண்டு விஷயங்களிலும்,
எக்காரணத்தை முன்னிட்டும் ஏமாந்து விடாதீர்கள்
கவனமாக இருங்கள் என்று –
அடிபட்டு, அனுபவப்பட்ட ஒரு மூத்த குடிமகனாக
எச்சரிக்கவும் விரும்புகிறேன்…..

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to அக்கினிக் குஞ்சு – பொங்கி எழும் தமிழ் இளைஞர்கள் ….!!!

 1. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Very excellent article.The catch line is “not only jallikkattu” but followed by nine very good
  justification/reasons. My best wishes.

 2. GVS சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  நீங்கள் நிலைமையை மிகச்சரியாக பிரதிபலித்திருக்கிறீர்கள்.
  தமிழக இளைஞர்களின் மனதில் பல நாட்களாக
  அழுந்திக் கிடந்த உணர்வுகளின் விளைவு தான்
  இந்த போராட்டம். அழுத்தி வைத்திருந்தார்கள். தகுந்த சமயம்
  கிடைத்தபோது வெடித்துக் கிளம்பி விட்டது அவர்களின் உணர்வு.
  நீங்கள் கூறிய முக்கியமான விஷயங்கள் இரண்டையும்
  இளைஞர்கள் தொடர்ந்து காப்பாற்றினால் –
  அவர்களது போராட்டம் தமிழகத்திற்கு ஒரு புதிய திருப்பவத்தை
  கொண்டு வரும் என்பதில் சந்தேகமே இல்லை.

 3. hari சொல்கிறார்:

  appadiye chithirai 1(thamil puthandu)iyum meetka vaendum.illaiyel thamilargal kondaatankal anaithum oru naal oothi moodapadum.

 4. selvarajan சொல்கிறார்:

  அய்யா …! இளைஞர்களின் எழுச்சி — விடா முயற்சி — பெரிய பேனரோடு கலந்துகொள்ள வந்த ஸ்டாலின் அவர்களை அண்டவிடாமல் தடுத்து அனுப்பியது — முதல்வர் நேராக வந்து சந்திக்க வேண்டும் என்கிற கோரிக்கை — மெரினாவில் மின்சாரத்தை தடை செய்தும் களைந்து செல்லாமல் இருக்கும் துணிவு — இவை ஒருபக்கம் ….

  அலங்காநல்லூரில் திரண்டெழுந்த பெண்கள் — குழந்தைகள் சாலைமறியல் என்று பன்முனை ” அமைதி — அகிம்சா முறை ” போராட்டங்களை கண்டு மனம் வீறுகொண்டு எழுகிறது — தமிழனின் வீரம் என்றுமே சோரம்போனதில்லை என்பது நன்கு விளங்குகிறது … ” அக்கினி குஞ்சொன்று கண்டேன் ” என்று பாடிய பாரதியின் பாடலை மட்டுமா நினைவு படுத்துகிறது … அவரது தாசன் என்பவனின் ……

  ” கிளம்பிற்றுக்காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம், கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக்கூட்டத்தை ” — எனப் புரட்சிக்கவிஞர் பாவேந்தர்பாரதிதாசன் வரிகளுக்கேற்ப புறப்பட்டு விட்டது சிங்க கூட்டம் — அதில் பெண்கள் மற்றும் ஒரு சிறுமியின் ஆவேசம் — பீட்டா என்ன அவுங்கப்பனுக்கும் அச்சத்தை கண்டிப்பா கொடுத்திருக்கும் என்பதை எண்ணி மனம் களிக்கிறது …. அந்த புகைப்படம் இந்த செய்தியில் :– // 3வது நாளாக அலங்காநல்லூரில் போராட்டம் தீவிரம்… பெண்கள், குழந்தைகள் சாலை மறியல் //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/women-stage-road-rokho-alanganallur-272031.html …. இது போன்ற ” ஒற்றுமை எழுச்சி ” இனி தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பெற வீறுகொண்டு எழும் என்பது மட்டும் திண்ணம் …. அப்படித்தானே …. ?

  அடுத்து ஒரு மனிதாபிமான — தமிழர்களின் பண்பாடான — இனி விட்டுக்கொடுக்க கூடாது என்கிற திடம் — போன்றவற்றிக்கேற்ப ” ஒரு இனிய செய்தி ” — நண்பர்களும் தங்களால் முடிந்த அளவு செய்ய முன் வரவேண்டும் என்கிற கோரிக்கையுடன் — // மெரினா போராட்டக்காரர்களுக்கு சாப்பாடு ரெடி.. சென்னை வெள்ளத்தை நினைவுபடுத்தும் சோஷியல் மீடியா சேவை //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/saveourculturejallikattu-twitter-trends-jallikattu-protest-272006.html … அய்யாவின் … பரிந்துரை … ?

 5. தமிழன் சொல்கிறார்:

  “அமைதி வழி, அரசியல்வாதிகளை அண்டவிடாதது” – இது இரண்டும்தான் எந்தப் போராட்டத்தையும் வெற்றிபெற வைக்கும். சரியான இடுகை.

  இளைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள். அழுந்திக்கிடந்த உணர்ச்சியின் காரணத்தையும் நீங்கள் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

  எப்போது ‘மது’ மானில மக்களைக் கெடுக்கிறது என்ற உணர்வு இளைஞர்கள் மத்தியில் எழுகிறதோ, அப்போது அதற்கும் அவர்கள் பொங்கி எழ வேண்டும். எந்தக் காரணத்தைக்கொண்டும் எந்த அரசியல்வாதிகளையும் இத்தகைய போராட்டத்தில் அண்டவிடக்கூடாது. அப்படி அண்டவிட்டதனால், இதற்கு முன்பு எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை. உங்கள் போராட்ட லிஸ்டில், மணல் கொள்ளை, விளை நிலத்தைப் ப்ளாட் போடும் அரசியல்வாதிகள், மதி கெடுக்கும் மது, டாஸ்மாக் அருகிலேயே பார் வைத்து கொள்ளையடிப்பவர்கள் போன்றவகைகளும் இடம் பெறட்டும்.

  போராடுபவர்களே….. களத்தில் இல்லாத மற்ற தமிழர்களின் ஆதரவு நிச்சயமாக உங்களுக்கு உண்டு.

 6. LVISS சொல்கிறார்:

  The protesters should be careful not to let undesirable elements to infiltrate and spoil the peaceful protests ——

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.