ஜல்லிக்கட்டு – (மாநில) அவசர சட்ட வடிவுடன் வருகிறார் திரு.ஓபிஎஸ்….

jallikattu_protest-pti-l

ஜல்லிக்கட்டு விவகாரத்தை “விலங்குகள் பாதுகாப்பு”
என்கிற தலைப்பிற்கு பதிலாக
“விளையாட்டு” என்கிற தலைப்பில் உருவமைத்து
புதிய அவசர சட்டம் ஒன்றை கொண்டு வர
முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது…

முன்னதாக மத்திய அரசு கொண்டு வந்து, உச்சநீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக காத்திருக்கும் சட்டம் “விலங்குகள் நலம்” என்கிற
பொது பட்டியலில் கீழ் வருகிறது.

தற்போது, அதனை முற்றிலுமாக தவிர்த்து விட்டு,
மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் அடங்கும்
“விளையாட்டு” தலைப்பில், ஜல்லிக்கட்டு நடத்துவது
சம்பந்தமாக ஒரு புதிய அவசர சட்டத்தை மாநில அரசே
கொண்டு வருவது குறித்த பணிகளில், டெல்லியில்
திரு.ஓபிஎஸ் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத்
தெரிகிறது.

விளையாட்டு என்கிற தலைப்பில் சட்டம் இயற்ற
அரசியல் சட்டத்தின் கீழ்,
மாநிலங்களுக்கு உரிமை இருப்பதால் –
உச்ச நீதி மன்றம் முன்னதாக விதித்திருந்த அத்தனை
பாதுகாப்பு அம்சங்கள் சம்பந்தமான விதிகளையும் உள்ளடக்கி
மாநில அரசே ஒரு அவசர சட்டம் கொண்டு வரலாம் என்று
இந்திய அரசின் மூத்த வழக்குரைஞர், அட்டர்னி ஜெனரல்
முகுல் ரோத்தகி அவர்கள் சட்ட ஆலோசனை கொடுத்திருக்கிறார்.

அதன் அடிப்படையில், திரு.ஓபிஎஸ் அவர்கள்
டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த
மூத்த வழக்குரைஞர்களுடன் விவாதித்து,
ஒரு அவசர சட்ட வடிவை தயாரிக்கும் பணியில்
ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

பணி முடிவடைந்தவுடன், அவசர சட்ட நகலுடன்
சென்னை வந்தால் – உடனடியாக தமிழக அமைச்சரவை கூடி,
தனது ஒப்புதலை அளிக்கும்…. அதன் பின், கவர்னரின்
கையொப்பம் கிடைத்தவுடன் – அவசர சட்டம் ரெடி….!!!

jallikattu-beach-759

போராட்டம் என்றாலே –
கல்லெரிதல்,
பஸ்ஸைக் கொளுத்துதல்,
கண்ணில் படுவதை எல்லாம் உடைத்தல்,
அத்தனை பேரையும் திட்டி கோஷம் போடுதல்,
அடங்காத வன்முறையில் இறங்குதல் – என்று
அலைகின்ற அரசியல்வாதிகளை
இன்று வரையிலும் அருகில் அண்ட விடாமல் –

ஒரு சிறு அசம்பாவிதத்திற்கு கூட இடம் கொடுக்காமல்,
உலகத்தவருக்கே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக,
உணர்வு பூர்வமாக போராடிக்கொண்டிருக்கும் –
சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் –
நம் தமிழ் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் –

– நாளைய பொழுது
ஒரு நல்ல பொழுதாக,
மகிழ்ச்சியான பொழுதாக –
விடியும் என்று உறுதியாக நம்புகிறேன்……!!!

————————————————————-

பகுதி – இரண்டு –

பிற்சேர்க்கை – (10.20 p.m.)

மெரினாவில் உண்மையில் நடப்பது என்ன…?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தம் பாரம்பர்ய உரிமையை மீட்டெடுக்க சென்னை மெரினா கடற்கரையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.

சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள், மெரினா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்க வேண்டும்’ என்ற எண்ணத்திலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆரம்பித்த போராட்டம், இன்று பல லட்ச இளைஞர்களால் மெரினா கடற்கரையில் கூடியிருக்கிறது. இது தவிர, தமிழகத்தின் பல பகுதிகளிலும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

ஆனாலும், பல ஊர்களிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் என அனைவரும் குடும்பம் குடும்பமாக மெரினாவை நோக்கியே படையெடுத்து வருகின்றனர். போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் அனைவரும் இரவு பகல் என்றுகூட பாராமல் போராடி வருகின்றனர்.

மெரினாவில் குழுமியிருக்கும் போராட்டக்காரர்கள் அனைவரும், ‘‘போராட்டத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே.. இந்த இடத்தைவிட்டு எழுவோம். இல்லையென்றால், அதுவரை இங்குதான் அமர்ந்திருப்போம். இந்தத் தடையை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நீக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் கோக், பெப்சி, பீட்ஸா, பர்கர் போன்ற மேலைநாட்டு உணவுப்பொருட்களை சாப்பிடக் கூடாது’’ உட்பட பல கோரிக்கைகளைவைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், இரண்டு அரசுகளும் அதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை. ‘‘இதை, அமைதியாகவே நடத்த அனைவரும் ஆசைப்படுகிறோம். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதை வேறுமாதிரி கொண்டு செல்ல நினைக்கின்றன என்றால், அதற்கும் தமிழர்களாகிய நாங்கள் பயப்பட மாட்டோம்’’ என்கின்றனர், தமிழினப் போராளிகள்.

அமைதியைப் பேணிகாக்கும் இளைஞர்கள்!

பொதுவாக இளைஞர்கள் ஒரு போராட்டம் நடத்தினால், அது ஒரு நாள்கூடத் தாக்குப்பிடிக்காமல் அடிதடியாக மாறும் என்ற நிலையே கடந்த பல வருடங்களாக இருந்தது. ஆனால் கடந்த மூன்று நாட்களாகப் பல லட்சம் இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் இந்த ஜல்லிக்கட்டு போராட்டமானது அமைதியான முறையில் மட்டுமே நடந்துவருகிறது. இங்கு, எந்தவித சலசலப்பு தோன்றுவதற்கும் இளைஞர்கள் இடம்தரவில்லை.

அனைவரும் ஒற்றுமையாக சகோதர, சகோதரி பாசத்தில்… தமிழன் என்ற உணர்வில் போராடி வருகின்றனர். போலீஸாருக்கும் போராட்ட இளைஞர்கள் உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்கள் முதலியவற்றைக் கொடுத்து உதவி செய்து வருகின்றனர். இப்படி அமைதியான முறையில் போராடிவரும் தமிழ் இளைஞர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித பதிலும் தராமல் இருப்பது அரசியல்வாதிகளின் சுயரூபத்தைக் காட்டுவதாக இருக்கிறது.

பாதுகாப்புப் பணியில் இளைஞர்கள்!

லட்சக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என மாநில அரசு ஆயிரக்கணக்கான போலீஸார்களை குவித்திருக்கும் நிலையில், பொதுமக்களின் எண்ணிக்கையும் அங்கு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்த நிலையில் அவர்களுக்கு, முழுமையான பாதுகாப்பு வழங்கமுடியாத நிலைகூட போலீஸாருக்கு உருவாகி இருக்கிறது.

அதனால் இளைஞர்களில் பலர், தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து… பெண்கள், குழந்தைகள், வயதானோர் ஆகியோருக்கு ஓர் இயற்கை அரண்போல் பாதுகாப்புக் கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களையும் அவர்களே சரிசெய்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தினால் மக்கள் எந்தவிதத்திலும் பாதிப்படையக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளனர்.

போராட்டத்தில் குவியும் குழந்தைகள்!

மெரினா போராட்டக் களத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் காண முடிகிறது. அந்தக் குழந்தைகளிடம் பேசியபோது, “ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் நடக்க வேண்டும்; பீட்டா இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும்; எத்தனை நாட்கள் ஆனாலும் நாங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துக்கொண்டுதான் இருப்போம்; தமிழ்நாட்டின் உரிமைக்காக நாங்கள் போராடுவோம்” என்றனர், ஆவேசத்துடன்.

போராட்டத்தின் முதுகெலும்பாக தன்னார்வலர்கள்!

பல லட்ச இளைஞர்கள், பொதுமக்கள் மேற்கொண்டுள்ள ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்துக்கு மிக அத்தியாவசியம் உணவு, தண்ணீர் மட்டுமே. இத்தனை லட்ச மக்களுக்கு எப்படிச் சாப்பாடு கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருந்த அனைவருக்கும், “உங்களுக்கான தேவைகளை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம். துணிந்து போராடுங்கள்” என்று தன்னார்வலர்கள் கூறிவருகின்றனர்.

வேன் மற்றும் லாரிகளின் மூலம் மெரினாவில் கூடி இருக்கும் அத்தனை மக்களுக்கும் உணவு, தண்ணீர், பழங்கள் போன்றவை கொடுத்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொருவரிடமும் அருகே சென்று, ‘‘நீங்கள் சாப்பிட்டீங்களா… போராடிக்கொண்டே சாப்பிடுங்கள். பழங்கள் சாப்பிடுங்கள்’’ என்று ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் மெரினாவுக்கு அருகில் குடி இருக்கும் பல இளைஞர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக தங்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். யாருக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை அறிந்துகொண்டு, அதை வாங்கிக் கொண்டுவந்து கொடுக்கின்றனர். உண்மையிலேயே இந்த மாபெரும் போராட்டத்தில் தன்னார்வலர்களின் பங்கு அளப்பரியது.

( நன்றி – http://www.vikatan.com/news/tamilnadu/78189-really-what-is-happening-in-marina-jallikattu-protest.art )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to ஜல்லிக்கட்டு – (மாநில) அவசர சட்ட வடிவுடன் வருகிறார் திரு.ஓபிஎஸ்….

 1. இளங்கோ சொல்கிறார்:

  சந்தடி சாக்கில் உள்ளே நுழைகிறது திமுக.
  நாளை ரெயில் நிறுத்த போராட்டம்
  நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறர் ஸ்டாலின்.
  கட்டுக்கோப்பாக போராடி வரும் இளைஞர்கள் ஜாக்கிரதையாக
  இருக்க வேண்டும்.
  தமிழக அரசு அதற்குள்ளாக அவசர சட்டம் பற்றீய்
  அறிவிப்பை வெளியிடுவது நல்லது.

 2. நாளைய பொழுது
  ஒரு நல்ல பொழுதாக,
  மகிழ்ச்சியான பொழுதாக விடியட்டும் ஐயா

 3. GVS சொல்கிறார்:

  திரு.ஓபிஎஸ் இந்த முயற்சியில் வெற்றி பெற்று விடக்கூடாதே
  என்று நினைக்கின்ற பல அரசியல்வாதிகள் தமிழகத்தில்,
  மற்ற கட்சிகளில் மட்டுமல்ல – அவர் கட்சியிலேயே கூட இருக்கிறார்கள்.
  ஏன் அவரது கட்சித்தலைமையே வயிறு எரியுமே.

 4. S சொல்கிறார்:

  ஜல்லிக்கட்டு தடை நீக்க போராடும் என் மக்களின் அமைதி வழி போராட்டத்தினை காணும் போது, தமிழகத்தின் இருண்ட வானில் மிகப்பெரிய வெளிச்சம் தெரிகிறது !

  இந்த போராட்டம் மிக அவசியமானதா? வாழ்வியல் பிரச்சினைகள் நிறைய இருக்கும்போது, மாட்டு பந்தயம் சம்பந்தமாக போராட வேண்டுமா? மனித ஆற்றல்கள் இந்த மாதிரி போராட்டங்களில் வீணடிக்கபடவேண்டுமா? என நிறைய கேள்விகள் எழும்!

  என் பதில்: இந்த போராட்டம் வேண்டும்! இது நடக்க வேண்டும்! அமைதியான முறையில் நடக்க வேண்டும்! இது மக்கள் புரட்சியின் தொடக்கமே! இதன் அனுபவங்கள் இனி வரும் வாழ்வியல் சம்பந்தமான போராட்டங்களுக்கு வழி அமைக்க வேண்டும்! அதைவிட, இந்த போராட்டத்தின் உக்கிரம் இனி ஒரு போராட்டத்தை நடவாமல் தடுக்க வேண்டும்!

  தமிழக இளைஞர்களே….தமிழ் நாடு உங்கள் கையில்!!! அறிவு பூர்வமாக போராடுங்கள்! வெற்றி நமதே!

  An uprise by Tamil Nadu youngsters in a very peaceful and well organized way to overturn the ban on Yeru thaluval/jallikattu/bull race clearly sheds the LIGHT OF HOPE FOR FUTURE!

  Do we need this mass protest just for this trivial bull race? Do we need to spend this much Human Resources and times for this small issue? When we have many problems related to standard living/education/employment, do we need to protest for just to lift the ban on a bull race ?

  My answer is a big YES! YES! YES!!! The youngsters need to protest. It’s a beginning of future uprising for the issues related to living/education/employment. The lesson learned in this protest will help and shape the future protest that demand a justified results for the rights of people from a totalitarian or dictatorship-style government!

  In other way, the intensity of this protest should signal the pseudo-democratic government in such a way that people should not go any more protest in the future!

  Also, we hope that it will open eyes of rest of people in others states of India.

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஏற்கெனவே இடுகையை படித்து விட்ட நண்பர்களுக்கு,

  -மேற்கண்ட இடுகையிலேயே தற்போது,
  பின்சேர்க்கையாக ஒரு பகுதியை சேர்த்திருக்கிறேன்.
  நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டுகிறேன்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்
  இரவு – 10.30

 6. LVISS சொல்கிறார்:

  While the protests were going on the central government also must have been consulting the Attorney General to find out a solution to the problem as the center cannot issue an ordnane — In the meeting between the CM and the PM the course of action to be taken must have been conveyed to him — From what we could surmise , sport comes under the state’s domain and the cruelty to animals act under the centre,s domain –The states can enact laws on this subject – The state can promulgate an ordnance treating jallikattu as a sport and incorporating all the safe guards for preventing the bulls being harmed in anyway –Hope we may soon see a permanent solution to the issue —

 7. LVISS சொல்கிறார்:

  Only one channel debated the issue from the legal angle cutting out the emotional part –Advocates from T Nadu also took part besides some former AGs–

 8. selvarajan சொல்கிறார்:

  அய்யா … காவலர்களுக்கும் உணர்வு வற்றிவிடவில்லை — என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு செய்தி : // பகலில் பணி… இரவில் ஜல்லிக்கட்டு போராட்டம்… அசத்தும் தேனி காவலர் !! //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/a-man-police-at-day-time-protester-at-night-time-272172.html …. தமிழனின் தன்னுரிமையை நிலைநாட்டும் எண்ணத்தில் எந்த பழுதும் ஏற்பட — ஏற்படுத்த எந்த கொம்பனாலும் முடியாது ….

  அவசர சட்டம் பன்னீர் கொண்டுவந்து விடுவார் — அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை — ஆனால் ” சின்னம்மாவின் ஆணைக்கேற்ப — நடராஜனின் அறிவுரையின் படி — திவாகரனின் முன்மொழிதலோடு ” இந்த அவசர சட்டத்தை நடைமுறை படுத்த கொண்டுவந்துள்ளேன் … என்று அறிக்கை எதையும் விடாமல் இருப்பாரா … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   ” சின்னம்மாவின் ஆணைக்கேற்ப — நடராஜனின் அறிவுரையின் படி — திவாகரனின் முன்மொழிதலோடு ” இந்த அவசர சட்டத்தை நடைமுறை படுத்த கொண்டுவந்துள்ளேன் … என்று அறிக்கை எதையும் விடாமல் இருப்பாரா … ? //

   இந்த ” format ” -ல் இருக்காது என்று உறுதியாக நம்பலாம்…..
   இதில் இரண்டு பெயர்கள் நிச்சயம் இருக்காது.
   மூன்றாவது பெயர் வருகிறதா என்று

   – தெரிந்து கொள்ள – ஆவலுடன் காத்திருப்போம்…. 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 9. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  முதலமைச்சர் விமான நிலையத்தில் அறிவிப்பு –

  ” நாளை அவசர சட்டம் வெளிவரும்…

  வாடி வாசலை நானே திறந்து வைப்பேன்…
  காளைகள் துள்ளி ஓடும் ……”

  நண்ப செல்வராஜன் –
  தமிழர் மானம் காப்பாற்றப்பட்டது….!!!
  (சின்னம்மா பெயர் சொல்லப்படாமல்.. 🙂 🙂 ! )
  சந்தோஷம் தானே… ?

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 10. LVISS சொல்கிறார்:

  The CM has assured that the jallikattu will take place on Sunday -So the protestors should call off thier protest –They can always come back if the event does not take place on Sunday – -The ordnance may be promulgated only on saturday so that it cannot be challenged on Sunday —

 11. mani சொல்கிறார்:

  தேர்தலில் வெற்றி பெறாத திமுக இந்த அசாதாரண சூழ்நிலையை
  பயன்படுத்தி மாணவர்கள் மற்றும் கட்சி சாரா அமைப்புகளின்
  முதுகில் பயணித்து அரசியல் லாபம் அடைய முயற்சிப்பதை
  போராட்டதில் ஈடுபட்டவர்கள் புரிந்து அவர்களை உள்ளே அனுமதிக்க
  மறுத்தது ஒரு நல்ல விடயம். ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.