புன்னகை மன்னன் ஓபிஎஸ் அவர்களின் மர்மப்புன்னகைக்கு அர்த்தம் …..? நாளையே ஜல்லிக்கட்டு…..!!!

 

ops-latest

“ஹிட்” அடிக்கிறார் திரு. ஓபிஎஸ்.

பிரதமரை சந்தித்து விட்டு, டெல்லியில் உள்ள
தமிழக அரசின் தங்குனர் விடுதிக்கு வந்த தமிழக முதல்வர்
திரு.ஓபிஎஸ் அவர்கள், செய்தியாளர்களைச் சந்தித்து
சுருக்கமாக பேசினார்….
அதை எல்லாரும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்…

வழக்கு உச்சநீதிமன்றத்தின் முன் இருப்பதால், மத்திய அரசு
தற்போதைக்கு எதுவும் செய்ய இயலாது என்று பிரதமர்
கூறியதைச் சொன்ன திரு.ஓபிஎஸ்….

கூடவே, இது குறித்து மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு
மத்திய அரசு ஆதரவளிக்கும் என்றும் பிரதமர் சொன்னதாக
அறிவித்து விட்டு, ஒரு ” மர்மப்புன்னகை” யை
அள்ளி வீசினாரே இதில் புன்னகைக்க என்ன இருக்கிறது
என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கலாம்.

அதற்கு, இன்று மாலைக்குள்ளாக விடை தெரிந்து விடும்.
அநேகமாக ஜல்லிக்கட்டு நடத்த மாநில அரசு அவசர சட்டம்
பிறப்பிக்கக்கூடும்.

இந்த விஷயம் அரசியல் சட்டத்தின்படி, பொது பட்டியலில்
இருப்பதால், மாநில அரசு எதாவது சட்டம் இயற்ற விரும்பினால்,
அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர்
குடியரசுத்தலைவரின் அனுமதியையும் பெற வேண்டும்…

மாநில அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையையும்
மத்திய அரசு ஆதரிக்கும் என்று பிரதமர் சொல்லி இருப்பது
அநேகமாக – இதைத்தான் குறிக்கும் என்று தோன்றுகிறது.
இன்றே இது நிகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை…

(சுப்ரீம் கோர்ட் முன்னிலையில் இருப்பது – மத்திய அரசின்
ஒரு ஆணையை எதிர்த்த வழக்கு தான். எனவே,
மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தால், சுப்ரீம் கோர்ட்
தவறாக எடுத்துக் கொள்ளக்கூடும் என்பதால் இந்த
“அட்வைஸ்” -ஆக இருக்கக்கூடும்…)

எனவே, விரைவில் ஓபிஎஸ் – தமிழக இளைஞர்களின்
“ஹீரோ” ஆக வாய்ப்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது….

புதிய புன்னகை மன்னனுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்….!!!

நல்லதையே நினைப்போமே…..!!!! 🙂 🙂

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to புன்னகை மன்னன் ஓபிஎஸ் அவர்களின் மர்மப்புன்னகைக்கு அர்த்தம் …..? நாளையே ஜல்லிக்கட்டு…..!!!

 1. LVISS சொல்கிறார்:

  That could be the reason behind the smile, a pssible solution to this problem – The central govt may approve ordnance if promalgated by the state and send it for President’s consent –

 2. இளங்கோ சொல்கிறார்:

  இது உண்மையிலேயே நடக்குமானால்,
  தமிழகத்தில் ஒரு புதிய சரித்திரம் எழுதப்படுகிற்து
  என்று தான் சொல்ல வேண்டும்.

  கே.எம்.சார், நீங்கள் சொல்வது நிஜமாகவே
  நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

 3. தமிழன் சொல்கிறார்:

  Promptஆ எழுதியிருக்கீங்க கா.மை.சார். பாராட்டுகிறேன். விட்டா, நீங்களே உருமா கட்டிக்கொண்டு காளைய அடக்கப் போய்விடுவீர்கள் போலிருக்கு. உங்கள் உள்ளத்தில் உள்ள இளைஞன் விழித்துக்கொண்டுவிட்டான்.

  நீங்கள் சொல்வது நடக்குமானால், தமிழக அரசுக்கு நல்லது. ஓபிஎஸ்ஸும் மத்திய அரசும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிடலாம். பார்க்கலாம் என்ன, எப்படி நடக்கிறது என்று.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி தமிழன்..

   (நேற்று இரவு மெரினாவில் நானும் இருந்தேன்…!!! )

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. selvarajan சொல்கிறார்:

  மர்மப்புன்னகை ..? சாதாரண புன்னகைக்கே ஏகப்பட்ட அர்த்தங்கள் இருக்கும் போது — மர்மப்புன்னகைக்கு எவ்வளவு அர்த்தங்களோ … ? தன்னிச்சையா செயல்படுவாரா … இல்லை மன்னார்குடியினரின் ஆலோசனைப்படியா … ? ஓ .பி.எஸ் பெயர் வாங்க அந்தக்கூட்டம் அனுமதிக்குமா … ? ஒருபுறம் மர்மப்புன்னகை பூத்துக்கொண்டு இருக்கும் போதே …..

  மதுரை மாநகரில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பொது இடங்களில் ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த போலீசார் தடை வித்தித்துள்ளனர். ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த வேண்டுமெனில் 5 நாட்களுக்கு முன், அனுமதி பெற வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் தகவல் தெரிவித்தார். தடையை மீறி ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்…. போராட்டத்தை நசுக்க காவல்துறையும், அரசும் அடுத்த கட்டத்திற்கு செல்கிறதா … ? என்பதும் புரியாத புதிராக இருக்கிறது — எது எப்படியோ // நல்லதையே நினைப்போமே…..!!!! //

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.