IMF (International Monetary Fund) கொடுக்கும் அதிர்ச்சி…! இந்தியாவின் ஜிடிபி 1 % குறைந்தது…!!!

imf-logo

500 -1000 ரூபாய் நோட்டுகளை இந்திய அரசு
செல்லாக்காசு ஆக்கிய பிறகு பல பொருளாதார
நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி
(Growth Rate) குறித்து, தங்கள் புதிய மதிப்பீடுகளை
அறிவித்து வருகின்றன…

International Monetary Fund ( IMF) தற்போது தனது மதிப்பீட்டை
அறிவித்திருக்கிறது.

நடப்பு நிதியாண்டில் ( 2016-17-ல் ) வளர்ச்சி, எதிர்பார்த்ததை
விட 1 % குறைவாக இருக்கும் என்றும், அடுத்த நிதியாண்டில்,
(2017-18-ல்) எதிர்பார்த்ததை விட 0.4 % குறைவாக இருக்கும்
என்றும்,

– அதற்கடுத்த ஆண்டிலிருந்து (2018-19) இந்த பாதிப்பிலிருந்து
விடுபட்டு, வழக்கமான பொருளாதார மதிப்பீட்டின்படி
இருக்கும் என்றும் சொல்கிறது.

ஆக, நோட்டு மதிப்பிழப்பீட்டின் பாதிப்பு அடுத்த இரண்டு
நிதியாண்டுகளுக்கு நீடிக்கும் என்பது உறுதியாக்கப்படுகிறது…

IMF அறிக்கை – கீழே –

———————–

Demonetization hits India; IMF cuts growth rate by 1%-
12:02 PM, 17 Jan 2017 RSTV Bureau

The International Monetary Fund (IMF) has cut India’s
growth rate for the current fiscal year
to 6.6 per cent
from its previous estimate of 7.6 per cent.

The IMF said the the “temporary negative consumption shock”
of demonetization has hit India. IMF’s decision to chop India’s
growth rate comes days after the World Bank also decelerated
India’s growth estimates.

“In India, the growth forecast for the current (2016-17) and
next fiscal year were trimmed by one percentage point
and 0.4 percentage point, respectively,
primarily due to the temporary negative consumption shock
induced by cash shortages and payment disruptions
associated with the recent currency note withdrawal
and exchange initiative,” the International Monetary Fund (IMF)
said in its latest World Economic Outlook (WEO) update
that was released on Monday.

As per the new projections, India’s growth in 2016
is now estimated to be 6.6 per cent as against 7.6 per cent
earlier forecast.
And in 2017, a growth rate of 7.2 per cent has been projected
as against the previous forecast of 7.6 per cent.

———————–

பின் குறிப்பு – இப்போதைக்கு இந்த சப்ஜெக்டை தொடர
வேண்டாம் விட்டு விடுவோம் என்றிருந்த என்னை –
” சும்மா கிடந்த சங்கை எடுத்து ஊத வைத்த” தற்கான காரணம்
நண்பர் திரு.எல்விஸ் அவர்கள் எழுதிய பின்னூட்டம் தான்…
என்பதை இந்த இடுகையைக்கண்டு எரிச்சலடையும் பாஜக நண்பர்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .. 🙂 🙂

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to IMF (International Monetary Fund) கொடுக்கும் அதிர்ச்சி…! இந்தியாவின் ஜிடிபி 1 % குறைந்தது…!!!

  1. GVS சொல்கிறார்:

    இருந்தாலும் உங்கள் நண்பர் அநியாயத்திற்கு
    கண்களை மூடிக்கொள்கிறார்.

    இரண்டரை மாதங்களாக நாம் திண்டாடுவதற்கு
    இரண்டு குஜராத்தியர்களில் யார் பொறுப்பு ?

  2. LVISS சொல்கிறார்:

    Sorry I dont buy this GDP stuff and I dont care whether it goes up or down -GDP is just one indicator- I will also say the GDP willgrow by 4% Take it or leave it –

  3. selvarajan சொல்கிறார்:

    அய்யா …. ! பெரிய – பெரிய பொருளாதார மேதைகள் நிறைந்த கூட்டம் … ஜி டி பி ஏறினால் என்ன – இறங்கினால் என்ன .. நமக்கேன் வம்பு … ?

    விவேகானந்தர் கேட்டது :: ‘100 இளைஞர்களைக் கொடுங்கள். உலகை மாற்றுகிறேன்’ என்றார் … ஆனால் இன்று தமிழகம் முழுவதும் திரண்டெழுந்து நிற்கும் இவ்வளவு இளைஞர்களை அவரிடம் கொடுத்து இருந்தால் — ” அண்ட சராசரங்களையும் ” கண்டிப்பாக மாற்றியிருப்பார் என்பதற்கு எடுத்துக்காட்டாக பொங்கியெழுந்து நிற்கும் எம் தமிழ் இளைஞர்களின் செயல் போற்றுதலுக்கு உரியது ….

    வெறும் இளைஞர்கள்தானே இவர்களால் என்ன செய்துவிட முடியும் — சும்மா கும்பலா இருந்தால் கூச்சல்போட்டு விட்டு பின் கலைந்து சென்று — பர்கர் — பீசா சாப்பிட போய்விடுவார்கள் என்று ” தப்புக்கணக்கு ” போட்ட இரு — மத்திய — மாநில அரசுகளுக்கு வைத்து விட்டார்கள் ஆப்பு …. அதுமட்டுமல்லாமல் அவர்களின் தற்போதைய வாழ்க்கை முறையில் சிறு மன வருத்தம் — சஞ்சலம் கொண்டு இருந்தவர்களும் — இந்த செய்தியை முழுமையாக படித்தால் இன்றைய இளைஞர்களின் ” உண்மை நிலையையும் — பொறுப்பு சார்ந்த கலாச்சார பண்புகளையும் – தன் நாடு என்கிற உணர்வுகளையும் புரிந்து கொள்ளலாம் ….

    // ‘இனிமே எல்லாம் இப்படித்தான்!’ இளைஞர்கள் துவக்கிய வெற்றிக் கணக்கு // http://www.vikatan.com/news/coverstory/78235-jallikattu–tamil-youths-victory-count–starts.art?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=7698 … படியுங்கள் — படித்து பெருமிதம் கொள்ளுங்கள் …. !!!

    அன்று ஒருவன் கூறினான் ” மக்கள் ஆதரவு இல்லாத எந்த போராட்டமும் — வெற்றிபெற முடியாது ” என்று — உண்மை … இன்று ஒட்டுமொத்த தமிழினமும் போராடிக்கொண்டு இருப்பதால் — ஜல்லிக்கட்டுக்கு ” வெறும் அவசர சட்டம் ” என்பது — நிரந்தர சட்டமாக மாற வாய்ப்பு வந்துக்கொண்டே இருக்கிறது …. அப்படித்தானே … ? கண்துடைப்பு வேலையெல்லாம் இனி எடுபடாது — ஒவ்வொரு உரிமைக்கும் … உண்மைதானே …. ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.