திரு.ராகவா லாரென்ஸ் பேட்டி – இவர்கள் முட்டாள்களா, மூர்க்கர்களா – இல்லை, நாம் தான் மடையர்களா…?

ragava

சென்னையில் – காலையிலிருந்தே கலவரம்
ஏற்கெனவே சொன்ன மாதிரி தான்…
அரசியல்வாதிகளின் ஆசியோடு, காலிகள் உள்ளே
நுழைந்து விட்டனர்…..

அவர்களை வெளிப்படையாக ஆதரித்து சட்டமன்றத்தில்
திருவாளர் ஸ்டாலின் குழுவும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை

நடுவே உட்கார்ந்து திருவாளர் திருமா கூட்டணியும் மறியல்….

ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக திரு.ராகவா லாரென்ஸ்
தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியை பார்த்தவர்களுக்கு
புரியும். பார்க்காதவர்கள் – மேலும் தெளிவு பெற –
அவசியம் பார்க்கவும்.

நிருபர்கள் தோண்டி தோண்டி கேட்கிறார்கள் –
அவசர சட்டம் வெளிவந்த பிறகும் ஏன் போராட்டத்தை
தொடர்ந்தீர்கள் என்று…

அவர் திரும்ப திரும்ப சொல்கிறார் –
சார் கையெழுத்து போடாத உத்திரவை எங்களிடம் காட்டினால்
எப்படி நம்புவது….? கையெழுத்து போட்டு, ரப்பர் ஸ்டாம்ப் அடித்த
காப்பியை எங்களிடம் கொடுத்திருந்தால் அப்பவே போயிருப்போம்….!

மீண்டும் நிருபர்கள் கேட்கிறார்கள் –
“வாடி வாசல் திறந்தால், வீடு வாசல் போவோம்” என்று
நீங்களும் தானே இங்கே பேசினீர்கள்…
வாடி வாசல் திறந்து ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளியோடும்
என்று சொல்லி தானே முதல்வரும் துவங்கி வைக்க
அலங்காநல்லூர் சென்றார்… பின்னரும் ஏன் போராட்டத்தை
முடிக்கவில்லை…?

மீண்டும் ராகவா, அதே செந்தில்-கவுண்டமணி
வாழைப்பழ கேஸ் தான் –
” முதல்வர் வாடிவாசல் போனால் என்ன சார், எங்களிடம்
கையெழுத்து போட்ட காப்பியை கொடுக்கல்லையே….! ”

சில பல கேள்விகளுக்குப் பிறகு தாக்குப் பிடிக்க முடியாமல்,
அருகே நின்றிருந்த இரண்டு பெருமக்களைக்காட்டி,
” சார், நான் சும்மா போராட்டக்காரர்களுக்கு உதவி பண்ண,
சாப்பாடு போட, தண்ணி கொடுக்க தான் வந்தேன்…
போராட்டத்தை நடத்தியது இவர்கள் தான்-
இவர்களிடமே பேசுங்கள் என்று சொல்லி விட்டு
நகர்ந்து கொண்டார்.

அதற்குப் பிறகு பேசிய அந்த இரண்டு மனிதர்களையும்
நேரில் பார்த்தால் நிச்சயம் அறையத் தோன்றும்….

இவர்களை நம்பியா இத்தனை லட்சம் தமிழ்க்குடும்பங்கள்
தமிழகம் முழுவதும் ஒரு வாரமாக போராட்டத்தில் இறங்கின…?

தலைமையே இல்லாமல் நடக்கும் போராட்டம் என்று
அதிசயித்து, மாய்ந்து மாய்ந்து எழுதினோமே –
அந்த “மறைந்திருந்த தலைமை” இது தானா…?

நம்ப முடியவில்லை….
நிச்சயமாக இருக்க முடியாது….
ஒரிஜினல் ஆசாமிகள் ஒளிந்து கொண்டு விட்டார்கள்…

ஒரு வேளை – இவர்கள் தான் காரணம் என்றால் –
அவசர சட்டம் வந்தவுடன், அனைவருக்கும் நன்றி கூறி விட்டு,
வெற்றிக் கொண்டாடங்களுடன் போராட்டத்தை முடித்திருக்க
வேண்டும்.

அதைச் செய்யாமல் –
அதை மேலும், மேலும், இழுத்தடித்து,
தமிழகம் முழுவதையும் போராட்ட களமாக்கி –
அத்தனை பேரையும் அவதிக்கு உள்ளாக்கி,
இன்று, இத்தனை வன்முறைகளும் நிகழ காரணமாக இருந்த
இந்த மனிதர்களை –

தமிழர்களின், தமிழகத்தின் நலனில் –
அக்கரை கொண்ட யாரும் மன்னிக்கவே மாட்டார்கள்…

இனி, தமிழகத்தில் அரசியல் சாராத பொது மக்களின்
போராட்டம் என்று ஒன்று நிகழ முடியுமா…?
அத்தனையையும் கெடுத்தார்களே…

நினைத்துப் பார்த்தால் –
ஏமாற்றமும், கொதிப்புமாக இருக்கிறது….
இவர்களைப் போய் நம்பி ஏமாந்தோமே –

“சீ ” – “இவர்கள் முட்டாள்களா – இல்லை மூர்க்கர்களா…?
இல்லை நாம் தான் மடையர்களா…?”

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to திரு.ராகவா லாரென்ஸ் பேட்டி – இவர்கள் முட்டாள்களா, மூர்க்கர்களா – இல்லை, நாம் தான் மடையர்களா…?

 1. செந்தில் - கோவை. சொல்கிறார்:

  அமைதியாக நடந்து முடிய வேண்டிய வெற்றி கொண்டாட்டம்…..
  கண் பட்டு விட்டது….

 2. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Either you have lost your judgmental capacity due to senelity or you always take wrong decisions.
  I wonder how you have pulled on your lengthy service. Probably you had served in non decision
  making posts. You made some or all of our readers also fools. This is not the 1st time.You take wrong judgement and regret afterwards. Pl. tell us who are the two persons.Can we see the
  photographs.

  • இளங்கோ சொல்கிறார்:

   R.Gopalakrishnan,

   காவிரிமைந்தன் சாரைப்பற்றி இப்படி எழுதுவதற்கு உங்களுக்கு
   என்ன தகுதி இருக்கிறது என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா ?
   உங்களுக்கு பிடித்ததைத் தான் அவர் எழுத வேண்டும் என்று
   என்ன அவசியம் ? அவருக்கு தோன்றுவதை அவர் எழுதுகிறார்.
   //You made some or all of our readers also fools.?
   உங்களைப்போல் ஏற்கெனவே முட்டாளாக இருப்பவரை மீண்டும்
   எப்படி முட்டாளாக்க முடியும் ? அவர் எழுதுவது பிடித்திருப்பதால்
   தான் தொடர்ந்து அவர் தளத்தை படித்து வருகிறோம். உங்களுக்கு
   பிடிக்கவில்லை யென்றால் போய்க்கொண்டே இருக்க வேண்டியது தானே?
   யார் இங்கே வரும்படி கேட்டது ? அவர் எழுதிய எதற்காக அவர்
   மன்னிப்புக் கேட்டார் சொல்லுங்கள் ?
   // ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக திரு.ராகவா லாரென்ஸ்
   தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியை பார்த்தவர்களுக்கு
   புரியும். பார்க்காதவர்கள் – மேலும் தெளிவு பெற –
   அவசியம் பார்க்கவும்.//
   இந்த பேட்டியை பார்க்காமலே அரைவேக்காட்டுத்தனமாக இங்கே
   எழுதுவது யார் ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.ஆர்.கோபாலகிருஷ்ணன்,

   உங்கள் வயது கருதி உங்களுக்கு மிகவும் மென்மையாக
   பதில் அளிக்கிறேன்….

   இந்த வலைத்தளத்தில் பின்னூட்டம் இடுபவர்களுக்கு
   ஒரு அடிப்படை பண்பாடு வேண்டும்….
   அது உங்களிடம் இல்லை. பொதுவாக மற்றவர்களை
   தனிப்பட தாக்குவதை நான் இங்கு அனுமதிப்பதில்லை…

   இருந்தாலும் இது என்னையே குறிவைத்திருக்கிறது
   என்பதால், அனுமதித்து பதிலும் கூறுகிறேன்.

   என் தீர்மானிக்கும் தகுதியைப்பற்றி தீர்மானிக்க
   உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது…?
   நீங்கள் நினைப்பது போல் நான் எழுதினால் மட்டுமே –
   எனக்கு judgmental capacity இருக்கிறது என்று
   நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா…?

   எனக்கு நியாயம், சரி என்று தோன்றுவதை எழுதுவதற்காக
   தான் இந்த வலைத்தளததில் எழுதி வருகிறேனே தவிர,
   உங்களுக்கு தேவையானதையும், நீங்கள் விரும்புவதையும்
   தருவதற்காக அல்ல.

   //You take wrong judgement and regret afterwards. //
   இதற்கு முன்னால் நான் இப்படி செய்த உதாரணம்
   எதையாவது கூற முடியுமா…?
   //Pl. tell us who are the two persons.Can we see the
   photographs.//
   நீங்கள் இடுகையை ஒழுங்காக படிக்காமலே,
   பொறுமை இல்லாமலே,
   பின்னூட்டம் எழுத வந்து விட்டீர்கள்.
   மீண்டும் ஒரு முறை இடுகையை முழுவதுமாக படியுங்கள் –
   விடை கிடைக்கும்.

   இனியாவது, பின்னூட்டம் எழுதும்போது,
   சற்று பண்பாட்டுடன் எழுதவும்…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • Tamilian சொல்கிறார்:

   Those two guys were behind Lawrence during his interview.

 3. Chandrasekaran சொல்கிறார்:

  வணக்கம் அய்யா,

  வெகுநாட்களாக உங்கள் இடுகையை வாசித்து வருகிறேன். இது வரை பெரும்பாலும் பின்னூட்டம் இட்டதில்லை.
  சரி விஷயத்திற்கு வருவோம்.
  இவர்கள் மூடர்களாகவோ அல்லது முட்டாள்களாகவே இருக்கட்டும். இத்தனை நாள் தலைமையே இல்லாத போராட்டம் என்று தெரிந்து தானே அனைவரும் ஆதரித்தோம்.
  சனிக்கிழமை மாலை அவசர சட்டம் அறிவித்து விட்டு இருபத்து நான்கு மணி நேரம் கூட அவகாசம் இல்லாமல் ஞாயிறு காலை ஜல்லிக்கட்டு நடத்த வேண்டிய அவசரம் என்ன?
  ஜல்லிக்கட்டு நடத்த முடியாத அவமானத்தில் போராட்ட களத்தில் இருந்த ஒவ்வொருவராக பேட்டி கொடுக்க சொல்லி மாணவர்களை தனிமைப்படுத்தியதும், சமூக விரோதிகளை உள்ளே நுழைத்ததும் தமிழக அரசு தானே?
  அதிகாலை காவல்துறையினரை குவித்து அறவழியில் போராடிய மாணவர்களை கால அவகாசம் கொடுக்காமல் கட்டாயமாக வெளியேற்ற வேண்டிய அவசியம் என்ன?
  கல்லெறிந்த கலவரக்காரர்களை விட்டு விட்டு செய்தியாளர்களை தாக்கியது ஏன்?
  இன்று சட்டசபை கூட்ட தொடரில் அவசர சட்டத்தை நிறைவேற்றி விட்டு போராட்டக்காரர்களிடம் தகுந்த முறையில் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை நல்ல முறையில் முடிக்க நினைக்காதது ஏன்?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சந்திரசேகரன்,

   நண்பர் தமிழனின் பின்னூட்டம் உங்கள்
   கேள்விகளுக்கான விளக்கங்களை தருகிறது
   என்று நினைக்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. sakthivel சொல்கிறார்:

  I agree with Mr.Chandrasekaran

 5. தமிழன் சொல்கிறார்:

  சனி அன்று முதல்வர் அவசரச்சட்டத்தைப் பிறப்பித்த உடனேயே, போராட்டத்தின் நோக்கம் நிறைவேறியது. இது கூடிய இளைஞர்களின் வெற்றி மட்டுமல்ல, திரு ஓபிஎஸ் போன்ற தலைவர்களின், ஆதரவு நல்கிய வெளிநாடு வாழ் தமிழர்களின் ஒட்டுமொத்த வெற்றி. அதற்கான symbolஆக, முதல்வர் அவர்கள் ஜல்லிக்கட்டை ஆரம்பித்துவைத்தார்கள், அலங்கானல்லூரில் ஆரம்பிக்க முனைந்தார்கள். சில அரசியல் காரணங்களால் (யூகத்தை வெளிப்படையாக எப்படிச் சொல்வது.) அலங்கானல்லூரில் நடத்த இயலவில்லை. (அதன் காரணம் பிப்ரவரி 1ம்தேதி புரியும்.. நான் நினைப்பது சரி என்றால்). முதல்வர் அவர்கள் என்ன முடியுமோ அதனைச் செய்தபிறகும், போராட்டம் தொடரும் என்று சொல்லியது சரியான தலைமை இல்லாததால். பிரச்சனை முடிந்துவிடும் என்றதும் ஸ்டாலின் அவர்களும் மற்ற அரசியல்வாதிகளும் அதிமுகவுக்கு கிரெடிட் செல்லக்கூடாது என்பதற்காக, தங்களுடைய இளைஞர்களையும் (??) போராட்டத்தில் கலந்துகொள்ளவைத்து அல்லது தனக்குச் சார்பானவர்கள் மூலமாக போராட்டத்தைத் தொடர வைத்து, ஆட்சிக்கு எதிரான கலவரமாக மாற்றவைக்க முயற்சித்தார். அதேபோல சில சமூக விரோதிகளும், பிரதமர் அவர்கள்மீது குறைகளை அடுக்க இதனைப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். அதன் காரணமே இன்று நிகழ்ந்த வன்முறை.

  காளையைப் பட்டியலில் சேர்த்தது காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசு. பீட்டாவை உள்ளே நுழையவைத்தது திமுகவின் அமைச்சர். இப்போது, ‘ஜல்லிக்கட்டு’ கட்டாயம் தமிழர் பண்பாடு என்பதால் வேண்டும் என்று சொல்வதும் அவர்களே.. இது ஒன்றே போதும் திருக்குவளை தீயசக்தி இன்னும் கனல் விட்டு அவர்களின் தன்மையைக் காண்பிக்கிறது என்று.

  ‘சமூக விரோதிகளை நுழைய வைத்தது தமிழக அரசு’ என்று சொல்பவர்கள் ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழையவைக்க முயற்சிப்பவர்கள். யாராவது சொந்த வீட்டில் தீ வைத்துக்கொள்வார்களா? அரசு இதைச் செய்ய என்ன காரணம் இருக்க முடியும்?

  ‘ஞாயிறு காலை ஜல்லிக்கட்டை அவசர அவசரமாக ஏன் நடத்தவேண்டும்’-இதன் காரணம், அரசு சட்டச் சிக்கலைத் தீர்த்தாகிவிட்டது. ‘ஜல்லிக்கட்டை’ அரசே நடத்தி மக்களுக்குப் பிரச்சனை தீர்ந்தது என்று காட்டவேண்டும். அதனால் அமைதி திரும்பும். ஒருவேளை ‘தடை’ ஏதும் வருவதற்கு முன்பே இதனை நடத்தவேண்டும். இதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்கமுடியும்? ஓபிஎஸ் அவர்கள் உடனே தில்லி சென்று, ஒரு நாளுக்கு மேல் தங்கி அவரால் முடிந்தமட்டில் பிரச்சனையைத் தீர்க்க முயன்றிருக்கிறார். இது எல்லோருக்கும் தெரியும்தானே.

  ‘மாணவர்களுக்குக் கால அவகாசம் கொடுக்கவேண்டும்’ – பல இடங்களில் நேற்றே பிரச்சனை தீர்ந்த நிலையில், சென்னையில், மெரீனாவில் இத்தனை கூட்டம், இன்னும் போராட்டத்தைத் தொடர்வேன் என்று இருந்த நிலையில், பிரச்சனையைத் தீர்க்க, ஆரம்பித்திலிருந்தே போராடிவரும் முக்கியஸ்தர்கள், நேற்றே கலைந்துவிடலாம் என்று சொன்னபிறகும், சமூக விரோதிகள் புக ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொன்னபிறகும், அரசுக்கு உண்மை நிலவரம் உளவுத்துறைமூலமாகத் தெரியாமலிருக்குமா? அதனால்தான் இன்றைய கடும் நடவடிக்கை. ‘ஜல்லிக்கட்டு’க்குப் போராடுபவர்கள், போலீஸ் ஜீப்புகளை எரிப்பானேன். உண்மையாகப் போராடியவர்கள் எழுச்சிமிக்க, சுயநலமில்லாத இளைஞர்கள். நேற்று உள்ளே நுழைந்தவர்கள் கலவரம் செய்வதற்காக வந்தவர்கள் (அல்லது அனுப்பப்பட்டவர்கள்)

  செயல்பட்டதற்காக, தமிழக அதிமுக அரசைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். முதல்வர் அவர்கள், அவருக்குக் கட்சியிலேயே கொஞ்சம் சவால்கள் இருந்தபோதும் இதனை நிகழ்த்திக் காண்பித்திருக்கிறார். Able person.

  அரசைச் செயல்படுவதற்காக, பிரச்சனையைத் தீர்ப்பதற்காக, உந்து சக்தியாக தமிழக இளைஞர்கள் மிகுந்த அறிவாற்றலோடு எல்லோரும் பாராட்டும்படியாக, முதிர்ச்சியைக் காண்பித்து, சரியான முறையில் இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். எங்கேயும் ஒரு வன்முறை இல்லை. எல்லோரும் தமிழர் என்ற இன உணர்வை, இக்கால இளைஞர்களிடம் (உணர்வு இல்லாதவர்களிடமும்) ஊட்டி, நாமும் கலந்துகொள்ளவேண்டும் என்று எல்லாத் தமிழர்களையும், நாடு வேறுபாடுகளைக் கடந்து உணர்ச்சி கொள்ளச் செய்ததற்காக அவர்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள். மற்ற சமூகக் கேடுகளை, தமிழர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளைத் தீர்க்கவும் தேவை ஏற்படும்போது இளைஞர்கள் எழுச்சி கொள்வார்கள், ஒன்றுபடுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்க.

 6. gopalasamy சொல்கிறார்:

  Some protesters wanted to continue the agitation as they wanted to follow Tunisia, Egypt and Libya model. Sri KMji’s judgement was to totally wrong.

 7. Raja சொல்கிறார்:

  You are 100% correct sir, Ragava Lawrence one of the reason for this problem. Saturday4 pm they got victory. But he didn’t know about that. Not only law they don’t know about jallikuttu also. He said our CM is Romba Ataka Votukamana Aalu with bad mannerisms. He will pay for it. If you not able to control crowd why should you take Dias. Today morning he released one video with tears in marina everyone suffered .This video also create rumours TN govt should take action against Lawrence,& Balaji

 8. Chandrasekaran சொல்கிறார்:

  யார் தீ வைத்தது என்று இணையத்தில் காணொளி காடசி கிடைக்கிறது. பார்த்து விட்டு பின்னூட்டம் இடுங்கள் நண்பர்களே. போராட்டத்தை முடிக்க வேண்டும் என்று உத்தரவு வந்த பின் எப்படி முடித்தால் என்ன?

 9. சிவா சொல்கிறார்:

  போராட்டம் திசைமாறி நாறி ஆரம்பித்துவிட்டது. மோடிக்கு சவ ஊர்வலம் நடத்தினார்கள். தேசிய கொடியை கேவலப்படுத்தினார்கள்,முதலமைச்சரை படுகேவலப்படுத்தினார்கள், மிக்ஸர் தின்பவர் என்றார்கள்… அவர் தான் யார் என்பதை கடைசியில் காட்டிவிட்டார். மத்திய மாநில அரசுகள் நினைத்திருந்தால் திசைமாறிய முதல்நாளிலேயே நசுக்கிவிட்டிருக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் சற்றே முடிவு எடுப்பதில் தாமாதமாகி இந்த நிலைமைக்கு வந்துவிட்டிருக்கிறது. அம்மா இருந்திருந்தால் போராட்டம் திசைமாறிவுடன் ஆப்பு வைத்திருப்பார், அவர் இரும்பு பெண்மணி. we miss Jayalalitha!

 10. gopalasamy சொல்கிறார்:

  It is mandatory to get permission from corporation and police to conduct some festival in street (like Ganesh sathurthi). For conducting a protest in a public place is it not necessary? In my opinion , rule of law is important in democracy. The executive powers of state / central governments, parliament / assemblies , Judiciary and police should be respected by all. If nobody is responsible for such huge crowd, why learned people praise it and support it ?

 11. gopalasamy சொல்கிறார்:

  Even if it gives temporary pleasure or benefit we should not select wrong path.

 12. Tamilian சொல்கிறார்:

  The protestors chose a proper time to stage their agitation when state is not having a firm personality as CM. Their own party members want to upstage OPS for some trivial reason. The jihadists and extreme elements entered the arena from 4thday and were using filthy language to abuse Mr Modi and OPS And social media was full of that shit. The guys who were made to take the center stage like Lawrence did not know how and when to end it. Under the circumstances it was the leniency of the TN government that allowed the protestors to continue with out proper permission. Such a protest had to end this way only when opportunist politicos want to take advantage of it to create a bad name for ruler.

 13. natchander சொல்கிறார்:

  Apart from lawrence there were other actors who were giving interviews without substance…
  one r.j balajee who had given meaningless talk on demonetisation on earlier occasions also spoke in marina emotionally again without substance…
  the students could have prevented these actors from delivering speeches…
  just as they did not allow politicians to make any aspeech on marina…

  • Tamilian சொல்கிறார்:

   இதுவே தலையில்லாமல வால் ஆடும் விளைவு. தலைக்குதலை மைக பிடித்ததால் வந்த வினை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.