நீதி விசாரணை தேவை – திரு.ஸ்டாலினின் வேண்டுகோள் சரியே…!!!

முதலில் செய்தி –

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது
கோரிக்கை மனு ஒன்றை ஸ்டாலின் அளித்தார்.

stalin

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தினேன். மேலும்,
சென்னையில் இன்று காலை முதல் நடந்த அசம்பாவித
சம்பவங்கள் குறித்து நீதி விசாரணை தேவை என ஆளுநரிடம் கேட்டுக்கொண்டேன்.

மேலும் பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரினோம் என்றார்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-meets-tn-governor-272494.html

கீழே இது குறித்து நமது கருத்தும் வேண்டுகோளும் –

எதிர்க்கட்சித்தலைவர் வேண்டுவது போல் உடனடியாக
ஒரு நீதி விசாரணை அவசியம் தேவை.

இன்றைய தினம் போராட்டங்கள் நிகழ்ந்த சில இடங்களை
(அது நிகழ்ந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே )
நானும் நேரில் சென்று பார்த்தேன்….
அதில் கலந்துகொண்ட சிலரின் கட்சிப் பின்னணி
எனக்கே தெரியவந்தது …( உணர்ச்சி வேகத்தில், தங்களது சட்டைப்பையில் வைத்துக் கொண்டிருந்த தலைவரின் புகைப்படத்தை மறைக்க வேண்டும் என்பதை அவர்கள் மறந்து விட்டிருந்தனர்….!!! ) இது போல் இன்னும் மற்ற
கட்சியினரும் இருக்கக்கூடும்…!!! வீடியோக்களை எல்லாம்
விரிவாக ஆராய்ந்தால், இது போல் இன்னும் பல
விவரங்கள் தெரிய வரக்கூடும்…!!!

எனவே, இன்றைய தினம் சென்னையில் நடந்த அத்தனை
கலவரங்களின் பின்னணியிலும் இருந்தவர்கள் யார்..?

பங்கு கொண்டவர்கள் யார்..?
அவர்களது பின்னணி என்ன…?
(அது காவல்துறையாக
இருந்தாலும் கூட ) என்கிற முழு விவரங்களையும்
வெளியே கொண்டு வர, கால கெடுவுக்கு உட்பட்ட
ஒரு நீதி விசாரணை அவசியம் தேவை….

இன்னும் ஒரு விஷயத்தையும் இதில் சேர்த்துக்
கொள்ள வேண்டும்…

ஹிப் ஹாப் தமிழன் ஆதி, ராகவா லாரென்ஸ் ஆகியோர்
தங்களது தொலைக்காட்சி பேட்டியில் மாணவர்கள்
மெரினாவில் நடத்திய போராட்டத்தில், மாணவர்களுக்கு
சம்பந்தம் இல்லாத ” யாரோ சிலர்” கலந்து கொண்டு,
“விஷமத்தனமான” பல கருத்துகளை பேசியதாகவும்,
சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டதாகவும்
கூறி இருக்கின்றனர்.
இது எவ்வளவு தூரம் உண்மை…?
அது எவ்வாறு நிகழ்ந்தது …?
அதில் சம்பந்தப்பட்டவர் யார் யார்.. ?
என்று விசாரித்தறிகிற விஷயத்தையும்,
நீதி விசாரணையின் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to நீதி விசாரணை தேவை – திரு.ஸ்டாலினின் வேண்டுகோள் சரியே…!!!

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ( http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jan/23/ )

  இன்றைய தினமணி செய்தி தளத்திலிருந்து கொஞ்சம் –

  ————————–
  முதல் நான்கு நாட்கள் வரை மாணவர்களின்
  போராட்ட முறை வெகு கண்ணியமாகவே இருந்தது.

  ஆனால் அது மாணவர்களுக்கு மட்டுமே நற்பெயரைப்
  பெற்றுத் தருமே தவிர அதனால் நமக்கென்ன லாபம்?
  என சில விரும்பத்தகாத சக்திகள் நினைத்தனவோ என்னவோ?

  தொடர்ந்து கையில் சிக்கிய சிறு சிறு அட்டைகள் மற்றும்
  வெள்ளை சாட் பேப்பர்களிலும் கூட மிக மோசமான
  வாசகங்களை எழுதிக் கொண்டு வந்து அவற்றைக் கையில்
  உயர்த்திப் பிடித்தவாறு கும்பலில் நின்று கோஷமிடத் தொடங்கினர். சாம்பிளுக்கு சில வாசகங்களைப் பாருங்கள்;

  ‘ மோடி நீ இப்ப வந்தா டெட்பாடி’
  ‘என் மாடு, என் நாடு, நீ மூடு’
  ‘காணவில்லை ஓ.பன்னீர்செல்வம்,
  குறிப்பு: மிக்ஸர் போதாது என்று சின்னம்மா அழுகிறார்’
  ‘பீட்டா, பீட்டா பிஞ்சு போகும் பேட்டா”

  – இதை விட மோசமாகவும் அங்கு கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். பெரும்பாலானவை நினைவில் நிற்காததால் இங்கு பதிவு செய்ய முடியவில்லை. ஆனால் ஒரு விசயம் அப்பட்டமாகத் தெரிந்தது. இப்படி கோஷமிட்டவர்கள் நிச்சயமாக உண்மையான மாணவப் போராட்டக்காரர்களாக இருக்க வாய்ப்பில்லை. மாணவர்கள் செய்யக்கூடிய வேலை அல்ல அது. ஒரு வேளை அவர்களும் மாணவர்கள் தான் எனில் அவர்களது போராட்ட முறை தவறு. அந்தத் தவறுகள் தான் இன்றைய அவமதிப்புக்கு தனிப் பெரும் காரணம். மற்றபடி அந்நிய நாட்டு குளிர்பானங்களைத் தடை செய்ய வேண்டும் எனவும், பீட்டாவைத் தடை செய்ய வேண்டும் எனவும் அவர்களது கோரிக்கைகள் நீண்டு கொண்டு போனது ஒரு பிரதான காரணமே இல்லை. மிகக் கண்ணியமான முறையில் போராடிக் கொண்டிருந்த மாணவர்களின் சக்தியைக் கண்டு அரசியல் கட்சிகள் ஒரு புறம் பாராட்டினாலும் மறுபுறம் மிரண்டு போனதும் உண்மையே!

 2. Ramesh Raghavan சொல்கிறார்:

  //( உணர்ச்சி வேகத்தில், தங்களது சட்டைப்பையில் வைத்துக் கொண்டிருந்த தலைவரின் புகைப்படத்தை மறைக்க வேண்டும் என்பதை அவர்கள் மறந்து விட்டிருந்தனர்….!!! ) இது போல் இன்னும் மற்ற
  கட்சியினரும் இருக்கக்கூடும்…!!! வீடியோக்களை எல்லாம்
  விரிவாக ஆராய்ந்தால், இது போல் இன்னும் பல
  விவரங்கள் தெரிய வரக்கூடும்…!!!

  எனவே, இன்றைய தினம் சென்னையில் நடந்த அத்தனை
  கலவரங்களின் பின்னணியிலும் இருந்தவர்கள் யார்..?

  பங்கு கொண்டவர்கள் யார்..?
  அவர்களது பின்னணி என்ன…?
  (அது காவல்துறையாக
  இருந்தாலும் கூட ) என்கிற முழு விவரங்களையும்
  வெளியே கொண்டு வர, கால கெடுவுக்கு உட்பட்ட
  ஒரு நீதி விசாரணை அவசியம் தேவை….//

  You are absolutely right.
  It is good even for the Ruling Party to have a Judicial Enquiry.

 3. Ramesh Raghavan சொல்கிறார்:

  //மெரினாவில் நடத்திய போராட்டத்தில், மாணவர்களுக்கு
  சம்பந்தம் இல்லாத ” யாரோ சிலர்” கலந்து கொண்டு,
  “விஷமத்தனமான” பல கருத்துகளை பேசியதாகவும்,
  சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டதாகவும்
  கூறி இருக்கின்றனர்.
  இது எவ்வளவு தூரம் உண்மை…?
  அது எவ்வாறு நிகழ்ந்தது …?
  அதில் சம்பந்தப்பட்டவர் யார் யார்.. ?
  என்று விசாரித்தறிகிற விஷயத்தையும்,
  நீதி விசாரணையின் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.//

  Exactly this also enforces the demand for a Judicial Enquiry.

 4. செ. இரமேஷ் சொல்கிறார்:

  திரு. சிவசேனாபதி அவர்கள் தன் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி ரமேஷ்.

   திரு சிவசேனாபதி பாராட்டிற்குரிய பணிகளைச் செய்திருக்கிறார்.
   அவரது பணிகள் பற்றிய செய்திகள் இன்னும்
   அதிகம் பேரைச் சென்று சேர வேண்டும்.
   நான் அதற்கு முயற்சி செய்வேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. pkandaswamy சொல்கிறார்:

  வழக்கமான வழியில்தானே போராட்டம் சென்று கொண்டிருக்கிறது. அடுத்தது துப்பாக்கிச்சூடு. ஒரு பத்து பேர் செத்ததும் போராட்டம் முடிவு பெறும். அடுத்து ஏதாவது ஒரு பிரச்சினையைக் கண்டுபிடிக்கவேண்டும். போராட வேண்டும். அரசியல்னா சும்மாவா?

 6. natchander சொல்கிறார்:

  JI thiru sivasenapathy had many times questioned and cornered tmt radha rajan of peta by his sensible but forceful arguements in favour of jallikattu in t.v debates….
  i request you to enlighten the readers about thiru sivasenapathy….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.