சுப்ரீம் கோர்ட்டில் – மத்திய அரசின் புத்திசாலித்தனமான நடவடிக்கை….!!!

s-c

இன்று, உச்சநீதி மன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) வேறொரு வழக்கில்
குறுக்கிட்டுப் பேசிய மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் –
ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பாக நாளை மத்திய அரசு
ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்வதாக
தெரிவித்திருக்கிறார்….

2016 ஜனவரியில் ஜல்லிக்கட்டை அனுமதித்து மத்திய அரசு
வெளியிட்ட அறிக்கை/உத்திரவை எதிர்த்து தான் பீட்டாவும் இதர
சில அமைப்புகளும் வழக்கு தொடர்ந்திருந்தன. அந்த உத்திரவை
சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்து தடையுத்தரவு பிறப்பித்ததால்
தான் தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை
ஏற்பட்டிருந்தது.

இப்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி,
மத்திய அரசு தனது ஜனவரி, 2016 அறிக்கையை திரும்பப்பெறுவதாக
கோர்ட்டில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவிருக்கிறது.

அதாவது பீட்டா போன்ற அமைப்புகளின் வழக்குகளுக்கு
காரணமான மத்திய அரசின் உத்திரவு வாபஸ் பெறப்படுகிறது.

எந்த உத்திரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதோ,
அந்த உத்திரவு திரும்ப பெறப்படுவதால், வழக்குக்கு எந்தவித
தேவையோ, அடிப்படையோ இல்லாமல் போய்விடும்.
எனவே, அந்த பொருள் குறித்து, சுப்ரீம் கோர்ட், தனது

ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பை அளிக்க வேண்டிய அவசியமேயின்றி,
வழக்கை வெறுமனே முடித்து வைத்து விடலாம்.

இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால் –

தற்போது பொதுப்பட்டியலில் இருக்கும் ஒரு அதிகாரத்தை –
அதாவது, எந்த ஒரு விலங்கையும் பட்டியலில்
சேர்க்கும் அல்லது விலக்கும்
உரிமையை மத்திய அரசு,
மாநிலங்களுக்கு விட்டுக் கொடுக்கிறது.

இதன் மூலம் அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு வேண்டிய
விதத்தில் சட்டங்களை பிறப்பித்துக் கொள்ளலாம்.

மத்திய அரசுக்கு இந்த ஆலோசனையை கூறியவர் யாராக
இருந்தாலும் – அவரும்,

இந்த யோசனையை ஏற்று உடனடியாக
செயல்படுத்த முன்வந்திருக்கும் மோடிஜி அரசும்
பாராட்டுக்கு உரியவர்கள்.

இந்த முடிவு தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்லாமல்,
ஏற்கெனவே இது போன்ற பிரச்சினையில் சிக்கியிருக்கும்,
மஹாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப் போன்ற மற்ற
மாநிலங்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

வரவேற்க வேண்டிய ஒரு யோசனை, செயல்பாடு….!!!
மனமார பாராட்டுவோம்…

இனி, பீட்டா போன்ற அமைப்புகள் – எதிர்க்க வேண்டுமானால்,
நமது புதிய மாநில சட்டத்தை தான் எதிர்க்க வேண்டும்…

எதிர்க்கட்டுமே…. வெற்றிகரமாக எதிர்கொள்ளும் விதத்தில்
நமது புதிய சட்டம் அமைந்திருக்கிறது.
ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டில் சுட்டிக்காட்டப்பட்ட அத்தனை
குறைபாடுகளும் தமிழ் நாட்டின் புதிய சட்டத்தில் நீக்கப்பட்டு
விட்டன… எனவே, யாரும் கோர்ட்டுக்கு போனாலும்
இனி அஞ்சத்தேவை இல்லை….!!!

இந்த பிரச்சினை ஏறக்குறைய வெற்றிகரமாக
தீர்க்கப்பட்டு விட்டது என்றே கொள்ளலாம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to சுப்ரீம் கோர்ட்டில் – மத்திய அரசின் புத்திசாலித்தனமான நடவடிக்கை….!!!

 1. தமிழன் சொல்கிறார்:

  உண்மை. வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டதுபோல்தான் தெரிகிறது.

  எனக்குப் புரிந்துகொள்ளமுடியாதது – விலங்கைத் துன்புறுத்தாதே. ஆனால் கொன்றுவிடு. இது என்ன லாஜிக்? குதிரையை சவாரிக்கு உபயோகப்படுத்துவது, ரேசில் உபயோகப்படுத்துவது அதன் சம்மதத்தைக் கேட்டா? எதை வைத்து, ஒருவர் ஒரு விலங்கைச் சரியான முறையில் பராமரிக்கிறார் என்று அளவிடுவது? எலி, பாம்பு போன்றவை உயிரினங்கள் இல்லையா? இல்லை, யானை, ஒட்டகம் போன்றவைகளை எப்படிவேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாமா? மேனகா காந்தி அவர்கள், தெரு நாய்களுக்குப் பரிந்துபேசிவிட்டு, காரில் சென்றுவிடுகிறார். அவருக்கு இருக்கும் பணத்திற்கு, ஒரு 10,000 தெரு நாய்களை அவர் பராமரித்தால் என்ன?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப தமிழன்,

   சில மாதங்களுக்கு முன்னர் ஒரு மும்பை செய்தியை பார்த்தேன்.
   துரதிருஷ்டவசமாக link-ஐ தவற விட்டு விட்டேன்…

   திருமதி மேனகா தனிப்பட்ட முறையில் ஒரு trust நடத்தி வருகிறார்.
   அதற்கு மும்பை பணக்காரர் ஒருவர் 12 லட்சம் ரூபாய் நன்கொடை
   கொடுத்தது பற்றிய செய்தி அது.

   மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர் தனிப்பட trust நடத்தி,
   அதற்கு பொதுமக்களிடமிருந்து நன்கொடை பெறுவது
   அமைச்சர்களின் நடத்தை விதிகளுக்கு மாறானது…

   இவர் போன்றவர்களை இன்னமும் ஏன் அமைச்சரவையில்
   பிரதமர் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தான்
   புரியவில்லை.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. sakthivel சொல்கிறார்:

  If Menaka Gandhi walks at least 100 metres in TN Streets, she will understand the street dogs problems.

 3. LVISS சொல்கிறார்:

  Good tactics —
  This idea must have come from Mr Mukul Rahtogi the Attorney General who helped TN come up with the state level ordnance – –

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.