பின்னணியில் இருந்தவர்களின் பணி – திரு.கார்த்திகேய சிவசேனாபதி….!!!

k-senapathy

மெரினாவில் இரவும் பகலும் அமர்ந்து புதிய ஜல்லிக்கட்டு
சட்டத்திற்காக போராடியவர்களை நமக்கு தெரியும்.

டெல்லிக்கு போய், பிரதமருடன் பேசி, பின்னர் சம்பந்தப்பட்ட
வெவ்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து,
சட்ட வல்லுநர்களுடன் இரவு முழுவதும் அமர்ந்து,
புதிய சட்ட வடிவு நகலுடன் திரும்ப வந்த முதல்வர் திரு.ஓபிஎஸ்
அவர்களின் பணியையும் நாம் அறிவோம்.

ஆனால், வெளியில் எந்தவித விளம்பரமும் இன்றி, இதற்காக
உழைத்த இன்னும் சில பெருமக்களைப் பற்றி பெரும்பாலான
சாதாரண பொது மக்களுக்கு ஒரு விவரமும் தெரியாது….

“காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய” தலைவர்
திரு.கார்த்திகேய சிவசேனாபதி அவர்களின் பணி பற்றி
ஏற்கெனவே எனக்கு ஓரளவு தெரியும் என்றாலும்
ஜல்லிக்கட்டுக்கான புதிய சட்டத்தை கொண்டு வருவதில்
அவரது பங்கு எவ்வளவு மகத்தானது என்பதை நானும் அவரது
முகநூல் பதிவை பார்த்த பிறகு தான் முழுமையாக உணர்ந்தேன்.

இந்த விவரங்கள் நமது நண்பர்களையும் சென்றடைய வேண்டும்
என்று விரும்பியதால், அதை கீழே பதிவிட்டிருக்கிறேன்.

திரு.கார்த்திகேய சிவசேனாபதி போன்றவர்களின் பணி,
நமது தமிழ் சமுதாயத்திற்கு அவசியம் தேவைப்படுகிறது.
எதிர்காலங்களிலும் அவர் நமக்கு மிகவும் தேவைப்படுவார்…

அவருக்கு நமது வலைப்பதிவின் சார்பாக மனமார்ந்த
வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.

இந்த பதிவை முழுவதும் படித்த பிறகு நீங்களும் என்னுடன்
சேர்ந்து கொண்டு அவரை வாழ்த்துவீர்கள் என்று நம்புகிறேன்.

——————————————————————-
முகநூல் பக்கத்திலிருந்து –

Karthikeya Sivasenapathy –

Dear friends there has been a few questions why we did not address the protestors in marina . Hope this would suffice.

19 th evening i addressed the protestors in three different meetings in marina –
which was telecast live. Only demand was

1. Amend pca
2. Or issue a ordinance if not
3. Tn mp s resign.

Left to New Delhi. Arrived in delhi around 3 am.
20 th met Mr.Pon Radhakrishnan, hon minister from Tamilnadu along with 20 members including Rajsekar ayya.

10.30 to 12 met Mr.Dave, hon union minister for environment and forest 🌳, Union Govt of 🇮🇳. Our demands were
1. Dissolve AWBI
2. Investigate AWBI
3. Amend PCA union or state. ( we were trying for all states but last resort at least Tamilnadu.
4. Or issue ordinance .

He showed his farm where he does farming using cow dung and Urine and said ” i completely understand ZERO budget natural farming . He also opined govt and courts have to be senstive to cultural practices respecting unity in diversity.

We went to his office where our trustees had a long meeting with secretary, MoEF, GOI, and newly appointed chairman of AWBI Mr.Negi IFS. They took our draft bill copy and made notes . It was later used for state ordinance .
Myself and Rajasekar ayya met Union home minister in North block and appraised him of the situation in Tamilnadu. He was concerned and assured of all suport. We asked him to investigate peta and ban it. He said as per law a ban could be done only if there is a prima facia law breaking or sabotage or
conspiracy againt the nation.
We told him they are working to ruin our native cattle in 13 states of India. He said forward a complaint to Union Home ministry and he will order for a enquiry in to it. We also asked him to enquire if peta is getting funded externally for
getting bans against jallikattu etc.

We asked him to look in to FCRA foreign contribution regulation act for which he smiled and said oh my ministries department and will surely do.

He spoke to the prime minister when we were there and said prime minister has assured a ordinance will be done tomorrow . ( 21 01 2017) .

We came back to MoEF office and spoke again on the ordinance to be
promugulated In Tamilnadu.
Both ministers invited us for the press meet and we refused saying until a ordinance is issued we dont want to be part of press meet.
in the evening and he assured ordinance is on the way . Five ministries had to be consulted and vetted before union cabinet approved it and than send it to president.

The president was not in Delhi and arrived only on the night of 20 th. The prime minister spoke to the president and appraised him of the situation in TN.

While we were doing all this the chief minister, chief secretary, animal husbandry secretary and host of others were also working in clearing the ordinance in delhi and were camping in Delhi. The chief minister spoke to us twice by phone updating us .

We arranged for a press meet and got cancelled. Than addressed the
protestors in Janthar Manthar, Delhi. Students of JNU, DU, Lawyers, public service aspirants, scientists from Indian Agri Research instiute who are protesting.

Next day was press conference in New delhi, Press club of india, at 11.30 am and for the first time raised the issue of ” war on indian animal genetic resources by animal welfare groups” .

National media was shocked and said its the first
time jallikattu issue and animal genetic resources are interlinked. For the first time we also appealed to the hon supreme court to be more sub altern and understand local, sensitivities and not hurt common man. We said supreme court cannot be elitist sitting in lyutens Delhi.

We left Delhi by 3 pm, arrived to the marina protest site by 9 pm due to traffic block and unrest.

I spoke in marina about all this and asked them what do we do ? 99.9 # of protestors said ” neenga sollunga anna ” . I said i did not organise this .

Also explained our demand no 2 has been met. We should give time to the govt to amend the pca.
One young girl asked me ” sir how so we trust the govt ? I told her its understandable as common man we have been let down by the rulers .

Also told the protestors the hon prime minister, home minister, environment minister, Mos,
chief minister have assured lets trust them and give them time.

They were in the verge of dispersing peacefully

when 3 people started creating trouble.

One person spoke as if he is a senior lawyer and made the protestors emotional.
Second one started asking should we go ? Do we trust politicians ? It became a different talk there. All our appeals fell on deaf ears to the three people who wanted the mic. The protest movement was being hijacked in to other issues.

Maximum 10 persons ensured the crowd will not move.

They started distributing food and we decided to leave with a heavy heart.

Historical student movement after 30 years in Tamilnadu
was losing. We should have celebrated the victory…

because by the time we landed in chennai airport, the ordinance
was issued by the governor of Tamilnadu.

Than spoke to PR Ayya, Aadhi, Ambalatharasar ayya, Rajesh and other
organisations to hold a press conference the next day on 22 nd.
The same day there were rumors of me and others being threatened by the Tamilnadu govt and union govt.

its nonsense.
When we are protesting within the
norm no govt will to threaten anybody.its the govt not mafia.

Next day the CM spoke to us by phone and said the act itself will be amended on 23 rd and invited us to witness the historic amendment.

Press meet .22 nd 9.30 pm
They got delayed in madurai due to azanganallur issue and reached chennai press club by 9 pm on 22.
In the press briefing we made it clear we have got what we wanted and should postpone protests up to March 31 2017 and if its not amended than we should
demand resignation of MPs of Tamilnadu.

We also explained the stand and appealed to post pone protests.
Large chunk of protestors left the protest after the press meet.

23 rd we met the chief minister and other ministers, DGP and appealed for talks
with those who still are in Marina plus other places ..

The act was amended on 23 rd at 5.30 pm uninamously in the Tamilnadu legislative assembly. #amendpca was also done.

I am a very senstive person and not used to defamation although o know it is used by people to pull down others by people, agencies, nations etc like creating
jokes on Irish or
Sikhs to put them down.
Thanks to this episode i have emerged stronger and
growing thick skinned.

Calling names or attaching intentions does not work.
Some people say dont meet ministers dont meet chief secretary …

they dont have any understanding of a nation state, or democracy. Any protest is fair and
just but should be within the frane work of the constitution of india legally.

I dont know how many of you have read A.G.Gardiner i quote him
‘Rules,’ I said, ‘are necessary things, but there are rules and rules. Some are

hard and fast rules, like the rule of the road, which cannot be broken without danger to life and limb. But some are only rules for your guidance, which you

can apply or wink at, a commonsense dictates like that rule about the dogs. They are not a whip put in your band to scourge your passengers with, but an authority for an emergency. They are meant to be observed in the spirit, not in
the letter, for the comfort and not the discomfort of the passengers.

You have kept the rule and broken its spirit. You may mix your rules with a little goodwill and good temper.’

Some have asked me why should we not include kaveri issue, language issue, pollution, gail, gas pipe line, coca cola and pepsi ban, etc . I agree with a few of it

and may work if i get a chance but just because there is a crowd in front of us and we have the mic one cannot become a leader or activist .

Those who want to should start working and create the impetus.
This is why we should work with main stream political parties and let the chief minister, leader of opposition and other party leaders to move forward.

A few protestors asked me why did you speak with ministers ? Or chief minister ?

Whom else to speak to ? To Mr.Trump ?

Sadly our education is so useless that
we are not thought civics,
whats legislature ,
act,
governance,
state, centre,
concurrent list,
role of judiciary etc.

The biggest lesson in TN students movement is the frustration of common man with the ruling class. High time rulers and all politicians realise this and change .

Get connected to sub altern, understand ground level realities …
Some people asked me why do you say Thiru or Mr or honourable while
addressing prime minister, minister or supreme court. Sorry i think its my parents
and teachers are to be blamed for this . They did not know how to raise.

I have lots of things i may not agree with the prime ministers decisions like
language or other issues but i will continue to address him like that . He is also
my prime minister. My mother has told me lying down if we spit the spit will fall on our face.

Kindly ask the protestors in marina who we’re there on 21 st night for videos to see what really happened.

I do not agree with what you have to say, but I’ll defend to the death your right to say it.
Evelyn Beatrice Hall

To others who have a different agenda of creating memes and distorting please use your time usefully for a good purpose . Dont waste time on me .

I would like to thank the students for this historic, peaceful protests and dedicate this victory to you.

————————————————————–

பின் சேர்க்கை –

தமிழ் மொழிபெயர்ப்பு –

“ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் போராடியவர்களிடம் நாங்கள் ஏன் பேசவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான காரணம் இந்த பதிவில் தெளிவுபடுத்தும் என்று நம்புகிறேன்…

கடந்த 19 -ஆம் தேதி மாலை சென்னை மெரினா கடற்கரையில் போராட்டக்காரர்களிடம் வெவ்வேறு இடங்களில் மூன்று முறை உரையாற்றினேன். இது தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. பி.சி.ஏ. சட்டத்தை அமல்படுத்த வேண்டும், அவசர சட்டம் கொண்டுவரவேண்டும் இல்லையெனில் தமிழக எம்.பி கள் ராஜினாமா செய்ய வேண்டும். இதுமட்டுமே எங்களுடைய கோரிக்கையாக இருந்தன.

பின்னர் அன்று இரவு நான் டெல்லிக்கு புறப்பட்டேன். டெல்லிக்கு காலை 3 மணி அளவில் வந்தடைந்தேன். பின்னர் அன்று (20 1 2017) நான், ராஜசேகர் உள்பட மொத்தம் 20 பேர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்தோம். பிறகு அன்று காலை 10.30 மணி அளவில் மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் திரு. தேவ் அவர்களை சந்தித்தோம். விலங்கு நல வாரியத்தை கலைக்க வேண்டும். விலங்கு நல வாரியத்தின் மீது விசாரணை நடத்த வேண்டும் பி.சி.ஏ சட்டத்தை அமல்படுத்த வேண்டும் மற்றும் அவசர சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என எங்களின் கோரிக்கைகளை அவரிடம் வலியுறுத்தினோம். பின்னர் அவரின் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள செயலாளர்கள் மற்றும் விலங்கு நல வாரியத்தின் புதிய தலைவர் திரு.நெகி அவர்களையும் சந்தித்தோம். அவர்கள் எங்களின் வரைவு மசோதாவை பெற்றுக்கொண்டனர். அதில் இருந்து சில குறிப்புகளையும் எடுத்துக்கொண்டனர். அந்த குறிப்புகள் பின்னர் மாநில அவசர சட்டம் வடிவமைப்பதில் பயன்படுத்தப்பட்டன.

பின்னர் நானும், திரு. ராஜசேகர் அவர்களும் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தோம் அவரிடம் தமிழக சூழ்நிலையை பற்றி எடுத்துக் கூறினோம். சூழ்நிலையை கேட்டறிந்த அவர் எங்களுக்கு முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தார். பீட்டாவை தடை செய்யவேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தினோம். ஒரு அமைப்பை தடை செய்யவேண்டும் என்றால் அந்த அமைப்பு தேசத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே தடை செய்யமுடியும் என்றார். நாங்கள், இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் உள்ள பாரம்பரிய கால்நடைகளை அழிக்க பீட்டா அமைப்பு செயல்பட்டு வருகிறது. மேலும், ஜல்லிக்கட்டை தடை செய்ய பீட்டாவிற்கு நிதி கிடைக்கிறதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றோம். இதை கேட்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நீங்கள், இதுகுறித்து உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு புகாரை அனுப்புங்கள். நாங்கள் விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம் என்றார்.நாங்கள் உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இருக்கும்போது, அவர் பிரதமரை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் நாளை பிறப்பிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளதாக எங்களிடம் கூறினார்.

பின்னர் மீண்டும் மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சக அலுவலகத்திற்கு சென்றோம். அவர்களிடம் மீண்டும் தமிழகத்தின் சூழ்நிலை குறித்து தெளிவுபடுத்தினோம். பின்னர் அன்று மாலை எங்களை செய்தியாளர்களை சந்திக்க அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர், ஆனால் அவசர சட்டம் கொண்டுவராத வரை நாங்கள் செய்தியாளர்களை சந்திக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டோம். பின்னர் அன்று மாலை அவசர சட்டத்திற்கு அமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் கிடைத்ததது. ஆனால் குடியரசு தலைவர் 20-ஆம் தேதி இரவுதான் இந்தியா திரும்பினார். அவரை தொடர்பு கொண்ட பிரதமர் தமிழகத்தின் சூழ்நிலை பற்றி எடுத்துரைத்தார். டெல்லியில் நாங்கள் அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்ற அதே வேளையில் தமிழகத்தில், முதல் அமைச்சர், உள்துறை அமைச்சர் என அனைத்து அரசு உயர் அதிகாரிகளும் அவசர சட்டத்திற்காண நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். குறிப்பாக நமது முதலமைச்சர் என்னிடம் இரண்டு முறை தொலைபேசியில் தொடர்புகொன்டு பேசினார்.

அடுத்த நாள் காலை 11.30 மணி அளவில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தோம். பின்னர் அன்று மாலை 3 மணி அளவில் டெல்லியில் இருந்து புறப்பட்டோம். போக்குவரத்து காரணமாக நாங்கள் இரவு 9 மணி அளவில் தான் மெரினா வந்தடைந்தோம்

“இரவு 9:00 மணிக்கு மெரினாவில் கூடியிருந்த போராட்டக்காரர்களை சந்தித்து பேசினோம். டில்லியில் நடந்த விஷயங்களை எடுத்து கூறினோம். இனிமேல் என்ன செய்யலாம்? என அவர்களிடம் கேட்டோம்.போராட்டக்காரர்களில், 99.9 சதவீதம் பேர், ‛ நீங்க சொல்லுங்க அண்ணா…’ என்று கூறினர்”.

“அதற்கு நான், ‛ இந்த போராட்டத்திற்கு நான் ஏற்பாடு செய்யவில்லை. எனினும், அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற நம் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசுக்கு நாம் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்றேன்”.”அங்கிருந்த இளம் பெண் ஒருவர், ‛ சார், அரசை நாம் நம்ப முடியுமா?’ என, கேள்வி எழுப்பினார்.அதற்கு நான், ‛பிரதமர், முதல்வர், மத்திய அமைச்சர்களுக்கு சிறிது அவகாசம் அளிக்க வேண்டும்’ என, தெரிவித்தேன்”.இதன் பின்னர் போராட்டக்காரர்கள் அமைதியாக அங்கிருந்து கலைந்து செல்ல இருந்தனர்”.

“ஆனால், மூன்று மர்ம நபர்கள் திடீரென பிரச்னை எழுப்பினர்”.

“அதில் ஒருவர், தன்னை ஒரு மூத்த வழக்கறிஞர் என்று கூறிகொண்டு, தீவிரமாக பேசி போராட்டக்காரர்களை உணர்ச்சிவசப்பட வைத்தார்”.

“இரண்டாவது நபர், ‛ நாம் போகத்தான் வேண்டுமா; அரசியல்வாதிகளை நம்ப வேண்டுமா?’ என்று பேசி அங்கிருந்தவர்களை குழப்பி விட்டார்”.

“நாங்கள் கூறிய எதையும் அந்த மூன்று நபர்கள் ஏற்க மறுத்து விட்டனர். எங்களிடம் இருந்த மைக்கை பெறுவதில் குறியாக இருந்தனர்”.

“இதன் பிறகு, ஜல்லிக்கட்டு பிரச்னையை விட்டு விட்டு பிற பிரச்னைகள் மீது கவனம் செலுத்த தொடங்கினர்”. “போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல கூடாது என்பதில், 10 பேர் மட்டுமே தீவிர கவனத்துடன் இருந்தனர்.அவர்கள் உணவுகளை விநியோகம் செய்ய ஆரம்பித்தனர்”. “எனவே, அங்கிருந்து கனத்த இதயத்துடன் வெளியேறினோம். தமிழகத்தில், 30 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த வரலாற்றுபூர்வமான மாணவர் போராட்டம் அப்போதே தோல்வியில் முடிந்து விட்டது”

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to பின்னணியில் இருந்தவர்களின் பணி – திரு.கார்த்திகேய சிவசேனாபதி….!!!

 1. தமிழன் சொல்கிறார்:

  ‘Getting from the horse’s mouth’ – பிரச்சனையின் ஆணிவேரினை அறிந்த திரு சேனாபதி போன்றவர்கள் எவ்வளவு மெச்சூர்டாக இந்தப் பிரச்சனையை அணுகியிருக்கிறார்கள். நம் தலைவர்களை நாம் மதிக்கவில்லை என்றால், அவர் சொன்னபடி, நம்மைப் பார்த்து நாமே காரி உமிழ்வதற்குச் சமம்.

  மெச்சூர்டான இத்தகைய தலைவர்கள்தாம் இளைஞர்களின் பிரச்சனையை எடுத்துச்செல்லச் சரியானவர்கள். அதைத் தீர்க்கும் கடமை மாண்புமிகு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மத்திய அரசுக்கு உண்டு.

  இதனை ஏற்கனவே படித்தாலும், மீண்டும் படிக்கும்போது அவர் என்ன சொல்லவந்தார் என்பது தெளிவாகப் புரிந்தது.

 2. selvarajan சொல்கிறார்:

  அய்யா …. ! நம் தமிழ் இளைஞர்களின் எழுச்சி – தற்போது இந்தியா முழுக்க அந்தந்த மாநில கலாச்சார திருவிழாக்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று பல மாநில இளைஞர்களும் போராட வித்திட்டு உள்ளது — அது பற்றிய ஒரு செய்தி : // ஆந்திரா தொடங்கி அஸ்ஸாம் வரை அதிரவைத்த தமிழகத்து ஜல்லிக்கட்டு புரட்சி //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/after-tn-other-states-ramp-up-pressure-banned-traditional-sp/slider-pf219919-272592.html

  தங்களின் கூற்றுப்படி // சுப்ரீம் கோர்ட்டில் – மத்திய அரசின் புத்திசாலித்தனமான நடவடிக்கை….!!! // என்று ஒன்று நடந்தால் எல்லா மாநிலத்தின் கலாச்சார திருவிழாக்கள் காக்கப்படும் … அல்லவா … ?

 3. palaniappan சொல்கிறார்:

  please iyaa tamila translate panni kodunga

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப பழனியப்பன்,

   மன்னித்துக் கொள்ளுங்கள்.
   இது மிகவும் நீளமாக இருக்கிறது… அதிக நேரம் பிடிக்கும்..

   கூகுள் மொழிபெயர்ப்பு முயற்சி செய்தேன்.
   தப்பும் தவறுமாக அர்த்தம் வருகிறது…

   முடிந்தால் உதவுமாறு நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் பழனியப்பன்
    மற்றும் இதர நண்பர்களுக்கும் –

    இதற்கான தமிழ்மொழிபெயர்ப்பு வலைத்தளத்திலேயே கிடைத்தது.
    அதை இடுகையிலேயே பின் சேர்க்கையாக சேர்த்திருக்கிறேன்.

    தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 4. S சொல்கிறார்:

  இந்த ஆளு நல்லவ… போல வேடம் போடுகிறா…இவ… சொல்வது எல்லாம் சரியன்று!

  இவ…. சொல்லுவது போல, எல்லாம் நடந்திருந்தால்….அதை ஏன் போராட்டத்திற்கு முன்பே செய்திருக்கவேண்டியதுதானே! இன்று இவ…. டெல்லியில் உள்ளவ…. சந்தித்து பேசும் சூழலை உருவாக்கியது மாணவர்கள்.

  மாணவர்கள் வெறும் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு மட்டும் வரவில்லை. தமிழகதில் கடந்த 10-20 வருடமாக நடக்கும் திருடர்களின் அட்சியை எதிர்த்தும், மத்திய அரசு செய்யும் அய்யோக்கியத்தனத்தை எதிர்த்தும் வெளிப்பட்ட ஒரு புரட்சியின் தொடக்கம்.

  போராட்டங்கள் நல்வாழ்வை அமைக்கும்; ஆனால் போராட்டமே வாழ்க்கை ஆகிவிடக்கூடாது!!!

  மாணவ இளையோர்கள் பெண்கள் குழந்தைகள் பொது மக்களின் போராட்டம் — வெற்றி !!!

  திருவிழா போல நடைபெற்று, மிகப்பெரிய சந்தோச வெற்றியுடன் முடிந்திருக்க வேண்டிய போராட்டம், எட்டப்பர்களின் துணையால் காக்கி கயவர்களின் கைவண்ணத்தில், இன்னொரு சோக நிகழ்வாகிப்போனது!!!

  எம்மினத்திற்க்கே உரிய எட்டப்பர்களின் காட்டி கொடுக்கும் வேலை, இந்த போராட்டத்தின் போக்கை மாற்றி விட்டது.

  எட்டப்பர்கள்: ஹிப்ஹாப் தமிழா சிவசேனாபதி ராஜேஸ்வர் மற்றும் சிலர்

  கெட்டதிலும் நன்மை : இந்த எட்டப்பர்களின் உள்முகம் வெளி வந்தது. இல்லையேல், இவர்கள் நாங்கள்தான் அடுத்த தலைவர்கள் என்று நம்மை இன்னொரு தலைமுறைக்கு ஏமாற்றி இருப்பார்கள்!

  நல்ல முறையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் மாணவர்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த வந்த தமிழக அரசு, கடைசி நேரத்தில் காவல் காக்கிகள் மூலம் கோர முகத்தை வெளிப்படுத்தியுள்ளது!

  பெண்கள் மாணவர்கள் குழந்தைகள் மீது தடியடி செய்துள்ளதை காணும்போது…இது நம் மக்களின் அரசா அல்லது நம்மை அடிமைப்படுதும் அரசா என சந்தேகம் வருகிறது !!!

  மத்திய அரசின் அழுத்தங்களுக்கு பயப்படாமல் மாணவர்களின் 7-வது நாள் போராட்டத்தை அனுமதித்து, அதே நேரம் சட்டடபையில் சட்ட வரைவு கொடுக்கப்பட்டு, மதியத்திற்குள் சட்டம் உருவாக்கப்பட்டபின், போராட்டம் முடிக்க சொல்லியிருந்தால் — தமிழக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும்!

  மாணவர்களும் வெற்றியோடு போராட்டத்தை முடித்திருப்பார்கள். கலவரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போயிருக்கும்! ஆளும் கட்சியும் அதை ஆட்டிவிப்பவர்களும் நல்ல பெயர் வாங்கி இருக்கலாம். அவர்கள் மேல் இருக்கும் அதிருப்தி குறைந்திருக்கும்!

  ஆறு நாள் பொறுத்திருந்துவிட்டு ஏழாவது நாள் எல்லாமே தவறாகிப்போய்விட்டது!

  இது நம் இனத்துக்கே உரிய குணம்! எட்டப்பர்களின் காட்டி கொடுக்கும் வேலையும், எங்கே மற்றவனுக்கு புகழ்/கிரெடிட் சேர்ந்துவிடுமோ என்ற நரித்தன அரசியல்வாதியின் எண்ணமும்….நம்மை மேலும் மேலும் கீழே தள்ளிக்கொண்டே இருக்கிறது!

  பெரும்பாலோரின் உழைப்பும் எண்ணமும் நம் மக்களின் முன்னேற்றத்திற்காக, ஏதோ ஒரு வகையில் செயல்பட்டாலும்…..நம்மவர்களே நம்மை குழியில் தள்ளுவதை காணும்போது….விரக்தியும் வேதனையும் ஆற்றாமையும் ஆட்கொள்கிறது!!!

  தமிழகத்தில் முதலில் மாற்றவேண்டியது …….. கூட்டங்களைத்தான். காக்கி சட்டையில் இருக்கும் தமிழின விரோதிகளை துரத்தி அடிக்கவேண்டும்! அவர்களை தூண்டிவிட்ட அரசியல் அயோக்கியர்களை அம்பலப்படுத்தி, அவர்களை அரசியலில் இருந்தே துரத்தவேண்டும்!

  மாணவர்களுக்கு உதவி செய்த ஒரே காரணத்திற்கு, ஒரு குப்பத்து மக்களின் வாழ்வாதாரங்களை தீக்கிரையாக்கியுள்ளனர்! கொடுமையின் உச்சம்! அலங்கோல காட்சிகளை காண பொறுக்கவில்லை !!!

  A humble request for readers of this blog: many may agree or may not agree with my opinion. However, kindly do not blindly write that these people have done everything good. Do not propose that they can lead the student movement. Specifically senapathy has political agenda and in the past he tried to get MLA seat from ADMK.

  • ராஜேந்திரன். சொல்கிறார்:

   ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் பிற கோரிக்கைகளை ஏன் சேர்க்கணும்னு நீங்க சொல்லுங்க. நீங்க வேணுமுனா வேற கோரிக்கையோடு அந்த கூட்டத்துக்கு போயிருக்கலாம். ஆனால் லட்சக்கணக்கான மக்கள் ஜல்லிக்கட்டு தடைநீக்கத்துக்காகத்தான் கூடினார்கள். ஆதி. பாலாஜி, சேனாபதி போன்றோர் இடைவிலகல் மிகச்சரியே.. ( ஆனால் என்னவகைபோராட்டம் என்றாலும் காவலர்களை வைத்து அடித்துவிரட்டுவது மக்களாட்சிக்கொள்கைக்கு எதிரானது. அதுக்காக நாம் முதலில் போராடணும். மற்றது தானே வரும்.)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ” S “,

   பண்பாடு குறையாமல் உங்கள் கருத்துகளை கூற
   பழகிக் கொள்ளுங்கள்.
   இந்த இடத்தில் அவன் இவன் என்றெல்லாம் கூறுவது தவறு.

   உங்கள் பின்னூட்டத்திலிருந்து
   சில சொற்களை நீக்கி இருக்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. S சொல்கிறார்:

  Whatever Kavirimainthsn posted here is not new. It was in circulation for the last 10 days. It has supporters and opposers. Many has critically opposed it on Facebook/twitters and other social media that participated in protest. So it is waste of time to read this type of old self-proclaimed propoganda materials.

 6. S சொல்கிறார்:

  Eyes are tearful when I see the cries of kuppathu makkal. They are not criminals. They are Tamils. They support either DMK or ADMK in election. They support students in distress. They do not want to appropriate (seize or grab illegally) the wealth of people or others. The spineless police force have played their foul-play with these harmless people.

  • இளங்கோ சொல்கிறார்:

   தொலைகாட்சி ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும்
   சில குறிப்பிட்ட தரப்பினராலும், குறிப்பிட்ட அரசியல் கட்சிகளாலும்
   திரும்ப திரும்ப கூறப்படும், காட்டப்படும் செய்திகளை
   மட்டுமே உண்மை என்று நம்பி நீங்கள் ஒருதலைப்பட்சமாகவே
   சிந்திக்கிறீர்கள்.

   காவல் துறை தரப்பில் கூறப்படும் இந்த செய்திகளிலும்
   ஓரளவாவது உண்மை இருக்கக்கூடுமே ?

   வன்முறை வெடித்தது எப்படி? சேஷாயி விளக்கம்!

   வியாழன், 26 ஜன 2017

   குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் நோக்கத்தோடுதான்
   ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசைதிருப்பி இந்த சமூக விரோத
   அமைப்புகள் சதித் திட்டம் தீட்டி செயல்படுத்தியுள்ளனர். அரசின்
   செயல்பாட்டை முடக்குவதற்காக சென்னையில் மாணவர்கள்,
   இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமைதியாக நடத்திய
   போராட்டத்தில் 7 சமூக விரோத அமைப்புகள் புகுந்து வன்முறையை வெடிக்க வைத்தனர் என்று கூடுதல் கமி‌ஷனர் சே‌ஷசாயி தெரிவித்துள்ளார்.

   சென்னை நகர தலைமையக கூடுதல் கமி‌ஷனர் சே‌ஷசாயி கமி‌ஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூடுதல் கமி‌ஷனர் சே‌ஷசாயி கூறியதாவது:

   மெரினாவில் 6 நாட்கள் ஜல்லிக்கட்டுக்கு
   ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும் அமைதியான முறையில் அறவழியில் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுடைய போராட்டத்துக்கு போலீசார் முழு ஒத்துழைப்புக் கொடுத்தனர். போலீசாருக்கு அவர்களும் ஒத்துழைப்புக் கொடுத்தனர். மெரினாவில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியபோதுகூட ஒருசிறு அசம்பாவிதம்கூட நடக்கவில்லை.
   மாணவர்களே போக்குவரத்தை சீர் செய்தார்கள். 6 நாட்களாக நடந்த போராட்டத்தில் அசம்பாவிதங்கள் நடந்ததாக ஒரு புகார்கூட இல்லை.

   போராட்டம் நடத்தப்பட்ட 6 நாட்களும் தினமும் துணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து விளக்கி கூறிவந்தார். முதலமைச்சர் டெல்லி சென்றது, பிரதமரை சந்தித்துப் பேசியது அதன்பிறகு அவசரச் சட்டம் கொண்டு வந்தது போன்ற அரசின் செயல்பாடுகள்பற்றி போராட்டம் நடத்தியவர்களிடம் விளக்கிக் கூறப்பட்டது. ஆனால் போராட்டக் களம் சிறிதுசிறிதாக திசை மாறிப் போக ஆரம்பித்தது.

   7 சமூக விரோத அமைப்புகள் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய அமைதியான அறவழிப் போராட்டத்தில் புகுந்து கலகம் செய்ய ஆரம்பித்தார்கள்.

   உண்மையிலேயே, போராட்டம் நடத்தியவர்கள் ஜல்லிக்கட்டு பற்றி மட்டுமே பேசினார்கள்.

   ஆனால் மாணவர்கள் போர்வையில் போராட்டக் களத்தில்
   புகுந்தவர்கள் ஜல்லிக்கட்டு பற்றி பேசாமல், தலைவர்கள் பற்றி
   தரக்குறைவாக பேச ஆரம்பித்தார்கள். ஜல்லிக்கட்டை நடத்துவது
   அவர்கள் நோக்கமல்ல. அரசை செயல்படவிடாமல் தடுப்பதுதான்
   அவர்களது நோக்கமாக இருந்தது.

   போராட்டத்தில் சமூக விரோதிகள்
   புகுந்துவிட்டார்கள் என்பதை வீடியோ படமாக எடுத்து மாணவர்களே எங்களிடம் கொடுத்துள்ளனர். அதன்பிறகுதான், போலீஸ் தரப்பில் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

   23ஆம் தேதி அன்று காலை 6 மணியளவில் மெரினாவில் போராட்டம் நடத்தியவர்களை அமைதியான வழியில் கலைந்து செல்வதற்கு நாங்கள் நடவடிக்கைகள் எடுத்தோம். அப்போது 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர்.

   அவர்களிடம் லத்தி கொடுக்கப்படவில்லை. யாரும்
   துப்பாக்கியும் வைத்திருக்கவில்லை. அறவழியில் போராடியவர்களை எந்தவித அதிகார துஷ்பிரயோகம் செய்யாமல், ஆயுதங்கள் பயன்படுத்தாமல் அறவழி நடவடிக்கைகள்மூலம் கலைந்து செல்ல
   நடவடிக்கை எடுத்தோம். இதற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது.

   எங்களது அறவழி நடவடிக்கை தொடங்கியபோது, மெரினாவில் 5 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டமே போதுமானது. அந்த அவசரச் சட்டம் சட்டசபையில் சட்டமாக்கப்படும் என்று அவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. அந்த விளக்கத்தை ஏற்று சுமார் 3 ஆயிரம் பேர் அவர்களாகவே மெதுவாக கலைந்து சென்றுவிட்டனர். காலை 8.30 மணிக்குள் 3 ஆயிரம் பேரும் கலைந்து சென்றுவிட்டனர்.

   அதன்பிறகு அங்கு கூடியிருந்தவர்கள் கடல் பகுதியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். அவர்களை நாங்கள் துரத்தவில்லை,
   விரட்டியடிக்கவில்லை. அந்தச் சமயத்தில் மீனவர்கள் குப்பத்தில்
   இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து கடல் பகுதியில் இருந்தவர்களோடு கலந்துவிட்டனர். மீனவர்கள்
   குப்பத்திலிருந்து வந்தவர்கள்தான் கடல் பகுதியிலிருந்த
   போராட்டக்காரர்களை கலைந்து செல்லவிடாமல் தடுத்தனர்.

   மீனவர்கள் குப்பத்திலிருந்து வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட
   பெண் ஒருவரை போலீசார் தாக்கிவிட்டதாக வதந்தியை
   பரப்பினார்கள். இந்த நேரத்தில், ஒருசில தொலைக்காட்சிகளில்
   மெரினாவில் அமைதியாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திவிட்டனர் என்று தவறான செய்தியைப் பரப்பினார்கள்.

   அதையடுத்து, மெரினாவுக்குள் வன்முறையாளர்களை
   தடுப்பதற்காகவே மெரினா கடற்கரையைச் சுற்றியுள்ள
   ராதாகிருஷ்ணன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, பெசன்ட்
   சாலை, சுங்குவார் தெரு, பாரதி சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை போன்ற சாலைகள் சீல் வைக்கப்பட்டன.

   வன்முறையாளர்கள் நுழைவது தடுக்கப்பட்டது. போராட்டத்தில்
   ஈடுபட்ட மாணவர்களும், இளைஞர்களும் அமைதியாக கலைந்து
   சென்றது சமூக விரோத கும்பலுக்குப் பிடிக்கவில்லை. இதனால்
   அவர்கள் சீல் வைக்கப்பட்ட சாலைகளில் மறியலில் ஈடுபட்டு
   வன்முறையை வெடிக்க வைத்தனர். லத்தியில்லாமல் இருந்த
   போலீசார் மீது கற்களை வீசி தாக்கினார்கள். காலியான ‘சின்டெக்ஸ்’ குடிநீர் தொட்டிகளை கலவரக்காரர்கள் ரோடுகளில் உருட்டி விட்டனர்.

   பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
   நடுக்குப்பம், அயோத்திகுப்பம், மாட்டாங்குப்பம் போன்ற மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் வன்முறையாளர்கள் புகுந்துவிட்டனர். அங்கு வசிக்கும் மக்களை ஏமாற்றி, மிரட்டி தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். அவர்களை கேடயமாக வைத்துக் கொண்டு போலீசார் மீது சரமாரியாக தாக்கினார்கள். லத்தி இல்லாததால் போலீசார் பல இடங்களில் அடி வாங்கினார்கள். போராட்டத்தை தூண்டிவிட்டு,
   வன்முறையை வெடிக்கச் செய்யும் நோக்கம் போலீசாருக்கு இல்லை.

   அப்படி ஒரு நோக்கம் இருந்திருந்தால் தலையில் ஹெல்மெட்,
   உடம்பில் கவசஉடை, கையில் லத்தி, துப்பாக்கியோடு போலீசார்
   தயார் நிலையில் வந்திருப்பார்கள்.

   ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தை கொளுத்தியது யார்? என்பது
   கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள வீடியோ காட்சி மூலம்
   தெளிவாக தெரியவந்தது. ஒரு குறிப்பிட்ட அமைப்பைச்
   சேர்ந்தவர்கள்தான் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தை பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்து கொளுத்தினார்கள். போலீஸ் நிலையத்தை வெளியில் பூட்டிவிட்டனர். இது கொடூரமான செயல் இல்லையா?

   போலீஸ் நிலையத்திற்குள் மாட்டிக்கொண்ட பெண் போலீசார்
   வயர்லெஸ் மூலம் அழுதபடியே தகவல் கொடுத்தனர்.
   அதன்பிறகுதான் போலீஸ் நிலையம் கொளுத்தப்பட்ட சம்பவம் தெரிய வந்தது. உடனடியாக துணை கமி‌ஷனர் சுதாகர் போலீஸ்படையோடு அனுப்பி வைக்கப்பட்டார். நானும் அங்கு நேரடியாக சென்றேன்.

   போலீஸ் நிலையத்திற்குள் மாட்டிய போலீசார் மீட்கப்பட்டனர்.

   இதுபோன்ற சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச்சூடு நடத்திதான் கூட்டத்தை கலைத்திருப்போம். ஆனால், அப்போதுகூட துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. வன்முறையாளர்கள் விரட்டித்தான் அடிக்கப்பட்டனர்.

   இரு சம்பவங்களில் போலீசார் வாகனத்துக்கு தீ வைப்பதுபோலவும், வாகனத்தை லத்தியால் உடைப்பதுபோலவும் உள்ள ஒரு வீடியோ
   காட்சியை ‘வாட்ஸ்–அப்’பில் பரப்புகிறார்கள்.

   இரு சம்பவத்தை
   தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப
   2 ஆயிரம்முறை காட்டி
   போலீசார்தான் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்ற தோற்றத்தை
   உருவாக்குகிறார்கள். ஜல்லிக்கட்டுக்காக உண்மையாக போராடிய
   மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் உண்மை நிலவரம் என்ன
   என்பது தெரியவரும். வன்முறையாளர்கள் நடத்திய வெறியாட்டங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் எங்களிடமும் உள்ளது.

   ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் கொளுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரமும் எங்களிடம் இருக்கிறது. இதை ‘வாட்ஸ்–அப்’பில் எங்களாலும் வெளியிட முடியும்.

   ஆனால் நடந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணை
   நடந்துவருகிறது. விசாரணை முடிந்தபிறகு உரிய ஆதாரங்களோடு வன்முறையில் ஈடுபட்டு பிரச்னையை பெரிதாக்கிய 7 சமூக விரோத அமைப்புகளின் பெயர் விவரங்கள் வெளியிடப்படும். சில மத அமைப்புகளும் பின்னணியில் இருந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றி விசாரணை நடத்திவருகிறோம்.
   வெளி மாவட்டங்களிலிருந்து சமூக விரோதிகள் சென்னைக்கு வந்து திருவல்லிக்கேணி பகுதியில் ‘மேன்சன்’களில் தங்கி இருந்துள்ளனர்.

   மாட்டாங்குப்பம், நடுக்குப்பம், அயோத்திகுப்பம் போன்ற பகுதிகளிலும் அவர்கள் ஊடுருவியுள்ளனர். அதுதொடர்பான ஆதாரங்களும் உள்ளது.

   வெளி மாநிலங்களிலிருந்து சமூக விரோதிகள் சென்னைக்கு
   வந்தார்களா? என்பதுபற்றி விசாரணை நடத்தப்படும்.

   குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் நோக்கத்தோடுதான்
   ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்பி இந்த சமூக விரோத
   அமைப்புகள் சதித் திட்டம் தீட்டி செயல்படுத்தியுள்ளனர். அரசின்
   செயல்பாட்டை முடக்குவதற்கும் இவர்கள் திட்டம் தீட்டி
   செயல்பட்டிருக்கிறார்கள். போலீசார் வாகனங்களை சேதப்படுத்துவது போன்ற வீடியோ காட்சிகள் தொடர்பாக முழு அளவில் விசாரணை நடந்து வருகிறது. அதில் போலீசார் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 7. S சொல்கிறார்:

  During my college days, we students did two protests against TN govt policies within our university system. The first one was great success (the cause is simple, but organized and led well). The second one was partially success but flopped at last day (the cause is strong, but many ETTAPPARKAL played foul-play). So student protest against government can never be a simple and straightforward. It will have a lot of problems, but determination to final goal is always strong.

  When these 5 people are happy with ordinance by TN govt, if they felt it is sufficient for them, they should have gone silently. Why did u make inconsistent (in determination) videos and confuse the core protesters. It weakened the strength of protesting student. So these people are modern day ETTAPPARKAL. I don’t have any hesitation to say this.

  What will government loose if the law is enacted at the assembly in the morning and student finish the protest at marina in after noon? Educated and thoughtful people will know the answer.

  Any way, these guys dirty skin is washed. Otherwise we will be fooled under the disguise of cow-skin!

 8. selvarajan சொல்கிறார்:

  // பின்வாசல் வழியாக ஓடிய ’பொறுக்கி’ புகழ் சு சாமி: விரட்டியடித்த அமெரிக்கத் தமிழர்கள்! //
  Read more at: http://tamil.oneindia.com/news/international/us-tamils-strong-agitation-against-porukki-fame-subramanya-swamy-272659.html … இது இந்த சமயத்திற்கு தேவையான செய்தியாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் — !!!

 9. தமிழன் சொல்கிறார்:

  நண்பர் S சொல்வது ஏற்கக்கூடியது அல்ல. ‘தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்’ என்பதுதான் கூட்டம் கூடியதன் காரணம். அதன் காரணியாக ‘ஜல்லிக்கட்டு’ செயல்பட்டது. முதல்வர் அவசரச் சட்டம் இயற்றியதும், போராட்டக்காரர்களின் கோரிக்கை முடிவடைந்துவிட்டது. S சொன்ன எவரும், காரணமில்லாமல் போராட்டத்தை முடிக்கச்சொன்னவர்களல்லர்.

  கடைசி நாள் வன்முறைக்குக் காரணம், சமூக விரோதிகளை இந்தப் போராட்டத்தில் நுழையவிட்டதுதான். அவர்களுக்கு எப்படி இந்தக் கூட்டத்தை உபயோகப்படுத்தி மத்திய அரசுக்கும் திரு ஓபிஎஸ் அரசுக்கும் எதிராக கூட்டத்தைத் திருப்பலாம் என்பதுதான் முக்கிய அஜெண்டா. அதை ஆதரிப்பவர்கள், வேறு யாரிடமும் கேட்கவேண்டாம். தான் ஆதரிக்கும் கட்சி என்ன, அதன் தற்போதைய தலைமையைத்தான் ஆதரிக்கிறோமா என்று தன் மனசாட்சியிடம் கேட்டுக்கொண்டால் போதுமானது.

  காவலர்களின் கடுமையான நடவடிக்கையும் ஏற்கக்கூடியதாக இல்லை (பார்வையாளன் என்ற என் பார்வையில்). அவர்களுக்குத்தான் கள நிலவரமும், என்ன அடையவேண்டும் என்ற கடமையும் தெரியும். பொத்தாம் பொதுவாக அரசு இயந்திரத்தைக் குறை சொல்வதிலும் உடன்பாடில்லை. அதிலொருபகுதி தவறு செய்திருந்தால், காவல்துறையின் தலைவர்கள் கட்டாயம் நடவடிக்கை எடுப்பார்கள்.

 10. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நான் சென்னையில் தான் இருக்கிறேன்…
  நடந்த விஷயங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டு
  தான் இருந்தேன்…
  சில இடங்களுக்கு நேரிலும் சென்றிருந்தேன்.
  பல விஷயங்களை அருகில் இருந்தும் பார்த்தேன்…

  அருமையாகத் துவங்கி,
  வெகு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது
  மாணவர்களின், இளைய தமிழர்களின் போராட்டம்.

  ஆனால், எப்போது தமிழக முதல்வர் அவசர சட்டத்தை
  பிறப்பித்து, அலங்காநல்லூரில் வாடி வாசல் திறக்கப்பட்டு,
  ஜல்லிக்கட்டு நிகழ்த்தப்படுவதை அறிவித்தாரோ, அப்போதே –
  போராட்ட களத்தில் இருந்தவர்கள் –

  ஆரவாரத்துடன், மகிழ்ச்சியுடன் அதனை வரவேற்று
  தங்களது வெற்றியை மெரினாவிலேயே கொண்டாடிவிட்டு
  வீடு திரும்பி இருக்க வேண்டும்.

  ஆனால், மகிழ்ச்சியும், அமைதியும் திரும்புவதை –

  போராட்டத்தை துவங்கிய இளைஞர் கூட்டத்திற்கு
  இந்த பெருமையும், புகழும் போய்ச்சேர்ந்து விட்டால்,
  எதிர்காலத்தில் தங்களது அரசியல் வாழ்வு
  மங்கி விடும் என்பதை –

  – உணர்ந்த, சில அரசியல்வாதிகள் வேண்டுமென்றே
  திட்டமிட்டு, தங்கள் ஆட்களை உள்ளே நுழைத்து-
  போராட்டத்தின் நோக்கங்களை திசை திருப்பி,
  போராட்டத்தையே ஹைஜாக் செய்து கொண்டு போய்
  விட்டார்கள்.

  போராட்டத்தை துவங்கியவர்களுக்கு அதனை முடித்து வைக்கும்
  சுதந்திரம் கிடைக்கவில்லை… தங்கள் கருத்துக்களை,
  வெளிப்படையாக பேசக்கூட முடியாதபடி அவர்கள்
  முடக்கப்பட்டார்கள்…. இனி தங்களால் ஆகக்கூடியது
  ஒன்றுமில்லை என்பதை உணர்ந்த சிலர் துணிச்சலாக
  வெளியேறி விட்டார்கள்…. எந்த முடிவுக்கும் வரமுடியாமல்
  இருந்த மக்கள் – இந்த அரசியல்வாதிகளின் சுயநல வலையில்
  சிக்கினர்… விளைவு – தேவையில்லாமலே போராட்டம் தொடர்ந்தது.

  இத்தனை கலவரங்களுக்கும் மூல காரணம் –
  அரசியல்வாதிகளும்,
  அவர்கள் ஏவிவிட்ட கூலிப்படைகளும் தான்.
  இதனை நான் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்திலேயே
  எச்சரித்து எழுதி இருந்தேன்… அதுவே தான் இறுதியில் நடந்தது.

  Anyway – இப்போதும், போராட்டத்தை துவக்கியவர்கள்
  சோர்ந்து போக வேண்டியதில்லை…. இன்றைய இந்த வெற்றிக்கு
  அவர்கள் தான், அவர்கள் துவக்கி நடத்திய போரட்டம் தான்
  முழு காரணம்… ஆனால், அவர்களுக்கு ஒரு பாடம்,
  அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் –
  இப்போது, அரசியல்வாதிகளின் மூலம் கிடைத்திருக்கிறது….

  நடந்து முடிந்த கலவரங்களில், வன்முறைகள் நிகழ்ந்திருப்பது
  உண்மை. ஆனால், இந்த வன்முறையின் பின்னால் –
  பல தரப்பட்டவர்களும் இருக்கிறார்கள். ஒரு வெளிப்படையான,

  நேர்மையான – நீதி விசாரணை நடந்தால்,
  அதிர்ச்சியான பல உண்மைகள் வெளிப்படலாம்….

  நம் அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை,
  அவர்கள் தங்களது சுயநலனுக்காக
  எந்த அளவிற்கும் செல்வார்கள் என்பதை –

  மாணவர்களும், இளைஞர்களும் –
  அரசியல்வாதிகளைப்பற்றிய
  முழு உணர்தல், அனுபவம் இல்லாத பொதுமக்களும் –

  தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

  விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்திரவு இட
  வாய்ப்பு இருக்கிறது என்பதே என் கருத்து.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   என் நண்பர் ஒருவர் அனுப்பி இருக்கும் ஒரு வீடியோவை
   இங்கு பதிவு செய்கிறேன்.

   காவல்துறை உதவி கமிஷனர் எவ்வளவு பொறுப்பாகவும்,
   விளக்கமாகவும் பேசுகிறார் பாருங்கள் …!!!
   இவர் பேச்சை கேட்ட பிறகு போராட்டம் நடத்தி வந்த
   அத்தனை பேரும் அமைதியாக கலைந்து சென்று விட்டனர்…!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.