திரு.S.P.B. – தனது 50 ஆண்டுக்கால இசைப்பயணத்தை பற்றி கூறும் ஒரு அருமையான பேட்டி…..!!!


நாம் விரும்பும், நமக்குப் பிடித்தமான – திருவாளர்கள்
இளையராஜா, ஏ.ஆர்.ரெஹமான், யேசுதாஸ், பாரதிராஜா, பாலசந்தர், ஜானகி அம்மா என்று –

இன்னும் பலரைப் பற்றியும், தனது சுவையான
வாழ்க்கைப்பயணத்தையும், அனுபவங்களையும்,
மிகவும் வெளிப்படையாக திரு.S.P.பாலசுப்ரமணியன்
அவர்கள் கூறும் ஒரு பேட்டியை படித்தேன்.
மென்மையான அவரது குரலைப்போன்றே –
அவரது பேட்டியும், யார் மனதையும் புண்படுத்தாதபடி
இனிமையாகவும், ரசிக்கும்படியும் அமைந்திருக்கிறது.

நமது வலைத்தள நண்பர்கள் அவசியம் படித்து அனுபவிக்க
வேண்டிய அந்த பேட்டி கீழே –

spb-1

spb-2

spb-3

spb-4

spb-5

spb-6

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to திரு.S.P.B. – தனது 50 ஆண்டுக்கால இசைப்பயணத்தை பற்றி கூறும் ஒரு அருமையான பேட்டி…..!!!

 1. தமிழன் சொல்கிறார்:

  எஸ்.பி.பி. பேசி நிறையக் கேட்டிருக்கிறேன் (சூப்பர் சிங்கர் அல்லது பேட்டி). அவர் ஒரு நல்ல மனிதர் என்ற தோற்றம்தான் முன் வருகிறது. இந்த உடலில் பிபி சுகர் இல்லை என்று சொல்வதே, அவர் மனது ரொம்ப லேசானது என்பதைச் சொல்லுகிறது. அவர் இளையராஜாவைப் பற்றிக் குறிப்பிட்டதும் சரி.

  ஒரு தடவை (இரண்டு வருடங்களுக்குள்ளாக) அவரை சென்னை ஏர்போர்ட் லவுஞ்சில் பார்த்தேன். (அவர், மனைவி, சகோதரியோடு வந்திருந்தார்). சிறிய லவுஞ்ச். அங்கே கமலும் இருந்தார், ஆனால் சில நிமிடங்கள் முன்பு வந்த அவர், கண்ணைமூடி ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்தார். கடைசி வரை எஸ்.பி.பி. அவர்கள், தொந்தரவு செய்யவில்லை. (பொது குணம், ஹலோ சொல்லி அட்டென்டென்ஸ் போடுவது).

  டி.எம்.எஸ் அவர்கள் எப்போதும் இழந்துவிட்ட காலத்தையும், பணம் பண்ணும் வாய்ப்பையும் எண்ணி வருத்தப்படும்/சலித்துக்கொள்ளும் குணம் கொண்டவராக இருந்தார். எஸ்.பி.பி அப்படி இல்லை.

  எல்லாருக்கும் எல்லாமுமே அமைய விடாதே இயற்கை. அது அவருடைய மகன் ரூபத்தில் கஷ்டங்கள் கொடுத்தது. ஆனாலும் மகிழ்ச்சியோடு இருந்தார் (வெளியில்). இப்போது எந்தத் தொல்லையும் இல்லாமல் அமைதியோடு இருப்பதை அறிந்து ரொம்ப மகிழ்ச்சி.

 2. selvarajan சொல்கிறார்:

  தமிழ் திரையுலகத்திற்கு இவரை அடையாளம் காட்டி — பிரபலப்படுத்திய ” ஆயிரம் நிலவே வா ” பாடலை இவர்தான் பாட வேண்டும் என்று – இவரது உடல்நிலை சரியாகும் வரை காத்திருந்த அந்த காரணகர்த்தா — திரு எம்.ஜி.ஆரைப்பற்றி ” ஒரு வார்த்தை கோடிட்டு ” சொல்லியிருக்கலாம் …… 50 — ஆண்டுகால இசைப்பயணம் மேலும் சிறக்கட்டும் ….!!!

 3. selvarajan சொல்கிறார்:

  பாடும் நிலா வின் சிறப்பான செய்தி படிக்கின்ற போதே — வேறு ஒரு செய்தி வந்து இந்தியமக்களை ” கிச்சு – கிச்சு ” மூட்டி கவலைகளை மட்டுமா மறக்கடிக்க நினைக்கிறது — மற்ற எல்லாவற்றையும் தான் …. அந்த செய்தி :– // நான் வங்கிகளில் கடன் வாங்கவில்லை : மல்லையா // http://www.dinamalar.com/news_detail.asp?id=1698607 — அப்படி போடு …! பாவம் … வெளிநாட்டுக்கு தப்பியோடியது — சொத்துக்கள் ஏலத்திற்கு வந்தது –விமானங்களை விற்றது — அரசு இவருக்கு சலுகை காட்டி பல கோடிகளை தள்ளுபடி செய்தது — ” வங்கி ஏய்ப்பாளர் ” என்று விருது வாங்கியது எல்லாம் நடந்தது இந்திய மக்களின் – கனவில் …! பாவம் இவர்… !!உண்மைதான் கடன் வாங்கவில்லை ஏய்த்து இருக்கிறார் … அவ்வளவே … வங்கிகள் என்றால் என்ன … ? என்று கேட்டாலும் ஆச்சர்யமில்லை ….!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.