மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கும் ஒரு காட்சி ….!!!

காஷ்மீர், ஸ்ரீநகரில் நாளைய குடியரசுதின விழா நிகழ்ச்சிகளில்
கலந்து கொள்ள பயிற்சி செய்யும் பள்ளி மாணவிகளின்
“வீர நடை”….. (மார்ச் பாஸ்ட்..)

ஸ்ரீநகர் - குடியரசு தின அணிவகுப்பு - ரிஹர்சல்...

ஸ்ரீநகர் – குடியரசு தின
அணிவகுப்பு – ரிஹர்சல்…

தரையில் உறைந்திருக்கும் இந்த பனியில்
மிக மிக மெதுவாகவும், கவனத்துடனும் நடக்க வேண்டும்.
வேகமாக நடக்க பயிற்சி வேண்டும்.
சென்ற ஜனவரியில் நான் பனி நிறைந்த சாலையில்
நடக்கும்போது, பழக்கம் இல்லாததால் –
இரண்டு முறை கீழே விழுந்தேன்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கும் ஒரு காட்சி ….!!!

 1. தமிழன் சொல்கிறார்:

  இதுல பின்னூட்டம் இடுவதற்கு காலைலேருந்து சிக்கல்.

  ஏற்கனவே பின்னூட்டம் இட்டு, வெளியிடும்போது இடுகையே காணாமல்போய்விட்டது.

  எந்தப் புகைப்படம், எந்த மாதிரி மன’நிலையைத் தோற்றுவிக்கும் என்பதை அறிந்து நீங்கள் வெளியிட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  அனைவருக்கும் குடியரசுதின நல் வாழ்த்துக்கள்.

  என் தேசத்திலேயே எல்லாவிதமான நிலங்களும், பார்க்கவேண்டிய இடங்களும் உள்ளன. அவற்றைக் காண்பதற்கே ஆயுள் போதாது. எனக்கு மட்டும் ஹிந்தி தெரிந்திருந்தால், தேசத்தின் எல்லா இடங்களையும் நன்றாகக் காணமுடியும். ஒவ்வொரு இடத்தையும் அனுபவித்துப் புரிந்துகொள்ளமுடியும். சுற்றிலும் பனிமலைகள். பாதையில் பனி கலந்த மண்பாதை. பார்ப்பதற்கே அட்டஹாசமாக இருக்கிறது. ‘காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்’ பாடல் ஞாபகம் வருகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப தமிழன்,

   wordpress-ல் ஏதோ டெக்னிகல் பிரச்சினை…
   சில நாட்களாகவே தொந்திரவு கொடுக்கிறது….
   சரி செய்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

 2. jksm raja சொல்கிறார்:

  எல்லாம் சரிதான். அது என்ன

  “ எனக்கு மட்டும் ஹிந்தி தெரிந்திருந்தால், தேசத்தின் எல்லா
  இடங்களையும் நன்றாகக் காணமுடியும். ஒவ்வொரு இடத்தையும் அனுபவித்துப் புரிந்துகொள்ளமுடியும்.”

  ஏன் வட இந்தியன் தமிழ் தெரியாமல் தமிழ் நாட்டை சுற்றி பார்க்கவில்லையா ?
  ஏன் இந்த சந்தடி சாக்கில் ஹிந்தி விளம்பரம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப jksm raja,

   நண்பர் தமிழன் எந்த கோணத்தில் இதை சொல்கிறார் என்பதை
   நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

   உள்ளூர் மொழி தெரிந்து ஒரு இடத்தை சுற்றிப்பார்த்து
   அனுபவிப்பதிலும், மொழி தெரியாமல், தட்டுத்தடுமாறி –
   பதட்டத்துடனேயே பயணம் செய்வதற்கும் நிறைய வித்தியாசம்
   இருக்கிறது.

   நான் திருச்சி, ஸ்ரீரங்கத்திலும், மதுரையிலும் வட இந்தியர்கள்
   பலர் திண்டாடுவதை பார்த்து உதவி இருக்கிறேன்.
   மொழி தெரிந்தால் கூடுதல் confidence…!!!

   இந்தி மொழியை தெரிந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை..
   திணித்தால் தான் தவறு.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • தமிழன் சொல்கிறார்:

    ஹிந்திக்கு நான் விளம்பரம் தந்து ஆகப்போவதில்லை. எந்தத் திணிப்புகளும் (மொழித்திணிப்பு, கருத்துத்திணிப்பு, கடவுள் திணிப்பு போன்ற பல) எதிர்வினையே உண்டாக்கும். இந்தியாவில் பொது மொழி என்று பார்த்தால் ஹிந்திதான். இது தெரிந்திருந்தால் தென்னகத்திலேயே survive பண்ணமுடியும். சில அரபிக்களே என்னிடத்தில் ஹிந்தியில் பேசும்போது, நான் மதராசி, ஹிந்தி நஹி மாலும்னு வழிய வேண்டியிருக்கிறது. அது நிச்சயம் additional qualification. அது தவிர மலையாளம் அறிந்திருந்தால் கூடுதல் பலம். தென்னகம்னு சொல்லும்போது தமிழ்நாடும் விரைவில் அடங்கும் என்பதை, சென்னையில் உள்ள பல கடைகள் எனக்கு சமீபகாலமாக உணர்த்துகின்றன.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்பது தமிழனாகிய என்னைப் பொறுத்த வரையில் உண்மை

 3. புது வசந்தம் சொல்கிறார்:

  கூடுதல் மொழி தெரிந்தால் கூடுதல் confidence…!!!, என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை.

 4. Peace சொல்கிறார்:

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.