மெரினா போராட்டத்தில் – கலந்திருந்த திமுகவினர் …?

மெரினாவில் மாணவர் போராட்டத்தில், திமுக வினர் கலந்திருந்தனர் என்பதற்கான சான்றுகளாக, நண்பர் ஒருவர் அனுப்பி இருக்கும் சில புகைப்படங்கள், நமது வலைத்தள
நண்பர்களின் பார்வைக்காக கீழே….
( நன்றி – திரு.செந்தில்நாதன்… )

img-20170123-wa0014

img-20170123-wa0013

img-20170123-wa0011

img-20170123-wa0012

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to மெரினா போராட்டத்தில் – கலந்திருந்த திமுகவினர் …?

 1. Antony சொல்கிறார்:

  Latest inquiries says it was DMK, in police uniform who set fire to the threewheelers and huts of fishermen. Please check on that as well and reveal the truth SIR..

 2. இளங்கோ சொல்கிறார்:

  Antony.

  intha pugaipadangalai paarthu ungalukku yane ivvalavu VEgam ?

  • Antony சொல்கிறார்:

   Hi Elango,
   I thought both the news are inter related.
   I was not sure about the information. I could not find it in any major mainstream media. So I just wanted clarify from KM or my fellow readers of this blog. Do you have any of that news I mentioned? Is it true?

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப Antony,

    தீ வைத்தது யார் என்பது பற்றி உறுதியான தகவல்
    எதுவும் கிடைக்கவில்லை… இப்போதைக்கு கிடைக்கவும்
    வாய்ப்பில்லை…

    ஆனால், கலவரங்களின் பின்னணியில் திமுக
    முக்கிய பங்கு வகித்தது என்பதற்கான பல ஆதாரங்கள்
    வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

    ஒரு நீதி விசாரணை தான் முழு உண்மைகளையும் வெளியே
    கொண்டு வரும் என்பது என் கருத்து.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • Antony சொல்கிறார்:

     Exactly, there is no second thought for an open inquiry..
     //தீ வைத்தது யார் என்பது பற்றி உறுதியான தகவல்
     எதுவும் கிடைக்கவில்லை//
     Have you got a chance to watch the clippings of men and women in uniform setting fire to vehicles? Do you have any opinion on that?

 3. GVS சொல்கிறார்:

  போராட்டம் நல்லவிதமாக முடிவடையக்கூடாது
  என்று திமுகவும் விரும்பியது. மீனவர் குப்பங்களில்
  நடந்த கலவரங்களில் திமுகவுக்கும் பங்குண்டு.
  திமுக லோக்கல் தலைவர் ஒருவர் காவல் நிலையம்
  முன்பு இருந்த வாகனங்கள் கொளுத்தப்பட்ட வழக்கில்
  தலைமறைவாகி தேடப்பட்டு வருகிறார் என்று
  செய்திகள் வருகின்றன.

 4. Tamilian சொல்கிறார்:

  ஐஸ் ஹவுஸ கலவரத்தில் 12 பேர் குற்றவாளிகள் என்று போலிஸ் கூற்று. அதில் 7 பேர் திமுக, 5பேர தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த சிறுபான்மையினர் , அனைவரும் தலைமறைவாகிவிட்டனர. எனது ஏரியாவில 23ம தேதி அன்று போக்குவரத்தை தடுத்தது திமுகவினரே. அவர்களுக்கு எப்படியாகிலும அரசை கவிழ்த்து பதவியை பிடிக்க வேண்டும் என்கிற வேகம் .

 5. இளங்கோ சொல்கிறார்:

  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஒரு வாரம் போராட்டம் நடத்திய இளைஞர் களை அரண்போல் பாதுகாத்த போலீஸார் மீது களங்கம் சுமத்து வது நியாயமா?
  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிய இளைஞர்களை உற்சாகப்படுத்திய போலீஸாரை திட்டலாமா? என்பது போன்ற கேள்விகள் வாட்ஸ்அப், முகநூல் வழியாக போலீஸார் தரப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

  அதில்,

  ‘இளைஞனே உங்க ளோடு காத்துக்கிடந்தோம்,
  உங் களை காத்துக்கிடந்தோம்’ என ஆரம்பித்து,

  ‘உன்னை எரித்து குளிர் காய நினைத்தவர்களிடம் இருந்து
  உன்னை காத்தவர்கள் இப்போது காயங்களுடன், கண்ணீருடன்…’
  என காவலர் ஒருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

  அதேபோன்று சென்னை கலவரத்தில் காய மடைந்த போலீஸ்காரர் ஒருவர் மருத்துவமனையில் இருந்தபடியே இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோவும் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

  இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த காவலர் ஒருவர் கூறும் போது,

  “சென்னை கலவரம் மாண வர்கள் கூட்டத்தில் ஊடுருவிய சிலரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. மாணவர்களின் போராட்டத்துக்கு போலீஸார் ஆதரவாக இருந்தனர். மாணவர்கள் போர்வையில் கூட் டத்தில் புகுந்த பல்வேறு அமைப் பினர் ஜல்லிக்கட்டு கோரிக்கை நிறைவேறியபோதும் மாணவர் களை கலையவிடாமல் தடுத்து வந்தனர். இதை கண்டுபிடித்து அவர்களை வெளியேற்ற முயன்ற போது போலீஸார் மீது தாக்கு தல் நடத்தப்பட்டது.

  ஆனால் திட்ட மிட்டு போலீஸார் மீது களங்கம் சுமத்தப்படுகிறது. சமூக வலை தளங்கள் மூலம் போலீஸாருக்கு ஏற்படுத்தப்பட்ட களங்கத்தை அதே சமூக வலைதளங்கள் மூலம் நீக்க முயன்று வருகிறோம்” என்றார்.

 6. today.and.me சொல்கிறார்:

  அன்பின் காமைஜி,

  உங்களது இந்தப் பதிவில் எனக்கு ஒன்றிரண்டு சந்தேகங்கள்
  1. இந்தப் புகைப்படங்களின் படி திமுகவினர் மாணவர்கள் போர்வையில் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள் என்றே வைத்துக்கொண்டாலும்,

  a. அங்கு மாணவர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபடவில்லை. பலதரப்பட்ட வேலைகளில் பணிபுரிந்தவர்கள், சுயதொழில்செய்வோர், இல்லத்தரசிகள், தாய்மார்கள், சிறுகுழந்தைகள் என்று பலரகம். எல்லாருமே தமிழ் இனஉணர்வு, தமிழ்க்கலாச்சார மீட்டெடுப்பு, ஜல்லிக்கட்டு என்ற உணர்வின் பால் முதலில் கூடியவர்கள் …
  நிலவரம் இப்படி இருக்க, திமுகவினருக்கு தமிழ்உணர்வு இருக்கக்கூடாதா? உண்மையில் திருவாளர் முத்துவேல் கருணாநிதி மட்டும் செயல்படக்கூடிய நிலையில் இருந்திருந்தால் இப்படிப்பட்ட போராட்டம் நடைபெற ஆரம்பித்தபோது அவரே களத்தில் இறங்கியிருப்பார். நிலைமை வேறுவிதமாகி இருக்கும். பாவம் ஸ்டாலின்.

  b. அப்படி எந்த அரசியல்வியாதியுமோ, பிரபலஸ்தர்களோ கலந்துகொள்ளக்கூடாது என்று மாணவர்கள் உறுதியாக இருந்திருந்தார்களேயானால் திமுகவின் ஸ்டாலின் விரட்டியடிக்கப்பட்டபோது நாம் தமிழர் கட்சி சீமான் அனுமதிக்கப்பட்டது எப்படி? மே17 இயக்க திருமுருகன் காந்தி உள்ளே நுழைந்தது எப்படி? ஆர்ஜேபாலாஜி, லாரன்ஸ் போன்றோர் தலைமைச்சக்திகளாக உருமாற முயன்றது எப்படி?

  2. நீங்கள் கடைசியாக இணைத்துள்ள புகைப்படத்தில் இருப்பவர் திருவள்ளுர் திமுக பொறுப்பாளர். தான் இந்தப் போராட்டத்தைக் கண்டுவர மெரினாவுக்குச் சென்றபோது இந்தப் பெண்ணின் கோஷங்களும் அவருடன் இருந்த கூட்டத்தையும் கண்டு இன்ஸ்பையர் ஆகி தானும் அவர்களுடன் நின்று கோஷங்களை எழுப்பியதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இந்தப் பெண்ணுக்கும் திமுகவும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. இது குறித்து தனக்கும் அதிமுக/திமுகவுக்கும் எந்தவித சம்பந்தமும்கிடையாது என இப்பெண்ணே வீடியோ வெளியிட்டிருக்கிறார் என்பதை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். அனாவசியமாக ஒரு இளம்பெண்ணைப் பற்றி அவதூறு கிளம்ப தாங்களும் ஒரு காரணமாகிவிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

  3. இதே போராட்டத்தில் அதிமுக சார்பிலும் நிறைய கறுப்பாடுகள் கலந்துகொண்டு ஓபிஎஸ்ஸுக்கு எதிராக செயல்பட்டதாகவும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன என்பதை தங்கள் மேலான கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.

  ——-
  மேலும் தாங்களே கூறியுள்ளதுபோல
  பாரபட்சமற்ற
  நீதி விசாரணை தான்
  முழு உண்மைகளையும் வெளியே
  கொண்டு வரும் என்பதுவே எனது கருத்தும்.

 7. Sakthivel சொல்கிறார்:

  அதிமுக காரர்கள் யாருமே போராட்டத்தில் கலந்துக்கலையா?
  திமுக காரகள் தமிழர்கள்தானே? உண்ர்வு இருக்காதா? கலந்துகொள்ளக்கூடாதா?
  எந்த கட்சி காரர்களும் கலந்துகொள்ளக்கூடாது என்றால், யாருமே இருக்க மாட்டார்கள் போராட்டத்துல

 8. today.and.me சொல்கிறார்:

  கோவை கலவர சமயத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகள் என முதன் முதலில் கருணாநிதி சட்டசபையில் பேசியதற்கும்

  ஏறு தழுவுதல் போராட்டத்தில் முழு விபரம் தெரிந்தும் ஒசாமா பின் லேடன் படம் என பன்னீர் செல்வம் சட்டசபையில் பேசியதற்கும்
  வித்தியாசம் இல்லை.

  அதிமுக – திமுகவாக மாறுகிறது

  தமிழ் நாட்டில் மத நல்லிணக்கம் இருப்பதை பிடிக்காத – வேண்டாத பிரிவுக்கு
  அரசு ஆதரவளிப்பது போல இருக்கிறது.

  மத அடிப்படையில் ஓட்டு வங்கி அரசியல் செய்து இனி பயன் இல்லை.

  மத ரீதியான பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றாலும் தேர்தல் செல்லாமல் போகும். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டது.

  மதவாத சக்திகளுக்கு இடம் கொடுக்காது அந்த ஜெயலலிதா என்ற பெண்மணிக்காக விழுந்த ஓட்டை வைத்து ஆட்சி நடத்தும் நீங்கள்

  குறைந்தபட்ச நடுநிலையையாவது கடைப்பிடியுங்கள் திரு முதல்வர் அவர்களே. …

 9. natchander சொல்கிறார்:

  Stalin is highly desperate in his actions..
  all persons could feel that easily..
  stalin appreciates c.m ..next second he condemns c.m..
  stalin knows well that dmk would lose much edge if some of his partymen
  face trial and gets arrestedin the MARINA VIOLENCE..
  and very few dmk cadres supported stalins train roko…in chennai…
  and the chennai people cursed stalin for staging demonstration before trains..

 10. Tamilian சொல்கிறார்:

  DMK had always been an evil force. Stalin wants to grab power in short time by hook or crook. The fellows who are with Stalin now are not politicians with people’s interest at heart. At least Mu Ka would have realized what would jell with public . He would not have approved DMK starting attack on police and later getting caught with evidence linking them to violence. Today there is a video on the net which shows the men and women from fisher men kuppam near Santhome mixing chille powder in water to be thrown on police. Meticulously planned violence!

 11. selvarajan சொல்கிறார்:

  ஒவ்வொருவருக்கு — ஒவ்வொரு கருத்து … ! பல்வேறு தமிழ் தேசிய இயக்கங்கள் மற்றும் நக்சல் ஆதரவு இயக்கங்கள் போன்ற பல தீய சக்திகள் உள்ளே நுழைந்து விட்டன என்று காவல்துறையும் …

  முதல்வருக்கு ” ஒரு முக்கியத்துவம் ” இதனால் கிடைத்துவிட கூடாது என்று உள்ளடி வேலைகளும் — மாணவர்கள் எந்த கட்சியினரையும் அண்டவிடாமல் அணை போட்டதால் பல கட்சிகள் தங்களின் ஆட்களை உள்ளே நுழைத்தும் — தன்னெழுச்சி போராட்டத்தை வேறுபக்கம் திருப்பி ” வன்முறையில் ” கொண்டுபோய் முடித்துவிட்டு — இன்று யோக்கியர்களை போல நீலிக்கண்ணீர் வடிப்பது தான் — வேதனை மற்றும் வேடிக்கை …

  பல இயக்கங்கள் — கட்சிகள் நடத்திய பல போராட்டங்களுக்கு சேராத — கூடாத — ஆதரவு தராத பெரும்பான்மையான மாணவர்கள் — இளைஞர்கள் — மக்கள் கூட்டம் இந்த ” தன்னெழுச்சி ” போராட்டத்திற்கு கூடியதை கண்டு — இந்த கூட்டத்தை எபப்பாடுபட்டாவது அப்படியே நிறுத்தி வைக்க வேண்டும் என்பதில் தீவிர முனைப்பு காட்டி — தங்களின் தீய சதிகார கயமைத்தனங்களை காட்டிவிட்டன– என்பதே உண்மை ….

  இவ்வளவு மாபெரும் கூட்டத்தை அவர்கள் வாழ்நாளில் இனி கூட்டுவது கடினம் என்பதால் — ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி தங்களின் ” கேப்மாரி ” வேலைகளுக்கு உள்ளாக்கி கொண்டு விட்டார்கள் …

  ஒரு நல்ல — நேர்மையான — முறையான …. ” அனைத்து இயக்கங்கள் — கட்சிகள் — பல பெயர்களில் பவனி வரும் பஞ்சாயத்துகள் ” என்று ஒருவரையும் விடாமல் விசாரணை நடத்தினால் — உண்மைகள் வெளிவரும் …. அப்படித்தானே …. ?

 12. தமிழன் சொல்கிறார்:

  இடுகையையும், பின்னூட்டங்களையும் படித்தேன். ரொம்ப காலம் கழித்து ‘Today and Me’ஐப் பார்க்கிறேன். அவருக்கு மட்டும் என் கருத்தைச் சொல்லலாம் என்று தோன்றியது.

  “திமுகவினருக்கு தமிழ்உணர்வு இருக்கக்கூடாதா? ” – தமிழன் அனைவருக்கும் இருக்கவேண்டிய உணர்வு இது. போராட்டத்தின் காரணம் ஜல்லிக்கட்டு நடைபெறவேண்டுவது. அதற்கான முயற்சியை எடுக்கவேண்டியவர்கள் தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் அவர்கள். இருவரும் முயற்சி எடுத்து அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தப் போராட்டம் அதிமுகவுக்கு அல்லது பாஜக வுக்கு எதிரானது இல்லை. அப்படி இருந்திருந்தால் 60 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் இதில் கலந்துகொண்டிருக்கமாட்டார்கள். இதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், போராட்டத்தில், பிரதமரையும், முதல்வரையும் இழிவாகப் பேசியவர்கள் ‘கயவர்கள்.. அவர்கள் தமிழர்கள் இல்லை’ என்பதிலும் எனக்குச் சந்தேகம் இல்லை. காசுக்காகக் கூச்சல்போடுபவர்களை அடக்கி ஒடுக்கியது கொஞ்சம்கூடத் தவறு இல்லை. இந்தக் கூட்டத்தைச் சாக்காக வைத்து, கூட்டத்துக்குச் சம்பந்தமில்லாத எதனையும் யார் பேசியிருந்தாலும், அவர்கள் கலவரம் செய்யவந்தவர்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை.

  முதல்வர் அவர்கள், சட்டசபையில் ஒரு படத்தைக் காண்பித்துப் பேசியது ஒரு களங்கம்தான். முழுமையான விசாரணை முடித்தபின்பு அவர் அதைப் பற்றிப் பேசியிருக்கலாம். ‘ஒன் இந்தியா’வின் அதிபர்கள் யாரென்றும், சன் தொலைக்காட்சி யாரைப் பேட்டி எடுக்கும் என்றும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

  மத நல்லிணக்கம் – இதற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் தமிழகத்தில் வெற்றிபெற முடியாது. தமிழர்கள் இயல்பாகவே மற்ற மா’நிலத்தவரைவிட புத்திசாலிகள் (இது தற்பெருமையினால் சொல்லவில்லை). ஆனாலும், மதவாதிகள் எதிர்காலத்தில் வெற்றி பெறுவார்களேயானால், அதற்கு, மற்ற மத அடிப்படைவாதிகளும், ஜால்ரா வீரமணிகளும்,, இந்துவை இழிவாகப் பேசும் கருணானிதி கும்பல்களும் மட்டுமே காரணமாக இருத்தல் இயலும்.

  மற்ற கலவரக்காரர்களுடனும் கூட, ஓபிஎஸ் அவர்களுக்குப் பெருமை சென்றுவிடக்கூடாது என்று திட்டமிட்ட அதிமுககாரர்களும் இருந்திருக்கக்கூடும். அதில் சந்தேகம் இல்லை. அதனால்தான் அலங்கா’நல்லூர் ஜல்லிக்கட்டு மாத்திரம் உடனே நடை பெறவில்லை; ஜல்லிக்கட்டு நிர்வாகிகள் சின்னம்மாவுக்குக் கொடிபிடிக்கின்றனர்.

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப தமிழன்,

   நீண்ட நாள் கழித்தும்கூட என்னை நினைவிலிருத்தியமைக்கு நன்றி.

   திமுகவினரும், அதாவது திமுக தொண்டனும்கூட தமிழன்தானே..

   தமிழக-திமுக தொண்டர்கள் போட்ட ஓட்டுகளும் சேர்ந்துதானே திமுக ஆட்சி மலர்ந்தது கடந்த காலத்தில்.

   //இந்தப் போராட்டம் அதிமுகவுக்கு அல்லது பாஜக வுக்கு எதிரானது இல்லை.// ஆனால் மாநிலத்திலும் மத்தியிலும் ஆளும் கட்சிகள் இவைதாமே. இவற்றின் மூலமாகத்தானே போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கைகளைப் பெறவேண்டும். இந்த இரண்டு கட்சிகளைத்தானே இவர்கள் கேட்டாகவேண்டும். இந்தப் போராட்டம் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எதிராகவே திட்டமிடப்பட்டது என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

   நீங்கள் சொல்வதுபோலிருந்தால், இந்த போராட்டக்காரர்கள் தமிழ்நாட்டைவிட்டு டெல்லியில் போய் உட்கார்ந்தோ, அல்லது இதற்குக் காரணமான திமுகவின் அறிவாலய வாசலிலோ, அல்லது காங்கிரஸின் சத்தியமூர்த்தி பவன் வாசலிலோ, அல்லது டெல்லியில் சோனியாஜியின் வீட்டு வாசலிலோ போராட்டத்தை நடத்தியிருப்பார்கள்.

   //காசுக்காகக் கூச்சல்போடுபவர்களை அடக்கி ஒடுக்கியது கொஞ்சம்கூடத் தவறு இல்லை. // நானும் தவறு என்று சொல்லவில்லையே?

   //முதல்வர் அவர்கள், சட்டசபையில் ஒரு படத்தைக் காண்பித்துப் பேசியது ஒரு களங்கம்தான். முழுமையான விசாரணை முடித்தபின்பு அவர் அதைப் பற்றிப் பேசியிருக்கலாம். // அதைத்தான் சொல்கிறேன். அவர் யாரை அல்லது எதைக் காப்பாற்ற அந்த ஒன்றைக் காட்டிமட்டும் தப்பித்துக்கொள்கிறார்.

   ///திட்டமிட்ட அதிமுககாரர்களும் இருந்திருக்கக்கூடும்// முதல் நாளிலிருந்து அவர்களும் உள்ளே இருந்தார்கள். களத்தில் நானே கண்டவை.

   கடைசியாக, அலங்கை வாடிவாசல் எம்.என் முதல்வராக வந்து திறந்துவைப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறது என்று எதிர்பார்க்கிறேன்.

   நன்றி.

   • today.and.me சொல்கிறார்:

    இன்னுமொரு தகவல் குறிப்பிட விட்டுப்போய்விட்டது.

    நான் பின்னூட்டம் எழுதியதற்கு முக்கியக்காரணமே, அந்த குறிப்பிட்டப் பெண்ணைப் பற்றிய புகைப்படத்தால்தான். எனது பின்னுட்டத்திற்குப் பிறகாவது அதனை மட்டுமாவது காமை நீக்குவார் என எதிர்பார்த்தேன். இல்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கையை வைத்து அநேகமாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, உதிரிகள் அனைவரும் விளையாடி முடித்துவிட்டபிறகாவது இந்தப் பெண் கொஞ்சம் அமைதியாக உறங்கட்டும் என நினைத்தேன்…

    என்ன செய்வது? நடப்பது நடக்கட்டும்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப டுடேஅண்ட்மீ,

     உங்கள் வாதம் எனக்குப் புரியவில்லை…

     பல லட்சம் மக்கள் கூடியிருந்த இடத்தில் –
     விரும்பியே, வேண்டியே –
     கோஷம் போட்ட,

     பாட்டுப் பாடி, நடனம் ஆடிய ,
     தன்னை வீடியோ எடுக்கிறார்கள் –
     அது தொலக்காட்சிகளில் வரும், வரவேண்டும் என்று
     தெரிந்தே, விரும்பியே – அனைத்தையும் செய்த –

     கிட்டத்தட்ட அத்தனை தொலைகாட்சிகளிலும்,
     ஊடகங்களிலும் வெளிவந்த அந்த நிகழ்வை –
     இங்கேயிருந்து மட்டும் நீக்க வேண்டும் என்கிற உங்கள் வற்புறுத்தலின்
     பின்னணி எனக்கு புரியவில்லை…

     குறிப்பாக – அவர் போட்ட கோஷங்களை
     முழுவதுமாக நீங்கள் கேட்டீர்களா…?

     அதை எல்லாம் அவரே தயார் செய்திருப்பாரா..?
     அல்லது வேறு யாராவது தயாரித்துக் கொடுத்திருப்பார்களா…?
     அவராகவே தயாரித்திருந்தாலும் சரி,
     வேறு யாராவது சொல்லிக் கொடுத்ததை செய்திருந்தாலும் சரி –
     அதை அரங்கேற்றிய பொறுப்பு அவருக்கு இருக்கிறதா – இல்லையா…?
     அவர் போட்ட கோஷங்களை எல்லாம் நீங்கள் ஏற்கிறீர்களா…?

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • today.and.me சொல்கிறார்:

      அன்பின் காமை,
      உங்களுக்கு நான் சொல்ல வந்த விஷயத்தை சரிவர புரியவைக்க இயலவில்லை என்றே நினைக்கிறேன்.

      அந்தப் பெண் வேண்டி விரும்பி செய்த அந்த செயல், அல்லது செய்யவைக்கப்பட்ட செயலுக்கு ஏற்ற மாதிரியாக எல்லா மீடியாக்களும் அதை ஒளிபரப்பின. எனவே நீங்களும் ஒளிபரப்பியிருக்கிறீர்கள் என்று தான் உங்கள் வாதம் என்றால் நான் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.

      அங்கே குழுமியிருந்த லட்சக்கணக்கான பேர்களிலில் கூச்சல் கோஷங்களில் இதைவிட மோசமான அசிங்கமான கேவலமான வசனங்களெல்லாம் மூன்றாம்நாள் தொடங்கி மற்ற நாட்களிலெல்லாம் அதிகமாகவே இருந்தன. அப்போதெல்லாம் அங்கிருந்த போலிசார் பெண்கள் மாணவமாணவியர் உட்பட அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டும் அந்த இளைஞர்களுடன் கொஞ்சிக்குலாவிக்கொண்டும்தான் இருந்தார்கள்.

      ஆனால் இந்தப் பெண் கோஷம் எழுப்பியபோது அருகிலிருந்து ஒருவன் செல்போனைக் காட்டி இந்த வசனத்தைப் பேசு என்று இயக்குவதையும், சிலவற்றைப் கத்தும் அந்தப் பெண் சிலவற்றை மறுக்கிறதையும் நான் வீடியோவில் பார்த்தேன்.

      அதிமுக பொதுச்செயலாளர் பற்றி அந்தப் பெண் கோஷம் எழுப்பியதைப்போல , அதைவிட அதிகமாகவே அங்கு லட்சக்கணக்கானோர் கத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லார் வீட்டுக்கும் ஆட்டோ அனுப்பிவிட்டார்களா என்ன? ஒரு பெண், அழகாகவும், கொஞ்சம் கூட்டத்தினரை அட்ராக்ட் பண்ணுகிறமாதிரியும் இருந்தால் நாலு ஆண்கள் பக்கத்தில் வரத்தான் செய்வார்கள். அப்படி வந்து கூடநின்று கத்தி அதை விடியோவும் பிடித்துப் போட்டு சிலர் அலைகிறார்கள் என்றால், …அதை அறியாதஅல்லது உங்கள் வாதத்தின் படி அறிந்தே இருந்த அந்தப் பெண் வீட்டுக்கு, அவள் பெண் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பி கேட்கிறவிதத்தில் மன்னிப்புக்கேட்க வைப்பீர்களா?

      அடுத்தநாளே விங்கிய கண்களோடு “கறுப்புச்சட்டைபோட்டு அங்கே ஆயிரம் பேர் இருந்தார்கள், எனக்கு என் அருகில் இருந்த ஆளைத் தெரியவே தெரியாது, அதுவும் அவர் திமுக என்று தெரியவே தெரியாது, நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவள் இல்லை” என்று ஒரு வீடியோ வெளியிட்டாளே… அதை எந்த மீடியாவாவாது வெளியிட்டதா? அதைப்போலவே நீங்களும் அதை அறியவில்லையா?

      அந்தக் கறுப்புச்சட்டை திமுக பிரமுகரும்கூட எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கழுதையாய்க் கத்தினாரே,,,, யாராவது எந்த மீடியாவாவாது கண்டுகொண்டார்களா?

      வேறெந்த மீடியாவும் சொல்லவில்லை, நீங்களும் சொல்லவில்லை
      மற்ற மீடியாக்களெல்லாம் சொன்னதால், நீங்கள் சொல்கிறீர்கள் – என்று சொல்லவருகிறீர்களா? எனக்குத்தான் நீங்கள் சொல்லவருவது புரியவில்லை.

      நிற்க.

      எத்தனையோ தொண்டர்கள் ஒருவரை அண்ணா என்கிறார்கள், ஒருவரை அப்பா என்கிறார்கள், ஒருவரை ஐயா என்கிறார்கள், ஒருவரை அம்மா என்கிறார்கள். உண்மையாகவே இவர்கள் இவர்களோடு உடன்பிறந்தவரா? பெற்றவரா? அய்யனா? பெற்ற அம்மாவா? இல்லையே,,, தங்களைப்போன்ற மைன்ட்செட் மற்றும் அன்பினால் அழைப்பதுதானே.. அப்படி ஒரு நடுத்தரவயதுப்பெண்மனி, இந்தப் பெண்ணை மகளே என்று பெருமைப்பட்டு பேனர் வைத்தால், அவர் வீட்டுக்கு ஆள் அனுப்பி அதை எடுக்கச்சொல்லி அன்புத்தொல்லை கொடுப்பார்களா?

      என்னைப் பொறுத்தவரை, திமுக வானாலும் சரி, அதிமுகவானாலும் சரி, இல்லை வேறெந்தக் கட்சியென்றாலும் சரி – தவறென்றால் தவறுதான். சரி யென்றால் ஏற்றுப் பாராட்டக்கூடியதுதான். மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

      ஆண்களைப் பற்றிக் கவலை இல்லை… அதுவும் அரசியலில் அவர்கள் எதுவும் செய்யலாம்.. ஆனால் பெண்கள், அதுவும் இது இன்னதுதான் என்று புரியாத வயதில் இது போராட்டங்களின் கவர்ச்சியினால் வந்து விழும் பெண்களை உபயோகித்துக்கொள்ளும் ஆண்களை என்ன செய்யலாம்?

      ஒன்று, ச்சீ இவன் புத்தி இவ்வளவுதான் என்று பண்ணலாம்..
      இல்லையென்றால், இப்படிப்பட்ட ஆண்களுக்கு பதில்சொல்லவென்றே, இன்னொரு புரட்சிப்பூவாக வெடித்துவா மகளே என்று அவளை வாழ்த்தலாம்.

      நான் இரண்டையும் செய்கிறேன். புரிந்துணர்வுக்கு நன்றி.

 13. natchander சொல்கிறார்:

  The so called chinnamma had taken a sweet revenge upon C.M by not offering a seat in the dais in aiadmks mla/mp meeting
  and reports are there from madurai that madurai based ministers did not extend the required help to the administration when madurai collector was driven from pillar to post by the pro jallikattu group.
  as mentioned by me in my earlier posting that stalin is highly desperate now sasikala and her devotees are also highly desperate….
  well i would like to request km ji to analyse why sasikala still prefer to be in poes garden…much against the wishes of tamil nadu people…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.