ஜேம்ஸ் பாண்ட் – தீம் ம்யூஸிக் …!!!

_dr-_no_ost_album_cover

நேற்றிரவு ஜேம்ஸ் பாண்ட் படம் ஒன்றை பார்த்தேன்.
டைட்டில் ஓடும்போது வரும் அந்த தீம் ம்யூஸிக்கை
கேட்டதும், நான் 54 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த –
கேட்ட ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் முதல் படமான
டாக்டர் நோ – நினைவிற்கு வந்தது. அப்போதே நினைத்துக்
கொண்டேன் – இது பற்றி எழுத வேண்டுமென்று….!!!

54 ஆண்டுகள் கழிந்தும் அதே தீம் ம்யூஸிக் இன்னமும்
பயன்படுத்தப்படுவது, தொடர்ந்து ரசிக்கப்படுவது ஒரு
உலக அதிசயம் தானே….?

யூ ட்யூபில், இதே தீம் ம்யூஸிக் ஒரு live Orchestra கொண்டு,
2011-ல் பிபிசி நடத்திய ஒரு லைவ் நிகழ்ச்சியில்,
இசைக்கப்பட்டதை பார்த்தது நினைவிற்கு வந்தது….

நமது வழக்கமான இடுகைகளிலிருந்து ஒரு மாறுதலாக,

முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான –
டாக்டர் நோ – டைட்டில் இசை,

கூடவே பிபிசி ஆர்கெஸ்ட்ரா
லைவ் நிகழ்ச்சிகளை கீழே தந்திருக்கிறேன்…!!!

விடுமுறை நாள் தானே – ரசியுங்கள்….!!!

Dr. No Theme Song –

BBC Proms 2011: James Bond Theme Music –


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to ஜேம்ஸ் பாண்ட் – தீம் ம்யூஸிக் …!!!

 1. இளங்கோ சொல்கிறார்:

  Conductor Action Super .

  Even after 54 years, it is liked by everyone
  including the present generation youngsters.

 2. LVISS சொல்கிறார்:

  Other theme songs which became famous were the ones from For a few dollars more,Good Bad Ugly (playing a medley of these two themes was a craze with western music troups at that time because they are composed in a minor scale and can beconected ) , Laras theme from Dr Zhivago and Old Turkey Buzzard from Mckennas Gold —

 3. selvarajan சொல்கிறார்:

  அய்யா …! 1964 — காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள பல திரையரங்குகளில் — படம் துவங்கும் போது வெண்திரைக்கு முன்னாள் உள்ள அலங்கார திரையை மேலே உயர்த்தும் போது ஒரு ” ம்யூசிக் ” இசைக்கும் — அது தான் ” Come september ” தீம் ம்யூசிக் — அந்த அலங்கார திரை உயர்வதற்கும் — இந்த ம்யூசிக்கிற்கும் — அவ்வளவு பொருத்தமாக இருக்கும் … கேட்டு ரசிக்கவும் https://youtu.be/j5ubkktjzIg …. !!!

 4. D. Chandramouli சொல்கிறார்:

  ‘Come September’ tune was used in certain places in Sivaji’s movie, “Iruvar Ullam”. My then friend in TAFE viewed this movie in Sayani theater some twenty times just for the Come September tune alone!

  • LVISS சொல்கிறார்:

   Mr Chandramouli sir, “Vandhal ennodu varai ilanthenrale ” is good adaptation of Come September theme song –The movie Anbe Va .they say ,was an adaptation of Come September movie —
   In a theater in Ooty before they close the door to statrt the movie after interval they used to play ‘Kadhavai sathadi ,kaiyil kasillathavan kadavul analum” ” song– That was the signal for the door man to close the doors —
   In those times they were very strict about allowing small boys for adults only movie –Come September was an adult movie — I was refused entry —

   • D. Chandramouli சொல்கிறார்:

    Dear Mr LVISS, yes, those were the golden days. We can’t remember the events that happened in the last two or three decades, but the days when we were teens or early twenties are ever imprinted in our minds! Even our likes and dislikes are dictated by that age segment.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர்களுக்கு –
     ( முக்கியமாக செல்வராஜன், எல்விஸ், சந்திரமவுலி )

     இந்த ஒரு விஷயத்தை இந்த தளத்தில் நான்
     மீண்டும் மீண்டும் அனுபவிக்கிறேன்.
     நான் எவ்வளவோ தலைப்புகளில்
     வெவ்வேறு விஷயங்கள் பற்றி எழுதுகிறேன்…

     ஆனால், இந்த மாதிரி பழைய
     நினைவுகளைப்பற்றி எழுதும்போது மட்டும்-

     அது பல நண்பர்களுக்குள் வித்தியாசமான உணர்வுகளையும்,
     கடந்த காலங்களை நினைவுபடுத்துவதாக அமைவதையும்
     பார்க்க முடிகிறது..

     எனக்கு கூட அப்படித்தான். பழைய திரைப்படங்கள்,
     மிகவும் பிடித்த பழையபாடல்கள் ஆகியவற்றை
     பார்க்கும்போது, முதன் முதலில் அதை எங்கே எப்போது
     எந்தவித சூழ்நிலையில் பார்த்தேன் – என்பதெல்லாம்
     நினைவிற்கு வந்து விடும்..

     ஆனால், இது பழைய விஷயங்களுக்கு மட்டும் தான்
     பொருந்துகிறது…

     OLD IS GOLD என்ற சொற்றொடரை முதன் முதலில்
     சொன்னவர் மிகவும் அனுபவப்பட்டு தான்
     சொல்லி இருக்கிறார்…..

     இனி – அடிக்கடி நினைவு கூர்வோம்…!!!

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • LVISS சொல்கிறார்:

      Mr K M , after a certain age we begin to live a life of regrets ,feeling sorry for many hurt that we would have caused to others unintentionally and sometimes intentionally, and memories of good things and a longing to go and see the place/house where we spent our school days –
      The power to retain in memory recent happenings fades as you step into the other side of the square —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.