பார்த்தவுடனே பிடிக்கவில்லை – ஆனால், பார்க்க பார்க்க ……. பரவாயில்லை…!!!

jaitley12-u10141039229wbg-621x414livemint

பார்த்தவுடனே பிடிக்கவில்லை –
ஆனால், பார்க்க பார்க்க ……. பரவாயில்லை…!!!

நேற்று தொலைக்காட்சியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி
அவர்கள் பட்ஜெட்டை படித்ததை பார்த்தபோது – ஒரு பெருத்த
ஏமாற்றம் ஏற்பட்டது உண்மை…. ஒரு வெறுமை உணர்வு…
இதற்குத்தானா அத்தனை அவஸ்தையும் என்று தோன்றியது….

demonetization – பண மதிப்பிழப்பினால் சொல்லொணா
அவஸ்தைகளுக்கு உள்ளான இந்த நாட்டின் சாதாரண
குடிமக்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் இந்த பட்ஜெட்
அளிக்கவில்லையே என்று எரிச்சல் வந்தது…
மக்களின் வேதனைகளை சற்றும் புரிந்து கொள்ளாத அரசு,
அவற்றிற்கு மாற்று நிவாரணம் அளிக்காத அரசு – என்ன அரசு
என்று தோன்றியது….

மற்றொரு பக்கம் யோசித்ததில், ரூபாய் நோட்டுகள்
செல்லாக்காசு ஆக்கப்பட்டதன் நல் விளைவுகள்
இவை, இவை என்று வெளிப்படையாக அறிவிக்கும் நிலையில்
அரசு தற்போது இல்லாத நிலையில் இருப்பது தான் காரணமோ
என்று தோன்றியது.

இன்னொரு முக்கியமான காரணம் –
பல முக்கியமான விவரங்களை, ஜெட்லி அவர்கள் –
தான் படித்த உரையில் சேர்க்கவில்லை….
அவர் முழு பட்ஜெட்டையும் படிக்கவில்லை…

பின்னர், இரவிலும், இன்று காலையும் – செய்தி தளங்களில்
விடுபட்ட விவரங்களை எல்லாம் பார்க்கும்போது –
தேவலையே – மோசமில்லையே என்று தோன்றுகிறது….!

நீண்ட நாட்களாக தேர்தல் கமிஷனால் வலியுறுத்தப்படும்
பரிந்துரைகளில் ஒன்றான –
அரசியல் கட்சிகளுக்கு அநாமதேயங்களிடமிருந்து வரும்
நன்கொடைகளின் வரம்பை 20,000 -லிருந்து 2000 ஆக
குறைத்திருப்பது ஒரு பாராட்டத்தக்க விஷயம்.
( கூடவே அதிக பட்ச நபர்களின் எண்ணிக்கையையும்
வரைமுறைப்படுத்தி அறிவித்திருந்தால்
இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்….!! ).

மூன்று லட்ச ரூபாய்களுக்கு மேல் செய்யப்படும் அனைத்து
பரிவர்த்தனைகளும், மின்னணு அல்லது காசோலைகள்
மூலம் தான் செய்யப்பட வேண்டும் என்று விதிகளைக்
கொண்டு வந்திருப்பது – இன்னொரு பாராட்டத்தக்க விஷயம்.

மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடும்
பண முதலைகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய
சட்டம் கொண்டு வரப்படும் என்பதும் வரவேற்க வேண்டிய
விஷயம்.

குறைந்த வருமானமுள்ள ( Low Income Group ) மக்களுக்காக
கட்டப்படும் கட்டிடங்களை- அடிப்படை கட்டுமானங்கள் என்கிற
அந்தஸ்திற்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் –
இந்த வகை கட்டிடங்கள் கட்டப்பட, வங்கிகள் முன்னுரிமையில்
கடன் அளிக்க உதவும்…

வழக்கம் போல் பெரும் தொழில் அதிபர்களை மட்டும்
கவனிப்பது தவிர்க்கப்பட்டு, இந்த முறை
( small and medium enterprises) சிறு தொழில்களை, கவனிக்க
முற்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.

இந்த மாதிரி சில நல்ல அம்சங்கள் இருப்பது உண்மையே…
என்றாலும் கூட நாம் எதிர்பார்த்த மாதிரி
பட்ஜெட் அமையவில்லை என்பது நிஜமே…

பட்ஜெட்டில் நாம் ஏமாற்றப்பட்டதாக உணர்வதற்கான முக்கிய
காரணம் என்னவென்று யோசித்தால் –

“expectation leads to disappointment….
bigger expectation leads to bigger disappointment”
– என்கிற மொழி நினைவிற்கு வருகிறது…

பண மதிப்பீட்டிழப்பிற்கு பின் வரும் முதல் பட்ஜெட் என்பதால்,
இதன் மீதான எதிர்பார்ப்புகள் மக்களிடையே கூடி இருந்தன….

மேலும், 5 மாநில சட்டமன்ற தேர்தல்களும் வரவிருப்பதால்,
அந்த மாநில வாக்காளர்களைக் கவர என்று நிச்சயமாக
மக்களைக் கவரும் விசேஷ அறிவிப்புகள் வரும் என்று
மீடியாக்கள் வேறு பரபரப்பை உண்டு பண்ணியிருந்தன.

ஆனால், பட்ஜெட் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்
விதத்தில் இல்லாததால் உண்டானது தான் முதலில் தோன்றிய
ஏமாற்றம்….!

ஓஹோ என்று மெச்சும் அளவிற்கு இல்லாவிட்டாலும்,
தேர்தல்களை மையமாக வைத்து பட்ஜெட் அறிவிப்புகளை
மேற்கொள்ளாமல், யதார்த்தமான பட்ஜெட்டை தயாரித்த
விதத்தில், பாஜக அரசு பாராட்டுக்கு உரியதே…!!!

( இந்த இடுகை இங்கே முடிவடைந்து விட்டது…..!!! )

——————————————————————-

பின் குறிப்பு –

எனக்கொரு ஆசை…

கண்களை இறுதியாக மூடுவதற்கு முன்
(என் கண்களைத் தான்…!)

பேரறிஞர் ( = டாக்டர்…! ) சுப்ரமணியன் சுவாமி
அளிக்கும் பட்ஜெட்டையும்
பார்த்து விட வேண்டும்…

நடக்குமா ….? 🙂 🙂

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to பார்த்தவுடனே பிடிக்கவில்லை – ஆனால், பார்க்க பார்க்க ……. பரவாயில்லை…!!!

 1. paamaranselvarajan சொல்கிறார்:

  சு.சுவாமியின் ” பட் ” ஜெட் …? முன் ஜாமீன் கேட்டவர்களுக்கு … விடுதலையே கிடைத்தது பாேல … அதிசஙங்கள் நடக்க வாய்ப்புணடல்லவா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   வீட்டில் விருந்தாளிகள்… விவரமாக இப்போது
   எழுத முடியவில்லை….

   எனவே, பணம் என்று போட்டு கூகுளில் தேடினேன்…
   கிடைத்ததில் சில –

   பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – இதைப்
   பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
   பிழைக்கும் மனிதனில்லே:

   படம்: பணம் பந்தியிலே
   இயற்றியவர்: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
   இசை: கே.வி. மஹாதேவன்
   பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

   —————————–

   ‘‘ஈட்டி எட்டுனம்புட்டுத்தான்(எட்டியவரை) பாயும்
   பணம் பாதாளம் வரை பாயும்’’

   என்கிற பழமொழி எடுத்துரைக்கின்றதாவது –

   உடல் பலம் உள்ளவன் எவ்வளவு தூரம் ஈட்டியை
   எறிய முடியுமோ? அவ்வளவு தூரம்தான் எறிவான்.
   ஆனால் பணக்காரன் இருந்த இடத்தில் இருந்துகொண்டே
   பாதாளம் வரையும் செல்வான். அனைத்தையும் பணத்தின் வாயிலாகச் சாதித்து விடுவான். அவனிடம் இருக்கும் பணத்திற்காகவே பழகுபவர் பலராக இருப்பர்.

   இதனை,
   ‘‘கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்
   கூட்டமிருக்கும் உன்னோடு’’
   என்ற கண்ணதாசன் வரிகள் எடுத்தியம்புவது
   சிந்தனைக்குரியதாகும்.

   ————————————–

   பணமாகிய பொருள் முட்டாளை அறிவாளியாக்குகிறது,
   அறிவாளியை முட்டாளாக்குகிறது.
   நல்லவனைக் கெட்டவனாகவும்,
   கெட்டவனை நல்லவனாகவும்,

   நீதியை, அநீதியாகவும், அநீதியை நீதியாகவும்,
   ஒழுக்கத்தை, ஒழுக்கக் கேடாகவும்,
   ஒழுக்கக் கேட்டை, ஒழுக்கமாகவும் மாற்றி விடுகிறது.
   இப்பணமாகிய பொருள் மனதனுடைய பண்பை
   அடியோடு மாற்றி விடுகிறது.

   பணம் இல்லாததை இருப்பதாகவும்,
   இருப்பதை இல்லாததாகவும் காட்டும் தன்மை கொண்டது.

   ——————-

   ‘‘பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்’’

   ———————–

   – ஆகவே –
   பணத்தின் அருமையை அறிவோமாக ..!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • Antony சொல்கிறார்:

   Su.Sa’s tweet: Tamil Porkies are making fun of me. Send them all to Jaffna.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப Antony,

    எனக்கும் கூட Jaffna போய் வர வேண்டுமென்று
    நீண்ட நாட்களாக ஆசை…சு.சா.தயவில் போய் வர
    முடியும் என்றால் மகிழ்ச்சியே … 🙂 🙂

    ஆனால், நான் அவரின் ” Porkies ” definition -க்குள்
    வருவேனா என்று தான் தெரியவில்லை…!!!

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 2. LVISS சொல்கிறார்:

  Yes we can call this a reasonably sensible budget – The FM sprang a surprise and caught all the political parties off guard –Nobody would have thought that the govt. will seriously implement the suggestion given by the E C to bring down the limit of undisclosed donations to Rs 2000/-BJP also will be affeced by this as they have about 65% of their donations below Rs 20 k -No parties can openly oppose this move –There is also another condition –Parties which do not file returns by Dec will lose exemptions –The window of Rs 2k is necessary to allow contributors of small amounts –
  I think that the limit of Rs 3 lacs for cash transaction is still high -It could have been Rs 1 lac – The bias towards agri sector islikely to continue in the next budget also —
  There was extensive debate on Uniform Basic Income on the day before the budget – Glad that there was no mention of it in the budget and the govt has no intention of implementing it , at least for now —It is as difficult and impractical as fully cash less economy –
  Two good thngs about this budget , One, railway budget getting merged into the main one ,saving lot of time– Two there is no specific mention of states in the speech —
  Middle class people got some relief from tax liability they deserved –Halving the tax liability is most welcome –However the income tax rebate is reduced to Rs 2500 from Rs 5000—But we must not lose sight of the fact that the banks are still only 70 to 80% normal as far as cash dispensation is concerned –Putting more 500 notes in circulation will ease the situation -Now Rs 2000notes are being accepted in some places as 500 notes are available – Looks like the people are not depending on ATMs even though restrictions have been removed — Limits fixed by banks will apply ,though
  Your desire (eternal?) desire to see Dr Swamy’s budget may not fructify —

 3. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! படஜெட் ஒரு பக்கம் — கே.டி . க்களின் விவகாரம் — சசி முதல்வராக பதவியேற்க நாள் குறிப்பு என்று கலந்துகட்டி செய்திகள் வந்தவண்ணம் இருந்தாலும் — நமக்கும் ஒரு ” எண்டெர்டைன்மெண்ட் ” கொடுக்க செய்திகளும் இருக்கத்தான் செய்கிறது …

  அப்படி ஒரு செய்தி :— // முத்துக்களோ கண்கள்… பாருங்கள்… “சிவாஜி கணேசனாக” மாறி நிற்கும் கட்ஜுவைப் பாருங்கள்! //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/this-is-the-favourite-tamil-song-markandeya-katju-273194.html இந்த செய்தியின் ஹைலைட் :– // ஒரு கமெண்ட்டுக்குப் பதிலளித்த கட்ஜு, நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன், என்னால் டூயட் பாடவும் முடியும். தயாரிப்பாளர்களிடம் சொல்லுங்கள் என்று அன்புக் கோரிக்கையும் வைததுள்ளார் கட்ஜு. // இவருடைய இந்த கோரிக்கையை நிறைவேற்றப்போவது … யார் …. ?

 4. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  what r the benefits of DM? Had to go through un necessary tortures—–

 5. LVISS சொல்கிறார்:

  On demometisation I do not know how many have come across this news in the link below -Imagine the situation if it has come about —

  http://timesofindia.indiatimes.com/india/under-rajan-rbi-had-sought-rs-5000-rs10000-notes-for-eroded-rs-1000/articleshow/56696822.cms

 6. புதியவன் சொல்கிறார்:

  இன்றைக்குத்தான் உங்கள் உண்மையான ஆசை புரிந்தது. மார்க்கண்டேயனாக, எமனைத் தரிசிக்காமல் நிலவுலகில் இருப்பது சாத்தியமில்லையே. தனக்கு நிச்சயம் அடங்காதவர்களை தலைவர் ஒரு முக்கியமான பொசிஷனுக்குக் கொண்டுவருவாரா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப புதியவன்,

   இதில் “எமன்” யார் என்பதை மட்டுமாவது
   வெளிப்படையாகச் சொல்லி விடுங்களேன்……
   எல்லாருக்கும் புரிய வேண்டுமல்லவா …!!! 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.