இந்த கார்ட்டூனுக்கு என்ன அர்த்தம்,,,? யாராவது சொல்லுங்களேன்….!!!

keshav

இந்த கார்ட்டூனுக்கான விளக்கங்கள் வரவேற்கப்படுகின்றன…!!!!!!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to இந்த கார்ட்டூனுக்கு என்ன அர்த்தம்,,,? யாராவது சொல்லுங்களேன்….!!!

 1. bandhu சொல்கிறார்:

  பட்டப் பகலில், குற்றவாளிக் கூண்டிலிருந்து, எல்லோர் முன்னிலையிலும், பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சட்டென்று மறைந்து விட்டார்களே!

 2. இளங்கோ சொல்கிறார்:

  சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்திக் கொண்டு
  நீதிதேவதை துணையோடு பறந்து விட்டனர்.

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இந்த விசாரணை துவங்கி 6 ஆண்டுகள் ஆகின்றன.
  இன்னமும் மலேசியாவிலிருந்து விசாரிக்கப்பட
  வேண்டிய aircell சாட்சி, விசாரணக்கே வராமல்
  வழுக்கிக்கொண்டே போகிறது.
  அது சம்பந்தமாக ஒரு பொதுநலவழக்கு
  வேறு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.
  விசாரணையே இன்னும் முடிவடையாத நிலையில் –
  வழக்கை இவ்வாறு முடித்து வைக்க முடியுமா ..?
  சுப்ரீம் கோர்ட் தான் சொல்ல வேண்டும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நல்ல வேளை – சுப்ரீம் கோர்ட் இன்று இந்த வழக்குக்கு
   தற்காலிகமாக உயிர் கொடுத்திருக்கிறது.
   8-ந்தேதி அடுத்த விசாரணை…!

 4. GVS சொல்கிறார்:

  பணம் இருந்தால்,
  எங்கு வேண்டுமானாலும் கதவு திறக்கும்.

 5. paamaranselvarajan சொல்கிறார்:

  ஜீ..பூம்…பா… பூதத்திற்கு விடுதலை ….?

 6. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஐயா
  சரவணபவன் ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டதற்கான காரணம் ஏதாவது தெரியுமா?
  பேக்கரிய நீ வெச்சக்கோ…அக்காவை நான் வெச்சுக்கறேன்
  என்கின்ற மாதிரி டீலிங் ஏதாவது இருக்குமோ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப அஜீஸ்,

   நான் சுத்த ” “வெஜிடேரியன்”….
   என்னிடம் நீங்கள் இந்த மாதிரி கேள்வி எல்லாம்
   கேட்டால் என்ன செய்வது….? 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. GVS சொல்கிறார்:

  எமக்கு சின்னம்மாவை தெரியும் –
  யார் இந்த அக்கா ?

 8. புதியவன் சொல்கிறார்:

  எனக்கு இதைப்பார்த்தவுடன், சட்டம் எப்படி எளியவர்களை நேர்மையாகவும், நியாயமாகவும், சட்டப்படியும் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்பதைக் கார்டூனாக்க வேண்டும் என்று தோன்றியது. எந்தச் சட்டமும் ஏமாந்தவர்களுக்கு என்றால் ஏன் நக்சலைட்டுகள் போன்றவர்கள் பெருகமாட்டார்கள்? எல்லோரும் ஆதாயம் கருதியும், சட்டத்தின் மாண்பைத் தீர்ப்பு என்ற ஆயுதம் மூலமும் வளைக்கமுடியுமானால் ஏன் மக்கள் வெறுப்பு பெருகாது? நீதிமன்றங்கள் நிச்சயம் தங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்திக்கொள்ளும் நேரம் வந்திருக்கிறது.

  சரவணபவன் ஹோட்டல்கள் மாறன்கள் வசம். வெங்கட்நாராயணா ரோடு சரவணபவன் கட்டிடம் ஸ்…ன்க்குச் சொந்தம், மாதம் 7 லட்ச வாடகை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி இடியாப்ப முறையில் ஊழல்கள் இருந்தால் எல்லோரும் எல்லோரும் தப்பிக்க வழிசெய்துவிடுகிறார்கள்.

  சிறையில் ஏதிலிகள் 5-10 வருடங்களுக்கு மேலாக குற்றம் சாட்டப்படாமல் வாடுகிறார்கள். எளியவர்களில் அகப்பட்டவர்களுக்கு அட்டமத்துச் சனி. வலியவர்களுக்கு எப்போதும் ஒன்பதில் குரு.

 9. சிவா சொல்கிறார்:

  மேலோட்டமாக பார்த்தால் மாறன்கள் சட்டத்தில் ஓட்டையில் இருந்து தப்பிவிட்டதை மட்டும் வரைந்துள்ளார் கேசவ் எனத்தோன்றியது. ஆனால் மகா புத்திசாலியான திரு.காமை தனது வாசகர்களுக்கு இம்புட்டு சுளூவான கேள்வியை தரமாட்டரே என எண்ணி ஓவர்நைட் உற்று பார்த்ததில் கேசவின் உள்குத்து புரிந்தது…. அந்த பாட்டில் எதைக் குறிக்கின்றது என்றால் ஜெயலலிதாவை அதாவது டாஸ்மாக் பாட்டில் இங்கு குறியீடு. அதாவது மாறன் ஜெயலலிதா என எல்லா அரசியல்வாதிகளும் சட்டத்திடமிருந்து தப்பிவிடுவார்கள் என அற்புதமாக விளக்கியுள்ளார் கேசவ், சரிதானே?

 10. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! வள்ளுவன் ஒரு குரலில் ” ஏகாரமாக ” ஒரு சொல்லை வைத்துள்ளான் – அந்த சொல் : தன் நெஞ்சே என்பது — அதாவது ” தன்நெஞ்சே தன்னைச் சுடும் ” என்பது — ஆனால் இந்த அரசியல் வா[ வியா] திகளை சுடுவதாக தெரியவில்லையே … ?

  இந்த குரலுக்கு திரு நெல்லை கண்ணன் அவர்கள் கூறுவது …… // பொய் கூறி வாழ்ந்திடலாம் என்று எண்ணும்
  பொறுப்பற்றோர் தனைப் பார்த்து வள்ளுவரும்
  சொல்கின்றார் ஒரு செய்தி ஆகா ஆகா
  சோர உணர்வுள்ளோர்கள் உணர்வதற்காய்
  எல்லார்க்கும் தெரியாதே பொய்கள் சொல்லி
  ஏய்த்ததுவாய் நினைக்கின்றீர் அய்யோ பாவம்
  உள்ளம் உம் உள்ளம் அப்பொய்யைக் கொண்டு
  உமைச் சுட்டு உமைச்சுட்டுக் கொன்றே போடும் — // என்னவோ உச்ச நீதிமன்றத்தில் ” சிறிதளவு உயிர் ” இருந்தாலும் — அங்கேயும் — ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   அந்த “சர்தார்ஜி” மிக வெளிப்படையானவர் என்று
   தோன்றுகிறது… ஆனால் ரிடையராக
   இன்னும் 7 மாதங்கள் தான் உள்ளன … !!!

   இவ்வளவு செய்தவர்களுக்கு
   அது வரை தள்ளிப்போட முடியாதா என்ன …?

   அவரது முந்தைய தீர்ப்பு ஒன்றிலிருந்து ஒரு quote –

   ——–

   No part of the natural resource can be dissipated
   as a matter of largess, charity, donation or endowment,
   for private exploitation. Each bit of natural resource expended must bring back a reciprocal consideration.

   ——–

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 11. marubadiyumpookkum சொல்கிறார்:

  always late justice makes these effects only

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.