எத்தனை நாட்கள் ஓடும் திருமதி ச.நடராஜன் ஆட்சி…???

s-n

“இன்றே இப்படம் கடைசி” என்று ஒரு பிட் போஸ்டர் ஒட்டி,
சிற்றூர்களில், சினிமா விளம்பர வண்டி தள்ளிக்கொண்டு
போவார்கள். பல வருடங்களுக்கு முன்னர் இருந்த வழக்கம் இது…

அது போல், சில தமிழ் செய்தி வலைத்தளங்களில்
மட்டும், திரு.OPS அவர்களின் கடைசி நாளைப்பற்றி
தினமும் செய்தி ( ? ) வந்து கொண்டிருந்தாலும்,
பெரும்பாலான தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் –

இங்கு ஒன்றுமே நடக்காதது போல்,
வேறு, கால்காசுக்கு பயனற்ற விஷயங்களை எல்லாம்
தினமும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்…

விசுவாசம்….?
பணிவுக்கு பணிவான பன்னீரை விட அதிக
விசுவாசம் காட்டும் தமிழ் டிவி, மீடியாக்கள்….!!! (ஏனோ..? )

ஆனால், ஏற்கெனவே டெல்லியில் பரவலாக
விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
6-ந்தேதியா, 9-ந்தேதியா என்பது மட்டும் தான் இன்னமும்
முடிவாகவில்லை … மற்றபடி கேபினட் லிஸ்ட்டே
தயாராகி விட்டது என்று ..!!!

ஆட்சியை பிடிப்பதில் எந்தவித சிரமமும் இருக்க வாய்ப்பில்லை.
மத்திய அரசு நினைத்தால், கவர்னர் மூலம் சிறிது விளையாட்டு
காட்டலாம்… அவ்வளவே.

ஆனால், பிடித்த ஆட்சியில் எத்தனை நாட்கள் தொடர முடியும்
என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி..

சுப்ரீம் கோர்ட்டிலிருந்து எப்போது வேண்டுமானாலும்
வெளிவர உள்ளதீர்ப்பு மட்டும் தான் வெளிப்படையான
அச்சுறுத்தலாக தெரியலாம்…

ஆனால் –

அமைச்சரவையில் இடம் கிடைக்காத எம்.எல்.ஏக்கள்
அத்தனை பேருமே அச்சுறுத்தல் தான்…
எத்தனை பேரை அமைச்சர்களாக்க முடியும்….?

அடுத்த பிரச்சினை – தேர்தலில் நின்று ஜெயித்து
எம்.எல்.ஏ. ஆவது… ஆறு மாத காலம் அவகாசம் இருந்தாலும்,
அதற்குள் எவ்வளவோ தடங்கல்கள் உருவாகலாம்…

பன்னீர் அவர்கள் இருக்கும் வரை தான் திமுக சும்மா இருக்கும்.
பன்னீர் அவர்கள் நகரும் பட்சத்தில், அதிமுக விலிருந்து
எம்.எல்.ஏக்களை தூக்கும் பணியில் திமுக தீவிரமாக
இறங்கும்…. திருவாளர் (துரை)முருகன் முறுக்கிக் கொண்டு
காத்திருக்கிறார் – தன் பணியைத் துவக்க…!!!

25 எம்.எல்.ஏ-க்கள் விலகினால் போதும் – ஆட்சி கவிழ…!!!
திமுகவிற்கு உள்ள பண வசதிக்கு இது ஒன்றும் பெரிய
விஷயமில்லை…

ஆறு மாதமோ, ஒரு வருடமோ –
சட்டமன்றத்தை செயலற்றதாக்கி விட்டு-
ஜனாதிபதி ( பாஜக….? )ஆட்சியை சீரும் சிறப்புமாக
நடத்தி விட்டு –

உடையும் அதிமுகவிலிருந்து ஒரு பகுதியினருடன்
சேர்ந்து புதிய சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதில்
பாஜக மத்திய தலைமையும் ஆர்வமாகவே இருக்கும்…

எந்த காரணத்தினால், திருமதி ச.நடராஜன் ஆட்சி ( ? )
அகற்றப்பட்டாலும், பெரும்பாலான தமிழக மக்கள்
அதனை வரவேற்கவே செய்வார்கள் என்று தோன்றுகிறது…!!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to எத்தனை நாட்கள் ஓடும் திருமதி ச.நடராஜன் ஆட்சி…???

 1. GVS சொல்கிறார்:

  Dr.Swamy in twitter –
  // If Sasikala becomes CM on Monday then she must crack down on Porkis //

  1) சு.சு.வே உறுதிப்படுத்தி விட்டார்… அப்புறமென்ன ?

  2) சு.சு. “பொர்க்கி” என்று குறிப்பிடுவது யாரை ?
  திரு.ம.நடராசனையா ?

 2. seshan சொல்கிறார்:

  interesting video
  1947 Indian Independence rare color video clip

 3. selvarajan சொல்கிறார்:

  காலங்கள் மாறும் .. காட்சிகள் மாறும் … ! என்ன ராஜாஜி ஹாலில் ” கட்டிப்பிடித்து ” ஆறுதல் பெற்றவர் 60 — நாட்கள் முதல்வராக காலம் தள்ளிவிட்டார் … அடுத்து ” தலையை தடவி ” ஆறுதல் பெற்றவர் முதல்வர் ஆகப் போகிறார் …. எது எப்படியோ மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களுக்கு தங்களின் அனைத்து ” திணிப்புகளையும் ” ஏற்றுக்கொண்டு தலையாட்ட ஒரு மாநிலம் கிடைத்து விடும் ….

  இப்போதே ரேஷன் அரிசிக்கான மானியம் அம்பேல் ஆகிவிட்டது — அடுத்து சர்க்கரை — அப்புறம் ரேஷன் கடைகளே இல்லாமல் ஆக்குவது போன்றவைகளும் நல்லவிதமாக நடந்தேறும் …

  எந்த வகையில் பார்த்தாலும் பயன் பெறப்போவது பா.ஜ .க.வும் — தி.மு.க.வும் தான் — சிறிது காலம் எதிர்ப்பு தலைவிரித்தாடும் — அப்புறம் … ? — ஓ .பி.எஸ். பா.ஜ.க பக்கம் போகாமல் இருப்பாரா …. ? ஆண்டவனுக்கே வெளிச்சம் …. அப்படித்தானே … ?
  எப்பேர்ப்பட்ட ” முதல்வர்களை ” கண்ட தமிழகம் …. தற்போது …. ?

 4. LVISS சொல்கிறார்:

  Even if made the C M Sasikala has to win an elction ti sustain the post – They say that winning in RK Nagar is difficult -She has to find a safe constituency –So there willbe two elections –
  Delhi also must be watching what is happening in T Nadu – If there is a rebellion against the elevation of Sasikala and the party is split DMK will benefit by it –From what is being heard the BJP at the center prefer O P S to continue as CM —
  The E C has raised some questions abou sasikala’s election —

 5. தமிழன் சொல்கிறார்:

  அதிமுகவில் இப்போது நடைபெறும் என்று எழுதியிருக்கும் செய்தி (சசிகலா முதல்வராவார் என்பது) சகிக்கமுடியாத்தாக இருக்கிறது. அதிமுக என்பது வெறும் எம்ஜியார் இமேஜும், இரட்டை இலையும் மட்டுமல்ல. அதனைத் தலைமை தாங்குபவர் அதிமுகவுக்குத் தகுதியானவர் என்ற மக்கள் ஆதரவும், அவர்களை ஈர்க்கும் திறமையும் கொண்டவராக இருக்கவேண்டும். இதற்கு அரசியலில் எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன. சசிகலா முதல்வர் ஆவது அதிமுகவுக்கு நல்லதல்ல. அதனை ஆதரிக்கும் கட்சிக்கார்ர்கள், குறுகிய கால லாபத்துக்காக, முகவரி கொடுத்த கட்சியைக் காவுகொடுப்பதாகத்தான் தோன்றுகிறது. வலிமையான தலைமை என்பது மக்களின், குறைந்தபட்சம் கட்சித்தொண்டர்களின் நன்மதிப்பைப் பெற்றதாக இருக்கவேண்டியது அவசியம். பேசத் தெரியாத்து மட்டுமல்ல, சசிகலா அவர்களுக்கு ஆளுமையும் இல்லை. இதில், நடராஜன், மன்னார்குடி கும்பல் என்று கட்சிக்குச் சம்பந்தமில்லாதவர்கள் ஆளுமை செலுத்துவதை எப்படி பொதுமக்களும், தொண்டர்களும் ஏற்றுக்கொள்வார்கள்? கட்சியும் ஆட்சியும், திமுக எதிர்ப்பிலும், இப்போது ஓபிஎஸ் அவர்கள் செய்துவருவதுபோல் தமிழக மக்கள் நலத்திலும் கவனம் செலுத்தினால் தமிழக மக்கள் அதிமுகவைக் கைவிட மாட்டார்கள். (சசிகலாவை, சின்னம்மா, அம்மாவை வழிநடத்தியவர் என்றெல்லாம் உளறுவதைக் கேட்கவே நாராசமாக இருக்கிறது. ஜெ. வளர்த்த கிளி, சசிகலா கும்பல் என்கிற பூனைகள் கையில் சிக்கக்கூடாது என்பதுதான் என்னைப்போன்ற அதிமுக அனுதாபிகளின் விருப்பமாக இருக்கிறது)

 6. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! பின்வரும் செய்தியை படித்தால் அந்தக்கால ” மாட்டு வண்டிகளின் ” பாகங்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் … அந்த பெயர்களை மீண்டும் படிக்கும் போது எழுகின்ற பழைய நினைவுகள் பற்றி …?
  // மாட்டு வண்டியின் ஸ்பேர் பார்ட்ஸ் பெயர்களும், அதன் பயன்களும்! // http://www.vikatan.com/news/agriculture/79225-name-and-uses-of-the-spare-parts-of-the-bullock-cart.art

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.