திரு.ஸ்டாலின் விரைவில் முதல்வர் ஆக அதிமுக MLA-க்களால் இன்று அஸ்திவாரம் போடப்பட்டது….!

இன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் புதிய முதலமைச்சரை
வாழ்த்துவதை விட –

அடுத்து விரைவில் முதலமைச்சர் பொறுப்பேற்கவிருக்கும்
திரு.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்வது
பொருத்தமாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று
நினைக்கிறேன்.

100% சுயநலவாதிகளாக மாறிவிட்ட
அதிமுக MLA -க்களையும்,
நிர்வாகிகளையும் –
தமிழக மக்கள் தண்டிக்க, அவர்களே இன்று சந்தர்ப்பத்தை
ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.

jayalalitha-amma-mortal-remains-pic-at-rajaji-hall

ஜெயலலிதா அவர்களின் மறைவில் தொடங்கி
தொடர்ந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வரும்
அரசியல்வாதிகளை – நீதிமன்றங்களால் தண்டிக்க
முடியாமல் போகலாம். ஆனால், அவர்களை
தண்டிக்க எப்போது வாய்ப்பு வருமென்று
தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வாய்ப்பை, இன்று அவர்களே உருவாக்கிக் கொடுத்து
விட்டார்கள்….

ஓட்டு கேட்டு மீண்டும் வீதிக்கு வாருங்கள்
எங்களின் அருமைப்பிரதிநிதிகளே….!!!

காரித்துப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to திரு.ஸ்டாலின் விரைவில் முதல்வர் ஆக அதிமுக MLA-க்களால் இன்று அஸ்திவாரம் போடப்பட்டது….!

 1. Vivekanandan சொல்கிறார்:

  well said Mr. Ka Mai. First time in my life i am ashamed. We need to teach them a lesson.

 2. selvarajan சொல்கிறார்:

  எதிர்பார்த்தது – நடந்தே விட்டது — எப்பேர்ப்பட்ட ” முதல்வர்களை ” கண்ட தமிழகம் ….! தற்போது … இவரை ஏற்கும்படியான சூழ்நிலையை உருவாக்கி — போயஸ் கார்டனில் ஜெயாவின் வீட்டில் ஆயாவாகவும் — அவரது காரில் மறைந்து உட்கார்ந்து வந்தவர்களையும் — முதல்வர் ஆக்குவதற்கா — நாமெல்லாம் வாக்குபோட்டோம் ….

  மக்களிடம் வாக்கு பிச்சைகேட்டு வரும் இவர்களை ” காரித்துப்பினால் ” மட்டும் போதுமா … ? தற்போது ஒரு உண்மை தொண்டன் பேனரை கிழித்தான் என்று — மந்திரி ராஜேந்திர பாலாஜியும் — மற்றவர்களும் சேர்ந்து அடிப்பதை — காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதும் டி . வி .களில் காட்டப்படுவதும் — ஏதோ ஒன்றை நோக்கி தமிழகம் செல்கிறது என்பது மட்டும் நிச்சயம் …

  கலைஞரை தான் பெரும்பாலானவர்கள் ” அரசியல் சாணக்கியர் — ராஜ தந்திரி ” என்றெல்லாம் கூறுவார்கள் — ஆனால் இந்த ” சின்னம்மாவும் — அவரது கூட்டமும் ” அவரை மிஞ்சிவிட்டார்கள் என்று கூறலாமா …. ? அருமையான காய் நகர்த்தல்கள் … ஆஹா .. ஓஹோ … பதவி வெறி … ?

  என்ன ஒரு சபதம் போட்டிருந்தால் ஜெயா இறந்த 60 — நாட்களில் — 5 – ம் தேதிபார்த்து இந்த முடிவுக்கு வந்து இருப்பார்கள் … எது எப்படியோ — சிரமமின்றி எளிதாக தி.மு.க. விற்கு ஆட்சியை பிடிக்க கதவுகள் திறக்கப்பட்டு விட்டன …. அப்படித்தானே …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அந்த 139 பேரில் ஒருவர் கூட தைரியமுள்ள,
   உண்மையான விசுவாசியாக இல்லை என்பது தான் பரிதாபம்.
   ஒரே ஒருத்தர் எதிர்த்திருந்தால் கூட மனதுக்கு
   கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும்.

   டெல்லிக்காரர்கள் அடிக்கிற கிண்டலை பார்த்தால்,
   நாம் தமிழ்நாட்டுக்காரர் என்று சொல்லிக்கொள்ளவே
   அவமானமாக இருக்கிறது.

   • srinivasanmurugesan சொல்கிறார்:

    அய்யா!!!
    தற்போது தமிழக சட்ட மன்றத்தினை கலைத்து இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதா?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     ஸ்ரீநிவாசன் முருகேசன்,

     தற்போதைக்கு …….
     ஆளும்கட்சிக்கு மெஜாரிட்டி இருப்பதால் –
     சட்டமன்றத்தை கலைக்க வழியில்லை நண்பரே…

     எதாவது….. நடந்தால் … பிறகு நிலைமை மாறலாம்.
     சீக்கிரம் நடக்க வேண்டுமென்று பிரார்த்திப்போம்.

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

   • M.Syed சொல்கிறார்:

    விசுவாசமாவது மண்ணாங்கட்டியாவது JJ. விடம் காட்டியது விசுவாசம் அல்ல பதவி போய்விடுமே என்ற பயம் மற்றும் நடிப்பு. நான்கு வருஷம் சம்பாரிக்க வேண்டுமே என்கிற கவலை இப்போது வேறு என்ன சொல்ல ???

    M. Syed
    Dubai.

  • john சொல்கிறார்:

   DMK IS 1000 TIMES BETTER

 3. வல்லம் தமிழ் சொல்கிறார்:

  உண்மையான , சத்தியமான வார்த்தைகள் சார்….உண்மையான தொண்டர்களின் குரலுக்கு கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல் முடிவெடுத்து விட்டார்கள்…அவசரப்பட்டு எடுக்கப்பட்ட முட்டாள் தனமான முடிவு..வரலாற்று பிழை..வருந்துகிறேன்

 4. LVISS சொல்கிறார்:

  Mr K M how do you expect Mr Stalin to become the C M – The AIADMK has still 4years in power – Are u expecting a split in the AIADMK party by which whoever becomes the CM wil be running a minority govt making it easy to be toppled any moment —
  We have to see whether Sasikala will contst from the sameconstituency in Chennai or choose another constituency —
  Mr OPS himself has proposed the name of sasikala we are told —-I think he had no choice –He may become the Dy CM or number two in the cabinet –
  In the midst of all this jallikattu was held in Madurai without thepresence of the C M –

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப LVISS,

   எல்லாவற்றையும் எழுத்தில் கொண்டு வந்து விட
   முடியாது…. என்னவெல்லாம் நடக்கிறது என்று
   கொஞ்சம் பொறுத்துப் பாருங்களேன்…..
   உங்களுக்கே புரிய வரும்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • SELVADURAI MUTHUKANI சொல்கிறார்:

    ஜெயலலிதா பதவியிலிருந்து விலகி இருந்த காலகட்டத்தில், தான் தாற்காலிகமாக பதவியிலிருந்தபோது இதே பன்னீர்செல்வம் டம்மியாகத்தானே செயல் பட்டார். ஆனால் இம்முறை தனக்கு நல்ல பெயர் வேண்டும் என்று முனைந்து ஆக்டிவாக சில பாராட்டும்படியான காரியங்களைச் செய்தார் என்பதைக் கண்டோம். சுயநலமாக இருந்தாலும் பொது நலனுக்கும் அது வகை செய்தது. இது போன்றே தன்னை முன்னிலைப்படுத்த சசிகலா பன்னீர்செல்வத்தை அகற்றி அவர் திட்டமிட்டு முதல்வராக ஆனாலும், நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்கின்ற முனைப்புடன் செயல்பட வாய்ப்பு உள்ளது. நாம் ஏன் நெகட்டிவாகவே சிந்திக்க வேண்டும்? நல்லது நடக்கும் என்றுதான் நம்புவோமே!!! எப்படி இருந்தாலும் தி.மு.க. வலுப்பெறுவது தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு ஆபத்து தானே!! சினிமாத்துறையில் இல்லாதவர்தான் ஒருமுறை ஆட்சி நடத்தட்டுமே!! அதையும்தான் அனுபவித்துப் பார்த்து விடுவோமே!!!!

    • ku maram சொல்கிறார்:

     anubhavi
     raja
     anubhavi

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப SELVADURAI MUTHUKANI,

     இது நெகடிவ் சிந்திப்பு அல்ல…
     முதல்வர் பொறுப்புக்கு வருபவர்,
     நேர்மையான, நேரான வழியில் வர வேண்டும்..

     அதன் பிற்பாடு தானே செயல்பாடு பற்றிய பேச்செல்லாம்
     எழ முடியும் …?

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 5. writer சொல்கிறார்:

  புதிய முதல்வரை வரவேற்போம்’
  அவரது செயல்பாடுகளைப் பார்ப்போம்’
  அதன் பிறகு சரியா தவறா என விமர்சிப்போம்,
  நம்பிக்கையோடு காத்திருப்போம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப writer,

   வருகின்ற விதமே சரியில்லை என்கிறபோது,
   எதற்காக வரவேற்க வேண்டும்…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. selvarajan சொல்கிறார்:

  // ஓட்டு போடாதவர்களுக்கு அரசை விமர்சிக்க உரிமையில்லை- சுப்ரீம் கோர்ட் //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/if-you-don-t-vote-you-have-no-right-blame-government-says-supreme-court-273362.html — அய்யா … ! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் …. ஓட்டு போட்டவருக்கு பிடிக்காத ஒருவரை முதல்வராக ” திணிப்பதை ” எந்த அரசிடம் தெரிவிப்பது … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   எந்த அரசிடமும் தெரிவிக்க வேண்டாம்…
   தெருவுக்கு வரும்போது “அந்த” “பிரதிநிதி”யை
   “கவனித்தா”லே போதுமானது…. சரி தானே…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. john சொல்கிறார்:

  DEAR SIR YOU CALL YOURSELF A CRITIC. I HOPE THAT IS THE MEANING OF VIMARSANAM. BUT DEAR SIR A TRUE CRITIC IS ALWAYS OBJECTIVE NEVER SUBJECTIVE. PEOPLE LIKE U WROTE ONLY WITH THE COVERT INTENTION OF DESTROYING DMK .AND U CAN SEE THE RESULT FOR YOUR SELVES TODAY IN TAMILNADU.

 8. தமிழன் சொல்கிறார்:

  “தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வரும் அரசியல்வாதிகளை” – இன்றைக்கு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு எந்தப் பக்கம் சாய்வது என்று சரியாகத் தெரியாததால்தான் அமைதியாக இருக்கிறார்கள். அவர்களில் நிச்சயம் 60 சதவிகிதமாவது, குறைந்தபட்சம் 40 சதவிகிதமாவது ஜெவுக்கு முழுக்க முழுக்க விசுவாசிகளாக இருப்பார்கள். ஜெ. அவர்கள் உழைத்த கழகத்தவர் எவருக்கும் பதவி கொடுத்தவர். அவருக்கு ஒரே ஒரு தேவை.. விசுவாசம், கழகப் பணி. அவர் மூலமாக எம்.எல்.ஏ அல்லது பதவிகளைப் பெற்றவர் நிச்சயமாக அந்த அன்பை, அரவணைப்பை அனுபவித்திருப்பார்கள். இன்றைக்கு அமைதியாக இருப்பது சகிக்க இயலாததாக இருக்கிறது. ஆனால், யாராவது ஒருவர் புரட்சியை ஆரம்பித்தால், நிச்சயமாக அவர்கள் அனைவரும் சேருவர். இதனை எழுதும்போது, பி.ஹெச்.பாண்டியன் அவர்களின் பேட்டியையும், மனோஜ் பாண்டியன் பேட்டியையும் கேட்டுக்கொண்டே எழுதுகிறேன்.

  இருந்தபோதும், அதிமுக எம்.எல்.ஏக்களில் ஒரு பகுதி, திமுகவை ஆதரித்தால், அதைவிட அவர்கள் அனைவரும் அரசியலிலிருந்தே ஓய்வு பெற்றுவிடலாம். வளர்மதி போன்ற, தம்பிதுரை போன்ற பச்சைத் துரோகிகளைப் பார்ப்பதற்கே மிகவும் வெறுப்பாக இருக்கிறது. ஒரு பதவிக்காக இவ்வளவு கடை நிலைக்கா மனது செல்லும்? சீ நாயும் பிழைக்குமோ இந்தப் பிழைப்பு… ஓ.பி.எஸ் அவர்கள் என் மனதில் மிகவும் நிறைந்து இருக்கிறார். எத்தகைய விசுவாசம். அதிமுகவின் மீது எத்தகைய நம்பிக்கை… உண்மையாக இருக்கும் தன்மை…. நல்ல பிம்பமுள்ள ஓபிஎஸ்ஸை விட்டுவிட்டு, கண்டவர்களெல்லாம் பதவிக்கு வரும் எண்ணம் எப்படி வரும்? வரட்டும்… வரட்டும். காசு கொடுத்து எந்த இடைத்தேர்தலிலும் வெற்றிபெற முடியாது என்பதை முதல் முறையாக அவர்கள் தெரிந்துகொள்ளட்டும்… இதில் மிகப்பெரிய வரம்…. சசிகலா, மக்களைச் சந்திக்கும்போது அந்த வெறுப்பைத் தெரிந்துகொள்வார்கள். அதிமுக தொண்டர்களுக்கு, எம்.எல்.ஏக்கள்போல் பதவி ஆசை கிடையாது. அவர்கள் அதிமுகவுக்காகவும், எம்ஜியாருக்காகவும், ஜெ.வுக்காகவும், ரெட்டை இலைக்காகவும், திமுகவின்மீது கடுமையான வெறுப்பினாலும் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் அவர்களது முடிவைத் தெரிவிப்பார்கள்.

  மக்களின் வாக்கு சசிகலாவுக்கு இல்லை. நிச்சயம் திமுகவுக்கு கிடையாது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   //மக்களின் வாக்கு சசிகலாவுக்கு இல்லை//

   100 சதவீதம் உண்மை.

   // நிச்சயம் திமுகவுக்கு கிடையாது //

   இதில் ஒரு சிறு மாற்றம் இருக்குமென்று தோன்றுகிறது….
   பெண்களின் ஓட்டு நிச்சயம் திமுகவுக்கு கிடையாது…!

   ஆனால், ஆண்களில் சில சதவீதங்கள் இடம் மாறக்கூடும்…
   என்பது என் கருத்து.
   பார்ப்போம் – போகப்போக…
   அதற்குள் இன்னும் என்னவெல்லாம் நிகழப்போகின்றனவோ..!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • john சொல்கிறார்:

    GO AND SUPPORT DEEPA

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     நண்ப ஜான்,

     நீங்கள் இப்படி எழுதுவது முறை அல்ல…

     நீங்கள் திமுக அனுதாபி என்று தெரிகிறது.
     உங்களுக்கு, இந்த இடுகையில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை பற்றியோ,
     பின்னூட்டங்களில் வரும் கருத்துக்களைப் பற்றியோ எதாவது
     கூற விரும்பினால் –
     அதை நாகரிகமான முறையில் தாராளமாக தெரிவிக்கலாம்.
     அதுவும் இங்கே நிச்சயம் வெளிவரும்.
     தயவுசெய்து இந்த மாதிரி எழுதுவதை தவிர்க்கவும்.

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

  • john சொல்கிறார்:

   IT IS A TRAGEDY THAT PEOPLE LIKE U STILL SUPPORT OPS

 9. john சொல்கிறார்:

  DEAR SIR I HAVE BEEN READING YOU FOR SOME TIME NOW .HAVE U EVER WRITTEN ANY THING ABOUT THE MISRULE OF THE LAST 5YEARS .I AM NOT DMK OR ANY OTHER POLITICAL PARTY.BUT I DONT UNDERSTAND WHAT U MEAN BY NAGARIGAM.I ALWAYS RESPECT U.IF U HAVE FULLY KNOWN ME U WOULD HAVE NEVER EVER USED THAT WORD NAGARIGAM.IF I HAVE WOUNDED U KINDLY BEAR WITH ME.BUT BHARATHI,THE GREAT POET OF OUR LAND WAS AFRAID OF NONE.

 10. தமிழன் சொல்கிறார்:

  @SELVADURAI – “இதே பன்னீர்செல்வம் டம்மியாகத்தானே செயல் பட்டார்” – அரசியலில் தலை இருக்க வால் ஆடாது. ஆபீசிலும் அப்படித்தான். ஆபீசர் லீவில் போயிருக்கும்போது, டெம்பொரரியாக பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒருவர், ஆபீசர் எந்த மாதிரி முடிவெடுப்பாரோ அதேபோல்தான் முடிவெடுப்பார். தன்னுடைய கழுத்தை வெளியே நீட்டி தான் பெட்டர் என்று காண்பித்துக்கொள்ளமாட்டார். அன்று ஜெ தலைவி. இன்று பன்னீரின் திறமையைக் காண்பிக்கும் நேரம்.

  @ கா.மை சார் – “ஒரு சிறு மாற்றம் இருக்குமென்று தோன்றுகிறது” – இது சாத்தியம்தான். காரணம் ஜெ Vs கருணானிதி/ஸ்டாலின் என்று இருந்தது இப்போது, புதியவர் Vs ஸ்டாலின் என்று ஆகிவிடும். ஸ்டாலின் தன் பிம்பத்தை நன்றாகக் கட்டமைத்துக்கொண்டு வருகிறார். அதனால் மாற்றம் இருக்கும். ஆனால், முதல்முறை ஆட்சியில் அமர்ந்தபின்பு, அது பசுவா அல்லது பசுத் தோல் போர்த்திய புலியா என்று சரியாகத் தெரிந்துவிடும். இன்றைய நிலையில் தேர்தலில், அதிமுக 25 சதவிகிதம்தான் பெறும் (கட்டமைப்பு காரணமாக). சசிகலா தலைவர் என்றால் இது நிச்சயமாகக் குறையும். ஓபிஎஸ் தலைவர் என்றால் 25 சதவிகிதம் ஓட்டு சாத்தியம். ஸ்டாலினுக்கு 10 சதவிகித ஓட்டு அதிகம் கிடைக்கும் (சென்றமுறையைவிட). இதற்கு முக்கியக்காரணம் ஓட்டுச் சிதறல் மட்டுமல்ல… கருணானிதி மேடைக்கு வராத நிலையும் காரணமாகும். ஆனால் நினைத்தபோதெல்லாம் தேர்தல் சாத்தியமில்லையே. காலமும் இப்படி One sided ஆக இருந்துவிடாதே.

  @JOHN – DMK IS NOT AS DANGEROUS – திமுகா அனுதாபிகள் இப்படிச் சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதிமுகவை விட திமுக சிறப்பானது என்பதற்கு 10 காரணங்களும், அதற்குக் காரணமான திமுகவைச் சேர்ந்த உதாரண புருஷர்களையும் காட்டுவதற்கு இயலுமா? பொதுமக்களே, அதிமுகதான் சிறப்பான கட்சி என்று கடந்த மூன்று தேர்தல்களிலும் சொல்லியிருக்கிறார்களே. கட்சி மாச்சர்யங்கள் இல்லாமல் சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் நினைக்கும் திமுக பிரமுகர்கள், எந்தப் பின்னணியிலிருந்து இப்படி வந்திருக்கிறார்கள் என்றும் யோசியுங்கள்.

  ஜெ. (அவருடைய சொத்துக்கள்) = கருணானிதி, அவர் குடும்பங்கள், ++ சொத்துக்கள்
  சசிகலா (மிடாஸ்….) = டி.ஆர். பாலு (+ கப்பல்கள், மின்சார உற்பத்தி கம்பெனி+இரண்டாம் மனைவியின் மகன் எம்.எல்.ஏ
  இப்படி யாரை எடுத்துக்கொண்டாலும் திமுக பக்கம் தட்டு எவ்வளவு சாயும் (ஊழலின் கனத்தில்) என்று உங்களுக்கே தெரியும். வெறும் வாத்தியாராக இருந்த பொன்முடி, ஊழியராக இருந்த துரைமுருகன், அடியாளாக இருந்த வேலு எல்லோரும் கல்வித் தந்தைகள். அதேபோல் அதிமுகவிலும் தம்பித்துரை, காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ் போன்றோர்களும் கல்வித்தந்தைகள்தான்.

  அதுமட்டுமல்ல. திமுக இந்தியாவுக்கு டேஞ்சர் என்று கருணானிதியின் ஆட்சி இரண்டுமுறை கலைக்கப்பட்ட வரலாறு சொல்கிறது. எம்ஜியாருக்கு பாரத ரத்னா கொடுத்ததும் இந்தியாதான். இன்றைக்கும் மலேஷியா பார்ட்னர்களெல்லாம் சேர்த்துக்கொண்டு ஊழல் செய்து சி.பி.ஐயின் கழுகுக் கண்ணில் இருப்பது அதிமுக இல்லை. உலகமகா ஊழல் செய்து திகாரில் உறங்கியது அதிமுக இல்லை.

  அதே சமயம், ஸ்டாலின் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வாய்ப்பு இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. அவர் சமீப காலங்களில் நடந்துகொள்ளும் விதமும் அதனை நோக்கி நகர்வதாகத்தான் தெரிகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.