திருமதி சசிகலா நடராஜன் நாற்காலி – இந்த காளை(….கள்…) செய்யப்போவதென்ன…..?


tn-politics-sashikala

ஜல்லிக்கட்டுக்காக போராடிய
தமிழ் இளைஞர் கூட்டம் இப்போது செய்யப்போவதென்ன …?

(கார்ட்டூனுக்காக நன்றி -திரு கேசவ் அவர்களுக்கு…)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to திருமதி சசிகலா நடராஜன் நாற்காலி – இந்த காளை(….கள்…) செய்யப்போவதென்ன…..?

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  // லண்டர் டாக்டர் ரிச்சர்ட் சென்னை வந்திருக்கிறார்.
  அப்பல்லோ நிர்வாக ஏற்பாட்டில் பத்திரிக்கையாளர்களை
  சந்திக்க இருக்கிறார். //

  திருவாளர் (சசிகலா) நடராஜன் அப்போலோவில் அட்மிட்
  ஆகி இருப்பதற்கும், இதற்கும் எதாவது தொடர்பு இருக்குமா…?

  ரிச்சர்ட் பீலே அவர்களுக்கு முன்கூட்டியே tuition ஏற்பாடு நடக்கிறதா …?

 2. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! tuition – ல் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு — 60 – நாட்களுக்கு பிறகு அறிக்கைவிட்ட ” அப்போலோ ரெட்டிகாரு ” கொடுக்கின்ற tuition – சரியா இருக்காது என்பதால் தற்காலிகமா பி.ஆர்.ஓ வேலைபார்த்த ஆசிரியர் வகுப்பு எடுக்க — சரியான இடத்தில் இருக்கிறார் …
  லண்டர் டாக்டர் ரிச்சர்ட் – முதல் வகுப்பில் தேர்ச்சி நிச்சயம் … அப்படித்தானே ….?

 3. GVS சொல்கிறார்:

  சசிகலா முதல்வராவதை ஜெயலலிதா ஆன்மாவே ஏற்காது – டி.ராஜேந்தர்

 4. இளங்கோ சொல்கிறார்:

  சசிகலாவுக்கு எதிராக போயஸ் தோட்டம் எதிரே ராப் பாடல்! (வீடியோ)

  Sofia Ashraf

  சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இந்திய ராப் பாடகி சோபியா அஷ்ரப். இவர், சசிகலா முதல்வராகத் தேர்வானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தன் குழுவினர் நான்கு பேருடன் இணைந்து நேற்று நள்ளிரவு போயஸ் தோட்டத்திற்கு வெளியே கோபமாக ராப் பாடல் இசைத்து எதிர்ப்பை வெளிபடுத்தி உள்ளார். ’நான் உங்களுக்கு ஓட்டு போடவில்லை, நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல’ என்று கடும் கோபத்துடன் ராப் செய்துள்ளார். இதை ஃபேஸ்புக் லைவ் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

 5. selvarajan சொல்கிறார்:

  அய்யா ….! லண்டன் டாக்டரும் — அப்போலோ டாக்டர்களும் அளித்த பேட்டியில் ” உருப்படியான தகவல்கள் ” ஏதாவது கிடைத்ததா … ? அரைத்த மாவையே — மேலும் நன்றாக அரைத்து விட்டார்களா … ?
  // பிரஸ் மீட்டை நடத்துவது அரசுதான்.. போட்டு உடைத்த லண்டன் டாக்டர்! நடராஜன் அட்மிட் இதற்குத்தானா? //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/apollo-press-conference-is-arranged-the-government-says-doctors-273410.html அரசு இந்த பிரஸ் மீட்டை நடத்தியது — வருகின்ற முதல்வர் ” யோக்கியமானவர் ” என்று காட்டத்தானே …. ? மக்களே நம்பிட்டிங்களா … ? சந்தேகம் தீர்ந்ததா … ?

 6. gopalasamy சொல்கிறார்:

  “ஜல்லிக்கட்டுக்காக போராடிய
  தமிழ் இளைஞர் கூட்டம் இப்போது செய்யப்போவதென்ன …?”
  Sri KMji , what is your message ? Do you want one more unlawful assembly In Marina for these things?

 7. தமிழன் சொல்கிறார்:

  இதில் ரொம்பவும் உணர்ச்சிவசப்படுவது அர்த்தமேயில்லை. சட்டம், எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரை ஆட்சிக்குத் தலைமை ஏற்க வழிவகுக்கிறது. தலைவர் எம்.எல்.ஏவாக இல்லை என்றால், 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏவாக ஆனால் போதுமானது. இதைத்தான் எப்போதும் நாம் பார்த்துள்ளோம்.

  இதற்கும் ‘ஜல்லிக்கட்டு இளைஞர்களுக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் அனைவரும், அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டார்கள் என்று வைத்துக்கொண்டாலும், அவர்கள் அனைவரும் திமுக எதிர்ப்பு மனோனிலையில் இருப்பவர்கள் என்று வைத்துக்கொண்டாலும் (அது மட்டுமல்ல, பாஜக, நால்வரணி சாரி.. மக்கள் நலக் கூட்டணி, பாமக எதிப்பாளர்கள் என்று கருதினாலும்), அவர்கள் தேர்ந்தெடுத்தது, ஜெ. வை அல்ல. அவர்கள் தேர்ந்தெடுத்தது அவர்கள் ஊர் எம்.எல்.ஏக்களை. அதிமுகவுக்கு ஓட்டுப்போடாத எவருக்கும் இதில் எதிர்ப்புக் காண்பிக்க என்ன தகுதி இருக்கமுடியும்?

  நேற்றைய அவசர பிரஸ் மீட்டும் காரண காரியத்தோடு நடந்ததாகத்தான் தெரிகிறது. ஆனாலும், ஜெ.வின் சகோதரி மகன், ஜெ. ஐசியுவில் இருந்தபோது சசிகலாவை அழைத்துப் பேசுவார் என்று சொன்னதுதான் வித்தியாசமாக இருக்கிறது.

  ஆனாலும் அதிமுக தொண்டர்கள் தேர்ந்தெடுப்பவர்தான் பொதுச்செயலாளராக வர முடியும். அப்படி வந்தால், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. அதன் பின்பு, மனமாச்சரியம் கொண்டவர்களும் பொதுச்செயலாளர் பின்னால் அணிதிரள்வார்கள். அதற்குப் பின்பு, முதலமைச்சராக அவரது செயல் எடைபோடப்படும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   தமிழன்,

   //இதில் ரொம்பவும் உணர்ச்சிவசப்படுவது அர்த்தமேயில்லை//

   நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுபவன் தான்…

   கண்ணேதிரே ஒரு அக்கிரமம் நடக்கின்றபோது,
   ஒரு மிகப்பெரிய தவறு நிகழும்போது –
   சட்டப்படி நாம் அதில் தலையிடலாமோ கூடாதோ என்றெல்லாம்
   எப்போதுமே யோசித்துக் கொண்டிருக்க முடியாது.
   என்னைப்பொருத்த வரையில் இதற்கெல்லாம் விதிவிலக்குகள் உண்டு.

   இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது அத்தகைய
   ஒரு விதிவிலக்கான நிகழ்வு தான்…

   இதற்கு முன்னால் எழுதிய –
   ” எத்தனை நாட்கள் ஓடும் திருமதி ச.நடராஜன் ஆட்சி…???”
   இடுகையின் கடைசியில் இவ்வாறு முடித்திருப்பேன்…

   //எந்த காரணத்தினால், திருமதி ச.நடராஜன் ஆட்சி ( ? )
   அகற்றப்பட்டாலும், பெரும்பாலான தமிழக மக்கள்
   அதனை வரவேற்கவே செய்வார்கள் …!!!!//

   எனவே, இன்று பதவியேற்பு விழா நடைபெறாமல் இருக்க
   முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும்
   என் வாழ்த்துகளும், பாராட்டுதல்களும் – நிச்சயம் உண்டு.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • தமிழன் சொல்கிறார்:

    புரிந்துகொள்ள முடிகிறது கா.மை சார். அமெரிக்கத் தேர்தல் முறையில், அதிபர்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் துணை அதிபர் இவர் என்று தேர்தலின் முன் சொல்வார். ஆனால், அதிபர் இறந்துவிட்டால், துணை அதிபர் உடனே அதிபர் ஆகிவிடுவார். அவர் அதிபர் பதவியின் 4 வருடத்தில் பாக்கியுள்ள வருடங்களில் அதிபராக இருப்பார். அவரும் மறைந்தால், செனட்டின் சபா’நாயகர் அதிபராவார். அவரும் மறைந்தாலும் அடுத்து 2 இரண்டு சக்சசர்கள் இருக்கிறார்கள். சபா’நாயகர் ஒன்றுக்கும் உதவாதவராக இருக்கலாம். ஆனால், சட்டம் சபா’நாயகரை அதிபராக அனுமதிக்கிறது. அதுபோல்தான் இப்போது நடப்பதும்.

    பாஜகவுக்கு இதில் என்ன அக்கறை? அவர்களுக்குத் தேவை, எம்பிக்களின் ஓட்டு, நாளை ஜனாதிபதி தேர்தலில் மொத்த ஓட்டு. அவர்களுக்கு யார் நியாயவான், யார் தகுதியானவர் என்பதா முக்கியம்? அப்படி இருந்திருந்தால், கல்வியில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் அல்லவா, கல்வித்துறைக்கு அமைச்சராக இருக்கவேண்டும்? (மனிதவளத் துறை)

    இதைப் பற்றி கொந்தளிக்க ஒன்றுமேயில்லை. சசிகலா அவர்கள் அதிமுக எம்.எல்.ஏக்களைக் கட்டிக்காக்க முடிந்தால் (பாராளுமன்ற அங்கத்தினர்களையும்), அவரால் 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் (if she manages. தமிழ்’நாட்டின் கிரெடிபிலிட்டி, தமிழக வாக்காளர்களின் கிரெடிபிலிட்டி எல்லோரும் அறிந்ததுதான்), யார் என்ன செய்யமுடியும்? (இயற்கையை நொந்துகொள்வதைத் தவிர). சசிகலா அவர்கள் பூலான்’தேவி என்று நினைத்தால், ஸ்டாலின் அதற்கு எந்த விதத்தில் சளைத்தவர்? மிடாஸ் 17ஆயிரம் கோடி என்றால், இங்கே இன்னும் பல சாராய ஆலைகள். உள்ளூர் நிலம் பறிப்பு, தொலைக்காட்சி என எல்லாவற்றையும் மிஞ்சும் 2 ஜி, கலைஞர் தொலைக்காட்சி ஊழல், மாறன் கும்பலின் ஊழல் என்று எடுக்க எடுக்க ஊழலில் திளைத்தது அந்தக் கட்சி. திமுகவில், அதிமுகவுக்குக் குறைவாக ஊழல் செய்தவர் என்று யாரையாவது சுட்டிக்காட்ட இயலுமா? அல்லது அதிமுகவை விட குறைவான அரசியல் அசிங்கங்கள் செய்தவர்கள் என்று காட்டிவிட இயலுமா? மற்ற கட்சி அரசியல்வாதிகளைப் பார்த்தால் யாரும் யாருக்கும் சளைத்தவர்களல்லர் (ஊழல் செய்வதிலோ, அல்லது ஆட்சியாளர்களை ஆதரித்து ஆதாயம் பெறுவதிலோ அல்லது எதிர்க்கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பு உண்டு என்பது தெரிந்தால் அவர்கள் பக்கம் ஆதாயத்துக்காகச் சாய்வதிலோ). சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் ஸ்டாலின் அவர்கள், மாறன் தன் வலது பக்கத்தில் இருக்க பெருமையாக வலம் வந்ததை. இதில் யாருக்கு வெட்கம் இருக்கிறது?

    நியாயமான நல்லக்கண்ணு முதல்வராக வரலாம். ஆனால் தமிழர்கள் அத்தகைய நல்லவர்கள் தங்களுக்கு வேண்டாம் என்று அறைகூவி விட்டார்கள். அப்படி இருக்கும்போது, இந்தப் பதவியேற்பைத் தடுப்பதனால் என்ன சாதித்துவிட முடியும்?

    இதில் அக்கிரமம் என்று நான் கருதுவது ஒன்றே ஒன்றுதான். ஜெ.வின் உடலைச் சுற்றி மன்னார்குடி கும்பல் சூழ்ந்துகொண்டது, இன்னும் அந்தக் கும்பல்களின் உளரல்களை அனுமதித்துக்கொண்டிருப்பது (எந்த அளவு உளரல்கள்? அதிமுகவின் முதல் இடைத் தேர்தலில்..திண்டுக்கல்லில் வெற்றி பெற மன்னார்குடி கும்பல் உதவியது என்று சொல்லும் அளவு), பல அரசியல் வியாதிகள், சசிகலாவை ஆஹா ஓஹோ என்று வாய்க்கு வந்தபடி புகழ்வது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.