முதல்வர் பதவி ஏற்புக்கு தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு ….

supreme_court_scba

நாளை (செவ்வாய்க்கிழமை) திருமதி சசிகலா நடராஜன் பதவி
ஏற்கப்போவதாக, சென்னை தமிழ் தொலைக்காட்சிகள்
செய்தி பரப்பிக் கொண்டு இருக்கும் வேளையில் –

டெல்லியிலிருந்து வரும் ஒரு தகவல் –

திருமதி சசிகலா நடராஜன் அவர்கள் தமிழக முதல்வராக
பதவி ஏற்க தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில்
ஒரு பொது நல மனு ( public interest litigation )
தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும்,

அந்த மனு நாளை காலையில் விசாரணைக்கு
வரலாம் என்றும் கூறுகிறது.

இன்னும் ஒரு வாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு
வரவிருக்கும் நிலையில், இப்போது பதவியேற்க
அனுமதிப்பது பல குழப்பங்களையும், சட்டம் ஒழுங்கு
பிரச்சினைகளையும் தமிழ்நாட்டில் உண்டு பண்ணும்
என்று காரணம் காட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to முதல்வர் பதவி ஏற்புக்கு தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு ….

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நாளை பதவி ஏற்பு விழா இல்லை….
  நாளை சென்னை வர இயலாது என்று கவர்னர் கூறி விட்டதாக
  டெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன…

  அதற்கு அடுத்த நாள்…..?

  கவர்னர் சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசித்து
  அதன் பிறகு ஒரு முடிவிற்கு வருவார் …..!!!

  இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை…!

 2. selvarajan சொல்கிறார்:

  என்னங்க அய்யா … // அதற்கு அடுத்த நாள்…..? // என்று கேள்விக்குறியோடு விட்டுவிட்டிர்கள் — இங்கே என்னடாவென்றால் ஒரு பெரிய லிஸ்டே கைவசம் வைத்துக்கொண்டு முழிபிதுங்கி — மன்னார்குடி கோஷ்டி ஆலோசனையில் இறங்கி விவாதித்துக்கொண்டு இருக்கிறது : — // மன்னார்குடி கோஷ்டிக்கு கடும் எதிர்ப்பு- எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வராகும் வாய்ப்பு? //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/edapadi-palanisamy-become-cm-tn-273455.html —- அப்போ 4 — வது முறையா ஓ பி எஸ் க்கு சான்ஸ் இல்லை போல தெரிகிறது — என்ன சோதனை இந்த தமிழகத்துக்கு … ? சீக்கிரமா ஒரு முடிவுக்கு வந்துட்டா நல்லது — ஏனென்றால் வெயில் காலம் வேற வரப்போகுது …. ?

 3. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! வலம்புரி ஜான் அன்று கூறியதாக வந்துள்ள ஒரு செய்தி பற்றி : — // சசி முதல்வர்… பல ஆண்டுக்கு முன்பே கணித்த வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான்..! //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/late-valampuri-john-s-prediction-on-sasikala-90-s-273446.html இதில் கடைசியாக அவர் கூறியிருப்பது
  // தமிழகம் இந்த துயரையும் சந்தித்துத்தான் தீரவேண்டும். அப்படி ஒருநாள் வரும்போது என்னை நினைத்துப் பார்ப்பார்கள் தமிழர்கள்.” // …… நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   // தமிழகம் இந்த துயரையும் சந்தித்துத்தான் தீரவேண்டும்.
   அப்படி ஒருநாள் வரும்போது என்னை நினைத்துப் பார்ப்பார்கள்
   தமிழர்கள்.” //

   அந்த துயர சம்பவத்தின் முதல்படியில் நிற்கிறோம் நாம்.
   வலம்புரி ஜான் அவர்களின் விருப்பப்படியே அவரை நாம்
   நினைத்தும் பார்க்கிறோம்.

   ஆனால் –
   இதற்கு அடுத்த படியில் ஏறாமலே –
   அந்த அசிங்கம் – நிகழாமலே
   அந்த நிலையை சந்திக்காமலே
   தமிழகம் தப்பி விட வேண்டும் என்று
   விரும்புகிறேன் … வேண்டுகிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. தமிழன் சொல்கிறார்:

  அன்புள்ள செல்வராஜ்

  நான் வலம்புரி ஜான் எழுதிய ‘வணக்கம்’ நூலை வெகு காலத்துக்கு முன்பே படித்திருக்கிறேன். வலம்புரி ஜான் அவர்கள் யாரை நயந்தால் தன் வாழ்வு வளம் சிறக்கும் என்பது புரியாமலேயே தன் வாழ்வைக் கடத்திவிட்டவர். அவரும் மற்ற எம்.எல்.ஏக்கள், கட்சிப் பிரதினிதி போன்றவர்தாம். அவர் ஒன்றும் நியானவான் அல்லர். ஆனாலும் ரொம்ப சூது வாது செய்தவர் அல்லர். அவர் எப்போதும் மனத்தில் பார்ப்பன எதிர்ப்பு என்ற நிலையைக் கொண்டிருந்தவர். அவருக்கு, ஜெ.வின் மிகுந்த நட்பு தனக்கு மட்டுமே கிடைக்காததில் வருத்தம். அவருக்கு யார் பக்கம் சாய்வது (ஆரெம்வியா அல்லது ஜெ வா அல்லது முழுக்க முழுக்க எம்.ஜியாரா) என்பதில் எப்போதுமே குழப்பம். அதனால் யாருடைய முழு நம்பிக்கையையும் அவரால் பெறமுடியாமல் போயிற்று. இன்றைக்கு பி.ஹெச்.பி செய்தது போல, அவர், ஜெ. வலிமையாக இருந்த 95களில் அவர் எதிர்ப்பு நிலையை எடுக்கத் துணிந்தார், அதனால் மிகவும் கஷ்டப்பட்டார். அந்த மன நிலையில், சசிகலாவையும், நடராஜனையும் மிகவும் தூற்றினார். எம்ஜியாரிடமும் அவர் முழுமையாக உண்மையாக இருந்ததில்லை (ஜெ. சொன்னபடி சில சமயங்களில் நடந்துகொண்டதால்). ஆனாலும், அவர் சொன்னது, ஜெ. எம்ஜியாரின் உள்வட்டம். ஆரெம்வி அந்த வட்டத்தில் இல்லை என்பது.

  அவர் எழுதியதில் எனக்கு மறக்கமுடியாத சில விஷயங்கள் உண்டு. ஜெ. அவர்களை 2016வரை அரசியலில் அடித்துக்கொள்ள இயலாது, அதுவரை கோலோச்சுவார். ஜெ.வுக்கு மாந்திரீகம் போன்றவற்றால் கெடுதல் நேரிடும். அவர் உணவில் கவனமாக இருக்கவேண்டும் போன்றவை. அது தவிர, எப்படி, சசிகலா, ஜெ.வின் மற்ற உயிர் நண்பர்களை சிறுகச் சிறுக வெட்டிவிட்டார் என்பதை எழுதியது.

 5. LVISS சொல்கிறார்:

  Oray kuzhappamaga irukkiradhu —
  The Governor is back today -Let us see what happens ,whether OPS will be asked to prove his majority, or be allowed to continue as caretaker CM or Sasikala will be made the CM —
  According to Mr Swamy the Governor has no other alternative but to accept the decision of the party and make Sasikala as CM — Another opinion was that Mr OPS should have handed over the letter of his resignation to the Governor personally and that Sasikala should stake claim to form the government —How many MLAs will finally go with Mr OPS or Sasikala is uncertain– In any case it should be more than the strength of the DMK party in the assembly to have a stable government —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.