” துக்ளக் ” அட்டையில் – திருமதி சசிகலா கோலாகல பதவி ஏற்பு … கார்ட்டூன்


திருமதி சசிகலா நடராஜன் குடும்பத்துடன்
கோலாகலமாக பதவியேற்கும் வைபவம் –
இன்று வெளிவந்துள்ள ” துக்ளக் ” இதழின் அட்டைப்பட
கார்ட்டூனில் – கீழே ….

sasi-thug-cartoon-001

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ” துக்ளக் ” அட்டையில் – திருமதி சசிகலா கோலாகல பதவி ஏற்பு … கார்ட்டூன்

 1. தமிழன் சொல்கிறார்:

  செய்தி உண்மையாக இருந்தாலும், சோ காலத்தில் இருந்ததுபோல் அந்த எண்ணம் இப்போது வருவதற்கு (சரியாச் சொல்லியிருக்கிறார் என்ற) கொஞ்சம் மனதில் தடை இருக்கிறது. அது குருமூர்த்தி அவர்களில் முழுமையான பாஜக backgroundஆல் இருக்கலாம்.

 2. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! இனி தமிழகம் ” அலேக் தான் — அஜக் தான் ” … ? இவ்வாறான மனிதர்களுக்கும் இடையே…..
  பட்டம் – பதவியை ஓரம் கட்டிவிட்டு அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்யும் — ஒரு சில நாட்டு நலம் விரும்பிகளும் இருப்பது தான் ” நம் இந்தியாவின் சிறப்பு ” ……
  பத்ம விருதுகளுக்கு அலையாய் அலையும் மனிதர்களுக்கிடையே – வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளிய ஒருமனிதரை பற்றி : —

  // IIT professor, who once taught Raghuram Rajan and now works with tribals, may not accept Padma award //
  #Raghuram Rajan …. http://www.indiatvnews.com/news/india-iit-professor-who-once-taught-raghuram-rajan-may-not-accept-padma-award-366387

  இது போன்றவர்களை போற்றுவோம் … !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நல்ல செய்தியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. தமிழன் சொல்கிறார்:

  பெரிய நிகழ்வு மெரினாவில் ஜெ சமாதியில் நடக்கிறது. போலி இல்லாத உண்மையான விசுவாசத்தை ஓபிஎஸ் அவர்கள் காண்பிப்பதாகத்தான் தெரிகிறது. “கனியிருக்கக் காய் கவர்ந்தற்று” என்பதை நினைவுபடுத்துகிறது. குண்டு போடப்போகிறாரா என்று கலக்கத்தோடு கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

  நீங்கள் எழுதிவந்தது உண்மையாகிவிடும்போல் தோன்றுகிறது. ஓபிஎஸ் செய்த வர்தா புயல் வேலைகளையும், கிருஷ்ணா நீர் கொண்டுவந்ததை சசிகலா விரும்பவில்லை என்று வெளிப்படையாகச் சொல்கிறார். ஜல்லிக்கட்டு பிரச்சனையைத் தீர்த்ததையும் சசிகலா அவர்கள் விரும்பவில்லை என்றார். அத்தனையும் ஜெவுக்குப் புகழ் சேர்க்கவே செய்தேன் என்கிறார். நம்பிக்கைக்கு உரியதாய் இருக்கிறது அவர் பேச்சு. விளைவு என்னவாக இருக்கும்? இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

 4. தமிழன் சொல்கிறார்:

  நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ
  சொல்லடீ சிவசக்கி….

 5. paamaranselvarajan சொல்கிறார்:

  அய்யா …..! முதுகெலும்பு உள்ள ஒரு மனிதனின் மனசாட்சியின் குரல்…. அம்மாவின் நினைவிடத்தில் … !!அம்மாவின் ஆன்மாவும் … தமிழக மக்களும் விரும்பிய நல்ல நிகழ்வுதானே …? மாபியா கூட்டத்தின் எதிர் வினை எப்படி இருக்கும் …..?

 6. தமிழன் சொல்கிறார்:

  ஓபிஎஸ் அவர்கள் குறுக்குப் புத்தியோடு சுயநல அரசியல் செய்யவேண்டும் என நினைத்திருந்தால் அவர், தனது ஆதரவாளர்கள் அல்லது அடிப்பொடிகளோடு வந்து கருணாநிதி பாணியில் ஸ்டண்ட் அடுத்திருக்கலாம். ஆனால் அவர் உண்மை நிகழ்வுகளைச் சொன்னது அவர் அதிமுக தொண்டர்களையும், என்னைப்போன்ற அதிமுக அனுதாபிகளையும் மதிக்கிறார் என்பதையும், சொல்லவேண்டிய சமயத்தில் சொல்லாமல் மௌனமாக இருப்பது அநியாயங்களுக்குத் தாமும் துணை போவது ஆகும் என்பதைப் புரிந்து சொன்னதுபோல் தோன்றியது. நிச்சயமாக, பதவி ஆசையில் செய்ததுபோல எனக்குத் தோன்றவில்லை.

  காலம் எப்படியும் நல்ல தலைமையைக் காட்டும். தொண்டர்களால் வளர்ந்த கட்சி அழியவிடாது என்று நான் நம்புகிறேன். நரிகளுக்கும் கழுதைப்புலிகளுக்கும் தனக்கு ஆதரவு வந்து சுலப முதல்வராகிவிடலாம் என்று வேளச்சேரியில் நிம்மதியாக கனவு காணலாம். கடவுள் அதைத்தான் தீர்மானித்திருந்தால் அது நடந்தே தீரும். கடவுள் நினையாத ஒன்றை, ஆளும்கட்சியைப் பிளவுபடுத்தினாலும் அடையமுடியாது. அப்படி இயற்கையை மீறி தகுதியற்ற நபர் மேலே வர இயலாது. மக்கள் ஆதரவையும் பெற இயலாது.

 7. தமிழன் சொல்கிறார்:

  சி.சரஸ்வதி, இப்போ, ச்சிகலாவை “சின்னம்மா” என்று பலமுறை விளிக்கிறார்….. சீச்சீ… நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு. இவர்களெல்லாம் paid servents. ஓபிஎஸ் சொன்னது உண்மையாக இருக்கும் பட்சத்தில் (நான் நம்புகிறேன்) இப்போது ஓபிஎஸ் சொல்லியிருக்கவில்லையென்றால் என்று சொல்லியும் பிரயோசனமில்லை. அதுவும் தவிர அவர் ஜெவுக்கு இழைத்த துரோகமாகத்தான் கருதியிருப்பேன்.

 8. தமிழன் சொல்கிறார்:

  “சின்னம்மா” என்று சொல்லவில்லை. Sorry. “அம்மா”, “அம்மா” என்று பலமுறை விளித்தார். 60 நாட்களுக்குள் ஜெ வை “அம்மா” என்று அரற்றிய வாய் சசிகலாவை “சின்னம்மா”, இன்று “அம்மா”, நாளை “புரட்சித் தலைவி சசிகலா அம்மா” என்று ஆகிவிடும். துரோகிகளாலா ஜெ சூழப்பட்டு இருந்தார்?

 9. D. Chandramouli சொல்கிறார்:

  At last, God Almighty acted decisively through OPS to save TN, though OPS gives credit to late JJ’s soul ! Someone has to bell the cat. Kudos to OPS. All’s well that should end well, hopefully.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.