கடைசியாக ஒரு சிங்கம் சிங்கிளாகவே வந்தது ….

paneer

கடைசியாக ஒரு சிங்கம் சிங்கிளாகவே வந்தது ….

மனசாட்சியுள்ள ஒரே ஒரு மனிதரையாவது
அந்த சுயநலவாத கூட்டத்தில் பார்க்க முடிகிறது….!!!
ம கி ழ் ச் சி …..!!!

மிகப்பெரிய –
அசிங்கத்திலிருந்தும்,
அவமானத்திலிருந்தும்,
ஆபத்திலிருந்தும் –

– தமிழகத்தை வெளியே கொண்டு வர முற்பட்டுள்ள
சிங்கிளாக வந்த சிங்கத்தை வரவேற்கிறோம்.

அடக்கத்திற்கும், அமைதிக்கும், பணிவுக்கும்
எடுத்துக்காட்டாக இதுவரை இருந்து வந்த
திரு.பன்னீர்செல்வம் அவர்கள் –

இனி துணிச்சலுக்கும், மனசாட்சியை மதிப்பவருக்கும்
உதாரணமாக பேசப்படுவார்….

நேற்று இரவு ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில்
துவங்கி, இந்த நிமிடம் வரை அவர் பேசி இருப்பது
அனைத்தும் – நிச்சயமாக உண்மையே என்பது
நமக்கு விளங்குகிறது….

ஏனென்றால் – இத்தனை நாட்களாக நாம் நினைத்தது,
பேசியது, எழுதியது ஆகியவற்றைத்தான் அவர்
இன்று பேசுகிறார்….

தன்னை கட்டிப்போட்டிருந்த கட்சிக் கட்டுப்பாட்டிலிருந்து
விடுபட்டு, மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும்
என்று தீர்மானித்து வெளிவந்திருக்கும்
திரு.பன்னீர்செல்வம் அவர்கள் பாராட்டிற்குரியவர்.

பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களும்,
மந்தி(ரி)களும், பணம் இருக்கும் இடத்தில் தான்
இருப்பார்கள் என்பதால் –

இனி அவர் முதலமைச்சராக தொடர முடியாது
என்பது வெளிப்படை.

ஆனால், அதே சமயத்தில், பன்னீர்செல்வம் அவர்களுக்கு
மக்கள் காட்டும் பேராதரவு, மற்றவர் யாரும் அந்த இடத்தில்
இப்போதைக்கு அமர்ந்து விட முடியாது என்பதையும்
உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

தமிழகம் சில மாதங்களில் ( ஜனாதிபதி ஆட்சிக்குப் பிறகு )
மீண்டும் தேர்தலை சந்திக்கக்கூடிய சூழல் உண்டாவது
தெரிகிறது…..

வரட்டும்….. துரோகிகளும், சதிகாரர்களும், கொலைகாரர்களும்
அரியாசனத்தில் அமர்வதை தவிர்த்துவிட்ட மகிழ்ச்சியே
இப்போதைக்கு போதுமானது.

திரு.பன்னீர்செல்வம் அவர்களே –

உங்கள் பணியில், முயற்சியில்,
நீங்கள் எடுத்துக் கொண்ட லட்சியத்தில் –
வெற்றி பெற –
இந்த விமரிசனம் வலைத்தள நண்பர்களின் சார்பில் –

எங்களது மனமார்ந்த வாழ்த்துகளை
தெரிவித்துக் கொள்கிறோம் ……!!!

———————-

பின் குறிப்பு –

நண்பர்கள் தங்கள் உள்ளக்கிடக்கைகளை
பின்னூட்டங்களில் பகிர்ந்து கொள்ளலாம்….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to கடைசியாக ஒரு சிங்கம் சிங்கிளாகவே வந்தது ….

 1. Surya சொல்கிறார்:

  Not sure how relieved OPS could be now, but the whole Tamil Nadu feels relieved.

 2. Lakshmi Mohan சொல்கிறார்:

  அன்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

  மிகவும் அருமை…
  மன்னார்குடி கும்பலின் கோரப்பிடியில் இருந்து மக்களை காக்க வந்த ஓ பி எஸ் கரங்களை வலுப்படுத்துவது நம் அனைவரின் கடமையாகும்.

  அரசியல் மீது நம்பிக்கை வைக்க நல்லதோர் நிகழ்வு நடந்துள்ளது ..இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும் ..

  காமராஜரை தோற்கடித்ததன் பலனை இன்று வரை அறுவடை செய்கிறோம்..
  நாவலரை புறக்கணித்ததால் நல்ல வாய்ப்பை தமிழகம் இழந்தது..

  மிகவும் அடிமட்டத்தில் இருந்து எந்தஒரு திரைத்துறையின் பின்னணியும் இல்லாத ஒருவரை காலம் நமக்கு காட்டி உள்ளது..

  கேரளாவைப் போன்று இனி எளிமையான,வலிமையான ஆட்சியாளர்களை தேர்ந்து எடுப்போம்..

  அன்புடன்,
  இலக்குமி மோகன்

 3. D. Chandramouli சொல்கிறார்:

  We thought OPS was a spineless person. He proved all of us wrong, thankfully! This might be the beginning of good tidings for Tamil Nadu. The people of the State have suffered for too long. The last statesman was Kamraj. Since then, it was downhill all the way. Let us now hope and pray that this ‘tsunami’ (revolt by OPS) would throw up wise leaders from our midst.

 4. bandhu சொல்கிறார்:

  பல வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு நல்ல நிகழ்வு. மிக மகிழ்ச்சியாக உள்ளது! நல்லதே நடக்கட்டும்!

 5. இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

  காலையிலிருந்து இந்த இடுகைக்காக காத்திருந்தோம் ஐயா.
  ஆனால் இந்த மன்னார்குடி குழப்பம் (மன்னிக்கவும்) குடும்பம் பின்விளைவுகள் தெரிந்தும் திமிரை குறைத்ததாக தெரியவில்லை. முதலமைச்சர் நாற்காலியில் அமர்வதும் மக்களின் ரத்தத்தை உறிவதுமே நோக்கமாக இருக்கிறார்கள்.
  கண்டிப்பாக பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவிற்கு ஏன் பிடித்தது என்பதற்கு ஒரு உதாரணத்தை காட்டி விட்டார் மனிதர்.

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  தமிழ்நாடே இன்று நிம்மதி பெருமூச்சு விடுகிறது…

 7. தமிழன் சொல்கிறார்:

  நேற்று பி.எச்.பாண்டியன் அவர்களது பத்திரிகையாளர் சந்திப்பையும், ஜெ. சமாதியில், முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் இரவு நேர பத்திரிகையாளர் சந்திப்பையும் முழுமையாகக் கேட்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

  நிறைய பேருக்கு பி.எச்.பாண்டியனைப் பற்றித் தெரிந்திருக்காது. அவர் முழுமையான அதிமுக நிர்வாகி. எம்ஜியார் காலத்திலிருந்து கட்சியில் இருப்பவர். யாவருக்கும் ரொம்ப நாள் கட்சியில் இருக்கும்போது, கடைசி நேரத்தில் ஒரு சோர்வு ஏற்படும். இத்தனை நாள் கட்சியில் இருக்கிறோம்.. இன்னும் பெரிய ஆள் ஆகவில்லை, தன் பையனை இன்னும் பெரிய ஆளாக்கவில்லை என்றெல்லாம். இந்தக் குறையைத் தவிர, அதிமுக வுக்கு விசுவாசமானவர் என்பதில் பி.எச்.பாண்டியன் அவர்களைக் குறை சொல்லமுடியாது. இவர் திறமை படைத்தவர். (வெறும் பொம்மையல்ல) (இவர்தான், சபாநாயகர் வானளாவிய அதிகாரம் படைத்தவர் என்பதைக் காண்பித்தவர். அந்தக் காலத்தில் இவரின் சேரன்மாதேவி தொகுதியை பளபளப்பாக்கினவர்… பலகோடி ரூபாய் அரசுத்திட்டங்கள் மூலம்)

  ஓபிஎஸ் அவர்கள் அதிமுகவின் விசுவாசத் தொண்டர் (பி.எச்.பி. நிர்வாகி). ஓபிஎஸ்ஸுக்குத் தன்னை ஆளாக்கிய அதிமுகதான் முக்கியம். தான் முக்கியமல்ல. அவர் நிச்சயமாக பதவி ஆசை பிடித்தவர் அல்லர். பதவியின் மூலம் அவர் மகன்கள் சம்பாதித்திருக்கலாம். ஆனால், பணம் சம்பாதிப்பது ஒன்றே குறி என்ற எண்ணம் கொண்டவர் அல்லர். உண்மையான ஜெ. விசுவாசி. கட்சியின் மீது பற்று கொண்டவர்.

  அவரை அம்மா அடையாளம் கண்டு பெரிய இடத்துக்குக் கொண்டுவந்துவிட்டாரே என்ற பொறாமை மற்ற சீனியர் அதிமுக நிர்வாகிகளுக்கும் மந்திரிகளுக்கும் இருக்கலாம். இருப்பதில் தவறில்லை. ஆனால், கட்சி என்று வரும்போது, கட்சிக்கு மட்டுமே உண்மையாக இருக்கவேண்டும். இரண்டு முறையும்… இல்லை இல்லை மூன்று முறையும், தான் கட்சிக்கு மட்டுமே விசுவாசமானவன், பதவி ஆசை கொண்டவனல்ல என்பதைக் காண்பித்தவர். யாரையும் சுலபத்தில் நம்பாத ஜெ. அவர்களின் நம்பிக்கையை மூன்று முறை பெற்றவர்.

  தம்பிதுரை, நம்பிக்கைக்கு உரியவர் அல்லர். அவர் சாதாரண அரசியல்வாதி. காற்று உள்ள பக்கம், தனக்கு எது அனுசரணையோ அதனைச் செய்யக்கூடியவர். அவர் எம்ஜியாருக்கும் உண்மையாக இருந்ததில்லை. ஜெயலலிதாவுக்கும் உண்மையாக இருந்ததில்லை. எம்ஜியாரைப் பற்றி ஜெ.விடம் குறை சொல்வதும், எம்ஜியாரிடம், ஜெ. அவரது ஆட்சிக்கே வேட்டு வைக்க முயலுவதாகவும், தான’தான் காங்கிரஸ் தலைமையிடம் பேசி எம்ஜியார் ஆட்சி நிலைக்க உதவிவருவதாகவும் உளறியவர் அவர். அவருடைய சமூகம், பல வருடங்களாக பாராளுமன்ற அங்கத்தினராக இருப்பது என்பவையே அவரது பலம். (அவர்தான், தமிழ்நாட்டில், குடிசைகளை மட்டும் வைத்துக்கொண்டு பொறியியல் கல்லூரியை நடத்தலாம், ஆடிட் செய்ய வரும்போது, காசுக்கு டெம்பொரரியாக பேராசிரியர் உடையில் ஆட்களைக் கூட்டிக்கொண்டுவந்து ஏமாற்றலாம் என்பதை முதன் முதலாக நிரூபித்தவர்)

  ஓபிஎஸ் இத்தனை காலம் level headஆக, அமைதியாக இருந்தது அவர் seasoned politician என்பதையும், கட்சி மற்றும் ஜெ.வின் மதிப்பு முக்கியம் என்று அவர் நினைத்ததையுமே பறை சாற்றுகின்றன. அவர் நினைத்திருந்தால், ஜெ.வின் அருகிலேயே நிற்க முயற்சிசெய்திருக்கலாம் (ராஜாஜி மண்டபத்தில்). அவரை வெளியேற்றும் துணிபு யாருக்கும் இருந்திருக்க இயலாது. ஆனாலும் அவர் படிகளில் அமர்ந்து அமைதி காத்தார். அவருடைய மன வருத்தமும், ஜெ.வின் மறைவை அவர் எதிர்கொண்ட விதமும் அவர் கண்ணியமான அரசியல்வாதி என்பதைப் பறை சாற்றுகின்றது. அவருடைய பேச்சுக்களும், பேட்டிகளும், ‘போராட்டக்காரர்கள் அவமானப் படுத்தியதை-கேலி பேசியதை, பொதுவாழ்வுக்கு வந்தால் இதனைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும்’ என்று பொறுமையாக பதிலளித்தும், அவர் மீதான நல்லெண்ணத்தை அதிகப்படுத்துகின்றன. அவரை ‘சாதி’ அரசியலோடு ஒன்றிப் பார்க்க இயலவில்லை. அவரை அவருடனேயே அரசியல் வாழ்வில் இருந்தவர்கள் ‘தலைவர்’ என்ற நிலையில் இன்று அவரைப் பார்க்கவில்லை. ஜெ.வையும் அதிமுகவின் பல தலைவர்கள் நாராசமான வார்த்தைகளால் வறுத்தெடுத்தவர்கள்தான். அதையும் மீறி ஜெ. மேலே வந்தார். காலம், ஜெ.தான் தலைவர் என்று அடையாளம் காட்டியதும், காலில் விழுந்தவர்களும் அவர்கள்தான். (காளிமுத்து, ஆர்.எம்.வீரப்பன் போன்ற பலர் இதில் உண்டு)

  இன்றைக்கு எல்லோருமே ஓபிஎஸ் அவர்கள், திமுக சார்பானவர், அவரை திமுக இயக்குகிறது என்று போகிற போக்கில் புழுதியைத் தூற்றுகிறார்கள். என்றைக்கு நவனீதகிருஷ்ணனை கனிமொழி அருகில் சிரித்துப்பேசிக்கொண்டிருப்பதை (ஒரு மாதத்திற்கு முன்பு) கண்டேனோ, எப்போது தம்பிதுரை, ‘கலைஞர்’ என்று விளித்தாரோ (காவேரி ஆஸ்பத்திரியின் வெளியில்), அப்போதே இவர்களது அதிமுக விசுவாசம் தெரிந்துவிட்டது. இவர்கள் இரண்டுபேருக்கும், ஜெ. இருந்து அதனைப் பார்க்க, கேட்க நேரிட்டிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். இன்றைக்கு ஓபிஎஸ், திமுக சார்பானவராகவோ அல்லது பாஜக சார்பானவராகவோ போய்விட்டாரோ?

  ஓபிஎஸ், அதிமுக மற்றும் ஜெ.வின் விசுவாசி என்பதில் எனக்குக் கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை. ஆனால், மக்கள் அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்வார்களா? தெரியவில்லை. ஆனால், அவர் தலைவராக ஆனால், நிச்சயம் மக்களின் நன்மையை நோக்கிச் செயல்படும் முதல்வராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

  இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும். யார், போலீஸ் தடியடிக்குக் காரணகர்த்தா என்று. பன்னீர்ச்செல்வம் அவர்கள் செல்வாக்கு பெற்றுவிடக்கூடாது என்று மறைமுகமாக அரசு இயந்திரத்துக்குக் கட்டளை போட்டவர்களை காலம் இயல்பாகக் காண்பித்துக்கொடுக்கிறது. கருணானிதியின் தீய செயல்களால் அவரைப் பற்றி கடும் வெறுப்பு மனதில் இருந்தபோதும், ஸ்டாலின் தன் நடத்தையால் கருணானிதி போன்றவர் இல்லை என்பதைக் காண்பிக்கிறார்.

  மக்கள் (அல்லது அதிமுகவினர்) தீர்மானிப்பது, யார் ஜெ.வுடன் கூடவே இருந்தார் என்பதல்ல. யார் அதிமுகவைக் கட்டிக் காத்து, அதன் தலைவராகத் திகழ முடியும் என்பது. எம்ஜியார் கூடவே இருந்தது ஜானகி அம்மையார். ஆனால் மக்கள் அவரை அதிமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கவில்லை. எனக்கு ‘ஜெ’ அவர்கள் தனது இரண்டாம் கட்டத் தலைமையை அடையாளம் காட்டவில்லையே என்று மனதில் அப்போதே தோன்றிக்கொண்டிருந்தது. அவர் 2016ல் மறைவார் என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது. ஒரு சமயத்தில் நினைத்தேன்.. அஜீத் போன்ற தைரியமான, மற்றவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்ட, மனதுக்கு உண்மையானவர்கள் தலைமைப் பதவிக்கு வந்தால், மக்கள் ஆதரவு நிச்சயமாகக் கிடைக்கும் என்று. ஒருவேளை…. காலம் ஓபிஎஸ் தான் அந்தத் தலைவர் என்று காட்டுமோ? அப்படிக் காட்டுவதற்குள் என்ன என்ன அலங்கோலங்களை தமிழகம், அதிமுக காணவேண்டியிருக்குமோ தெரியவில்லை. ஆனாலும் வரும் காலங்கள் turbulent periodதான்.

  காத்திருக்கிறேன்……………………..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   அற்புதமான, வெகு விளக்கமானதொரு பின்னூட்டம்…
   பாராட்டுகள்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 8. selvarajan சொல்கிறார்:

  அய்யா ….! இடைக்கால { தற்காலிக } பொது செயலாளர் என்கிற பதவி அ . தி. மு .க. சட்ட விதிகளை ஆராய்ந்த தேர்தல் ஆணையம் அவ்வாறான நியமனத்திற்கு விதிகள் இல்லை என்று கூறியுள்ளது — சட்ட விதிகளை திருத்தினால் மட்டுமே சாத்தியம் என்றும் கூறியுள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது ….

  பலதரப்புகளில் இருந்தும் — மக்களிடம் இருந்தும் பலத்த எதிர்ப்பு தெரிந்தும் — சசிகலாவும் — மற்ற எம்.எல்.ஏ . — எம்.பி .களும் விடாப்பிடியாக இருப்பதும் — தமிழகத்திற்கு நல்லதா … ? ஒரு தன்மான தமிழன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது மகிழ்வு அளிக்கிறது — ஆட்சியில் திரு ஓ .பி.எஸ். நீடிக்கவிட்டாலும் மற்ற கூட்டத்தை பற்றி மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கே அவரை பாராட்டலாம் … !!!

 9. தமிழன் சொல்கிறார்:

  “level head” should be ‘level headed’.
  காளிமுத்து அவர்கள் பொது மேடையில் சொன்னது=’ஜானகி அம்மையாரைப் பார்த்தால் கும்பிடத் தோன்றுகிறது. ஜெயலலிதாவைப் பார்த்தால் கூப்பிடத் தோன்றுகிறது” – இவர்தான் கடைசி காலத்தில் ஜெ.வின் காலடியில் இருந்தார். ஜெ. தன் மாண்பால், அன்பால், இவருக்கு பல உதவிகளை காளிமுத்துவின் கடைசி காலத்தில் செய்தார்.
  ஆர்.எம்.வீ-ஜெவை அழிக்க நினைத்தவர் என்பது தெரிந்ததுதான். ஜெ.வுக்கு இவர் செய்யாத கெடுதல்கள் இல்லை. ஜெவின் வளர்ச்சியை ஆரம்பகாலம் தொட்டே பல வழிகளில் தடுத்தார். இவர், தான் ஊரில் இல்லாதபோது ஜெ.வுக்குச் செய்த அ’நீதிகளை அறிந்த எம்.ஜியார், மருத்துவமனையில் இருந்து மீண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதும், அமைச்சரவையிலிருந்து ஆர்.எம்.வீயை நீக்கினார். காலம் ஜெ.தான் தலைவர் என்று காட்டியதும், ஆர்.எம்.வி அவர்கள், ஜெ.வின் தொண்டனாகி, ஜெ.வை ‘புரட்சித் தலைவி’ என்று புகழ் பாடினார்.

  ஜெ.வின் மாண்பைப் பற்றியும், தவறினைத் திருத்திக்கொள்ளும் சுபாவம் பற்றியும், பழையனவற்றை மறந்து தொண்டர்களிடம், விசுவாசிகளிடம் அன்பு செலுத்தும் தன்மை பற்றியும் நான் சொல்லத் தேவையில்லை. அவரை ஒரு காலத்தில் எதிர்த்தவர்களே பிற்பாடு அவரைப் போற்றும் நிலைக்குத் தன்னை உயர்த்திக்கொண்டதே சான்று (சோ, ரஜினி…. ஏன் ஜெ.வின் தைரியத்தை கனிமொழியும் ஸ்டாலினுமே பாராட்டியுள்ளனர்).

  எம்ஜியார் தன் கடைசி காலத்தில் ஜெ.விடம், ‘நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்… ஆனால் சசியுடனான தொடர்பை மட்டும் விட்டுவிடு’ என்று மன்றாடிக்கேட்டுக்கொண்டதாக வலம்புரி ஜான் அவர்கள் எழுதுகிறார். அதேபோன்று, ஜெ.வின் விருப்பம் என்று சொல்லியே சசிகலா, தன் விருப்பங்களை நிறைவேற்றிக்கொண்டதையும் குறிப்பிடுகிறார். அவர் எழுதியுள்ளவற்றில் பலவற்றில் நான் உண்மைத் தன்மையைக் கண்டுள்ளேன்.

  எனக்கு சசிகலா அதிமுகவின் தலைமையை (தற்போதுள்ள நிலைமையில்) ஏற்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவரோடு ஒட்டியுள்ளவர்கள் அனைவரும் (திவாகரன்..ராவணன்… கரன்… நடராஜன்…. போன்ற அனைத்துச் சொந்தங்களும்) அதிமுக என்ற கட்சிக்கும், மக்களின் நலத்துக்கும் எதிரிகள். அதிமுக என்ற கட்சியைக் காக்க, அதிமுக எம்.எல்.ஏக்கள் தவறான முடிவெடுக்கிறார்களே என்ற வருத்தமும், குறுகிய கால நலனுக்காக, சீனியர்களும் தவறாகச் செயல்படுகிறார்களோ என்ற ஆதங்கமும் உள்ளது. சசிகலா லீடர்ஷிப் குணங்கள் கொண்டவர் அல்லர். அவரால் பன்முகத் தன்மை கொண்ட அதிமுகவுக்குத் தலைமை தாங்குவது இயலாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. தன் இருப்புக்காக, கேட்கின்ற அனைவருக்கும் பொறுப்புக்களைக் கொடுத்து அவர்கள் வாயை அடைத்து கட்சியை மீண்டும் மிகவும் பலவீனமாக்கிவிடுவார்.

  ஓபிஎஸ் அவர்களும், திவாகரன் வந்து, ‘அக்கா முதலமைச்சராக ஆகட்டும்’ என்று கூறியதாகச் சொல்கிறார். எதற்கு? தானும் மற்றவர்களும் கொள்ளையடிப்பதற்கா? சொத்துக்குவிப்பு வழக்கு என்று வாடியவரின் சொத்துக்கள் யார் பெயரில் இப்போது உள்ளது? யாருக்குச் செல்லப்போகிறது?

 10. Raja சொல்கிறார்:

  Mark my words – One day hero, nothing will change

 11. வல்லம் தமிழ் சொல்கிறார்:

  நன்றி அய்யா ..கடவுள் இருக்கிறார், அவர் சில சமயங்களில் மனிதர்கள் வடிவிலும் தெரிவதுண்டு, உங்களைப்போல , ஓபிஎஸ் ஐ போல

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.