இது வரை நாம் அறியாத – மறைந்திருக்கும் ஒரு வைரம்….!!!


நினைத்து கூட பார்த்ததில்லை…. இவருக்குள்ளே
இத்தகைய அற்புதமான பண்புகள்
ஒளிந்து கொண்டிருக்கும் என்று…

அரசியல் உலகில் இப்படி ஒரு அபூர்வ மனிதர்…!!!
40 ஆண்டு காலமாக அரசியலில் இருந்தும் –
அந்த சாக்கடை இவரை பாதிக்கவில்லை என்பது அதிசயமே…!

இவருக்காக இல்லாவிட்டாலும்,
தமிழ்நாட்டின் எதிர்கால நலனுக்காகவாவது
இவர் ஜெயிக்க வேண்டியது அவசியம்..

இது வரை பார்க்காதவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய
ஒரு நேர்காணல் –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to இது வரை நாம் அறியாத – மறைந்திருக்கும் ஒரு வைரம்….!!!

 1. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  I salute Mr OPS,

 2. தமிழன் சொல்கிறார்:

  இப்போதைக்கு இது சம்பந்தமான எந்த இடுகைகளுக்கும் பின்னூட்டமிடவேண்டாம் என்று நினைத்திருந்தேன்.

  முழு பேட்டியையும் நேற்று பார்த்தேன். ஓபிஎஸ் நல்லவராகத்தான் தெரிகிறார். ஆனால், ‘தினகரன் சார்’ என்றெல்லாம் குறிப்பிடுவது கொஞ்சம் நெருடுகிறது. ஆனால் எல்லோரையும் மரியாதையாகக் (மாண்புமிகு சட்ட மன்ற உறுப்பினர்கள், மாண்புமிகு அமைச்சர்கள் என்றெல்லாம்) குறிப்பிட்டார். தலைமைக்குள்ள அதிரடி இல்லாதமாதிரி தோன்றியது. அவர், தான் முதல்வராக வரவேண்டும் என்பதைவிட, கட்சிக்கு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் (தொண்டர்கள்) ஒருவர் தலைவரானால் அவர் கீழ் பணிபுரியக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். அதாவது வெறும் ‘பதவி ஆசை’ என்பது அவரது பேட்டியில் தென்படவில்லை. காமராசரும் மற்ற சிறந்த முதல்வர்களும் பேச்சில் வல்லவர்களில்லையே. ‘பேச்சு’ ஈர்க்கும். ‘செயல்’ கவரும்.

  அதே சமயம், சசிகலாவின் பேச்சுக்கள், அவர்மீது, அதாவது சசிகலாவின்மீது வெறுப்பை இன்னும் அதிகமாக விளைவித்தன. ஆளுமை இல்லாத, மற்றவர்களின் கைப்பாவையைப் போன்ற, வெறும் நாடகமயமான வசனங்கள். ‘கான மயிலாட….’ வை நினைவுபடுத்தியது. ஜெ. அவர்கள் எழுதிவைத்துப் படித்திருக்கலாம். ஆனால் அவரின் ஆளுமை வேறு. அவர் orator இல்லை. ஆனால் புத்திசாலி. சசிகலா வெறும் கட்டவுட் மாதிரித்தான் தோன்றியது.

  இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும், ஏன் ‘அலங்காநல்லூர்’ மட்டும் அடம் பிடித்ததென்று. சசிகலாவின் கைவரிசைதான். காவல்துறையின் சில அதீதத்திற்கும் அவர்தான் காரணமாக இருக்க முடியும்.

  கட்சி intact ஆக இருக்கவேண்டுமென்று எல்லோரும் பாடுபடுவதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் சசிகலா அதற்கான ஆள் இல்லை என்று தோன்றுகிறது. மறைந்த ‘ஜெ’வை இன்னும் இன்னும் ஏத்துபவர்களால் (angel status) தன்னையறியாமலேயே சசிகலா கீழிறக்கப்படுவார். (ஜெ. பெஸ்ட் என்று சொல்லும்போதே, அவரது மோசமான செயல்கள் என்று கருதப்படுபவைகளுக்கு சசிகலாதான் காரணம் என்பது in-builtஆகிவிடும்) இப்போது சசிகலாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதினிதிகளின் ஆதரவு தென்பட்டாலும், மக்களைச் சந்திக்கும்போது தெரிந்துவிடும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.