திரு.ஸ்டாலினுக்கு எதிராக திருவாளர் வீரமணி ஏன் செயல்படுகிறார்…..??

veeramani_l__large

திருமதி சசிகலாவுடன் அரசியல் செய்ய நேர்ந்தால், அது
தனக்கு நிகழக்கூடிய பெரிய துர்பாக்கியம் என்று நினைப்பவர்
திரு.ஸ்டாலின். பல சமயங்களிலும் சசிகலாவைப்பற்றி
பேசுவதையே தவிர்த்து வந்திருக்கிறார்.

திருமதி சசிகலாவோ, ஆட்டிப்படைப்பது மத்திய அரசு
என்பது தெரிந்திருந்தும், அவர்களை எதிர்க்க துணிவின்றி,
மீண்டும் மீண்டும் திமுகவையும், திரு.ஸ்டாலினையுமே
காரணமின்றி வசை பாடுகிறார்.

முந்தாநாள் இரவு ராஜ்பவன் வாசலில் செய்தியாளர்கள்
திரு.ஸ்டாலினிடம் திருமதி சசிகலா கூறிய கருத்துக்களை
பற்றி கேட்டபோது, ஏதோ அருவருப்பான விஷயத்தை
கேள்விப்பட்டது போல் ரீ-ஆக்ட் செய்தார் ஸ்டாலின்.

” இவருக்கெல்லாம் பதில் சொல்வதன் மூலம்
என் நேரத்தையும், தரத்தையும் இழக்க நான்
விரும்பவில்லை ” – என்று கடுமையாகச் சொன்னார்.

ஸ்டாலினை பொருத்த வரையில், அரசியல் களத்தில்,
திரு.ஓபிஎஸ் -க்கு எதிராக நின்று அரசியல் செய்வதையை
கௌரவமாக நினைக்கிறார். அது தான் ஒரு நாகரிகமான
அரசியலுக்கு வழிகோலும் என்று நினைக்கிறார்…

ஆனால், திராவிடர் கழகத்தலைவர் வீரமணியோ,
தொடர்ந்து திருமதி சசிகலாவிற்கு ஆதரவாகவே பேசி வருகிறார்.

சற்று நேரம் முன்பாக தொலைக்காட்சியில் கூட பார்த்தேன்….
கோவையில் செய்தியாளர்களிடையே பேசும்போது, திருமதி

சசிகலாவை இன்னமும் முதலமைச்சராக
பதவிப்பிரமாணம் செய்து வைக்காத கவர்னரை மிகக்கடுமையாக
தாக்கிப் பேசினார்.

மெஜாரிடி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தலைவரை
ஒருமனதாக தேர்ந்தெடுத்து ஆதரவை தெரிவித்த பிறகு,
கவர்னர் யார் அதை தடுக்கவும், தாமதம் செய்யவும் என்று
மிக சீரியசாக கேட்டார் ( வரப்போகிற முதல்வர் மீது
என்னென்ன வழக்குகள் இருக்கின்றன என்பதைப்பற்றி
“நீ” யோசிக்க வேண்டிய அவசியம் என்ன…”
“அது “உன்” வேலையா”…..!!! etc. etc… )

திருமதி சசிகலா குடும்பத்தின் பின்னணி, திரு.வீரமணிக்கு
தெரியாதா…? அவர்கள் கையில் ஆட்சி, அதிகாரம் போனால்
தமிழகத்தின் கதி என்ன ஆகும் என்பது அவருக்கு தெரியாதா…?
பழைய கதைகள், அனுபவங்கள் எதுவும் அவர் நினைவிலேயே
இல்லையா…?

மேலும், திமுகவுக்கு எதிரான,
திரு.ஸ்டாலின் விரும்பாத
ஒரு செயலில் திரு.வீரமணி இப்படி அதி தீவிரமாக
இறங்கியிருப்பதற்கு என்ன காரணம்….?

அண்மையில், திருச்சியில், செய்தியாளர் கூட்டத்தில்,
திரு.நடராஜனின் புகழ்பெற்ற
“ஆமாம் குடும்ப அரசியல் தான் செய்வோம்” பற்றி
கேட்டபோது, கருத்து கூற மறுத்து விட்டார்…!

கொஞ்ச காலமாகவே – ஜெ.அவர்களின் மறைவிற்கு
பிற்பட்ட காலத்திலிருந்து –
திரு. நடராஜனுடன் திரு.வீரமணியின் நெருக்கம்
கூடுதலாகவே காணப்படுகிறது…. அண்மையில்,
பெரியார் திடலுக்கே மன்னார்குடியார் அழைக்கப்பட்டிருந்தார்…!!!

மன்னார்குடி குடும்பத்தின் “செழுமையும்”, “பசை”யும்
தன்மானத்தலைவரை ஈர்த்து விட்டனவா…?

தன்மானத்தலைவரின் “தேவைகள்” இன்னுமா
பூர்த்தியாகவில்லை…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to திரு.ஸ்டாலினுக்கு எதிராக திருவாளர் வீரமணி ஏன் செயல்படுகிறார்…..??

 1. Raja சொல்கிறார்:

  KM sir, Stalin will pay for his attitude, even at early stage his father welcome Janaki MGR and neglected Jaya and h try to spoil amma’s character. Stalin always like this, if it continue he never get post he want . KM sir always talk about constitution but you forgot in sasikala case. From your opinion She may be wrong but guv should call her to form government

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மன்னிக்கவும் ராஜா.

   திருமதி சசிகலாவும் அவரது குடும்பத்தினரும்
   அதிகாரத்திற்கு வருவதை என்னால் ஏற்க முடியவில்லை.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. தமிழன் சொல்கிறார்:

  மத்திய அரசு, தமிழகத்துக்கான கவர்னர் விஷயத்தில் தவறு செய்கிறது. ஜெ. இருந்தபோது அவரை நேரடியாகப் பகைத்துக்கொள்ளாமல் கவர்னர் விஷயத்தில் அனுசரித்த மத்திய அரசு, ஜெ. உடல்நிலை சரியில்லாதபோது கவர்னர் சரியாக handle பண்ணவில்லை என்பதையும் மீறி பொறுப்பு கவர்னரைத் தொடர்கிறது. இது சரியான செயல் இல்லை. பின்வாசல் வேலைகள் பாஜகமீது நம்பிக்கையின்மையை அதிகரிக்கும். காங்கிரஸ்தான் கவர்னரை அரசியலில் ஈடுபடவைக்கும். Not impressed with Modiji’s strategy.

  நடராஜன்–மாயாவதி–முலாயம்சிங் தொடர்புகள் பல வருடங்களாகவே பண அடிப்படையிலானது என்றே அவதானித்துவந்திருக்கிறேன். கூடுதல் காரணம் சமூக நீதி. அரசியல்வாதிகள் அனைவருக்கும் சமூகநீதி வெளியில், மற்றவர்களுக்குத் தேவை, சொந்தக் கட்சியில், நிறுவனங்களில் அது தேவையில்லை என்பதுதானே கொள்கை. வீரமணி அதற்கு விலக்காக இருக்க முடியுமா? பெரியார் நிறுவனத்தை லபக்கிக்கொண்டு தன் மகன் அன்புவின் சொத்தாக ஆக்கிவிட்ட அவருக்கு இயல்பான தேர்வு மன்னார்குடி கும்பலும் அதன் தலைவருமான நடராஜனாகத்தானே இருக்கமுடியும். வீரமணிக்கோ, கருணாநிதிக்கோ (ஸ்டாலினுக்கோ, திமுகவுக்கோ) குடும்ப அரசியலைப்பற்றிப் பேசும் யோக்கியதை உண்டா?

  கி.வீரமணிக்குச் செக் வைக்கத்தான் ஸ்டாலின் அவர்கள் மற்ற பெரியார் கழகங்களையும் சமீபத்தில் தன்னுடைய உரையில் இழுத்தார். ஸ்டாலினுக்குத் தெரியாதா வீரமணியின் பச்சோந்தி குணம்.

  இன்றைய நிலையில், சசிகலாவுக்கு ச.ம.உறுப்பினர்களின் பேப்பர் ஆதரவு இருக்கிறது. சசிகலாவுக்கு அதிமுகவினரின் ஆதரவோ, பொதுமக்களின் ஆதரவோ நிச்சயம் இல்லை. இதை ச.ம.உறுப்பினர்கள் இடைத்தேர்தலிலேயே அறிந்துகொள்வார்கள். அப்போது, டூ லேட்டாகிவிட்டிருக்கும்.

 3. தமிழன் சொல்கிறார்:

  ஒருவேளை…. Mr X (செங்கோட்டையன் போன்ற ஒருவர், அதாவது முக்குலத்தோர் அல்லாதவர்) முதலமைச்சராக ஆக்கிவிட்டு, (அதோடு ராஜினாமாக்கடித்த்தையும் வாங்கிவைத்துக்கொண்டு) சசிகலா இப்போதைய பிரச்சனையைத் தீர்க்க வாய்ப்பு இருக்கிறதோ? இவர்கள் யாருமே ஜெவின் நம்பிக்கையை ஓ.பி.எஸ் போன்று பெற்றவர்கள் இல்லை என்பது உறுதி. அதிமுகவை அழிக்க முடிவு செய்துவிட்டார் சசிகலா .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   ஒரு விஷயம் உறுதியாகி விட்டது.
   திருமதி சசிகலாவிடம் மெஜாரிடி உறுப்பினர்கள்
   இல்லை என்பதை திரு ஓபிஎஸ் நாளைக்கே,
   வெளியிலிருந்தே நிரூபித்து விடுவார்.

   எனவே, கவர்னர் திருமதி சசிகலாவிற்கு வாய்ப்பு
   கொடுக்க சந்தர்ப்பம் இல்லை என்றே நினைக்கிறேன்.

   திரு.ஓபிஎஸ் அவர்களை ஒரு வார காலத்திற்குள்
   சட்டமன்றத்தை கூட்டி, மெஜாரிடியை நிரூபிக்குமாறு
   கவர்னர் சொல்லக்கூடும்..

   மைனாரிடி அரசாக, ஓபிஎஸ் அவர்களின் ஆட்சி
   தற்போதைக்கு தொடரக்கூடும்….

   எப்படி இருந்தாலும், மன்னார்குடி குடும்பம் ஆட்சிக்கு வராது
   என்பதே பெரிய நிம்மதி தானே…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    Mr K M , the general elections results were announced on the 16th May and Mr Modi became the PM on 26th May -This, when there was no controversy about the leadership or counter claims -In this case situation seems to be changing every hour -I think that there is no strict time line and I am afraid no one can urge the Governor on this –In this context It is worthwhile reading Article 164 (1) of the constitution here —
    As you say there is a possibility of a minority government —
    The verdict is expected on 14th —

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  75 நாட்கள் + 60 நாட்கள் பொத்திக்கிட்டு பதவியையும் அதனால் கிடைத்த லாபங்களையும் அனுபவித்துக்கொண்ட எச்சைகள் எவனும் வேண்டாம் எங்களுக்கு!
  நேத்துவரை SINஅம்மாவை அம்மாவாக்கவேன் என்றவன் HIV + be மாதிரி இப்போ அடுத்த ஸைடு வந்து நிக்கிறானுங்க.
  உங்க முடிவ நீங்களே சொந்தமா எடுக்க தெரியாத நாதாரிகளே, உடனே ராஜிநாமா செய்து ஓடிவிடுங்கள். இல்லையேல் ஓட்டிவிடுவோம்.
  கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக உங்களின் பேடித்தனமான நாடகத்தை பார்த்துவிட்டோம்.
  எங்களை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.
  நல்லா வாய்லே வருது.
  கவர்னரையா இவனுங்கள அப்படியே புடிச்சு உள்ளே போடுங்க. ஜன்மத்துக்கும் வெளியேவே வராதமாரி பண்ணிடுங்க, உங்களுக்கு புண்ணியமா போகும்.

  இப்படிக்கு
  சைதை அஜீஸ் என்கின்ற ஏமாந்த தமிழக வாக்காளன்!!

  • தமிழன் சொல்கிறார்:

   @சைதை அஜீஸ் – உங்கள் வெறுப்பைப் (frustration) புரிந்துகொள்ள முடிகிறது. ச.ம.உறுப்பினர்களின் பக்கம் நின்றுகொண்டு யோசித்தால் புரிந்துகொள்ள முடியும்.

   அதிமுக எம்.எல்.ஏக்கள், ஆட்சி போவதையோ, கட்சி பிரிவதையோ விரும்பவில்லை. கட்சியையும் ஆட்சியையும் காப்பதே அவர்களது தலையாய கடமை (இதில், சசிகலாவின் ஆதரவாளர்களாக, திட்டம் போட்டு எம்.எல்.ஏ சீட்டுக்களைப் பெற்றவர்களை விட்டுவிடுவோம். இது, ஆர்.எம்.வி அவர்கள், எம்ஜியார் உடல் நலக் குறைவின்போது, தன் ஆதரவாளர்களாகப் பார்த்துப் போட்டியிட சீட் கொடுத்ததைப்போன்றது).

   அவர்களுக்கு சசிகலாவோ அல்லது ஓபிஎஸ்ஸோ பொருட்டல்ல. அவர்கள் சுயநலவாதிகளாக, பணம் ஒன்றையே பிரதானமாகக் கொண்டவர்களல்லர் (அதாவது பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள் அல்லர்). இத்தகையவர்கள் யாருக்கு ஆதரவு இருக்கிறதோ அந்தப் பக்கம் செல்லத் துணிந்தவர்கள்.

   இன்னும் சிலர், கட்சியின் மீது பற்றும் பாசமும் கொண்டவர்கள். அவர்கள் இப்போது அமைதியாக இருந்தாலும், அதிமுக கட்சிக்காரர்கள் சொல்படி பின்பு மாறுவார்கள்.

   இதனால்தான், எம்.எல்.ஏக்களின் ஊசலாட்டம் நிகழ்கிறது. ஓ.எஸ் மணியன் போன்றவர்கள் மன்னார்குடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் (அவர்களை அண்டிப் பிழைப்பவர்கள்). அதனால் அவர்கள் கட்சியின்மீது விசுவாசமாக இருப்பார்கள் என்று எண்ணல் இயலாது. தஞ்சை, மதுரை போன்ற மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டக்காரர்கள் மன்னார்குடியின் Core ஆதரவாளர்களாக இருக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். காசுக்கு விலை போன, ரௌடிகள் பின்புலமுள்ள, நேர்மை கிஞ்சித்தும் இல்லாத வளர்மதி, சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் கட்சிக்குத் துரோகம் செய்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. எம்.எல்.ஏக்கள், ஒருவேளை சசிகலா வெற்றிபெற்றால்.. என்ற பயத்திலேயே ஊசலாட்டத்தில் இருக்கிறார்கள். அறிவுத்திறம் மிக்க மைலாப்பூர் நடராஜன் போன்றவர்களே, அப்படி அதிமுக ஒன்றுபடும் பட்சத்தில், கட்சிக்கு எதிராகச் செயல்படக்கூடாது என்பதற்காகத்தான் தங்கள் நிலைமையை இன்னும் அறிவிக்கவில்லை.

   ஜெயக்குமார் (சென்னை) போன்ற சீனியர்கள், கொங்கு எம்.எல்.ஏக்கள், சேலம் போன்ற மாவட்டக்காரர்கள், கட்சிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்.

   இங்கு கட்சியைக் கைப்பற்றத் துணிவது, நடராஜன்/திவாகரன்/ராவணன்/தினகரன் போன்ற மன்னார்குடி கும்பல். அவர்களின் கைப்பாவையாக ரத்த சொந்தமுள்ள சசிகலாவை முன்னிறுத்துகிறார்கள். இவர்களது ஆட்டத்தை 91-96ல் பார்த்திருக்கிறோம். அதன் பிறகு மிடாஸ் காலத்திலும் பார்த்திருக்கிறோம். இப்போதும், நடராஜன் நெஞ்சுவலிக்காக அப்போலோவில் அட்மிட் ஆவதும், மறு’நாள் அப்போலோவில் டாக்டர்கள் பிரஸ் மீட் நடத்துவதும், கணவன் நெஞ்சுவலியில் இருக்கும்போது சசிகலா முதல்வராக முயற்சிகளைத் தொடர்வதும் எதை நோக்கி என்று நமக்குத் தெரியவில்லையா? அதிமுகவை விரும்புகிறவர்கள், இவர்களை முன்னிறுத்துவது, அதிமுகவுக்கு நலம் பயக்காது. மக்களை சசிகலா, மன்னார்குடி கொள்ளைக்கும்பலை (அப்படித்தான் அவர்களது பெயர் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது) வைத்துக்கொண்டு எந்தத் தேர்தலிலும் சந்திக்க இயலாது. வெகு சுலபமாக அதிமுக என்ற கட்சியும் இரட்டை இலையும் வீழ்த்தப்படும். இதற்குத்தான் சு.சுவாமி போன்றவர்கள் பாடுபடுகிறார்கள்.

   75 நாட்களில், பல சீனியர்கள் அம்மா திரும்பி வந்துவிடுவார் என்றே நம்பிக்கொண்டிருந்தனர். அதனால், அம்மாவின்மீது இருந்த அதீத பயத்தினால், கட்டுப்பாட்டினால் ஒன்றும் செய்யவில்லை. இனி பலர் சுயமாக முடிவெடுப்பார்கள் என்றே நினைக்கிறேன். அதில் தவறு காண இயலாது.

   கட்சி நிலைத்து நிற்கவேண்டுமானால், சசிகலா மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் எந்தப் பொறுப்பிலும் இருக்கக்கூடாது. வரும்காலத்தில், திமுக (ஸ்டாலின்) மற்றும் அதிமுக (ஓபிஎஸ் அல்லது காலம் காண்பிக்கும் சரியான தலைவர்) என்பதாகத்தான் தமிழக அரசியல்களம் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது தமிழகத்துக்கு நன்மை பயப்பதாக அமையாது.

   கட்சி ஓபிஎஸ் போன்றவர்களிடம் alignedஆக இருந்துவிட்டால், அவர்கள் நிச்சயம் தமிழக நலன்களைக் கைவிடாமல், பாஜகவின் அழுத்தங்களுக்குப் பயப்படாமல் முடிவுகளை எடுத்தல் இயலும்.

 5. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  kase(money)than kadavulada –even for the atheist

 6. john சொல்கிறார்:

  MONEY IS THERE BUT NO VEERAM THAT IS VEERAMONI TODAY

 7. D. Chandramouli சொல்கிறார்:

  I read an interesting equation to strengthen the hands of OPS. OPS proposes Deepa for General Secretaryship while he himself heading the government. Any political leader needs a mass base. In this case, it is likely that Deepa would be accepted by the masses, particularly the womenfolk of AIADMK. Deepa’s silence intrigues every one.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.