ப்ளாக் மெயிலர்களின் வரிசையில்…..

constitution_of_india

(1 )- நாளைக்குள்ளே என்னை பதவியேற்க கூப்பிடாவிட்டால்,
நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம்…

(2) – நாளைக்குள் பதவியேற்க கூப்பிடா விட்டால் –
அரசியல் சட்ட விதி 32-ன் கீழ் சுப்ரீம் கோர்ட் போகலாம்…

முதலில் உள்ள வார்த்தையை சொன்னவர் – இதுவரை
பொதுவெளியில் ஜாக்கிரதையாக, ஒப்பனை வார்த்தைகளுடன்
பேசி வந்தவர்,
உணர்ச்சி வசப்பட்டு, தான் வழக்கமாக வீட்டில் பேசி வரும்
மொழியை பயன்படுத்தி விட்டார்….!!!

இரண்டாவதாக உள்ள வார்த்தையை சொன்ன –
ஏற்கெனவே ப்ளாக் மெயிலர் என்று புகழ் பெற்றவர் –
வாங்கிய கோடிகளுக்கு ஈடு செய்ய, கவர்னரை பார்த்து
“பேசி”விட்டு, ( பின்வழியே )சென்று விட்டார்….!!!

கவர்னர் மசியாததால், வழக்கம் போல்,
ஒரு மிரட்டலும் கொடுத்து விட்டார்….
இவரை கோமாளி என்று சொல்வதா…?
ப்ளாக் மெயிலர் என்று சொல்வதா…?
வெற்று சவடால் ஆசாமி என்று சொல்வதா…?

என்ன சொல்கிறார் இவர் …?

The TN Guv must decide CM issue by tomorrow
otherwise a WP under Art 32 of the Constitution
can be filed charging abetment of horse trading

அந்த மிரட்டலில் கூட தான் வழக்கு போடப்போவதாக
சொல்லவில்லை. ஜாக்கிரதையாக வார்த்தையை
பயன்படுத்தி can be filed – அதாவது
(யார் ? – வேண்டுமானால்…)
” போடலாம் “- அவ்வளவு தான்.
(இலவச ? சட்ட ஆலோசனை…!!! )

அரசியல் சட்டம் பிரிவு 32 என்ன சொல்கிறது….?

– Article 32 provides the right to Constitutional remedies
which means that a person has right to move to
Supreme Court (and high courts also) for getting his
fundamental rights protected.

இது மிகவும் பொதுவான ஒரு அரசியல் சட்ட பிரிவு.
தன்னுடையை ” அடிப்படை உரிமை ” ( fundamental right )
எதாவது பாதிக்கப்பட்டிருப்பதாக கருதும் எந்த குடிமகனும்,
சுப்ரீம் கோர்ட்டை அணுகி நிவாரணம் பெற உதவும்
ஒரு சட்டப்பிரிவு.

கவர்னர், சம்பந்தப்பட்டவரை
பதவியேற்க அழைக்க முடியாது
என்று சொல்லி மறுத்திருந்தால், சட்ட நிவாரணம் பெற
கோர்ட்டை அணுகலாம்.

இங்கு கவர்னர் தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.
இத்தனை நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று
அவரை எந்த சட்டமும் கட்டாயப்படுத்தவில்லை….

யோசித்து, தேவைப்படுபவர்களை கலந்தாலோசித்து –
அதன் பின்னர் தனது முடிவை எடுக்க,
தேவையான அவகாசத்தை ( a reasonable time )
கவர்னர் எடுத்துக் கொள்ளலாம்.

கவர்னர் தன் முடிவை அறிவித்த பிறகு வேண்டுமானால்,
கோர்ட்டை அணுக முடியும். அதுவரை காத்திருப்பதைத் தவிர
வேறு வழி இல்லை…

இவர்கள் இப்போது செய்வது – சும்மா …
” உதார் ” காட்டுவது…
அதாவது, அவர்களது இயலாமையை மறைக்க பேசுவது…!!!

கவர்னர், இந்த விஷயம் குறித்து தன்னிடம் சட்ட ஆலோசனை

பெற்றதாக இந்தியாவின் ஓய்வுபெற்ற
தலைமை வழக்குரைஞரும், புகழ்பெற்ற அரசியல்
சட்டநிபுணருமாகிய சோலி சோரப்ஜீ அவர்கள்
சில நிமிடங்களுக்கு முன்னர் டெல்லி தொலைக்காட்சி
ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார்….

அதில் –

கவர்னர் பதவியேற்பு விஷயத்தை சில நாட்களுக்கு
ஒத்தி வைப்பது தான் சரியாக இருக்கும் என்று தான்
ஆலோசனை கூறி இருப்பதாகவும்,
– அது முற்றிலும் கவர்னரின்
அதிகார வரைமுறைக்குள் தான் இருக்கும் என்றும்
கூறி இருக்கிறார்.

” In an exclusive interview with India Today, Soli J Sorabjee,
former Attorney General of India, said the Governor is well
within his right to defer swearing-in for a few days.
Sorabjee had advised Governor Rao on the current
political crisis in Tamil Nadu.

Sorabjee said the Governor is well within his rights
to defer the swearing-in for a few days particularly
when the verdict in the disproportionate assets case,
involving Sasikala, is imminent.”

– எனவே, சட்ட நிவாரணம் கோரி, சுப்ரீம் கோர்ட்டுக்கு
போனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சலாம்…!

மாறாக, தங்களது இன்னொரு யோசனையை –
( “நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம்…”)
வேண்டுமானால் அவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம்…!!

அதைப்பார்க்க தமிழக மக்கள் –
ஆவலுடன், காத்திருக்கிறார்கள்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to ப்ளாக் மெயிலர்களின் வரிசையில்…..

 1. GVS சொல்கிறார்:

  // அதைப்பார்க்க தமிழக மக்கள் –
  ஆவலுடன், காத்திருக்கிறார்கள்…!!! //

  K.M.sir,

  not only தமிழக மக்கள் – the whole of India
  is awaiting eagerly. See how much importance
  Delhi Channels are giving to this issue.

  Let them execute what they say.

 2. LVISS சொல்கிறார்:

  Dont know whether only the affected person or anyone on behalf of an affected person can file a writ petition —

  • GVS சொல்கிறார்:

   Mr.LVISS,

   Why are you trying to defend su.su. by quoting outdated
   news of 8th Feb. ?
   Yesterday he met the guv. personnally.
   What was the necessity ?
   Justifying the ‘ fees’ recd. ?

   • LVISS சொல்கிறார்:

    That was his stand , that is his stand now –He will neither support OPS or Sasikala —
    Any one can met the Governor Mr maithreyan also met him —

    • GVS சொல்கிறார்:

     SorryMr.LVISS

     U are repeatedly giving false information.
     Susa has yesterday told in Chennai tha t
     OPS is unfit to be CM.
     When u read all other news how this escaped yr notice ?

     //Any one can meet the Governor //
     Not correct. Governor has to agree.
     Maitreyan met for wishing him birthday greetings

 3. NS RAMAN சொல்கிறார்:

  Governor delaying for verdict why the same logic was not applied to JJ. She was also facing the same case and judgment was pending before she took over as cm

  All depends on supreme court verdict

  In favor of sasi swamy both are right
  sasi claim for cm cannot be denied

  Otherwise Governor is correct

  In both cases tamilnadu voters are wrong for selected wrong leaders

 4. Sundar Raman சொல்கிறார்:

  Sir you may not agree , Supreme court play games – just to give trouble to the Modi ( central govt ) and head ache to Governor , they ( supreme court) will release Sashikala and gang. You see how the media is against Modi same way various courts gives trouble to Modi..despite all that the man is performing , working all the time for welfare of India. ( please note they have released Maran already ) –

 5. தமிழன் சொல்கிறார்:

  இப்போது நான் பார்ப்பது இந்தக் காட்சிகளைத்தான்.

  சசிகலாவிடம் அதிக (in excess of 100) எம் எல் ஏக்கள் இருக்கின்றனர். அனைவருக்கும் (135+), ஆட்சி தொடரத்தான் விருப்பம். யாருக்கும் திரும்ப தேர்தலுக்குச் செல்ல விருப்பம் இல்லை.

  சட்டம், நியாயப்படி, சசிகலாதான் ஆட்சி அமைக்க அழைக்கப்படவேண்டும் (அது தவறு, மக்கள் ஆதரவு இல்லை என்ற போதும்). ஆட்சி அதிகாரம், கடுமையான புகாருக்கு உள்ளாகும் அளவு சசிகலா கும்பல் ஆடும் என்று எதிர்பார்க்கலாம். எனக்கு ஓபிஎஸ் அவர்களுக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கும் என்று தோன்றவில்லை. அப்படி இருக்கும் என்றால், அவருக்கு கவர்னர் ஆதரவு தெரிவிப்பது முறை.

  தர்மப்படி நடந்திருக்கவேண்டும் என்றால், சசிகலா கட்சியையும், ஓபிஎஸ் ஆட்சியையும் ஏற்று நடத்தியிருக்கவேண்டும். அதுதான் அதிமுகவுக்கு நல்லதாக இருந்திருக்கும். சசிகலாவையும் அவர் பேச்சையும் பார்க்கும்தோறும் அவ்வளவு வெறுப்பு மனதில் உண்டாகிறது. மக்கள் கண்ணைமூடிக்கொண்டு பணத்தை லபக்கிக்கொண்டு ஆதரவு தருவார்கள் என்று நினைக்கிறாரா? அதிமுக தொண்டன் ஒரு கொள்கை அல்லது உத்வேகம் இல்லாமல் சசிகலாவை ஆதரிப்பானா?

  உச்ச நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பு வழங்கினாலும், அது ஏற்புடையதாக இருக்கும் என்று தோன்றவில்லை. தாமதப்படுத்தப்படும் எதுவும் அநீதிதான். எங்கு கொள்ளை நடந்திருக்கிறதோ அங்கெல்லாம், உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துவிடுவதைக் காண்கிறேன். எல்லாம் சட்டப்படிதான் நடக்கின்றது என்றால், அத்தகைய சட்டத்தினால் சாமானியனுக்கு எந்தப் பயனும் இல்லை. பணமுள்ள, அரசியல்வாதிகளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டமுடியாது என்று சொல்லிவிட்டால், மக்கள் பணமும் மிச்சமாகும். நீதிபதிகள் சாமானியர்களது பெண்டிங்க் வழக்குகளில் கவனம் செலுத்தலாம்.

  Troubled watersல் மீன் பிடிக்க முயல்வது அரசியல்வாதிகளின் இயல்பு. அது காங்கிரஸாகட்டும் பாஜகவாக இருக்கட்டும். இதில் வியப்பில்லை.

 6. Thiruvengadam thirumalachari சொல்கிறார்:

  It is worthwhile to find out how OPS was made cm for the first time as I was told the then governor was hesitant to swear in someone who was not an MLA.It is also moot point to find out if Rabri Devi was MLA when she replacedLalu and what were the yardsticks.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.