என்ன பன்னீர் சார்… இது கூட புரியல்லையா உங்களுக்கு…?

sasikala-and-mlas-meeting

..

ஆனாலும் இந்த ஓபிஎஸ் சார்
ஒன்றும் புரியாத மனிதராக இருக்கிறார்….

என்ன ஓபிஎஸ் சார்…
சின்னம்மாவுக்கு – இருக்கிறது ஒரே ஒரு சின்ன ஆசை –
அதைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாதா என்ன…?

பாருங்களேன் தன் ஒரே ஆசையை தெளிவாகத்
தெரிவித்து விட்டார் சின்னம்மா…
நிறைவேற்றி வைத்து விடுங்களேன்… பிரச்சினை தீர்ந்தது…!!!

—————
கூவாத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட அடிமைகளின்
முன்னால், “சின்னம்மா” நேற்றிரவு
பேசியவற்றிலிருந்து ஒரு பகுதி –

———–

‘அ.தி.மு.க.,விற்கு புது குட்டி சிங்கம் வந்துள்ளது.
இதை, நாம் எப்படி சமாளிப்பது? எனவே, இப்பவே
மீன் பிடிக்கிற மாதிரி, வலையை வீசுவோம்; எப்படியாவது
மாட்டிவிடும்’ என நினைக்கின்றனர்….!!!

நான் பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட பின், ஜெ.,
நினைவிடத்திற்கு போனபோது, அங்கிருந்து வெளியே வர
முடியவில்லை. காலை எடுத்து வைக்க முயற்சித்தபோது,
ஒரு சக்தி, என்னை ஈர்த்து கொண்டிருந்தது……!!!

இந்த கட்சியை, தொண்டர்கள் அனைவரும், என்னை நம்பி
ஒப்படைத்துள்ளனர். உங்கள் மீது ஆணையிட்டு கூறுகிறேன்.
இந்த இயக்கத்தையும், இந்த ஆட்சியையும், நிச்சயம் என் உயிர்
உள்ளவரை காப்பாற்றிக் கொண்டே இருப்பேன் என, உறுதி
எடுத்துவிட்டு தான் அங்கிருந்து கிளம்பி வந்தேன்.
….

எனக்கு ஒன்றே ஒன்று தான்.
நான் உறுதிமொழி எடுக்கப் போகிறேன்.
நமது அரசை அமைத்து,
ஜெ., சமாதியில், கேபினட்
அமைச்சர்களோடு, புகைப்படம் எடுத்து,
கோட்டைக்கு போக
வேண்டும் என்பது தான் நமது சபதம்.

நாம் ஆட்சி அமைத்து, ஜெ., சமாதியில் உறுதிமொழி எடுத்து,
கோட்டைக்கு போகிறோம். சட்டசபை உள்ளே, ஜெ., படத்தை
திறக்கிறோம்.


மிகப்பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது.
ஜெ., படம், சட்டசபையில் வைக்க வேண்டும்.
அதை வைக்க விடாமல் செய்ய, நம் கட்சியில் இருந்து ஆள் போய் உள்ளது.
இது, ஜெ.,வுக்கு செய்யும் துரோகம் இல்லையா?


எம்.எல்.ஏ.,க்கள் இணைந்து, ஜெ.,வின் உண்மையான
விசுவாசி என்பதை நிரூபிக்க,
ஜெ., படத்தை திறக்க வேண்டும்.
அதை, நான் பார்த்தால் தான், வாழ்க்கையில்,
மிகப்பெரிய பாக்கியமாக நினைப்பேன்.

ஒரு பெண்ணை தலைமையாகக் கொண்ட இந்த இயக்கம்,
அடுத்ததும் நானும் பெண்ணாக வந்து விட்டேன்.

அந்த படத்தை திறக்கிறது தான் வேலை.
அதற்கு எல்லாரும் ஒற்றுமையாக இருந்து, படத்தை திறக்க
வேண்டும். இந்த வாய்ப்பை, நாம் நழுவ விட்டுவிடக் கூடாது.

தி.மு.க.,வினரை பற்றி தெரியாமல் இருக்கலாம்.
அந்த கட்சி இல்லை என்றால், யார் படத்தை திறப்பர் என
நினைக்கின்றனர். இதை, அந்த கட்சியில் இருந்து,
ஒரு ஆள் கூறினார்.

நாங்கள், ஜெ., படத்தை திறப்போம்;
அதை பார்க்கத்தான் போகிறீர்கள்.
ஒரு சபதம் எடுத்துள்ளேன்; அதை தான் கூறுகிறேன்.

எம்.ஜி.ஆர்., படம் இருந்தது.
அதன்பின், கட்சியின் அடுத்த தலைவர் ஜெ., படத்தை திறக்க, எந்த இடையூறும் வராமல்
பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு,
உங்களுக்கு உள்ளது. ஜெ.,வை மனதில் நினைத்துள்ளோம்.
அது உண்மை எனக் கூறுவது, சட்டசபை வளாகம்.

இந்த கட்சி பொதுச்செயலர் பொறுப்பை கொடுத்துள்ளீர்கள்.
அந்த பொறுப்பில், துளியும் மாறாமல்,
இந்த கட்சியின் தலைவர் படத்தை, சட்டசபையில் வைக்க,
“அரசை பொதுச்செயலர் என்ற முறையில்” நடத்திக் காட்டுவேன்.

அதுவே என் ஆசை; அதை பகிர்ந்து கொள்ளவே வந்தேன்.நாம் ஒரே குடும்பமாக இருந்து,
ஜெ., படத்தை சட்டசபையில் திறந்து வைப்போம்….

————————————————

“ஜெ.படத்தை சட்டசபையில் திறந்து வைக்க வேண்டும்”
-அவ்வளவு தான்… பிரச்சினை தீர்ந்தது…

உடனே செயலில் இறங்குங்கள் பன்னீர் சார்…!!!

____________________________

பின் குறிப்பு –

” தலைப்பு ” குறித்து –

முதல்முறையாக ஒரு முதலமைச்சரை
பெயர் சொல்லி கூப்பிடக்கூடிய “சுதந்திரம்”
நமக்கு கிடைத்திருக்கிறது…!

அது பறிபோவதற்குள், பயன்படுத்திக்
கொண்டு விடலாமே என்கிற ஆசைதான்… 🙂 🙂

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

என்ன பன்னீர் சார்… இது கூட புரியல்லையா உங்களுக்கு…? க்கு 6 பதில்கள்

 1. தமிழன் சொல்கிறார்:

  நான், நீங்கள், நடராஜன், தினகரன், திவாகரன், வெங்கடேஷ் போன்றவர்களின் involvementஐ, சசிகலாவைத் தாங்கிப்பிடிக்கச் செய்யும் செயல்களை எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். நடராஜன் போன்ற பின்பக்க அரசியல்வாதிகளால்தான், நெடுமாறன், வீரமணி, திருமாவளவன்…. இன்னும் விரைவில் ஆதீனம் போன்றவர்கள் சசிகலாவுக்காக வாதாடுகிறார்கள்/வாதாடுவார்கள்..

  சிலர், ஓபிஎஸ்ஸிடம் பணம் இல்லை. சசிகலாவிடம் பணம் இருக்கிறது (வேறு எப்படி…. மிடாஸ் போன்ற தொழில்கள் செய்து). அதனால் தேர்தலைச் சந்திக்கமுடியும் என்று நினைக்கிறார்கள். பணம் மட்டுமே தேர்தலுக்குப் போதுமென்றால், வைகுண்டராஜன் அவர்கள் 25 தொகுதிகளிலும், மதுரை கிரானைட் கொள்ளையர்கள் (தவறு.. தொழிலதிபர்கள்) 25 தொகுதிகளிலும், ஆ.ராசா 2ஜி அவர்கள் 25 தொகுதிகளிலும், சாராய தொழிலதிபர் டி.ஆர்.பாலு அவர்கள் 25 தொகுதிகளிலும் சுலபமாக வெற்றிபெற்றுவிடலாமே. உலகப்பணக்காரரான மாறன், எம்.பி. தொகுதியில் சுலபமாக வெற்றிபெற்றிருக்கலாமே…. பணத்தை சசிகலா இரைக்கும்போது அவர் பெயர் மேலும் கெடும். 80 எம்.எல்.ஏக்களாவது பணத்தின் காரணமாக சசிகலாவுடன் இருக்கிறார்கள் (சசிகலாதான் அவர்கள் சீட் கிடைக்கக் காரணமாயிருந்திருக்கிறார்)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   என்னுடைய கணிப்பு –
   ஆட்சியை தொடர்வதற்கு தேவையான மெஜாரிடி
   திரு.ஓபிஎஸ் அவர்களுக்கு கிடைக்காமல் போகலாம்…

   ஆனால், திருமதி சசிகலாவிற்கு மெஜாரிடி (118 )
   கிடைக்காமல் செய்ய அவரால் இயலக்கூடும்…

   விளைவு …?

   சிறிது காலத்திற்கு ஓபிஎஸ் அவர்களின் தலைமையில்
   மைனாரிடி அரசு. பின்னர் தேர்தல்….

   அல்லது உடனடியாக ஜனாதிபதி ஆட்சி –
   ஆறேழு மாதங்களுக்குப் பின் மீண்டும் ஒரு முயற்சி…?

   இப்போதைய நிலையில் எதையும் உறுதியாக
   சொல்ல முடியவில்லை.

   “நல்லதே நடக்கட்டும்…”

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • தமிழன் சொல்கிறார்:

    “நல்லதே நடக்கட்டும்…” – கண்டிப்பாக அதனையே எதிர்பார்க்கிறேன். சசிகலா அவர்கள், பேசப் பேச, ‘பலே கைகாரி’யாகத் தன்னை உருவப்படுத்திக்கொள்வதாகத்தான் தெரிகிறது. இதுதான் மக்களிடம் உள்ள பிம்பமா என்று தெரியவில்லை. அதாவது, சசிகலா என்றாலே, மோசமான பிம்பம், என் மனத்தில் உள்ளதைப்போலவே, பொதுமக்களிடமும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

    அவர் சொல்கிறார், ‘ஜெவுக்கு அரசியல் ஆர்வத்தை ஊட்டியதும், ஆசையைத் தூண்டிவிட்டதே தான் தான் என்று.’. நிச்சயம் அடுத்த கருணானிதிதான் சசிகலா. (இறந்தவர்களின் பெயரை வைத்துப் புளுகுவது. கேட்க யாரும் இல்லை என்ற நினைப்பில். இப்படித்தான் திவாகரன் சமீபத்தில் ஒரு மேடையில், அதிமுகவின் முதல் தேர்தலில் மாயத்தேவர் வெற்றிக்கு மன்னார்குடி குடும்பம் உழைத்தது என்று சொன்னார். நல்லவேளை மாயத்தேவர் உயிருடன் இருந்ததால் அவர் அதற்குச் சரியான விளக்கம் கொடுத்தார்)

   • chandramouly venkatasubramanian சொல்கிறார்:

    I wish Mr ops ALL SUCCESS,MAY GOD BLESS Him

 2. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  very simple 3 kg gold biscuits

 3. gopalasamy சொல்கிறார்:

  Composite floor test in UP assembly Feb 25 1998 :
  After a day-long battle of the ballot, Kalyan Singh consolidated his position as chief minister of Uttar Pradesh, winning the unique composite floor test in the state Vidhan Sabha by a wide margin of 29 votes on Thursday night.

  Kalyan Singh polled 225 votes as against the 196 garnered by Jagadambika Pal, thereby bringing to an end the six-day-old political drama .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s