எடப்பாடி தேர்வை கவர்னர் ஏற்க மறுக்கலாம்…!!!


edapadi__large

ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு என்பார்கள்…

திருமதி சசிகலா நடராஜனுக்கு சிறை வாசம் உறுதி
செய்யப்பட்டவுடன், தனக்கு கிடைக்கா விட்டாலும்
பரவாயில்லை – திரு. ஓபிஎஸ் அவர்களுக்கும்
அது கிட்டி விடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில்,
திருமதி ச.ந. –

அவசர, அவசரமாக –
கூவாத்தூர் ரிசார்ட்டிலேயே,
அங்கே தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களை மட்டும் வைத்து-

ஒரு கூட்டம் போட்டு, எடப்பாடியை தேர்ந்தெடுத்ததாக
அறிவித்திருக்கிறார்கள். உடனடியாக அந்த கடிதத்தை
கவர்னரிடம் அனுப்பி, ஆட்சி அமைக்க அழைக்குமாறு
வேண்டுகோளும் விடுத்திருக்கின்றனர்.

கவர்னர் இந்த வேண்டுகோளை நிராகரிக்க
பல காரணங்கள் இருக்கின்றன –
அவற்றில் சில –

– ஏற்கெனவே, திருமதி ச.ந.வை தேர்ந்தெடுத்து கடிதம்
கொடுத்திருக்கிறபடியால், புதிய கடிதத்தில் –
அதனை ரத்து செய்வதான காரணங்கள் கூறப்பட்டு,
அதற்குப் பிறகு, புதிய தலைவரை தேர்ந்தெடுக்க
கூட்டப்பட்ட கூட்டத்தில் நிகழ்ந்த தேர்வு இது என்பது
குறிப்பிடப்பட்டிருக்கிறதா…?
( தேர்தலில் கலந்து கொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும்
உரிய கால அவகாசம் கொடுக்கப்படவில்லை என்பதை
இந்த வாசகம் உறுதி செய்யும்…)

– சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்ட
யாருக்கு அதிகாரம் இருக்கிறது….?

– கூட்டியது யார்…?

– அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்,
அஜென்டா கொடுத்து,
கலந்துகொள்ள உரிய கால அவகாசம் கொடுத்து
அழைப்பு அனுப்பப்பட்டதா…?

– ஆம் என்றால், அதற்கான ஆவணங்கள்…?

– கலந்து கொண்டவர்கள் எத்தனை பேர்…?

– தீர்மானத்தை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்…?
அவர்கள் ஒப்புதல் கையெழுத்து தீர்மானத்துடன்
ஏன் இணைக்கப்படவில்லை…?

– கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தான்
கலந்து கொண்டனரா அல்லது வேறு யாரும் இருந்தனரா..?

– எந்தவித வற்புறுத்தலும் இல்லாமல் தேர்தல்
நடந்தது என்பதற்கான ஆதாரம்…?

இன்னமும் கூட சில காரணங்கள் இருக்கின்றன.
கவர்னர், கடிதத்தை பரிசீலிக்கும்போது
இந்த காரணங்களை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள
வாய்ப்பு இருக்கிறது.

கடிதம் கொடுத்து விட்டாயிற்றே
இன்னும் கவர்னர் ஏன் அழைப்பு அனுப்பவில்லை…?
வேண்டுமென்றே தாமதம் செய்கிறார் என்று
மீண்டும் குரல் எழுப்ப துடிக்கின்றனரே –
சில அரசியல்வாதிகள்…!

அவர்களுக்கு …
அமைதியாக இருங்கள் –
ஆத்திரத்திலும், அவசரத்திலும் செயல்பட்டதன்
விளைவு இது என்று

சொல்வதற்காக எழுதப்பட்ட இடுகை இது…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to எடப்பாடி தேர்வை கவர்னர் ஏற்க மறுக்கலாம்…!!!

 1. NS RAMAN சொல்கிறார்:

  Hello friends

  ADMK proved as a corrupted party by SC.
  We are waiting for verdict against DMK

  So called joker swamy is a hero and behind this case

  I think election imposed on us and we should debate on other options in front of us with an open mind

  • புதியவன் சொல்கிறார்:

   நம்ம நாட்டுல ஊழல் இல்லாத, ஊழல் செய்து சொத்து சேர்க்காத ஒரு கட்சியும் கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சியைக் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் ஒத்துக்கொள்ளலாம். மற்ற எல்லாப் பெரிய கட்சிகளும் ஊழலில் சொத்துசேர்த்தவர்கள்தான். மாட்டிக்கொண்டவன் திருடன். மாட்டிக்கொள்ளாத எல்லோரும் கொள்ளைக்காரர்கள்தான். இதுல சந்தேகம் வந்தால், யார் பெயரையாவது எடுத்துக்கொண்டு, என்ன தொழில், 20 வருடங்களுக்கு முன்பு என்னவாக இருந்தார், இப்போது என்ன நிலைமை என்று பார்த்தாலே போதும். காங்கிரஸ் செய்யாத ஊழலா..

   அதே உச்சநீதி மன்றம்தான், காவிரி தண்ணீர் தமிழகத்துக்கு வரவேண்டியது தேவையில்லை என்று சொன்னது (effectively) அதே உச்ச நீதிமன்றம்தான் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை, ராஜீவ் கொலையானதற்குச் சதி செய்தவர்கள் என்று தீர்ப்பளித்தது. அதே நீதிமன்றம்தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்படவேண்டியது என்று சொன்னது.

   There is no need for ‘open mind’ to see other options. We should work to ensure that we get a reasonable Govt., not the one that works for a caste like PMK. not the one that divides people based on religion ie BJP. not the one that is completely corrupted. ie Congress. not the one that works for one family and creates district wise corrupted leaders. ie DMK. The only option we have is, either to select Communists or outsource to USA. (This is sarcastic reply to your questions)

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப புதியவன்,

    நண்பர் NS RAMAN அவர்களுக்கு பதில் சொல்ல
    நீங்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டியதே இல்லை…

    ” பாஜகவிடம் தமிழ்நாட்டின் ஆட்சியை கொடுக்க வேண்டும் ”
    -இவ்வளவு சொன்னால் போதுமானது… 🙂 🙂 🙂

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • LVISS சொல்கிறார்:

     If 10 persons come to OPS side a govt of formed by the sasikala faction will be a minority one –There is a view that sonner than later president’s rule will have to be imposed for 6 months to enable a fresh election – I do not know whether this will happen but the past experiences with minority or a govt with outside support has not been encouraging — There will be a govt without much governance –As things stand OPS is unlikely to get a support base of 117 , the minimum required for a stable govt –EPS has 124 MLAs —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப NS RAMAN,

   “மதுரை வீரன்” படம் பார்த்திருக்கிறீர்களா…?
   திரு.சு.சுவாமியை பார்க்கும்போதெல்லாம் எனக்கு
   நினைவிற்கு வருவது அதில் வரும் திரு.டி.எஸ்.பாலையா
   அவர்கள் தான். வில்லனாகவும், அதே சமயத்தில்
   காமெடியனாகவும் கலக்குவார்….

   திரு.சு.சு. உங்களுக்கு வேண்டுமானால் ஹீரோ வாக இருக்கலாம்.
   ஆனால் மற்றவர்களின் கண்களுக்கு…..?

   ஆமாம், அந்த கற்பழிப்பு சாமியார் ஆசாராம் பாபுவை வெளியே
   கொண்டு வருவதற்காக உங்கள் ஹீரோ ஏன் இத்தனை போராடுகிறார்…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • NS RAMAN சொல்கிறார்:

    Dear Sir

    I am not supporting each and every action of Swamy or BJP

    What ever may be your comments Swamy is a real instrument behind JJ case and 2G case.

    But for sure your heroine “corrupted and convicted JJ” is not my choice !!!!!

    Till yesterday you want a judgement against Sasi, but fact is JJ is Convicted No.1 in the same case.

    In my post I had requested for open minded discussion but unfortunately you are always try find some motive behind the opinion and making personal attack on the writter like “Modi Bhakthar” etc.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     Dear Mr. NS RAMAN,

     OK – I accept…
     Let there be a change this time –
     Let me call “SWAMY BAKTHAR” instead of….. !!! 🙂 🙂

     I find you have not responded to my question –

     ஆமாம், அந்த கற்பழிப்பு சாமியார் ஆசாராம் பாபுவை வெளியே
     கொண்டு வருவதற்காக உங்கள் ஹீரோ ஏன் இத்தனை போராடுகிறார்…?

     -with all good wishes,
     Kavirimainthan

     • NS RAMAN சொல்கிறார்:

      Read my first line of reply

      What about your reply on supporting blindly JJ in this case

      Also tons of allegations about justice cunha

      Please share your legal wisdom with our readers

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      நண்ப ராமன்,

      உங்களுக்கு ஜெயலலிதா அவர்களை சுத்தமாக பிடிக்கவில்லை
      என்பது வெளிப்படையாகவே தெரிகிறது…

      உங்கள் ஒருவரின் எண்ணத்தை மாற்றும் முயற்சியில்
      நான் ஏன் வீணாக
      என் நேரத்தை செலவழிக்க வேண்டும்…?

      நீங்கள் தாராளமாக,
      என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொண்டு
      சந்தோஷமாக இருங்கள்..!!!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

    • இளங்கோ சொல்கிறார்:

     NS RAMAN

     // ஆமாம், அந்த கற்பழிப்பு சாமியார் ஆசாராம் பாபுவை வெளியே
     கொண்டு வருவதற்காக உங்கள் ஹீரோ ஏன் இத்தனை போராடுகிறார்…?//

 2. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! பலவித குழப்பங்கள் — மக்கள் மனநிலை புரியாத அரசியல்வாதிகள் — கட்சிகள் ….! நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு காத்திருக்கும் குள்ளநரிகள் — பதவி ஆசைபிடித்த கயவர்கள் …. !! ஒரு கட்டுக்கோப்பான கட்சியை பிளவுபடுத்தி சந்துக்குள் – சிந்துப்பாட துடிக்கும் சுயநலவாதிகள் … இதெற்கெல்லாம் ஒரே தீர்வு என்ன … ? ஜனாதிபதி ஆட்சியா … இல்லை ” மைனாரிட்டி ஆட்சியா ” ..?

  இதுவே தக்க தருணம் என்று உள்ளே நுழைந்து முதல்வர் நாற்காலியில் அமர துடிக்கும் எதிர்க்கட்சியினர் — அதைப்பற்றி ஒரு செய்தி :– . Posted Date : 12:42 (14/02/2017) Last updated : 13:51 (14/02/2017)
  // ‘பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார்!’ – பா.ஜ.கவுக்கு தூது அனுப்பிய தி.மு.க // http://www.vikatan.com/news/tamilnadu/80742-we-can-show-our-majority—dmk-tells-bjp.html?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=8473 ……..

  மீண்டும் ஒரு பொது தேர்தல் வெட்டி செலவுகள் … ? அடடா … என்னவொரு நிலைமை இந்த தமிழகத்திற்கு ..? ” ஆவதும் பெண்ணாலே — அழிவதும் பெண்ணாலே ” என்று தீர்க்க தரிசனமா கூறிய தமிழன் … போற்றப்பட வேண்டியவன் தானே … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   உடனடி தேர்தலை திமுக விரும்பாது என்றே நினைக்கிறேன்.

   அதே சமயத்தில் அதிமுகவின் ஒரு பிரிவினருடன் கூட்டு
   வைத்து அரசமைப்பதையும் அது விரும்பாது.

   சில மாதங்களுக்கு கவர்னர் ஆட்சியில் தமிழகத்தை விட்டுவிட்டு,
   பிறகு தேர்தல் நடந்தால் திமுகவுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும்
   என்பது அவர்களின் கணிப்பாக இருக்கலாம்..

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.