ஜெயலலிதா ஆக நினைத்த சொர்ணாக்கா…!!!


samaiyal-kurippu

sornakka

‘ஜெயலலிதா ஆக நினைத்து வளர்மதி
ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்!’ சசிகலா(சொர்ணாக்கா)வுக்கு தமிழக பெண்களின் சார்பாக ஒரு கடிதம்!

——————–

”தலைவரு இறந்தபோது… அம்மாவ என்ன பாடு படுத்துனாங்க? ஒரு விஷயம் முக்கியமா கவனிக்கணும். ஒரு பெண்ணு… பெண்ணு எப்படி கட்சியில வந்து வர்றது… அப்படீங்கிறத வந்து காமிச்சாங்க. இப்பயும்
அதே தோரணதான். அன்னைக்கு எந்தக் கூட்டம் அம்மாவ
எதிர்த்துச்சோ… அதே கூட்டம்தான் இன்னைக்கும் செய்யுது” ஞாயிறு இரவு கூவத்தூரில் நீங்கள் பேசிய பேச்சு இது சசிகலா.

பொட்டு, பிளவுஸில் தொடங்கி உங்கள் பேச்சு வரை அனைத்திலும் உங்களை நீங்கள் ஜெயலலிதாவுக்கான மாற்றாக நிறுவத் துடிக்கிறீர்கள். 30 ஆண்டுகளாக தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ஆளுமைப் பெண் ஜெயலலிதாவுக்கு மாற்றாக, ஒன்றரை மாத அரசியல்வாதியான நீங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லிக் கேட்கிறீர்கள். ‘முடியாது’ என்பது தமிழகத்தின் பதில்.

குறிப்பாக, அரசியல் பேச்சுகளில் பெரும்பாலும் ஒதுங்கி இருக்கும் நாங்கள்கூட, இப்போது முழுநேரம் செய்தி சேனல்களை பார்த்தபடி இருக்கிறோம். ‘சசிகலா வேண்டாம்’ என்ற உறுதி எங்களுக்குள் இறங்கியிருக்கிறது. உபயம், நீங்களேதான் திருமிகு சசிகலா.

1989-ம் ஆண்டில் தமிழக சட்டசபையில், ஆட்சியில் இருந்த
தி.மு.க-வினரால் அவைத் தலைவர் முன்னிலையிலேயே
அவமானப்படுத்தப்பட்டார் ஜெயலலிதா. தன் கிழிந்த புடவையுடன் அவையைவிட்டு வெளியேறியபோது, இந்த அரசியல் அவருக்கு உட்சபட்ச கண்ணீரைத் தந்தது. பச்சாதாபம் தேடும் தருணத்திலும், ‘கருணாநிதி முதல்வராக இருக்கும்வரை இந்த அவைக்கு நான் வரமாட்டேன்’ என்ற அவரின் சூளுரையில் இருந்து,

‘ஜெ.ஜெயலலிதாவாகிய நான்’ என்று அவர் ஆறாவது முறை
முதல்வராகப் பதவிப் பிரமாணம்செய்துகொண்டது வரை, தமிழக அரசியலில் மட்டுமல்ல, நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக இந்திய அரசியலில் இடம்பிடித்தது வரை, அவரின் ஆளுமை அண்ணாந்து பார்க்கக்கூடியது.

எங்கள் அம்மா தலைமுறைப் பெண்களுக்கும், எங்களுக்கும், இப்போது எங்கள் பெண் பிள்ளைகளுக்கும், அரசியல் சார்பு தாண்டியும் அவரைப் பிடிக்க, வரலாற்றில் பல காரணங்களை விட்டுச் சென்றுள்ளார் ஜெயலலிதா.

அவரின் இடத்தில் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்களே
சசிகலா… உங்களைப் பற்றி இதுவரை நீங்கள் எங்களுக்குத் தந்துள்ள பிம்பம் என்ன தெரியுமா?

‘ஜெயலலிதாவின் தோழி சசிகலா. குடும்பமாக போயஸ் கார்டன்
இல்லத்துக்குள் நுழைந்தவர். ‘வளர்ப்பு மகனின் ஆடம்பர திருமணம்’ என்ற அவப்பெயரை அவருக்கு ஏற்படுத்தியவர். ஜெயலலிதாவின் செல்வாக்கை முன்னிறுத்தி பலரின் நிலங்களை அபகரித்தவர். அந்நிய செலாவணி வழக்கு, சாராய ஆலை உரிமையாளர் என குற்றப் பின்னணி கொண்டவர்.’

இவையெல்லாம் நேற்று. இந்தக் காலகட்டங்களில் எல்லாம், நாட்டில் உள்ள அறத்துக்கு எதிரான அடாவடிக்காரர்களில் ஓர்
அடாவடிக்காரராகத்தான் உங்களை நாங்கள் பார்த்தோம்.

அதனால் ஏழோடு எட்டாக உங்களையும் கடந்தோம்.

ஆனால், ஜெயலலிதாவின் மரணத்தைச் சூழ்ந்த சந்தேகங்களுக்கு
மையப்புள்ளியாக நீங்கள் ஆனபோது, உங்களை தமிழகம் தனித்து கவனிக்க ஆரம்பித்தது. அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சையில்(!) இருந்த நாட்களில், ‘எங்க அம்மா முகத்தைக் காட்டுங்க’ என்று மாரில் அடித்துக்கொண்டு அழுத அடிமட்ட அ.தி.மு.க பெண்கள் முதல்,

முகம் பார்க்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்ட ஆளுநர் வரை, பார்த்த காட்சிகள் அனைத்திலும் ‘இவர் ஆபத்தானவர்’ என்ற பிம்பத்தை நாங்கள் உங்கள் மேல் கொள்ளச் செய்தீர்கள்.

ஜெயலலிதா மறைந்தபோது, கட்சி சார்பு தாண்டியும் தமிழகமே அழுதபோதும்,

அவர் உடல் பூமிக்குள் இறக்கப்படும் தருணத்திலும்கூட
சொட்டுக் கண்ணீர் சிந்தாமல் நின்றிருந்த ‘உடன் பிறவா சகோதரி’யான உங்களின் மேல்,
‘இவரையா அந்த இரும்புப் பெண் நம்பினார்?’ என்று
ஆற்றாமை கொள்ளவைத்தீர்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க கட்சியில் அரங்கேறிய நாடக மாற்றங்களில், குறிப்பாக ‘சின்னம்மா’ வசனங்களில், எங்களை

இன்னும் முகம் சுழிக்க வைத்தீர்கள் சசிகலா. கழுத்தை ஒட்டிய
பிளவுஸ், கொண்டை, பொட்டு, மோதிரம், வாட்ச் என்று உங்களின் ‘ஜெயலலிதாவாதல்’ முயற்சியை, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுமானால் மாறுவேடப் போட்டியில் பரிசு வென்று வந்த குழந்தையை வரவேற்கும் குதூகலத்துடன் ரசித்திருக்கலாம். ஆனால்

எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் வியந்த அந்த ஆளுமையுடன் உங்களை ஒப்பிட்டு கீழிறக்க வேண்டிய அவசியத்தை, நீங்களேதான் எங்களுக்கு ஏற்படுத்தினீர்கள்.

ஜெயலலிதாவின் உறவுகளை அவர் மரணத்திலும்
தள்ளி நிற்க வைத்தது, அவரின் சொத்துகள் அனைத்தையும்
அபகரித்தது, அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்றியது வரைகூட, படிக்கப் பிடிக்காத மனநிலையுடன்தான் உங்களைப் பற்றிய

அந்தச் செய்திகளை நாங்கள் கடந்தோம். ஆனால் உங்களின் அடுத்த காய் நகர்வுகளின் விளைவாக, ‘தமிழகத்தின் மூன்றாவது பெண் முதலமைச்சராகிறார் சசிகலா’ என்று வந்த செய்தி, ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. ‘கடைசியா அது நடக்கவே போகுதா?’ என்று

நிலைகொள்ளாமல் போனது எங்கள் மனம். அப்போது
ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் ‘என்னை மிரட்டி
ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கினார்கள்’ என்றதும், அந்தத் திருப்பத்தை நாங்கள் திடுக்கிட்டு வரவேற்றோம். ‘ஓ.பி.எஸ் வேண்டுமா என்பது அடுத்த பிரச்னை. ஆனால், சசிகலா வேண்டாம்’ என்று எங்கள் மனநிலையை மாற்றுக்கருத்துக்கு இடமில்லாமல் உறுதிப்படுத்தியதும், தொடர்ந்த நாட்களில் தமிழகம் பார்த்த உங்களின் செயல்பாடுகளே.

தேர்தலில் நிற்காமல், மக்களைச் சந்திக்காமல், சட்டமன்ற
உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கி, ரிசார்ட்டில்
அடைத்துவைத்து, ‘ஓரளவுக்குதான் பொறுமை’ என்று பேட்டி
கொடுத்து… ‘முதலமைச்சர் நாற்காலிக்காக எதுவும் செய்வேன்’ என்கிற ரீதியிலான உங்களின் அணுகுமுறைகள் அனைத்தும் எங்களுக்கு அதிர்ச்சியாக, அச்சமாகக்கூட இருக்கிறது.

கூவத்தூரில் எம்.ஏல்.ஏக்களை அவர்களின் வீட்டினரிடம்கூட பேச முடியாத கட்டுப்பாட்டில் அடைத்துவைத்துவிட்டு, அங்கிருந்து நீங்கள் அளித்த பேட்டியில், ‘குழந்தைகளை வீட்டில்விட்டு வந்திருக்கும் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கு இருக்கிறார்கள்.

‘பரவாயில்லம்மா… கட்சிக்காக நாங்க அதை செய்றோம்மா’ என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்’ என்கிறீர்கள். இதை எப்படி உங்களால் மைக்கின் முன் குற்ற உணர்ச்சி இல்லாமல் பெருமையாகச் சொல்ல முடிகிறது?

அதிகாரமிக்க அ.தி.மு.க குடும்பப் பெண்கள், குழந்தைகள் நலனிலேயே உங்கள் அக்கறை இது எனில், பாவப்பட்ட தமிழகப் பெண்கள், குழந்தைகள் நலன் குறித்த உங்கள் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டத்தையும் நீங்களே காட்டிவிட்டீர்கள்.

”ஆனா கட்சித் தொண்டன்… ஒவ்வொருத்தரும்… இதவந்து… வேடிக்க பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டாங்க.” – கூவத்தூரில் நீங்கள் சொன்ன இந்த வார்த்தைகளில், காவல்துறை தனக்கான குறிப்பை எடுத்துக்கொள்கிறது. நாங்களும் ஒன்றை உணர்ந்தோம்.

‘ஜெயலலிதாவாதல்’ என்ற உங்களின் முயற்சியில் உண்மையில்
நீங்கள் இப்போது வளர்மதி வகையறாக்கள் ஆகிக்கொண்டிருக்கிறீர்கள்….

அனுதாபங்கள்!

————————-

நான் எழுத நினைத்ததை
அப்படியே அச்சில் வடித்தெடுத்திருக்கும்
விகடனுக்கு நன்றி.

( http://www.vikatan.com/news/politics/80642-why-sasikalas- transformation-is-being-disliked-by-all.html?artfrm=news_most_read )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to ஜெயலலிதா ஆக நினைத்த சொர்ணாக்கா…!!!

 1. writer சொல்கிறார்:

  உண்மைதான்.
  ஜெயலலிதா – A1
  சசிகலா – A2

 2. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! பல முகங்களை உள்ளடக்கிய ” சொர்ணாக்கா ” …? சட்டத்திற்கு – குற்றவாளி … கட்சி அல்லக்கைகளுக்கு – சின்னம்மா … கூழைக்கும்பிடு ஆசாமிகளுக்கு – பொது செயலாளர் … பொது மக்களுக்கு — ஜெயா வீட்டு வேலைக்காரி … கட்சி தொண்டர்களுக்கு — ஆயா … வீரமணி அய்யாவுக்கு — ” பெண் பெரியார் ” …. வி.கே . சசிகலாவுக்கு { தனக்குத்தானே } – முதல்வர் …. ஐயோ .. தாங்க முடியல … சுவாமி …. !

  உடனடியா சரணடைய வேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ” நல்ல மரியாதை ” கொடுக்கும் இந்திய ‘ குடி மகள் ‘ … ? தீர்ப்பு வந்த பிறகு அலட்டிக்கொள்ளாமல் சாவகாசமா — ஆற அமர எம்.எல்.ஏ . க்களின் கூட்டத்தில் அளவளாவி — ரத்த சொந்தமான ” தினகரனை ” துணை பொது செயலாளராக நியமித்து — மற்ற சினிமா பாணி அரசியல்வாதிகளை போல ” நெஞ்சு வலி ” என்று மருத்துவமனைக்கு செல்லாமல் — நான்கு வார கால அவகாசம் கேட்டு மனு போட்டிருக்கும் — சொர்ணாக்காவை சாதாரணமா நினைக்க முடியுமா … ?

  கட்சியையும் — முதல்வர் பதவியையும் தன் ” குடும்பத்திற்கே ” என்று வரிந்துகட்டி வேலை பார்க்கும் சொர்ணாக்காவுக்கு – உயிரோடு இருக்கும் போதே சிலை வைத்தாலும் ஆச்சர்யமில்லை … // வளர்மதி வகையறாக்கள் // என்பதெல்லாம் … சும்மா … ஜூ . ஜூ. பி. இவுங்க முன்னாடி — அப்படித்தானே ….?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நல்ல பின்னூட்டம்… பாராட்டுகள்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    அன்பு செல்வராஜன்…..

    வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி போன்றவர்களை எழுதி என் இரத்தக் கொதிப்பை அதிகமாக்காதீர்கள். எப்படிப்பட்ட போலி கட்-அவுட்கள் இவர்களைப் போன்றவர்கள். எத்தனை கூழைக்கும்பிடு, அழுகை, கூச்சல் …. ஜெ. அவர்கள் கைதானபோது. எப்படிப்பட்ட நடிப்பு. இதில், சரஸ்வதி அவர்கள், ஜெ. வுக்கு உடல் நிலை சரியாகிவிட்டது, உப்புமா சாப்பிடுகிறார் போன்ற பில்டப்புகள்.

    எவ்வளவு அருமையாக ஜெ. அவர்கள் மறைவுக்குப்பின் நடந்திருக்கலாம்? அவர்கள் எவ்வளவு அரும்பாடுபட்டு மக்கள் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றுத்தந்தார்கள். ஓபிஎஸ் அவர்களையே முதல்வராகத் தொடரச் சொல்லியும், 6 சீனியர்களைக் கொண்ட குழு அமைத்து, அவர்களது முடிவுக்கு (மந்திரியை நீக்குவது, சேர்ப்பது, கொள்கை முடிவு போன்றவை) அல்லது பரிந்துரைக்கு விடுவது, பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறுவது போன்றவற்றை நடத்தி 5 வருடங்களை முடித்திருக்கலாம். அந்த 6 பேர் குழுவில் சேரத் தகுதியானவர்கள் செங்கோட்டையன் மற்றும் 4 அமைச்சரவையிலும் இடம் பெற்றவர்கள் அல்லது கட்சியின்மீது பற்று கொண்ட சீனியர்கள். இரண்டு வருடங்களுக்குள், மக்கள் வாக்கை ஒருமுகப்படுத்தக்கூடிய ஒரு நல்ல தலைமையை ‘தலைவர்’ என்ற பதவியில் சேர்த்துக்கொண்டிருக்கலாமே.

    கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையா? பெயரில் உள்ள நடராஜனை விலக்கிவிட்டு, இப்போது தினகரனையும் வெங்கடேஷையும் கட்சியில் சேர்த்தவுடனேயே அனைத்து எம்.எல்.ஏக்களும் சசிகலாவைக் கைவிட்டிருக்கவேண்டாமா? சசிகலாவின் நோக்கம் கொள்ளையடிப்பது என்பதை இதைவிட எப்படி எளிதாகப் புரிந்துகொள்வது? எத்தனையோ தொண்டர்களால் வளர்ந்த அதிமுகவைக் கருக விடலாமா? குறைந்த காலப் பயனுக்காக வளர்த்த கட்சியைக் காட்டிக்கொடுக்கலாமா?

    • selvarajan சொல்கிறார்:

     நண்பரே …! பெரும்பாலும் மற்றவர்களுக்கு ” மறு மொழி இடுவதை ” தவிர்ப்பவன் .. நான் … இருந்தாலும் தாங்கள்: // வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி போன்றவர்களை எழுதி என் இரத்தக் கொதிப்பை அதிகமாக்காதீர்கள்.// என்று குறிப்பிட்டு இருப்பது — என்னுடைய பின்னூட்டத்தில் இல்லாத ” சி.ஆர் . சரஸ்வதி ” என்கிற பெயரை தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் . மேலும் ” வளர்மதி ” என்கிற பெயரை நானாக புகுத்தியதாக தவறாக நினைத்து விட்டிர்கள் — மேலே உள்ள இடுகையில் உள்ள வார்த்தைகள் அவைகள் என்பதை தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் // வளர்மதி வகையறாக்கள் // — எப்போதுமே என்னால் உங்களுக்கு ” ரத்த கொதிப்பு ” வர வாய்ப்பு இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள் … !!!

 3. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  besh besh,Nandri

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப சைதை அஜீஸ்,

  மன்னிக்கவும்.
  உங்கள் பின்னூட்டத்தை
  நான் இங்கே பிரசுரிக்க முடியாது.
  இங்கே எதையும் அனுமதிக்கவும், மறுக்கவும்
  எனக்கு உள்ள உரிமையை நீங்கள் மதிப்பீர்கள்
  என்று நம்புகிறேன்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 5. இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

  ஐயா ,
  ஹாரிஸ் ஜெயராஜ் இடமிருந்து கானா பாட்டு வந்த மாதிரி உங்க கிட்ட இருந்து இந்த சமுதாயம் இப்படி ஒரு லோக்கல் தமிழை வரவழைத்தது. இருந்தாலும் உண்மை தான் ஐயா

 6. புதியவன் சொல்கிறார்:

  சசிகலாவின் கும்பலால்தான் ஜெயலலிதா அவர்கள் இந்தச் சிக்கல்களில் மாட்டிக்கொண்டார். 91-96 காலகட்டத்தில் ஆட்சிக்குப் புதியவர், கூட இருந்தவர்களின் சதி வலையில் மாட்டிக்கொண்டார். அவருக்கு எதற்கு சொத்து? அவர் அம்மா மற்றும் தன் சம்பாத்தியத்தில் உள்ளதே ஆயுள் முழுவதும் செலவழித்தாலும் செலவாகாது. தெரியாமல் மாட்டிக்கொண்டது, சசிகலா ‘அப்ரூவர்’ என்ற நிலைமையை எடுத்து மாற்றிச்சொன்னால் இன்னும் சிக்கலாகிவிடும் என்றே அவரை மாத்திரம் மன்னிப்புக் கடிதம் வாங்கி சேர்த்துக்கொண்டார்.

  இதனால் குன்ஹா எழுதிய தீர்ப்பு சரியாகிவிடுமா? அந்தத் தீர்ப்புக்கான பின்புலத்தை ஆராய்பவர்கள் அதனை அறிவார்கள். இன்றைக்கு ஜெயலலிதாவை இதில் இழுத்து எழுதுபவர்கள், இந்திய நீதித்துறையைப் பற்றிக் கிஞ்சித்தும் அறியாதவர்கள். யார் இதை மறுத்து அவர்கள் உண்மையான பெயரில் எழுதினாலும், நான் சரியான உதாரணங்களைக் காட்டச் சித்தமாக இருக்கிறேன். சொல்பவர்கள்தான், மோடி அவர்கள், சோனியா அவர்கள், ப.சி அவர்கள், கார்த்திக் சிதம்பரம், ராபர்ட் வதோரா, கருணானிதி, ஸ்டாலின், கனிமொழி, ராசாத்தி, மாறன் குடும்பம், இன்னும் பல அரசியல்வாதிகள் அப்பாவிகள் என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும், சிறையில் இருப்பவர்கள்/இருந்தவர்கள் குற்றம் புரிந்ததனால்தான் சிறையில் இருக்கிறார்கள் என்றும் ஒத்துக்கொள்ளவேண்டும். கருணானிதி விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்தவர் என்றும் ஒத்துக்கொள்ளவேன்டும். ஆளைப் பொறுத்து நீதியை விமரிசிக்கமுடியாது. (நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கிவிட்டது என்பவர்கள்)

  நிற்க… இப்போதைய கவலை மீண்டும், சசிகலா, மன்னார்குடி கொள்ளைக் கும்பல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்பது. அப்படி வரவிட்டால், 91-96ல் என்ன என்ன நடந்ததோ அதைவிட மோசமானவைகள் நடக்கும். அதே சமயம், ஆட்சி அதிகாரத்தைவைத்து உதயனிதி ஸ்டாலின், அழகிரி, அழகிரி மகன், திமுக அமைச்சர்கள் நிலங்களை மன்னார்குடி கும்பல்போலவே வளைத்துப்போட்டதும் நடக்கும். அதனை எப்படித் தடுப்பது என்பதுதான் நமக்கு உள்ள முதல் கவலை. இப்போதைய நிலையில் ஸ்டாலின் பழைய தவறுகளைக் களையும்விதமாக ஆட்சி அமைக்க முயன்றால் (புது தேர்தலின் மூலம்) தவறில்லை.

  நமக்குத் தேவை புதிய தேர்தல்தான். அதற்குத் தோதாக குறைந்த காலத்திற்கு கவர்னர் ஆட்சி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி புதியவன்.

   உங்கள் பின்னூட்ட விளக்கத்தை நான்

   நண்பர் NS RAMAN

   அவர்களுக்கு dedicate செய்ய விரும்புகிறேன்…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • NS RAMAN சொல்கிறார்:

    Thanks for your dedication.

    Supporting JJ is your personal choice.

    Corruption and mis using of power should be stopped and not acceptable irrespective of party and regions.

    JJ case Is a first step towards that direction. Awaiting for kani case Judgement soon.

    Judiciary still one last hope for common man. Judgement is subject to criticism not judges including Mr Kumar swamy.

 7. Sundar Raman சொல்கிறார்:

  இதுல மோடி எங்கிருந்து வந்தார்

 8. srinivasanmurugesan சொல்கிறார்:

  சசி மற்றும் அவரின் குண்டர்கள் ரிச்சர்டு வளாகத்தை விட்டு விளகிய பின்னரும் எம்.எல்.ஏ கள் வெளியேற தடுப்பது எது? தொகுதி மக்களை சந்திக்க ஏன் தயக்கம்?

 9. புதியவன் சொல்கிறார்:

  கா.மை சார் தவறாக எண்ணவேண்டாம். என் பின்னூட்டங்கள் சரியல்ல என்று தோன்றினால் எடுத்துவிடலாம்.

  நண்பர் ஸ்ரீனிவாசன் முருகேசன் – என்னுடைய சந்தேகம்… தற்போதைய எம்.எல்.ஏக்களில் பலர் சசிகலாவால் உள்குத்தாகப் பரிந்துரைக்கப்பட்டவர்கள். ஓபிஎஸ் அவர்களுக்கு 10 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவாக இதுவரை வெளியே வந்துள்ளார்கள். நினைத்த மாதிரி, கட்சியின் பெரும்பகுதி அவரிடம் இன்னும் சென்று சேரவில்லை. இந்த நிலையில், பாதிப் பாதியாகப் பிரிந்தால், உள்ளதும் போச்சு நொள்ளைக்கண்ணா என்று ஆகிவிடும். அதனால்தான், ஊசலாடும் நிலையில் இருக்கும் 20-30 பேரும் அமைதியாக இருக்கிறார்கள். மயிலை எம்.எல்.ஏ நடராஜன் அவர்கள் இதில் இறங்கி என்ன சமாதானம் செய்ய இயலும் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக, சசிகலா பெயரைச் சொல்லி ஓட்டு வாங்க இயலவே இயலாது (ஜெ. பெயரை நாசமாக்காமல். ஜெ பெயரை நாசம் செய்தால், உள்ள ஓட்டும் கிடைக்காமல் போய்விடும்..ஏனென்றால் மக்கள் மனதில் நம்பிக்கைத் துரோகி என்ற பிம்பம் பதிந்துவிடும். அவர்களின் ஓட்டு ஜெ. என்ற தைரியமான பெண்மணிக்குத்தான்). கலைராஜன் போன்ற புல்லுருவிகளால்தான், எஸ்.வி.சேகர் போன்ற டீசன்ட் எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் காலம்தள்ள முடியவில்லை. (அனிதா, மற்றும் இப்போது திமுகவில் கோலோச்சும் சேகர் பாபு போன்ற அதிமுக விசுவாசிகளும் கட்சியை விட்டுச் செல்லக் காரணம் தெரியவில்லை).

  இன்னொன்று, ரெட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற கேள்வி வரும். அது மன்னார்குடி கும்பலிடம் தங்கிவிட்டால் பெரிய பிசகாகிவிடும். ஏனென்றால் இரட்டை இலைக்கு என்று கிராமத்தில் வாக்குகள் உண்டு. ஏன் சைதை துரைசாமி போன்றவர்கள் வெளிப்படையாக அதிமுகவைக் காக்க இறங்கவில்லை என்று தெரியவில்லை (ஒரு வேளை, கேள்விப்பட்டதுபோல் ஊழலில் திளைத்துவிட்டாரோ என்னவோ. அதனால்தான் ஜெ.வின் கடைசி 2 வருடங்களில் அவருடைய நல்ல மதிப்பில் சைதை இல்லை)

  எதிர்பார்க்காத கருப்பசாமி பாண்டியன் அதிமுகவில் மன்னார்குடி கோலோச்சுவதை எதிர்க்கிறார். மற்ற அதிமுக பிரமுகர்களுக்கு (77லிருந்து இருப்பவர்கள், இருந்தவர்கள்) கட்சிக்காகக் குரல் கொடுக்க என்ன தடை?

  எதுக்கெடுத்தாலும் குரல் கொடுக்க எத்தனிக்கும் ரஜினி அமைதியாக இருப்பதன் மர்மம் என்ன?

 10. து. குமார் சொல்கிறார்:

  இதில் சசிக்காலவை பற்றி நீங்கள் கூறி உள்ள அனைத்து கருத்துக்களும் மிகைப்படுத்தப்பட்டவை. நீங்கள் கருபு்பு கண்ணாடி போட்டு பார்த்தால் எல்லாமே கருப்பாகத்தான் தெரியும். உங்கள் பார்பையில் குறைபாடு.

 11. selvarajan சொல்கிறார்:

  // பல்லைக் கடித்து, ஓங்கி அடித்து, தூசியை தட்டி… ஜெ. நினைவிடத்தில் தாதாவான சசிகலா //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-gnawed-her-teeth-banging-vow-at-jayalalitha-memorial-274166.html சொர்ணாக்காவின் உண்மை சுபாவம் …. ! இந்த அடைமொழிக்கேற்ற தோரணை … வாவ் .. ” மங்கம்மா சபதம் ” போல ” சின்னம்மா சபதமோ …? “

 12. D. Chandramouli சொல்கிறார்:

  AIADMK should somehow or the other patch up among the two warring camps and elect a CM candidate democratically. The Party should also remove all office bearers of the existing set up, including Mannargudi family, and elect from among themselves a new General Secretary, Chairman of General Council and other positions. Deepa’s support to Panneerselvam is a shot in the arm for the Party for a massive clean up now. I expect the majority of womenfolk of the Party would be happy to see Deepa as General Secretary. Let wisdom prevail at this critical juncture if the party has to survive as a political unit in TN.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.