ராஜா கையை வைச்சா….!!!

இதை யாரோ எனக்கு அனுப்பி இருக்கிறார்கள்….
பகிர்ந்து கொள்கிறேன் …

 

raaja-kaiya-vechaa

நகைச்சுவையை தாண்டி –
கீழே மிக சீரியசான ஒரு விஷயம்…
——————–

கொஞ்சம் யோசித்தால்
புகைப்படத்தில் உள்ள இந்த நிகழ்வை,
அது நடந்துகொண்டிருந்தபோதே
நாம் தொலைக்காட்சியில் பார்த்தபோது நமக்கு
ஏற்பட்ட உணர்வுக்கும், இன்றைய நிஜத்திற்கும்
உள்ள வேறுபாடு – திகைக்க வைக்கிறது….

ஒரு நியாயமற்ற மரணம் நிகழும்போது,
அதைப்பற்றிய பல சந்தேகங்கள் நமக்கு ஏற்பட்டாலும்,
அதனை நேரில் பார்த்தவர்களோ, அதற்கான சாட்சிகளோ
இல்லை என்கிற நிலையில் நாம் மேற்கொண்டு எதையும்
செய்ய கையாலாகாதவர்களாகவே இருக்கிறோம்.

ஆனால், அந்த இறப்பிற்கு பின்னர் நடக்கும் “நிகழ்வுகள்” –
நமது சந்தேகங்களை வலுப்படுத்துவதாக உள்ளன.

இரண்டே மாதங்களுக்குள் –
கட்சியின் உச்சகட்ட பதவி,
ஆட்சியில் உன்னத அதிகாரம், சொத்துகள்,
ஆகியவற்றை கைப்பற்றும் முயற்சியில்
காட்டப்படும் அதிதீவிர அவசரம், மும்முரம் –

ஆகியவை நமது முந்தைய சந்தேகத்தை
ஊர்ஜிதப்படுத்துவதாகவே இருக்கின்றன.

அநேகமாக, அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாகவே,
மாநில சட்டமன்றம் தற்காலிகமாக முடக்கப்பட்டு,
ஜனாதிபதி ஆட்சி வரக்கூடும்.

இந்த நிலையில் –
ஜெயலலிதா அவர்கள் அப்போலோ மருத்துவ
மனைக்கு கொண்டு வரப்படும் முன் –

அவரது இல்லத்தில் நடந்த நிகழ்வுகள்,
அவரது இல்லத்தில் இருந்த நபர்கள்,
அவருக்கு இல்லத்திலேயே மருத்துவ சிகிச்சை
அளிக்கப்பட்ட பின்னணி,
வீட்டில் அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் –
மருத்துவ மனைக்கு கொண்டு வரப்படும்போது
இருந்த அவரது உண்மையான உடல்நிலை –

ஆகியவை குறித்து ஒரு பாரபட்சமற்ற விசாரணை
நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி ஆட்சி என்பதால், மத்திய அரசு தான்,
இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்…
மோடிஜி, ஜெயலலிதா அவர்களின்
மறைவின் பின்னணியில் உள்ள மர்மங்களை
வெளிக்கொண்டு வர ஆவன செய்ய வேண்டும்..
விரைவாக ஒரு நீதிவிசாரணைக்கு ஏற்பாடு
செய்ய வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ராஜா கையை வைச்சா….!!!

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  From –

  Badri Seshadri (facebook)
  8 hrs ·
  சசிகலா, ஜெயலலிதா கல்லறையில் ஓங்கி மூன்றுமுறை அடித்துச் சபதம் செய்த காட்சியைப் பார்த்தேன். என்னவொரு வெறி. திருடர்களுக்கு இருக்கும் தெனாவெட்டு! இத்தனை செய்து, இத்தனை பட்டும் இந்தக் குடும்பத்துக்கு என்னவொரு ஆங்காரம்? இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் காலாகாலத்துக்கும் பொதுப் பதவி எதற்கும் வராத அளவுக்குச் செய்யாவிட்டால் நாமெல்லாம் மனிதர்களே அல்ல.

 2. இளங்கோ சொல்கிறார்:

  நாளுக்கு நாள் சந்தேகம் வலுத்துக்கொண்டே போகிறது.
  விசாரணை கமிஷன் ஒரு உடனடியான அவசிய தேவை.

 3. LVISS சொல்கிறார்:

  We will have to wait and see whether there will be a composite vote –After the result if there is a minority govt because of some MLAs defecting to OPS side , there may be President’s rule -Otherwise Mr Palanisamy will be the CM —

 4. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Indru naan ,naalai nee–(holds good always—-2G,3G ushaaar)

 5. புதியவன் சொல்கிறார்:

  விசாரணைக் கமிஷன்லாம் ஒன்றும் இருக்காது என்று நினைக்கிறேன். இதுவும் கடந்துபோகும். நமக்கு முதலமைச்சர் எடப்பாடிதான். அதோடு அதிமுக சகாப்தம் முடிந்தது.

 6. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! நேற்றைய பின்னூட்டத்தில் … // selvarajan சொல்கிறார்:
  1:14 பிப இல் பிப்ரவரி 15, 2017
  // பல்லைக் கடித்து, ஓங்கி அடித்து, தூசியை தட்டி… ஜெ. நினைவிடத்தில் தாதாவான சசிகலா //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-gnawed-her-teeth-banging-vow-at-jayalalitha-memorial-274166.html சொர்ணாக்காவின் உண்மை சுபாவம் …. ! இந்த அடைமொழிக்கேற்ற தோரணை … வாவ் .. ” மங்கம்மா சபதம் ” போல ” சின்னம்மா சபதமோ …? என்று குறிப்பிட்டு இருந்தேன் …. மேலும் … அன்று ராஜா தலையில் கைவைத்தார் — இன்று அந்தம்மா தன் கையை தலையில் வைத்துகொண்டு சிறையில் இருக்குது — தலை ஒன்றுதான் — கைகள் தான் வேற …!

  தீர்ப்புக்கு முன்னும் – பின்னும் ரிசார்ட்டில் நடந்ததை பற்றிய ஒரு செய்தி :– // 8 முறை மன்னிப்பு கேட்ட செங்கோட்டையன்! – நேற்று ரிசார்ட்டில் நடந்தது இதுதான்! #OPSVsSasikala // http://www.vikatan.com/news/tamilnadu/80917-this-is-what-happened-at-golden-bay-resortopsvssasikala.html?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=8541

  அடுத்து சு.சுவாமிக்கு சசிகலா மீது ரொம்பவும் கரிசனம் கரைபுரண்டு ஓடுகிறது …!
  // “சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்”- சுப்ரமணியன் சுவாமி ட்வீட்! // http://www.vikatan.com/news/politics/80974-subramanya-swamy-says-sasikala-change-to-tamil-nadu-prison.html
  சிறையில் சசி கேட்ட எந்த சலுகையும் கிடைக்காத பட்சத்தில் சுவாமி இவ்வாறு கேட்க சொல்லி பாயிண்ட் எடுத்துக்கொடுப்பதும் ” எடப்பாடிக்கு ” வக்காலத்து வாங்குவதும் — இவருடைய உண்மை முகம் மற்றும் செயல் எதைநோக்கி என்பதை முழுவதும் காட்டுகிறதா …?

 7. Indrillavittalum சொல்கிறார்:

  All our expectations is reversed. Edappadi has been asked to form the government & he is becoming CM by today eve. Intha DMK / ADMK kaalil vizhum nilamai ulla varai indrillavittalum vaarthaikki VALUE will be VERY VERY HIGH.
  Paavappata nam tamizhinam.

  KM aiya. One quick update on the current condition needed sir.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.