அடுத்த முதல்வர் – திரு.சுப்ரமணியன் சுவாமி…..?

proxy-cm

“ஷாக்” ஆக இருக்கிறதா…?
அதான் திரு.சுப்ரமணியன் சுவாமியே சொல்லி விட்டாரே…
நான் தான் பழனிச்சாமி – என்று…!!!

கீழே அவரது ட்விட்டரை பாருங்கள் –

tweet-ss-3

தன்னுடைய பெயரின் தமிழ் மொழிபெயர்ப்பு தான்
பழனிச்சாமி என்று….

இன்று மாலை புதிய முதல்வருக்கு பதவியேற்பு செய்து
வைக்கையில் ஆளுநர் கவனமாக இருக்க வேண்டும்…
ஒருவேளை பழனிச்சாமி என்று பெயரை படிக்கையில்,
சு.சா. அங்கு புகுந்து விடக்கூடும்…!!!

அடுத்து-

நேற்று மாலை திருமதி ச.ந. பெங்களூர் சிறை
நோக்கி வரும்போது, அவரது உடைமைகளை கொண்டு வந்த
கார் மீது தாக்குதல் நடந்தது என்று செய்தி வந்ததல்லவா…?
நீங்கள் கூட யோசித்திருக்கலாம்…
என்னடா ஆள் வந்த காரை விட்டு விட்டு,
துணிமணி, வகையறாக்களை கொண்டு வந்த காரை
தாக்கி இருக்கிறார்களே என்று…

தில்லையரசரா கொக்கா…?
அவரே செய்த ஏற்பாடு தானாம் இந்த தாக்குதல்…!!!
காரணம்…?
அவரது திருமதியை தமிழ்நாட்டு சிறைக்கு மாற்றம் செய்ய
முனைந்து வருகிறாராம். தமிழ்நாட்டில், அவர்களது
ஆட்சி தானே… சிறையையே போயஸ் கார்டன்
ஆக்கி விடலாமே….!

இதற்கான கூலியும் பேசப்பட்டு விட்டது போல் தெரிகிறது.
வாங்கிய கூலிக்கு பழனிச்சாமியும் – அதாங்க சு.சு.வும் –
கூவுகிறார் பாருங்கள் அடுத்தடுத்த ட்வீட்டுகளில்…

பாதுகாப்பு காரணங்களுக்காக சசிகலாவை
தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் –

tweet-ss-2

இதற்கான நடவடிக்கையை முதல்வரானதும்
எடப்பாடி பழனிச்சாமி எடுக்க வேண்டும்

தமிழ்நாட்டின் புதிய (????) அட்வகேட் ஜெனரல்
சட்டபூர்வமாக சசிகலாவை தமிழ்நாட்டிற்கு
கொண்டு வருவது என்பது குறித்து யோசிக்க வேண்டும்

tweet-ss-1

———

முன்பொரு முறை திரு.கி.வீரமணி அவர்கள் ஒரு
சொற்றொடரை பயன்படுத்தினார்… இன்று வரை
அது மறக்கவில்லை எனக்கு…

“ராஜாவை விஞ்சிய ராஜவிசுவாசம்” …

சின்னம்மாவின் ரத்தத்தின் ரத்தங்களை விஞ்சி விட்டாரே
பழனிச்சாமி – அதாங்க சுப்ரமணியன் சாமி…!!!

——–

கூலிக்கு மாரடிக்கும் ப.சாமிகள் – அதாகப்பட்டது –
சு. சாமிகள் இருக்கும் வரை –
தமிழக அரசியலில் இனி கேலிக்கூத்துகளுக்கு
பஞ்சம் ஏது…?

இனி கொஞ்ச நாட்களுக்கு காசு இல்லாமல் சினிமா…
பார்த்து வைப்போமே….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to அடுத்த முதல்வர் – திரு.சுப்ரமணியன் சுவாமி…..?

 1. இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

  காமை ஐயா ,
  இந்த இடுகைக்கு நன்றி. என்ன தான் நமது நாட்டில் (நான் சரி என்று நினைக்கிறேன் நம் தமிழ்நாட்டை நாடு என்று மட்டும் குறிப்பிட்டது?), இவ்வளவு அநியாயங்கள் கண்கூடாக நடந்தாலும் நமது எண்ணமான இன்றில்லாவிட்டாலும் பலிக்கட்டும். அடுத்த தலைமுறையாவது அதை பார்க்கட்டும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே (இன்றில்லாவிட்டாலும்),

   நடப்பது அனைத்தும் நல்லதற்கே என்று
   எடுத்துக் கொள்ளுங்கள்…!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  இதுல ஒரு பெரிய advantage உள்ளது (எடப்பாடி நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றிபெறுவார் என்றுதான் நினைக்கிறேன்). எந்தச் சிறிய தவறும் பிரம்மாண்டமாக வெளியே வரும் (ஜெ. காலத்தில் இருந்ததுபோல் ஊடகங்கள் பம்மாது என்று நம்புகிறேன்.). ஆனாலும், சசிகலா கும்பல், மக்கள் ஆதரவைப் பெற மாட்டார்கள் என்றுதான் எனக்கு நம்பிக்கை. சொல்லமுடியாது… தன்னுடைய நிலைமையை consolidate செய்துகொண்டு தினகரனே முதல்வராக வர ஓராண்டுக்குள் முயற்சிக்கலாம்.

  பின்வாசலில், மிடாஸ் போன்ற வர்த்தகங்கள், பேப்பர் அளவில் இவர்களுக்குச் சொந்தம் போல் காண்பிக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

  நாட்டு நிலையைப் பாருங்கள். கருணானிதி அண்ணா காலத்திற்குப் பின், திமுகவைக் கபளீகரம் செய்து தன் குடும்பச் சொத்தாக்கிவிட்டார். இங்கு, எம்ஜியாரின் சொந்தச் சொத்துக்கள் கண்டவரிடமெல்லாம் போய்விட்டன. (அதுவாவது ரத்த சொந்தங்கள்) ஜெ.வின் சொந்தச் சொத்துக்களைக் கண்டவரெல்லாம் நம் கண் முன்னாலேயே திருடுவதைக்கூட ஏன் என்று கேட்கமுடியாமல் இந்தச் சமூகம் இருக்கிறது. நாமெல்லாம் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது எவ்வளவோ வளரவேண்டும். அதுவரை, வெறும்ன பேச்சளவில், ‘தமிழன் என்ற இனம்’ என்று வெற்றுப்பெருமையைப் பேசிக்கொண்டிருக்கலாம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப புதியவன்,

   இந்த உணர்வு மக்களில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது.
   ஆனால், அதை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள்.

   தேவைப்படும் நேரங்களில் மக்கள் வெளிப்படையாக
   தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

   creation of public opinion… இதில் ஊடகங்களுக்கு
   பெரும் பங்கு இருக்கிறது… வெறும் டி.ஆர்.பி. யை மட்டும்
   கருத்தில் கொள்ளாமல், சமுதாய நலனை முன்னிட்டு
   பொதுக்கருத்தை உருவாக்குவதிலும் அவை ஈடுபட வேண்டும்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. gopalasamy சொல்கிறார்:

  இறாலுக்கு ஆசைப்பட்ட பாதுகாவலர்கள்… தப்பித்த எம்.எல்.ஏ! – கூவத்தூர் ரிசார்ட்டிலிருந்து விகடன் நிருபர். Interesting article.

 4. Thiru thirumalachari சொல்கிறார்:

  The marina marines by now should realize the bull does not come alone, bullshit also accompanies.OPS should realize Bm swami was conducting anopheles behind his back to score a brownie point against Jetley and V.NaiduOnly a public stamina alone can wash off the bs on the face of the innocents who became the pawns in the hands of the freebooters.

  • இளங்கோ சொல்கிறார்:

   திரு.திருமலாச்சாரி சார்,

   கொஞ்சம் தமிழுக்கு வாங்களேன்.
   எல்லாருக்கும் புரியட்டும்.

 5. srinivasanmurugesan சொல்கிறார்:

  தமிழ்நாட்டு சிறைசாலைகளை விட தீகார் மிகவும் பாதுகாப்பானது சசியை அங்கு மாற்றிவிடலாம்.அவருக்கும் பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கும் பாதுகாப்பு(அவரிடமிருந்து).

 6. LVISS சொல்கிறார்:

  What we understand is that OPS and his camp will have to obey the whip issued by the party failing which they will lose their membership—OPS was saying he had the support of nearly 50 MLAs but he didnt submit any list to the Governor —

 7. தமிழன் சொல்கிறார்:

  நம்பிக்கை வாக்கெடுப்பில் (இப்போதைய சூழ்நிலையில் கொறடா உத்தரவு செல்லுமா என்பது தெரியவில்லை. ஜனாதிபதி தேர்தலில் 130 ஓட்டுக்கள் முக்கியம். (எம்பிக்களுக்கு இப்போ ஆபத்து இல்லை). எதற்கு எம்எல்ஏக்கள் எடப்பாடியை எதிர்த்து வாக்களித்து நிச்சய வெற்றி இல்லாத தேர்தலைச் சந்திக்க வேண்டும்?

  திருமலாச்சாரி சொல்வதில் ஒரு நியதி இருக்கிறது. எதற்காகப் போராடி வெற்றிபெறும்பொழுதும் அதனுடன் ஒரு தோல்வி (அல்லது எதிர்மறை விளைவு) சேர்ந்தே வரும்.உதாரணம் தமிழ் செம்மொழியானவுடனே மற்ற திராவிட மொழிகளும் செம்மொழியாயின. கர்நாடகாவில் காளைகளை வைத்து விளையாடும் ஆட்டம் சட்டபூர்வமாயின. இன்னும் பல உதாரணங்கள் உள்ளன.

  இப்போதைய சசிகலா மன்னார்குடி கும்பலின் ஆட்சியும் மக்கள் தீர்ப்புக்கு எதிரானதுதான். ஜெ.வைப் பொறுத்த குன்ஹா, உச்சநீதிமன்றத் தீர்ப்பும் நியாயமற்றதுதான்.

 8. gopalasamy சொல்கிறார்:

  If some ADMK MLAs vote against Edapadi Palanisamy, they will not lose their post. ( Karnataka example is there)

 9. Alathur Giri Giri சொல்கிறார்:

  பாதுகாப்பு காரணங்களுக்காக சசிகலாவை
  தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் சு சாமி.

  நடராஜன் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும் இந்த ஆட்சி எவ்வளவு நாள் தாக்குபிடிக்கும்,அடுத்து வரும் ஆட்சி கர்நாடகாவை விட மோசமா இருந்தா…

  srinivasanmurugesan சொல்வது மிக மிக சரியான பாதுகாப்பு ..

  தமிழ்நாட்டு சிறைசாலைகளை விட தீகார் மிகவும் பாதுகாப்பானது சசியை அங்கு மாற்றிவிடலாம்.அவருக்கும் பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கும் அவரிடமிருந்து பாதுகாப்பு ..

  .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.