அதிமுகவின் இன்றைய நிலை – ” துக்ளக் ” இதழ் கட்டுரை…

“துக்ளக்” வாசகர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர்
திரு.வசந்தன் பெருமாள். இந்த வார துக்ளக் இதழில்,
அதிமுகவின் இன்றைய நிலை குறித்து அவர் எழுதியிருக்கும்
ஒரு கட்டுரை, உண்மையை அப்படியே பிரதிபலிக்கிறது.

நமது வலைத்தள நண்பர்களும் படிக்க கீழே தந்திருக்கிறேன்….

admk-thug-1a

admk-thug-2a

admk-thug-3a

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

அதிமுகவின் இன்றைய நிலை – ” துக்ளக் ” இதழ் கட்டுரை… க்கு 5 பதில்கள்

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நம் இளைஞர்கள் முன்போல இல்லை –

  இப்போதெல்லாம் கற்பனை வளமும்
  நகைச்சுவையும் பொங்குகின்றன –

  பாருங்களேன் கிண்டலை ….

  Govt increases
  entry fee for ” Amma Samathi ”

  Just Seeing – Rs.10
  Sitting for Meditation – Rs.100
  Making Sabatham – Rs.500

  Adichi ( 🙂 🙂 ) Sabatham – Rs.1000

  For NRIs, Online sabatham ( 🙂 🙂 ) will be allowed – 100$

  – இந்தக்கால இளைஞர்கள் அரசியல் சாக்கடையை
  சுத்தப்படுத்த தீவிரமாக செயல்பட வேண்டும் என்று
  விரும்புகிறேன்…

  தொழில்முறை அரசியல்வாதிகள் நமக்கு இனி வேண்டாம்….
  அரசியலில் சம்பாதிக்க விரும்பாத
  உண்மையான சமூக நல ஆர்வலர்களே தேவை..

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  கையில் இருக்கும் களாக்காயா அல்லது மர உச்சியில் இருக்கும் மாங்காயா என்பதுதான் அதிமுக எம்எல்ஏக்களிடம் உள்ள கேள்வி. பன்னீர்ச்செல்வம் பக்கம் மக்கள் ஆதரவைப் பெறக்கூடிய Star வரும்வரை (Star என்றால் சரத்குமார் போன்ற செல்லாக்காசுகள் அல்ல. ரஜினி, குஷ்பு போன்ற மக்களை ஈர்க்கக்கூடியவர்கள்) அதிமுக சசிகலாவின் வசம்தான் இருக்கும். மக்கள் ஆதரவு மற்றும் நிர்வாகிகள் ஆதரவு ஓபிஎஸ் குரூப்புக்கு இருக்காது. நான் எடப்பாடி வெற்றிபெறுவார் என உறுதியாக நம்புகிறேன். திமுகவுக்கு எடப்பாடி வெற்றிபெற்றால், குறைந்தபட்சம் 2 1/2 ஆண்டுகளாவது ஸ்டாலின் தலைமையிலான வெற்றிக்குக் காத்திருக்கவேண்டும். இதில் ஒரு சாதகம் கருணாநிதிக்கு. (ஜெ இல்லாதது). காலம் அதைப் புரியவைக்கும்.

 3. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்டு — அவர் இருந்தவரை ” அரசியல் சாணக்கியர் ” என்பவர் ஆட்சியை பிடிக்கவே முடியாத நிலையை உண்டாக்கி — தமிழக மக்களே உங்களின் ” செருப்பாகவும் — கட்டுமரமாகவும் ” இருப்பேன் என்றும் …

  எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமணியில் இருக்கும் போது ஆட்சியை என்னிடம் கொடுங்கள் — அவர் வந்தவுடன் அவரிடம் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றும் பதவி ஆசையில் துடித்தவரின் கனவுகளை — ஆசைகளை சிதைத்து — எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு கட்சியை கட்டிக் காப்பாற்றி — வளர்த்து இன்று , ஒன்றரை கோடி உறுப்பினர்கள் உள்ள நாட்டின், மூன்றாவது பெரிய கட்சியாக வளர்த்து காட்டியவர் ஜெயலலிதா…. ஆனால் …

  ஜெயாவின் மறைவுக்கு பின் கட்சியின் இன்றைய நிலையை நினைத்தால் — திரைமறைவிலிருந்த சசிகலா , ஆயிரம் விஷயங்களை கற்றிருந்தாலும் — நிதி நிர்வாகம் என்று கோலோச்சியிருந்தாலும் — ஜெயாவின் சாவின் மர்மம் விடைதெரியாமல் இருப்பதும் — திடீர் பொது செயலாளர் அவதாரம் எடுத்து — அதை மேலும் விரிவாக்கம் செய்ய ” முதல்வர் ” என்கிற வேஷம் கட்ட நினைத்த நினைப்பும் தான் இவ்வளவு கோளாறுகளுக்கும் காரணம் …

  அதுமட்டுமில்லாமல் ” அன்னிய செலவாணி மோசடி வழக்கில் சமீபத்தில், 28 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என உத்திரவு இடப்பட்ட தினகரனை கட்சியில் இதுவரை இல்லாத ” துணை பொது செயலாளராக ” நியமித்த கேலிக்கூத்தும் — மக்களிடமும் — கட்சி தொண்டர்களிடமும் மேலும் ஒரு அதி தீவிர வெறுப்பை சசிகலா மீது உண்டாக்கியுள்ளது காலத்தின் கட்டாயம்…

  மேலும் பொங்கல்விழா கொண்டாட்டத்தில் சசியின் கணவர் கூறிய நாங்கள் ” குடும்ப ஆட்சிதான் ” நடத்துவோம் என்றது மேலும் வெறுப்பை எண்ணெய் ஊற்றி வளர்த்தது என்பதும் உண்மை … தற்போதைய மக்களின் — தொண்டர்களின் ஒரே ஆறுதல் : ” சசியின் சிறைவாசம் ” . இந்த தீர்ப்பு சரியான நேரத்தில் வெளிவராமல் இருந்திருந்தால் — மக்களின் எதிர்ப்பு வேறுவிதங்களில் தோன்றி — பெரும் பிரச்சனையாக வெடித்திருக்கும் என்பது தான் நிதர்சனம் ….

  இன்னும் என்னென்னவோ காரியங்கள் அரங்கேற உள்ளன … சந்தில் சிந்து பாட துடிக்கின்றவர்களும் — களேபாரங்கள் நிகழ்ந்தால் குளிர்காய நினைப்பவர்களும் — திண்ணை காலியானால் படுக்கையை விரிக்க நினைக்கும் கட்சிகளும் –விரலில் மீண்டும் ஒரு மை அடையாளத்தை ஆவலோடு எதிர்நோக்கியுள்ள தமிழக மக்களும் — தொகுதி பக்கம் தலைகாட்ட திண்டாடும் சசி ஆதரவு ஆட்களும் — பலவித காட்சிகள் தொடர்ந்துகொண்டு தான் … இருக்கும் … அப்படித்தானே … ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s