திரு.வீர money அணி மாறுகிறாரா…? பங்களூரு காற்று பலமாக அடிக்கிறது ….!!!

veeramani

கலைஞரின் தலைமை இல்லாததால் ஏற்பட்ட குறை என்று
திரு.ஸ்டாலினை குறைகூறியும்,
எடப்பாடியை வரவேற்றும், வாழ்த்தியும்
பேசுகிறார் தன்மானத்தலைவர் திருவாளர் வீரமணி…!!!

———————

இன்றைய செய்தியிலிருந்து ஒரு பகுதி –
(http://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-wishes-edapadi-palanisamy-274543.html)

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (18.2.2017) நடைபெற்ற
அமளிகள் வரலாற்றில் தீராத கறையை ஏற்படுத்திவிட்டன.

இதுவே கடைசியாக – வெட்கப்படத்தக்க நிகழ்ச்சியாக
இருக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்…

இன்று காலை தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள்
ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட தீராத கறையாகும்.

எந்த அணிக்கும் ஆதரவில்லை என்று துவக்கத்தில்
கூறப்பட்ட நிலையோடு தி.மு.க. நின்றிருந்தால், இவ்வளவு
மனவேதனையும், வெட்கப்படத்தக்க, தி.மு.க.வின் அரசியல்
வரலாற்றில் களங்கம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டிருக்காது.

சபாநாயகர் நாற்காலியில் அமர்வது, இருக்கையை உடைப்பது,
அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டிற்கு முற்றிலும்
உரியதாக இல்லவேயில்லை. வெட்கமும்,
வேதனையும் பட வேண்டிய தலைகுனிவான நிலையும்கூட!

இதற்கு முன்பு அறிவித்த நிலைப்பாட்டிற்கு மாறான
நிலைப்பாட்டில் சிக்கிக் கொண்டதால், இதற்குமுன்
காக்கப்பட்ட அதன் மாண்பு குலைந்துள்ளது.

இந்தக் கட்டத்தில் முதிர்ந்த தலைவர் கலைஞர் சபையில்
இருந்து வழி நடத்த இல்லாததால் ஏற்பட்ட நிலைமை இது
என்று பளிச்சென்று விளங்கியது.

….
….
122 உறுப்பினர்களைப் பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில்
வெற்றி பெற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும்,
அவரது அமைச்சரவைக்கும் நமது வாழ்த்துகள்!

நடந்தவைகள் நடந்தவைகளாகட்டும் –
இனி நடப்பவைகளாவது நல்லவைகளாக நடக்கட்டும் என்று அண்ணா கூறிய கருத்தை நினைவூட்டுகிறோம்.

இப்பொழுது நடந்ததே கடைசியானதாக இருக்கவேண்டும் என்பதே
நமது அன்பான வேண்டுகோள் என்று கி. வீரமணி கூறியுள்ளார்.

…………………………

மாயா… மாயா… எல்லாம் மாயா…!!!
பங்களூரு காற்று எப்படி எல்லாம் ஒருவரை மாற்றுகிறது …!!!
( ரகசிய ஓட்டெடுப்பு நடத்த அவைத்தலைவர்
பிடிவாதமாக மறுத்தது பற்றி பேச், மூச் – இல்லை…! )

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to திரு.வீர money அணி மாறுகிறாரா…? பங்களூரு காற்று பலமாக அடிக்கிறது ….!!!

 1. NATCHANDER சொல்கிறார்:

  The unruly behaviour of dmk men inside assembly makes all hang their heads in shame.
  there is nothing wrong in the statement of veeramani..
  but his reference about karunas absence that karuna would have controlled dmk men cannot be accepted.. karuna would have indirectly instigated his mlas…
  stalin is desperate every second…
  stalin had criticised governor over fifteen days time and opposed resolution the next day when edappadi group was ready fr the countdown….

 2. LVISS சொல்கிறார்:

  This kind of ruckus is not new to our politics —

 3. புதியவன் சொல்கிறார்:

  வீரமணியை, கருணாநிதிபோல் ஸ்டாலின் treat செய்வதில்லை. அவர், மற்ற பெரியார் கழகங்களுக்கும் முன்னுரிமை (அல்லது consider செய்வது) கொடுப்பது, வீரமணிக்கு அலர்ஜியாக இருக்கிறது. வீரமணிக்கும், நடராஜனுக்கும், நடராஜன் மூலமாக மாயாவதி தொடர்பும், வீரமணியை, ஜெ.வை விட கருணானிதி முக்கியம் என்று பிற்பாடு எண்ணியதுபோல் இல்லாமல், அதிமுகவுக்கும் திமுகவுக்கும் neutral நிலையை எடுக்கவைக்கிறது என்று தோன்றுகிறது. (அதாவது, திராவிடர் கழகத்தின், ஆட்சியிலிருக்கும் திராவிடக் கட்சியை ஆதரிப்பது என்ற கொள்கை). வீரமணியின் ஒரே அஜென்டா, இப்போது பாஜக தமிழகத்தில் நுழையவிட்டுவிடக் கூடாது என்பதுதான். பாஜக தலையெடுத்தால், திராவிடர் கழகத்தின் முக்கியக் கொள்கைகள் அடிபட்டுப்போகும் (வடமொழி, இந்து மதத்தைத்தாங்கிப் பிடிப்பது, கலாசாரம் போன்றவை)

  நேற்றைக்கு திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் நடந்துகொண்டது, அவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதைக் காண்பிக்கிறது. அதே சமயம் அமைதியாக இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள், அதிமுக, திமுகவைவிட எவ்வளவோ பரவாயில்லை என்பதைக் காண்பித்தது (கட்சியைப் பொருத்த அளவில்).

  கருணானிதி seasoned அரசியல்வாதி. மிகுந்த அரசியல் நுட்பு மற்றும் intuition, கொண்டவர். வருமுன்னரே ஓரளவு அவர் அறிந்து அதற்கு ஏற்றார்ப்போல் தன் அரசியல் நிலைப்பாடை வைத்துக்கொள்பவர். அது வெறும் கூட இருப்பதனால் வருவதல்ல. ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏக்கள் நடந்துகொண்டதற்கு வருத்தமும் மன்னிப்பும் நேற்றுத் தெரிவித்தார். இது அவரின் நல்ல எண்ணத்தைக் காண்பிக்கிறது என்றே நினைக்கிறேன். கருணானிதி இதனைச் செய்திருக்கமாட்டார். ஸ்டாலினுக்கு இன்னும் சில வருடங்கள் கொடுக்கவேண்டும். அவர், திமுகவினரின் செய்கையை மாற்றுவார், நல்லவர்கள் அல்லாதவர்களுக்கு (ரங்கனாதன் போன்ற, சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து போஸ் கொடுத்தவர்கள், கலவரத்துக்குக் காரணமானவர்கள்) எம்.எல்.ஏ சீட் கொடுக்க மாட்டார், திமுகவின் இமேஜை மாற்ற முயல்வார் என்றே தோன்றுகிறது.

  இது தவிர, நான் கேள்விப்பட்ட சில செய்திகள் எனக்கு ஆச்சரியமாக இருந்ததால் அதனைப் பகிர்ந்துகொள்கிறேன். சசிகலாவின் அப்பாவுடனும், தாத்தாவுடனும், சசிகலாவின் மற்ற உறவினர்களிடமும் (அதாவது சசிகலா 5 வயதுக்குள் இருந்தபோது) பழகிய ஒருவர் என்னிடம் சொன்னது (‘நம்பிக்கைக்குரியவர், உண்மை பேசுபவர்), சசிகலாவின் பெற்றோர்கள் மற்றும் அவர் குடும்பம் நல்ல குணத்துக்கும் நடத்தைக்கும் பெயர் போனது. பிறருக்கு உதவுவதில் அவர்கள் மற்றவர்களுக்குக் குறைந்தவர்கள் அல்லர். மிகவும் எளிமையானவர்கள். சிறிய வயது சசிகலாவும் நல்ல நடத்தை கொண்ட பெண் என்றெல்லாம் சொன்னார் அவர். பணமும், காலமும் ஒருவரின் குணத்தை அல்லது அவரைச் சுற்றியுள்ளவர்களின் குணத்தை மாற்றவல்லது எனினும், அடிப்படை குணங்கள் மாறுமா?

 4. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! டிசம்பர் 8 — 2016 அன்று ” மானமிகு .? வீரமணி ” அவர்கள் ஒரு நீண்ட அறிக்கையை விட்டு இருந்தார் — அதில் அவர் சசிக்காக வக்காலத்து வாங்கும் விதமாக கூறியது : // ஜெயலலிதாவின் நிழலாக இறுதிவரை இருந்து, மெய்க்காப்பாளராக, சேவகியாக, சிறந்த பாசம் காட்டிய தங்கையாகவே வாழ்ந்து, அந்த அம்மையாரின் கஷ்டங்கள், சிறைவாசங்களில் பங்கேற்ற சசிகலாவைப் பற்றி தேவையில்லாமல் பெரும் ஆய்வே நடத்தி, அரசியல் ஆவர்த்தனம் செய்கிறார்கள்.// …… முழு அறிக்கையையும் வாசிக்க : — http://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-allegation-on-bjp-269339.html சொடுக்கவும் …

  ஒரு பெரிய தியாகியாகவும் — பெண் பெரியாராகவும் சசியை உயர்த்தி பிடிக்கும் போதே தெரியும் ” காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள புறப்பட்டு விட்டார் ” என்று …
  தற்போது அதே காற்று பெங்களூரில் இருந்து அடிக்கிறது … அப்படித்தானே … ?

 5. M. செய்யது சொல்கிறார்:

  நண்பர்கள் அனைவருக்கும்,
  திரு வீரமணி அவர்கள் சசிகலாவை ஆதரிப்பது சசிகலா நேர்மையானவர் மற்றும் அவரின் பணத்திற்காக தான் என்று நாம் நினைப்போமானால் அது நமது அறியாமை தான் அவர் தெளிவாகவே சொல்லியுள்ளார் ADMK. வை பிஜேபி என்ற கழுகிடமிருந்து காப்பாற்றப்பட வேண்டும். ஒபிஸ் முதல்வராக பதவி ஏற்றபோது வாழ்த்துச் சொன்னவர்தான் திரு வீரமணி. DMK. யும் ADMK. உடைவதை தான் விரும்புகிறது அப்படி உடைந்தால் தான் DMK. வுக்கு லாபம் இப்பொது ADMK. உடைவதை திரு வீரமணி அவர்கள் விரும்பவில்லை. தெரிந்தேதான் ஒபிஸ் அவர்கள் பிஜேபி யின் சூழ்ச்சியில் சிக்கியுள்ளார் அடுத்து ADMK. மறுபடியும் ஒரு பார்ப்பனர் தலைமையின் கீழ் போய்விடக்கூடாது என்றும் கவனமாக உள்ளார் அதனால் தான் எப்படியாவது ADMK. காப்பாற்றப்பட வேண்டும் என்று திரு வீரமணி ஆதரிக்கிறார்

  M. செய்யது
  துபாய்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப செய்யது,

   திரு.வீரமணி எதன்பால் அதிக பற்று கொண்டிருக்க வேண்டும்…? (கொண்டிருக்கிறார்….?)
   திமுக மீதா அல்லது அதிமுக மீதா…?

   திமுக மீது என்றால், அதிமுக உடைவது தானே
   திமுக வுக்கு நல்லது..? எனவே, அவரும் திமுக நினைப்பது
   போலவே, அதிமுக உடைவதை தானே விரும்ப வேண்டும்…?

   ஆனால்,
   அதிமுக உடைந்து, திருமதி சசிகலா குழுவினர் வெற்றி
   பெறுவதை அவர் விரும்பி வாழ்த்து தெரிவிப்பது எப்படி ..?
   அதுவும் திரு.ஸ்டாலினை கடிந்து கொண்டு….?

   உங்களுக்கு பாஜகவின் மீது உள்ள வெறுப்பை என்னால்
   புரிந்து கொள்ள முடிகிறது… ஆனால், அதற்காக
   திரு.வீரமணியை நீங்கள் நியாயப்படுத்துவதை
   என்னால் ஏற்க முடியவில்லை…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • M. செய்யது சொல்கிறார்:

    அதிமுக உடைந்ததில் பிஜேபிக்கு பங்கில்லை என்கிறீர்களா !!! அதிமுக அதிமுக உடைந்ததில் பிஜேபிக்கு பங்கில்லை என்கிறீர்களா !!! மனசாட்ச்சியுள்ளவர்கள் யாரும் மறுக்கமாட்ட்டார்கள். அதிமுக உடைந்தால் யாருக்கு அதிக லாபம் அய்யா. ஒபிஸ் வசம் இப்போது 11. எம்பிகள் இது வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு எவ்வளவு முக்கியம் என்பது நான் சொல்லி தங்களுக்கு தெரியவேண்டியதில்லை. அதிமுக உடைந்தால் பிஜேபி யும் திமுகவும் ஆதாயம் அடையும். ( முக்கியமாக பிஜேபி தமிழகத்தில் வளரக்கூடாது வளர்ந்தால் அண்ணண் தம்பியாக உள்ள தமிழர்கள் அடித்துக்கொண்டு சாவார்கள் என்பது வீரமணி மற்றும் மதச்சார்பற்றவர்களின் கணிப்பு ) அதனால் தான் அதிமுக உடையக்கூடாது என்று வீரமணி நினைக்கிறார் இது தவறா சொல்லுங்கள் அய்யா ?

    நன்றி
    M.செய்யது
    துபாய்

 6. இளங்கோ சொல்கிறார்:

  செய்யது,

  // அண்ணண் தம்பியாக உள்ள தமிழர்கள் //

  உங்கள் ஊர், எந்த ஊர் ?
  தமிழ்நாட்டில் இப்படி அண்ணன் தம்பியாக எந்த ஊரிலும்,
  யாரும் இல்லை. இப்போது சாதி வெறி தலைவிரித்து ஆடுகிறது.
  பாஜக வந்தால் மதவெறியும் சேர்ந்து ஆடும்: அவ்வளவே வித்தியாசம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.