ரகசிய ஓட்டெடுப்பை மறுப்பது ஏன்…?

tn_assembly_2703145g

இன்று சட்டமன்றத்தில் நடக்கும் அவலங்களுக்கு
முழு பொறுப்பையும் சட்டமன்ற தலைவர் (மற்றும் அவரை
இயக்கும் குழுவினர் ) தான் ஏற்க வேண்டும்…

அவையில் ஆளும் கட்சியைத்தவிர மற்ற அனைத்து
கட்சியினரும் முன்வைத்த ஒரே கோரிக்கை –
ரகசிய ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான்.

இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுத்த
அவைத்தலைவர், அதற்கான எந்த காரணத்தையும்
கூறவில்லை…

நடத்தப்படுவது, இயங்குகிற அரசின் மீது மெஜாரிடி
உறுப்பினர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா
என்று தெரிந்து கொள்ள நடத்தப்படும் ஓட்டெடுப்பு..

அடைத்து வைக்கப்பட்டிருந்த உறுப்பினர்கள் அனைவரும்
அச்சமின்றி தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டுமானால்,
இந்த ஓட்டெடுப்பு ரகசியமாகத்தான் நடைபெற வேண்டும்.
அது தான் உண்மையான ஜனநாயகத்தை உறுதி செய்யும்.

எந்தவித காரணமும் இல்லாமல், இதை மறுக்கும்
அவைத்தலைவரும் – அவருக்கு பின்னாலிருந்து அவரை
இயக்குபவர்களும், அதனால் உண்டாகும் விளைவுகளை
அனுபவிக்க வேண்டியது தான் என்பதோடு –

இதனை தொடர்ந்து நடக்கும் / நடக்கக்கூடிய ரகளைகளுக்கும்,
வன்முறைகளுக்கும், அவர்களே பொறுப்பாவார்கள்.

தமிழக கவர்னர் அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு,
மெஜாரிடியை “ரகசிய ஓட்டெடுப்பு” மூலம் நிரூபிப்பதை
உறுதி செய்ய வேண்டும்.

( இறுதியாக, இது ஜனாதிபதி ஆட்சியில் தான் சென்று
முடியும் என்பது உண்மையே என்றாலும் கூட,
தெரிந்தே அநாவசியமான வன்முறை நிகழ்வுகளை
அனுமதிப்பதும், ஊக்கப்படுத்துவதும் சரியல்ல…)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ரகசிய ஓட்டெடுப்பை மறுப்பது ஏன்…?

 1. mathu சொல்கிறார்:

  good insight

 2. selvarajan சொல்கிறார்:

  // இதனை தொடர்ந்து நடக்கும் / நடக்கக்கூடிய ரகளைகளுக்கும்,
  வன்முறைகளுக்கும், அவர்களே பொறுப்பாவார்கள். //…. அய்யா … ! அப்போ – அப்பா வழியில் ரொம்பவும் மெனெக்கெட்டு திட்டம் தீட்டி செயலாற்றிய – ” செயல் தலைவர் & கோ வின் ” ஆக்ரோஷ நடவடிக்கை வேஸ்ட்டா …?
  அதிமுக அரசை கலைக்க திட்டம் போட்டு காய் நகர்த்தும் திமுக — என்கிற செய்திகளுக்கும் — சட்டமன்ற தலைவரின் ஆசையும் கூட ” ஜனாதிபதி ஆட்சி ” என்பதை நோக்கித்தானோ …? யார் தட்டி செல்ல போகிறார்கள் ஜனாதிபதி ஆட்சி என்கிற நல்ல கைங்கர்யத்துக்கான ” பெயரை ” …?

 3. MANI சொல்கிறார்:

  THE REASON IS OBVIOUS. SOME AIADMK MLAS ALONG WITH DMK AND CONG COULD HAVE VOTED
  FOR OPS FACTION AND THE PROXY GOVT WOULD HAVE BEEN DEFEATED. IF IT IS A SECRET BALLOT MORE AIADMK MLAS WHO HAVE SOME CONSCIENCE LEFT IN THEM
  WOULD HAVE THE COURAGE TO VOTE FOR OPS AND DEMOCRACY AND PEOPLE”S FAITH
  WOULDHAVE BEEN RESTORED.

 4. Raja சொல்கிறார்:

  KM sir, can you tell which state assembly conduct your request poll in past 70 years. Few months back you wrote about Cho Sir’s view about LTTE and his unchanged mind , you are also like him in your Mannargudi .I still believe thirukuvalai family most dangerous than Mannargudi. You also suspect about amma’s death , pls watch May 2014 , May 2015,May 2016 Amma videos, Mr Gunha’s verdict disturb her physically and mentally. You also wrote about gunha mangalore property case. Pls sir your writing always neutral , we need old KM sir writing ,including about sasikala.

 5. சிவா சொல்கிறார்:

  இரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் கட்சிக் கொறாடா உத்தரவை மீறி ஓட்டுப்போட்டவர்களை கண்டெடுத்து கட்சித்தாவல் தடுப்பு சட்டப்படி பதவி இழக்க வைப்பது எப்படி?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சிவா மற்றும் ராஜா,

   அனைத்து உறுப்பினர்களும் எந்தவித அச்சமோ, அழுத்தமோ இன்றி
   தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.

   ஓட்டெடுப்பின் நோக்கமே, அவையில் மெஜாரிடி உறுப்பினர்களின்
   நம்பிக்கையை அரசு பெற்றிருக்கிறதா இல்லையா என்பதை
   உறுதி செய்து கொள்வதற்காகத்தான் என்னும்போது

   கொறடா உத்திரவு எதற்காக…?
   கட்சித்தாவல் சட்டத்தை காட்டி மிரட்டவா…?

   ரகசிய ஓட்டெடுப்பு நடந்தால் தான் இது சாத்தியமாகும்.

   ஓட்டெடுப்பு நடத்துவது எப்படி என்பதை தீர்மானிப்பது
   அவைத்தலைவரின் உரிமை என்னும்போது –

   அவைத்தலைவர் நியாயமான ஓட்டெடுப்பை
   உறுதி செய்ய விரும்பினால்,
   ரகசிய ஓட்டு முறையை தானே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்…?

   அப்படிச் செய்யாதது, அவைத்தலைவரும்,
   ஆளும் கட்சியும் – நியாயமான, பாரபட்சமற்ற முறையில்
   ஓட்டெடுப்பை நடத்தவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. natchander சொல்கிறார்:

  Today vaiko had given his views against secret voting he had quoted many incidents in the past
  Instead of clarifying this issue the speaker had shown more interest in revealing his caste as he did in the past
  Dmk had their plans already
  So the speakers incompetence
  And the dmks unruly behaviour had created the chaos in the assembly

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.