இளைஞர்களே – திரு.வலம்புரி ஜான் – கேள்விப்பட்டிருக்கிறீர்களா …. ?

இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை –
திரு.வலம்புரி ஜான் அவர்களை….

2005-ல் 59 வயதிலேயே மறைந்து விட்ட ஒரு
அற்புதமான சிந்தனையாளர், எழுத்தாளர், பேச்சாளர்
வலம்புரி ஜான் அவர்கள். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும்
சிறந்த புலமை பெற்றவர்.

அவரை இன்றைய இளைஞர்களுக்கு அறிமுகம்
செய்து வைக்க விரும்புகிறேன்…
அரசியல்வாதியாக அல்ல – ஒரு இலக்கியவாதியாக –
இந்த காணொலி மூலமாக –

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to இளைஞர்களே – திரு.வலம்புரி ஜான் – கேள்விப்பட்டிருக்கிறீர்களா …. ?

 1. தமிழன் சொல்கிறார்:

  நல்ல பகிர்வு. முதல்தடவையாக இந்தக் காணொலியைப் பார்க்கிறேன், கேட்கிறேன்.

  வலம்புரி ஜான் அவர்கள் மிகுந்த திறமைசாலி. நிறைய நியாய உணர்வு கொண்டவர். எளிமையான பின்புலத்திலிருந்து மேலே வந்தவர். எளியவர்களை வாழ்வின் வெளிச்சத்தில் கொண்டுவரவேண்டும் என்று உண்மையாகவே நினைத்தவர். தான் ஒரு பத்திரிகை ஆசிரியராக ஆனபின்பு, முடிந்த அளவு திறமைசாலிகளை மேலே கொண்டுவரவேண்டும் என்று ஊக்கமளித்தவர். அவரால் மேலே வந்தவர் நக்கீரன் கோபால் அவர்கள். வலம்புரி அவர்களின் பேச்சுத் திறமை, ஆழ்ந்த புலமை (‘நிறைய புத்தகங்களைப் படித்தவர். அருமையாக ஆங்கிலம் பேசக்கூடியவர், தெரிந்தவர்) உடையவர். மிகுந்த திராவிடச் சிந்தனையும், பெரியார் கொள்கையில் பற்றும் கொண்டவர்.

  எளிமையானவர் என்பதால் அரசியலின் சூழ்ச்சிகளை முழுமையாகத் தெரிந்துகொள்ளாதவர் (திமுகவில் கருணானிதியினாலும், பிறகு அதிமுகவிலும்.. ஜெயலலிதாவின் 91-96 காலத்தில். ஜெயலலிதாவின் நன் மதிப்பைப் பெற்றவராக இருந்தபோதும், சசிகலாவின் சூழ்ச்சியால்). அவருடைய கடைசி காலத்தில் (ஜெயலலிதா regime) மிகவும் கஷ்டப்பட்டார்.

 2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஐயா
  வலம்புரி ஜான் தொடாத தலைப்புகளே கிடையாது என்று சொல்லலாம்.
  இலை தழை பற்றி பேசணுமா இல்லை புழு பூச்சிகள் பற்றிய கருத்தரங்கமா
  இல்லை சுற்றுளாத்தலங்களை பற்றி எழுதணுமா
  நோய் நொடிகளை பற்றி விழிப்புணர்வு தேவையா
  மதங்களை பற்றிய புரிதல் தேவையா
  வரலாற்றை ஆராயவேண்டுமா, இருக்கவே இருக்கிறார் அண்ணன் ஜான் என்றளவுக்கு பிரபலமானவர்.
  அந்தக்காலத்தில் சன் டீவியில் இவரின் வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியில் இவர் பேச்சு மிகச்சிறப்பானது. அதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டோம்.
  இளைஞர்களுக்கு புரியம்படி சொல்லவேண்டுமெனில்
  மனித உருவில் ஒரு கூகுல்/விக்கி பீடியா!
  இவரை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி ஐயா.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன், சைதை அஜீஸ்,

   உங்களின் பொருத்தமான,
   விளக்கமான பின்னூட்டங்களுக்காக நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. M. செய்யது சொல்கிறார்:

  அருமையான இலக்கியவாதி பேச்சாளர் .
  நன்றிகள் பல அய்யா கேட்கதந்தமைக்கு.

  M. செய்யது
  Dubai

 4. Ganesan சொல்கிறார்:

  Thanks for the video.

 5. தமிழன் சொல்கிறார்:

  நாம பொதுவா லஞ்ச் என்பது மதியம் சாப்பிடும் உணவு என்றும் டின்னர் என்பது இரவு உணவு என்றும் அர்த்தப்படுத்திக்கொள்ளுவோம், உபயோகப்படுத்துவோம். வலம்புரி தன் புத்தகத்தில், லஞ்ச் என்பது லைட் உணவு என்றும் டின்னர் என்பது ஹெவி உணவு என்றும் அர்த்தம். சாப்பிடும் உணவின் அளவைப் பொறுத்து (லைட்டான supperஆ அல்லது heavyஆன அதாவது 5-6 கோர்ஸ் உணவு) பெயர் மாறும் என்று அவரின் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், எம்ஜியார் ‘Cheap pen’ என்பதற்கு அர்த்தம் என்ன என்று கேட்டபோதும் அது ‘விலை குறைவானது’ என்பதைக் குறிப்பதல்ல, ‘தரம் குறைவானது’ என்பதைக் குறிப்பது என்று விளக்கினாராம். சாதாரண நிலையிலிருந்து, முயற்சி எடுத்து ஆங்கிலம் பேசக்கற்றுக்கொண்டு (அதற்கு இவருக்குப் பலர் உதவியுள்ளனர். அதாவது, இவர் பேசுவதில் தவறு இருக்கும்போது விளக்கியுள்ளனர்.. அதை வைத்து இவர் மேலும் கற்றுக்கொண்டுள்ளார்), அருமையான பேச்சாளரானார். அவர் ஒரு கடுமையான படிப்பாளி. ஏகப்பட்ட புத்தகங்களை எப்போதும் படித்துக்கொண்டே இருக்கும் பழக்கம் கொண்டவர். நுனிப்புல் மேய்பவரல்லர்.

  அவர் நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார். வெளியிட்டும் இருக்கிறார் (பானு பதிப்பகம்?). ஆனால் அதில் அவருக்கு நஷ்டம் மட்டும்தான் ஏற்பட்டது. இதையும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார் (மனைவி எதற்கும் பேப்பரை உபயோகப்படுத்தக்கூடாது என்று அர்த்தம் வருவது போல்.. அதாவது புத்தகம் வெளியிட்டு மேலும்மேலும் நஷ்டமடையவேண்டாம் என்று). எம்ஜியார் கடைசி காலத்தில் வலம்புரியை மிகவும் நம்பினார். உண்மையைச் சொல்லுபவரென்று. வலம்புரி குறிப்பிடுகிறார், ‘என் தாயினும் என்னை நேசித்த உயிர்’ எம்ஜியார் என்று. கடைசிச் சமயத்தில் இவரை காலையில் அழைத்த எம்ஜியார் (அப்போதும், இவர் 7 மணிக்குச் சென்று சேர்கிறார். எம்ஜியார் முதலில் சாப்பிடச் சொல்கிறார். இவர், வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டேன் என்று சொல்கிறார். அதற்கு எம்ஜியார், நீங்கள் பிரயாணப்பட்டு வருவதற்கே 1 மணி நேரமாயிருக்கும். எந்த வீட்டில் 6 மணிக்கு முன்னால் உணவு தயார் செய்திருப்பார்கள் என்று வினவி, அவரைச் சாப்பிடச்சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்.) அன்று, சரி, நான் 10 லட்சம் தருகிறேன்.. புத்தகங்கள் வெளியிட்டுக் கொள்ளுங்கள் (‘நஷ்டத்திலேயே அவர் இருந்ததால்) என்று வாக்கு தருகிறார். ஆனால் ஒரு வாரத்தில் எம்ஜியார் மறைந்துவிடுகிறார். அப்புறம் சில மாதங்களில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி அவர்கள், எம்ஜியார் தந்தார் என்று சொல்லி சில லட்சங்களை வலம்புரிக்குக் கொடுக்கிறார். (முன்னமேயே எழுதியிருக்கிறேனோ?)

  அவர் சிறிய வயதிலேயே மேல் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வயது குறைவு என்று பல வழக்குகளைச் சந்தித்தார். ஆரம்பம் முதலே அவருக்கு நண்பர்களைவிட எதிரிகள் அதிகமாகிவிட்டனர். அதற்குக் காரணம், அவருக்கு அரசியல் நெளிவு சுளிவு தெரியவில்லை. ஜெ. சொல்வதுபோல் அளவுக்கு மீறிய புத்திசாலித்தனம் அவருக்குக் கெடுதலாக முடிவடைந்துவிட்டது.

  மிகுந்த திறமைசாலி. ஜெ.வுக்கு ஆஸ்தான அறிக்கை எழுதிக்கொடுப்பவராக இருந்தார். ஜெ.வின் நன் மதிப்பைப் பெற்றிருந்தவர். ஆரம்பகால அரசியல் நண்பர். ஆனால் பாவம். கடைசி 10 ஆண்டுகள், அதுவும் கடைசி 5 ஆண்டுகள், திறமைசாலியான அவரது வாழ்க்கையைக் காலம் கடுமையாகக் கலைத்துப்போட்டுவிட்டது. படாத பாடுபட்டுவிட்டார். மேலும் மேலும் வெற்றி பெறமுடியாத போரை நடத்தித் துவண்டு மறைந்தார்.

 6. selvarajan சொல்கிறார்:

  ” வலம்புரி ” ஜான் அவர்களின் பார்வையில் — மனதில் பாரதி : — // ‘தமிழ்நாட்டில் பாரதியிலிருந்துதான் மனிதன் தொடங்குகிறான்’ என்றுகூடச் சொல்லியிருக்கிறேன்.
  உண்மையான ஒரு மனிதனாக வாழ்ந்தவன் பாரதி. பிராமணர் அல்லாத ஐந்தாறு பேருக்குப் பூணூல் போட்டிருக்கிறான். அதில் ஒருவர் நாகலிங்கம். மாரியம்மன் கோயிலில் பூசை செய்யும் அவரை முதல் நாள் ‘பண்டாரம்’ என்றும் அடுத்த நாள் ‘பூசாரி’ என்றும் மூன்றாம் நாள் ‘குருக்களே’ என்றும் அழைத்துப் பெருமைப்படுத்திய துணிச்சல்காரன் பாரதி. //

  கவிஞர் கண்ணதாசனின் கவிதையில் வலம்புரி ஜான் :–
  // ‘நவநவமாக அள்ளி
  நற்றமிழ்ச் சொற்கள்தம்மை
  இவர்தரும் அழகு நாட்டில்
  எல்லோர்க்கும் வருவதில்லை.
  வலம்புரி ஜானுக்கு இந்த
  வற்றாத மொழியைத் தந்து
  நலம்புரிந்தாளே அந்த
  நற்றமிழ் அன்னை வாழ்க’ // …. மனதோடு வாழ்ந்தவன் — தன் மூளையை எவருக்கும் அடகு வைக்காத ரோஷக்காரன் — இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்திருக்கலாம் — எப்போதுமே ஒருவரின் ” அருமை ” அவரின் இறப்புக்கு பிறகு தானே உரைக்கிறது – நமக்கு …. ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.